Gangaimani Profile - கங்கைமணி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  கங்கைமணி
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jan-2013
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  167

என்னைப் பற்றி...

அன்புடன் வணங்குகிறேன்.
என் தாயவளை வணங்குகிறேன்.இந்தியத்தாய் அவளை வணங்குகிறேன்.கடவுளை வணங்குகிறேன்.எனது கவித்திறனை வணங்குகிறேன்.இப்பக்கங்களை புரட்டும் உமது விரல்களை வணங்குகிறேன்.
நான் எனது தாய் நாட்டின் சுவாசத்தில் வளர்ந்தவன்,வளர்ப்பவன்,வளர்ந்துகொண்டிருப்பவன். எனது நினைவுகளை.கருத்துக்களை.உணர்வுகளை கவிதையாக்குகிறேன்.என்னைப்பொறுத்தவரை பொய்களின் வர்ணனைகளை(உவமைகளை) அணிகலன்களாகக்கொள்வதே கவிதை என்கிறேன்.ஆனால் அதன் கருத்துக்கள் ஒருபோதும் பொய்யாக்கா?!. எனது கவிதைகளில் இயற்கையை இணைப்பதை இயல்பாகக் கொண்டவன். நான் கவிதை எழுதுவது நான் ரசிக்க.எனது ரசனையை பிறர் ரசித்து பாராட்ட மேலும் எனது மன அமைதிக்காக.எனது மனக்கொந்தளிப்புக்களை கவிதை வடிவில் கிறுக்கி தீர்த்துக்கொள்பவன் இந்த கிறுக்கன்.
எனது கருத்துக்கள் அனைத்தும் உண்மை,தவறொன்றும் இல்லை என்று வாதாட நான் ஒன்றும் முற்றும் தெரிந்து துறந்த முனிவனல்ல.இக்கால சூழலில் சுழலவந்த ஒரு சிறுவனே.நான் ஏமார்ந்தது.என்னை மட்டுப்படுத்துவது எனது சோம்பல் தனமே!. அதனாலேயே எனது படைப்புக்களில் எவ்வளவோ மறந்து போயின.,மறைந்தும் போயின.எனது நினைவில் நின்றவர்களை மாத்திரம் இதில் எழுதுகிறேன்.எனது புதிய படைப்புக்களையும் படைக்கிறேன்!... இனி புரட்டட்டும் உமது விரல்கள் எனது பக்கத்தை.
அன்புடன்
-கங்கைமணி

என் படைப்புகள்
gangaimani செய்திகள்
Saranya Subramanian அளித்த படைப்பில் (public) Saranya Subramanian மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Mar-2017 9:47 pm

என் உயிருக்கு...

உன்னை ஈன்ற தாய்க்கு என்
முதற்கண் நன்றி.
ஏனெனில் அவளில்லாமல்
நீயும் உன் அன்பும் எனக்கில்லை.

நீ எனக்குக் கற்றுக்காெடுத்தது -
பாசம் வைக்க..
சிந்திக்க..
பாெறுமையுடன் செயல்பட..
உணர்வுகளை மதிக்க..
ரசிக்க..
காதலிக்க..
மனதுள் நகைக்க..
இத்துனையையும் கற்றுக்காெடுத்துவிட்டு ஏன் என்னைப் பிரிய முடிவெடுத்தாய்?

நீ என்னாேடு பேசிய வார்த்தைகளை விட நான் உன்னாேடு பேசியவை அதிகம்.
ஆனால் உன் மெளனத்திலும் உன்னுடைய காதலை நான் சுவாசித்தேன்.

நீ எனக்கு அளித்த
முதல் முத்தம்...

