இரையும் அளி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இரையும் அளி
இடம்:  அக்கரைப்பற்று
பிறந்த தேதி :  20-Jul-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Feb-2015
பார்த்தவர்கள்:  400
புள்ளி:  16

என்னைப் பற்றி...

இரையும் அளி என்ற பெயரில் எழுதும் நான் அக்கரைப்பற்றில் பிறந்த இன்ஸிமாமுல் ஹக் ஆவேன்

என் படைப்புகள்
இரையும் அளி செய்திகள்
இரையும் அளி - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2018 7:32 am

அநுபவங்கள் சொல்லித்தந்த
பாடங்கள்

ஆயுள் உள்ளவரை மறவாது
உண்மையெனில்

மீண்டும் ஒரு காதல்
தோண்றுவதெப்படி?
நா.சே

மேலும்

தந்தையின் பெயர் நாகைய்யா வாழ்த்துகளுக்கு நன்றி 21-Nov-2018 2:46 pm
உங்கள் பெயர் வடிவேலின் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தின் பெயரை ஒத்ததாய் இருந்ததால் தான் வந்து வாசித்தேன். கவிதை அழகாகவும் காதலுடனும் உள்ளது வாழ்த்துக்கள் 21-Nov-2018 1:17 pm
இரையும் அளி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2018 12:58 pm

கொண்டவன் கொண்டதெலாம்
உண்டபின்னும்
கலியுகச்சாணைதனில்
வேற்றொருக்கார் காமம் தீட்டினாய்
அதற்கு பெண்ணியம் பேசி
காதலென்று கண்ணியமாய் நாமம் சூட்டினாய்

பெற்றவனை விற்றெனக்காலும்
உற்றவனை உறவாட உளம்போமோ!
நீ முற்றினை வீற்றிருந்து
வேர்தனை வெளியேற்றலால்
நீர் கொண்டு நின் வாழ
யார் கண்டு அவன் வாழ?

தொட்டில் சிசு முகங்கள் காணாது
தட்டில் இரை முகங்கள் காணாது-ஏதோவொரு
நாட்டில் தத்தளித்து தத்தளித்து
உள்ளம் கொப்புளித்து தந்தவற்றை
நீங்கள் அத்தடித்து அத்தடித்து
நின்னை செத்தொடிப்பதேனோ?

மேலும்

இரையும் அளி - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Nov-2018 8:58 pm

தினசரி நாளிதழின்
செய்திகள் என்னவோ
துக்கத்தையும்
மகிழ்ச்சியையும்
தாங்கித்தான் வருகிறது
படிக்க வாங்கும் முன்னே
தூக்கில் தொங்கவிடுகிறான்
கடைகாரன் !அவன்தான்
சரியான விமர்சன வித்தகன்!!!!!

மேலும்

மிக்க மகிழ்ச்சி! தங்கள் பார்வைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி 21-Nov-2018 1:11 pm
தானாக நடப்பவற்றை தம் எழுத்துக்களால் நடத்திய விமர்சனத்துக்கு வாழ்த்துக்கள் தோழரே 21-Nov-2018 12:31 pm
இரையும் அளி - இளவல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Sep-2018 2:24 pm

கொண்டவனை கல்லால்
கொன்றபின்னும்
கலியுகம் என்று கடந்து போகும்
சமூகம்

பெற்றதனை மற்றவனுக்காய்
கொன்றபின்னும்
மனவியல் என்று மறந்துபோகும்
சமூகம்

மேலும்

குறுந்தமிழில் எதார்த்த சம்பவத்தை உணர்ந்து எழுதிய இளவலே வாழ்த்துக்கள். 07-Sep-2018 2:49 pm
வாஸ்தவம் இவர்களுக்கு நரகம் அவ்வுலகில் என்றால் இவ்வுலகில் யார்தருவார் நரகம் 07-Sep-2018 6:41 am
இரையும் அளி - இரையும் அளி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2017 11:06 pm

கேடவர் ஊரார் பகடி செய்யின்
கேவலம் கொண்டு துவளும்
பல சாமானிய புத்திரர் மத்தியில்
அவருக்கொப்பாய் நானும்
தோற்பேன் என்று நினைத்தீரா?

அம்மை பூசும் பிரம்மை கல்வி
எம்மை என்றொரு நாள்
வீசும் வறுமை நெடிக்கு
முற்றுகை இடும் என்றல்லா
வேறேதும் காரணிக்காய்
வெறுமனே கற்கிறேன் என்று நினைத்தீரா?

எட்ட நின்று விளக்கினால்
எதிர்ப்பேச்சு என்பீரா?
ஏடெடுக்கும் வேலை தாண்டி
ஏதேனும் செய்ய முனைந்தால்
என் சொல் தட்டும்
எனைச்சாரா மகன் என்பீரா?