எதிர்பாரா அதிர்ச்சி.
சில விநாடிகள் காெஞ்சம் காேபம்.
ஆனால் அது

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி. 26-Mar-2017 9:48 pm
கருத்திற்கு மிக்க நன்றி. 26-Mar-2017 9:45 pm
கருத்திற்கு மிக்க நன்றி. 26-Mar-2017 9:44 pm
அருமை..என்ன வரிகள் ..என்ன சிந்தனைகள்...... படிக்க படிக்க பிடித்துள்ளது ....மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் ....... 26-Mar-2017 8:58 pm
selvamuthu அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2017 7:01 pm

வணங்காமுடியும்
வணங்கி செல்வது நட்பு
காதலுக்கு தோல் கொடுத்து
கரைசேர்ப்பது நட்பு
இன்னல் காலங்களில்
இன்முகத்தோடு
உதவி கரம் நீட்டுவது நட்பு
மண்ணும் நீரும் விதையும்
ஒன்று சேர்ந்தால் பசுமை
நம்பிக்கை நாணயம் தியாகம்
ஒன்று சேர்ந்தால் நட்பு
அன்று முதல் இன்று வரை
எத்தனையோ கால மாற்றம்
நட்பில் மட்டும் இல்லை
எந்த மாற்றமும்
அன்று
துரியோதனன் கர்ணன்
கண்ணன் அர்ஜுனன்
ராமன் குகன்
இன்று
நீயம் நானும்
நட்பு புனிதமானது
கற்பு போல....

மேலும்

அழகான கருத்து நன்றி கவிஞரே.... 26-Mar-2017 10:55 pm
நட்பெனும் காற்றால் தான் அகிலம் எனும் பந்தும் சுழல்கிறது 26-Mar-2017 10:48 pm
கருத்துக்கு மிக்க நன்றி நட்பே.... 26-Mar-2017 9:12 pm
நட்பின் மேலாண்மை அருமை. 26-Mar-2017 8:56 pm
gangaimani - Prabavathi Veeramuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2017 10:45 am

சுயத்தை இழந்து விடக்கூடாது
என்று பாடுபடுகிறான் பாட்டாளி

தன்னை தானே புகழ்ந்து கொள்கிறான்
அரசியல்வாதி
நடிகன்
சாமியார்
கார்ப்பரேட்

நான் நல்லவன் என்று
நீயே சொல்லக்கூடாது
உன் நடத்தை சொல்ல வேண்டும்
பிற மனிதர்கள் சொல்ல வேண்டும்

தமிழ் தமிழன் என்று அரசியல் சுய லாபம் தேடாதீர்கள் இந்நால்வரும்
உண்மையான தமிழனாக
மனிதனாக இருந்தால்
தமிழையும் தமிழனையும்
வாழ விடுங்கள்
நீங்கள் எதுவும் எங்களுக்காக செய்ய வேண்டாம்
நாங்கள் சுயமாக முன்னேறுவோம்
எங்கள் சுயத்தோடு

மனிதன் யாவரும் தமிழன்
தமிழன் யாவரும் மனிதன்

சுயத்தோடு வாழ்பவன் தான் தமிழன்
சுய லாபம் பேசுபவன் அல்ல

மேலும்

சகோதரி! தங்கள் கருத்து வரவேற்கவேண்டிய ஓன்று.உண்மையான தமிழுணர்வு மட்டுமே இன்று தேவை.வாழ்த்துக்கள் 26-Mar-2017 4:02 pm
சிந்தனையில் இருப்பது நன்று ஐயா ...ஆனால் எல்லோரும் சிந்தனையில் இல்லாமல் வெறும் வாய் வார்த்தையில் விளம்பரம் தேடுகிறார்கள் ... 26-Mar-2017 3:17 pm
பொதுவான சிந்தனை நன்று, எண்ணமே வாழ்க்கை என்பது போல, நான் நல்லவன், நான் நல்லவன் என்று சொல்லி / சிந்தனை செய்து கொண்டிருந்தால் அந்த எண்ணமே அவனை நல்லவன் ஆக்கிவிடும் என்று ஒரு சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன், நன்றி - மு.ரா. 26-Mar-2017 11:13 am
Sureshraja J அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Mar-2017 12:36 pm

வெண்ணிறமும் முல்லைக்கொடிபோல
ஒல்லியான உருவம் கொண்ட வடநாட்டுப் பெண்ணுக்கும்
தென்னாட்டு தமிழச்சிக்கும்
உள்ள ஒரே வித்தியாசம்
அழகை விட அழகான
நாணம்

மேலும்

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழா 27-Mar-2017 10:01 am
பெண்களின் அழகில் பிரிவினை வாதம் தூண்டிவிட்டிர்கள் என்று மகளிர் அமைப்பு வழக்கு போட்டு விடும் தோழரே! 26-Mar-2017 10:42 pm
ஹா ஹா ஹா 26-Mar-2017 4:03 pm
எயிஸா ஹை ஸே போல்தெஹேன் ? உத்தர் பாரத் லடிக்கியோன் கோ பி ஷரம் ஆத்தி ஹை பைய்யா ! ---ப்யார் ஸே கவின் சாரலன் 26-Mar-2017 2:57 pm
gangaimani - k VIGNESH அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2017 8:33 pm

என் தம்பி

உன்னுடன் பேசத்தான் எனக்கு ஆசை

நீ வைத்திருப்பதையெல்லாம் பறிக்கத்தான் எனக்கு ஆசை

உன் அம்மா உனக்கு தமிழை சொல்லித்தரலாம்

உன் அம்மாவிடம் சொல்

நீ எழுதும் முதல் எழுத்து தமிழாக இருக்க வேண்டும்

நீ தமிழன் என்பதை உன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டே இரு

உன் அம்மாவிடம் கேட்டு நிறைய தமிழ் புத்தகங்கள் வாங்கச்சொல்
உனக்கு படித்துக்காட்டச் சொல்

நீ இன்னும் வளர்ந்த பிறகு
புத்தக மூட்டையுடன் தினம் ஒரு தமிழ் புத்தகத்தையும் சுமந்சே செல்

உன்னை நீயே தமிழன் என்று சொல்லிக் கொள்

மறவாமல் ழ,ள,ல வை ழலளகரங்களை சரியாக உச்சரிக்க கற்றுக் கொள்

நீ இன்னும் வளர்ந்த பி

மேலும்

என் அன்புத்தம்பி ! தாங்கள் எவ்வளவு ஒரு அருமையான தகவலை இச்சமூகத்திற்கு சொல்லி இருக்கிறீர்கள் தெரியுமா ?..தங்களை மனதார வாழ்த்துகிறேன்.நிச்சயம் சொல்லுகிறேன் இனிவரும் இளையசமுதாயம் தமிழுக்கு தொண்டுசெய்வார் என்பதில் நம்பிக்கை இருக்கிறதெனக்கு . 25-Mar-2017 12:45 pm
gangaimani - Shagira Banu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2017 11:33 am

இன்று பாரதி இருந்தால் தன் கவியால்,

அரசியலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அசிங்கங்களை சுரண்டியிருப்பார்,

ஆளுமையை கண்டு அஞ்சியிருக்க மாட்டார்.

கல்வியில் சாதியின் சாயத்தினை கழுவியிருப்பார்,

கல்லாமல் ஒரு குழந்தையையும் வளர விட மாட்டார்.

புதுமையில் சீரழியும் பெண்களுக்கு சீறிய புத்திமதி சொல்லியிருப்பார்,

புறக்கணிப்பவர்களை கண்டு வெகுண்டோட மாட்டார்.

பெண்களை போக பொருளாக நினைக்கும் ஆண்களுக்கு நல்ல பாடம் கற்பித்திருப்பார்,

பெண்கள் முன்னேற்ற முயற்சியில் வெற்றி காணும் வரை ஓய்ந்திருக்க மாட்டார்.