என் எழுத்துக்கள் கூட
அதன் கழுத்தை நிமிர்த்தி
நின் பால் கேள்விகள் தொடுக்க
இதுவரை தொடுத்த வேள்விகளை
துறப்பதை பார்த்தும்
துஷ்ட மகன்
எனை தூற்றுகிறான் என்ப

மேலும்

நாம் ஏற்றுக்கொண்ட விடைகள் அத்தனையும் தான் உண்மையில் கேள்விக்குறிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 8:03 am
இரையும் அளி - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2017 11:06 pm

கேடவர் ஊரார் பகடி செய்யின்
கேவலம் கொண்டு துவளும்
பல சாமானிய புத்திரர் மத்தியில்
அவருக்கொப்பாய் நானும்
தோற்பேன் என்று நினைத்தீரா?

அம்மை பூசும் பிரம்மை கல்வி
எம்மை என்றொரு நாள்
வீசும் வறுமை நெடிக்கு
முற்றுகை இடும் என்றல்லா
வேறேதும் காரணிக்காய்
வெறுமனே கற்கிறேன் என்று நினைத்தீரா?

எட்ட நின்று விளக்கினால்
எதிர்ப்பேச்சு என்பீரா?
ஏடெடுக்கும் வேலை தாண்டி
ஏதேனும் செய்ய முனைந்தால்
என் சொல் தட்டும்
எனைச்சாரா மகன் என்பீரா?

என் எழுத்துக்கள் கூட
அதன் கழுத்தை நிமிர்த்தி
நின் பால் கேள்விகள் தொடுக்க
இதுவரை தொடுத்த வேள்விகளை
துறப்பதை பார்த்தும்
துஷ்ட மகன்
எனை தூற்றுகிறான் என்ப

மேலும்

நாம் ஏற்றுக்கொண்ட விடைகள் அத்தனையும் தான் உண்மையில் கேள்விக்குறிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 8:03 am
இரையும் அளி - செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Dec-2016 7:33 pm

குடிக்கப்பட்ட
குழாய் நீரிடம்
கேட்டால் சொல்லும்
என் வயிற்றின்
வறுமையினை...!!


செ.மணி

மேலும்

நன்றி தோழரே.. 28-Dec-2016 9:23 pm
குழாய் அறியும் அவன் குடும்பத்தின் வறுமையை! அருமை நண்பரே 28-Dec-2016 9:11 pm
இரையும் அளி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2016 5:08 pm

தாயணு கோட்டை
தாக்கி
தலை கொண்டு
கருமொழியாய்
தமிழ் கண்டு
தரை வீழும்
ஒவ்வொரு முளையமும்
ஒருவகையில்
தனித்தனி கலைஞர்தான்

முதல் பிள்ளைக்கு
மூடி முலையூட்டும்
முன் ஆசன
பெண்ணில்
காம்பையும் கருவளையத்தையும்
மட்டும் பார்த்து
காமுறுபவன்
தனக்குள்
இரகசிய கவிஞன் ஆகிறான்.

தாய்மையையும் தூய்மையையும்
மட்டும் கண்டு
பேனையால் மொழி பெயர்ப்பவன்
பிறர் போற்றும்
பண்டிதக் கவிஞன் ஆகிறான்.

மேலும்

இன்னும் பல நிதர்சனங்கள் மனதில் உறங்கிக் கிடக்கிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Oct-2016 10:21 am
உதயசகி அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
23-Sep-2016 9:28 pm

உன் மடியில் என் மரணம்.....

என் விழியோடு உன் விழிகள் கலந்திட வேண்டுமடா
என் விரலோடு உன் விரல்கள் இணைந்திட வேண்டுமடா
என் இதழும் உன் இதழும் சங்கமிக்க வேண்டுமடா
அந்த நொடி என் வாழ்வின் இறுதி நொடியாய்
மாறிட வேண்டுமடா.....

என் இதயத்தின் துடிப்பு உன் இதயத்தில் நானும்
கேட்டிட வேண்டுமடா....
என் உயிரோடு உன் சுவாசம் புகுந்திட வேண்டுமடா
என் மூச்சு காற்று என்னை விட்டு விலகும் நிமிடம்
உன் கரத்தின் மேல் மழலையாய் நானும்
தவழ்ந்திட வேண்டுமடா....

உன் விழியின் துளிகள் என் நெற்றியில் நீ இடும்
திலகமாய் மாறிட வேண்டுமடா...
உன் இதயத்துடிப்பின் ஓசை என் இறுதி தாலாட்டாய்
எனை சீராட்டிட வேண்டுமடா..

மேலும்

காதலை அழகிய வார்த்தையால் செதுக்கியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2016 10:30 am
காதல் மனத்திற்குத்தான் அத்தனையும் இழந்து வழங்கும் ஆற்றல் உண்டு.அருமை 02-Oct-2016 1:30 am
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் நண்பா... 01-Oct-2016 5:45 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....என் மனம் நிறைந்த நன்றிகள் நண்பா... 01-Oct-2016 5:45 pm
உதயசகி அளித்த படைப்பை (public) உதயசகி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-Sep-2016 5:23 pm

கண்ணீரில் கரைந்த நட்பு

தாயின்றி தவித்தவளுக்கு தாய்மடி நீயும் தந்தாயடி
தந்தையை இழந்து நின்றவளுக்கு தோள் கொடுக்கும்
தோழியாய் நீயும் நின்றாயடி
தவமின்றி என் வாழ்வில் நீயும் கிடைத்தாயடி
எனை தாங்கும் வரமாய் நீயும் இருந்தாயடி....