குடிசைகளில் வாழும் மக்களுக்கு கை கொடுத்திருப்பார்,

கூத்தாடிகளோடு கைக்கோர்த்திருக்

மேலும்

உண்மைதான்..,பாரதி தமிழை கையாண்ட அழகில் பல கோடி உள்ளங்கள் இன்றும் அவரை நேசம் கொள்கிறது 25-Mar-2017 11:53 pm
பாரதி போற்றும் அற்புதமான வரிகள் . அவர் இன்றிருந்தால் இன்றுள்ள எத்தனையோ சமூகச் சீர் கேடுகளை அனுமதித்திருக்க மாட்டார் . போர்க்கொடி உயர்த்திருப்பார் . வாழ்த்துக்கள். அன்புடன்,கவின் சாரலன் 25-Mar-2017 6:24 pm
புரட்சிக்கவிதை ..சிறப்பு அருமை 25-Mar-2017 3:48 pm
பாரதி போல் யாரும் வரவும் முடியாது, ஆகவும் முடியாது. ஆனால் அவர் தேடிய புதுமைப்பெண்கள் எங்கே, அவரைப் போல அச்சமின்றி எண்ணத்தை உரக்க கூறும் ஆடவர்கள் எங்கே.... 25-Mar-2017 1:08 pm
gangaimani - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2017 1:02 am

அரும்பு மலர்வதுபோல் -ஒரு
காலைப்பொழுது.
கிழக்கு திசை.
வெளிச்ச ஊற்று.
என் எண்ணம் வளர்வதுபோல் -மெல்ல
வண்ணம் வளர்கிறது.

காலை வரைபடம்
காணக்கிடக்கிறது
காணுமிடமெல்லாம்
கவிதை வழிகிறது.

பசுமை போர்வையில்
பனிமணிகள்
சிதறிக்கிடக்கிறது.
தோரணமாய்
பனித்துளிகள்
எங்கும் தெரிகிறது.

நெளிந்த நிலவுகள்
வாசலில் வருகிறது.
வரைந்த கோலங்கள்
நேசமாய் அழைக்கிறது.

பறவைகளின் பாக்கள் -கேட்டு
பருகி முடிக்காத..,
பனித்துளிகளோடு,
மயங்கிவிழும் பூக்கள்.

திறந்துகிடக்கும் தெருக்கள், தன்னில்
ஒற்றைக்கால் முளைத்து
ஓடும் பல பூக்கள்.

சோலைச் சேலைகள்
சூரியக் கரம்பட்டு
மெல்ல அவிழ..,

மேலும்

நன்றி ஐயா ! தங்கள் கருத்தால் மனம் மகிழ்ந்தேன். 26-Mar-2017 8:26 pm
நன்றி.தங்கள் கருத்து என்னை உற்சாகப்படுத்துகிறது 26-Mar-2017 3:59 pm
ஐயா தங்கள் வரவாலும் கருத்தாலும் நான் மனம் மகிழ்ந்தேன்.என் மனம் கனிந்த நன்றிகள் 26-Mar-2017 3:57 pm
ஆகா ..தெளிந்த நீரோடை போல் அழகு 26-Mar-2017 10:08 am
Uthayasakee அளித்த படைப்பை (public) Punitha Velanganni மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
03-Aug-2016 8:40 am

நம் இன்றைய தாய்க்குலங்கள்

பட்டிலே உடையுடுத்தி
பிறை நெற்றி தனில்
பொட்டிட்டு
முழு நீள முடி வளர்த்து
சிரம் தனிலே சரம் வைத்து
காலில் கொலுசு ஆடிடவும்
கையில் வளையல்
தவழ்ந்திடவும்
மூக்கு தனில் மூக்குத்தி
மின்னிடவும்
அன்ன நடையில்
அழகுத் தாரகையாய்
வலம் வந்தார்கள்
நம் அன்றைய
தாய்க்குலங்கள்.......!!

காலத்தின் மாற்றமாம்
தொழிநுட்ப வளர்ச்சியாம்
புது நாகரீக தோற்றமாம்
என்ற முகமூடி தனில்
மறைந்து கொண்டு

குட்டையாய்
உடை உடுத்தி
கட்டையாய்
முடி வளர்த்து
கத்தரித்து அதை
கெடுத்து
அரைப் பாவாடை
தான் அணிந்து
அரை உடம்பை
காட்டிக் கொண்டும்
புருவமதை கரிக்குச்சியாய்
தேய்த

மேலும்

உண்மைகள் பல சமயங்களில் கசக்கத்தான் செய்கிறது. முன்பெல்லாம் பணமில்லை நல்ல உடையில்லை, அதனால் ஆடைகளில் ஒட்டு இருக்கும். இப்போது நாகரீகமாம் நவீன ஆடை என்று கிழித்து கொண்டு திரிகிறார்கள்.. காலக்கொடுமை... நன்றி, தமிழ் ப்ரியா... 23-Mar-2017 3:39 pm
தங்கள் இந்த நவநாகரிக நங்கைகளின் உடையுடுத்தும் அவலட்சணங்களை அழகுற படைத்திருப்பது மிக உண்மை நன்றி 23-Mar-2017 3:22 pm
தங்கள் கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்.....நன்றிகள் தோழி.... 03-Aug-2016 5:51 pm
நாகரிக மாற்றம் .... உண்மை தான் ..... அருமை 03-Aug-2016 5:47 pm
gangaimani - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2017 9:42 pm

மனிதம் மரிக்கவில்லை --- புதுக்கவிதை


மனிதமுமே மரிக்கவில்லை
மண்ணுலகில் வாழ்கின்றது .
இனிவரும் நாள் நன்னாளாய்
இருந்திடவும் செய்கின்றது
தனி ஒருவன் செய்கின்ற
கொடையதுவும்
தன்னலமே அற்றதொரு
செயலன்றோ சொல்வீரே ! ( 17 )


நிழலாகத் தொடர்கின்றது
நிசமான உயிரினங்கள் .
ஐந்தறிவு சீவனுக்கும்
நன்றியுமே நற்பண்பாகி
நன்னடத்தையைச் செப்பிடுமே !!!
ஆறறிவு மனிதயினம்
அன்புடனே ஆதரித்தல்
மனிதநேயச் செயலன்றோ சொல்வீரே !! ( 34 )


நன்றிக்கு நாய் தன்னை
மன்றினிலும் சான்றாகக்
காட்டிடுதல் மகத்துவமே !
மறுப்பிற்கும் இடமில்லை !
குளிராலே வாடுகின்ற குழந்தையினைப்
பேணுதல

மேலும்

மிக அருமையான படைப்பு.இன்று அவசியமான படைப்பு.நன்றிகள் அம்மா 17-Mar-2017 11:09 pm
gangaimani - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2017 9:58 pm

தங்கம் விளையும் அங்கம்,எங்கும்
தாகம் தீர்க்கும் பாகம்.எந்தன்
கண்ணில் மறைந்து கருத்தில் நிறைந்து
கனவில் மலரும் கவியாய் வளரும்
.
கவிதை தமிழும் வழியும் குலையும்
காவியக் கவியும் கனிஇதழெழுதும்...,

வளையும் சிலையோ வளரும் கலையோ
கழறும் மனதை உழறும் நாவை
கண்டும் கேட்டும் காணாதிருக்கும்
மோகக்கொடியோ முல்லைமலரோ
இயற்க்கை ஈன்ற இறைவனின் மகளோ

ஈர்க்கும் அவளின்..
இடையின் செழிவில்
உடைந்து இதயம் ஓடும்,அவளின்
உதிர்ந்த நிழலைத்தேடும்.
-கங்கைமணி

மேலும்

நண்பரே! தங்கள் வரவால் மனம் மகிழ்ந்தேன்.இன்றய தங்களின் வாழ்த்து என் கவிதைக்கு உரமாகிறது.என் மனம் கனிந்த நன்றிகள் நண்பரே ! 21-Mar-2017 5:36 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 2:05 pm
நன்றி நண்பரே ! 20-Mar-2017 6:29 pm
நல்ல கற்பனை 20-Mar-2017 3:15 pm
gangaimani - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2017 2:00 am

நங்கூரம் போட்டு உன்னை
நிறுத்திவைப்பதல்ல நட்பு.,
நல்லதை சொல்லி
நகர்த்தி விடுவதே நட்பு .

சேற்றினில் கண்டு
சுற்றிப்போவதல்ல நட்பு.
சேற்றினில் இரங்கி உன்னை
சுத்தம் செய்வதே நட்பு

சீக்கிரம் கடக்க வழியைச்-
சொல்வதல்ல நட்பு
சிக்காமல் உன்னை
ஜெயிக்க வைப்பதே நட்பு .