துவண்டு போய் கிடந்தவளை அன்பு எனும்
அஸ்திரத்தால் தலை நிமிர்ந்து நிற்கவே செய்தாயடி
வலிகள் நிறைந்த என் வாழ்க்கையிலே
என் வழிகள் மறந்தே நானும் நிற்கையிலே
புது பாதை எனக்காய் அமைத்தே கொடுத்தாயடி...

கவலைகளால் என் கண்ணீர் கரைகையிலே
அள்ளி அணைத்தே என் விழி வெள்ளத்திற்கு
அணையாய் நீயே நின்றாயடி
திசை மாறிய என் வாழ்க்கை பக்கங்களுக்கே
திசையமைத்தே நீயும் தந்தாயடி..

மேலும்

கருத்தாலும் வருகையாலும் அகம் மலர்ந்தேன்....என் மனம் கனிந்த நன்றிகள் தோழி.... 01-Oct-2016 6:02 pm
கருத்தாலும் வருகையாலும் அகம் மலர்ந்தேன்....என் மனம் கனிந்த நன்றிகள் ஐயா... 01-Oct-2016 6:01 pm
கருத்தாலும் வருகையாலும் அகம் மலர்ந்தேன்....என் மனம் கனிந்த நன்றிகள் நண்பா..... 01-Oct-2016 6:01 pm
கருத்தாலும் வருகையாலும் அகம் மலர்ந்தேன்....என் மனம் கனிந்த நன்றிகள் தோழரே... 01-Oct-2016 6:01 pm
இரையும் அளி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2016 1:32 am

(என்னவளே அடி என்னவளே பாடல் மெட்டில்)

மன்னவனே குடி மன்னவனே
அந்தக் கருமத்தை விட்டுத் தள்ளு
எந்த நாளும் அதை குடித்து குடல்
வெந்து வருத்தமும் வந்து நிற்கும் . உந்தன்
கால் பிடித்து நான் கெஞ்சுகின்றேன் கள்ளுச்
சாவடிப் போக வேண்டாம் .
போதை கொண்டோர் குடும் பமெல்லாம் நடுப்
பாதையில் நிற்கக் கண்டேன் – அந்தக்
கோலமதை கொண்டு வந்து உன்
குடும்பமும் களைய வேண்டாம் (மன்னவனே )

முடிசிக்கிக் கொண்டக் கோழியைப்போல உந்தன்
நடையது இருந்திடுமே
கால்நடைபோல் வீதியிலே கண்டஇடத்தினில்
சிறுநீரும் கழிந்திடுமே
ஊர்சனமோ உனை பார்த்ததுமே
தூ.. கண்டறாவி என்றிடுமே
உடுதுணியோ இடை நழுவிவிழ உன்
மானமும்

மேலும்

மிக்க நன்றி சர்பான் 05-Sep-2016 1:44 am
மிக்க நன்றி தோழரே.. உங்கள் வாக்குப் பலிக்கட்டும். 05-Sep-2016 1:43 am
அருமையான வரிகள்.. 04-Sep-2016 9:38 am
அழகான கிராமத்து வரிகளில் ஒரு கண்ணியமான கவிதை.குடியை கொடி அசைத்து நிறுத்தும் தங்கள் கவியின் முயற்சிக்கு நான் தலைவணங்குகிறேன். தங்களின் கவிதை தாங்கள் கரம்பிடித்து தங்களை எங்கெங்கோ அழைத்துச்செல்கிறது நண்பரே. ஓர்நாள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.வாழ்த்துக்கள் ! 04-Sep-2016 3:41 am
இரையும் அளி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2016 3:24 pm

இன்னக்கும் விடிஞ்சிருச்சு
இத்த வரை போயிருச்சு
இல்லாத என் பொறுப்பு
இழுக்குக்கு வந்திருச்சு

கூட்டி வச்ச குப்பையோட
கூட நின்ன பிச்சக்காரி
கூட்டிப்பிடிச்சு -அவ மகளை
ஊட்டி விட்ட கதை,நான்-
தட்டி விட்டு வந்த சொல்ல
வலிக்கும் வரை உறுத்துதெனக்கு

கடற்கரைக்கு நாம வந்தா
கீறி வச்ச பொட்டிக்குள்ள
கட்டம் தொட்டு ஆடயில
கால்ல ஒரு முள் குத்தும்

நெருஞ்சி முள்ளு விசமென்னு
நெருங்கி நீ ஓடி வந்து
மடி மேல கால வச்சி
அப்ப நீ புடுங்கி விட்ட
விஷ முள்ளு வலிக்குதா னு
விரலால நீவி விட்ட
மண்ணளவு புண்ணுக்குள்ள
மணலேதும் போகாம
மெல்ல மெல்ல தட்டி விட்ட

கொஞ்சமா கசிஞ்ச ரெத்தம்
கொள்ளையா வர முதலே
புண்ணு

மேலும்

உங்கள் அனுபவத்தை பகர்ந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா 01-