கருப்பை நிரப்பி
கலங்க வைப்பதல்ல நட்பு
கலக்கமிருந்தும்
காத்துநிற்பதே நட்பு .

தூரம் இருந்தும்
தொலைந்து போகாது நட்பு
பாரம் இறக்க
பரமன் படைப்பே நட்பு

முதுகில் குத்த
மறைந்து நிர்ப்பதல்ல நட்பு
நஞ்சைக் கூட
நம்பிக்குடிப்பதே நட்பு .


வெறுப்பை உமிழ்ந்து
வெட்டிவிடுவதல்ல நட்பு .
குறிப்பை உணர்ந்

மேலும்

நன்றி நண்பரே ! தங்கள் வரவால் மனம் மகிழ்ந்தேன் 18-Mar-2017 11:30 pm
நட்பின் வருடல்கள் அருமை 18-Mar-2017 10:31 am
நன்றிகள் நண்பரே 17-Mar-2017 11:10 pm
தூரம் இருந்தும் தொலைந்து போகாது நட்பு பாரம் இறக்க பரமன் படைப்பே நட்பு.... அருமையான வரிகள்...வாழ்த்துக்கள் நண்பரே 17-Mar-2017 8:53 pm
gangaimani - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2017 12:23 am

முன்னுக்கு இகழ்
பின்னுக்கு புகழ் -தப்பில்லை.

கண்ணுக்கு திமிர்
கருத்தினால் நிமிர்-தப்பில்லை

உறவிற்கு பிழை
ஊருக்கு உழை -தப்பில்லை.

உதட்டில் சாயம்
உள்ளுக்குள் காயம்-தப்பில்லை

வெறுத்தால் செல்
பிடித்தால் கொள்-தப்பில்லை

தந்தையை திட்டு
தள்ளாடயில் தாங்கு -தப்பில்லை

இலக்கற்று ஓடு ,ஆனால்
எதையாவது தேடு -தப்பில்லை

கொடுக்காமல் செல்,ஆனால்
கொட்டாமல் செல் –தப்பில்லை

புகழுக்காக அலை,ஆனால்
பிழைப்புக்காக உழை -தப்பில்லை

தனிமையில் அழு,பின்
துணிவோடு எழு-தப்பில்லை

நிழல் தரும் மரத்தின்
கிளை ஓடிக்காதே !

நீரில்லா ஊரில்
நீயிருக்காதே !

ஓடாக் குதிரைஊர் போகா உ

மேலும்

நன்றி நண்பரே தங்கள் வருகையால் மனம் மகிழ்ந்தேன் 26-Mar-2017 11:58 am
சிறப்பு சிறப்பு ... 26-Mar-2017 10:09 am
எனக்கான வரிகள் மிக அருமை.மிக்க நன்றி ஐயா ! 17-Mar-2017 12:20 am
தாய்மண்ணிற்கு உயிர்த்தியாகம் தப்பில்லை.. தமிழ்மேலிருக்கும் உம்காதலிலும்.. தப்பில்லை.. தாய்மொழியைக் கையாண்டவிதத்தில்.. தப்பில்லை நல்லதொரு தகவல்தர.. நற்றமிழிலெழுது..தப்பில்லை காதலில் தப்பிருக்கும்..ஆனாலு(உம்) மொழிக்காதலில்.. தப்பில்லை.. 16-Mar-2017 5:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (159)

Saranya Subramanian

Saranya Subramanian

காேவை
V MUTHUPANDI

V MUTHUPANDI

மதுரை
Tamilkuralpriya

Tamilkuralpriya

சேலம்

இவர் பின்தொடர்பவர்கள் (159)

Geeths

Geeths

கோவை
Siva

Siva

Malaysia
kitchabharathy

kitchabharathy

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (159)

AUDITOR SELVAMANI

AUDITOR SELVAMANI

கோவை
chelvamuthutamil

chelvamuthutamil

காரைக்கால்
user photo

வேத்தகன்

சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே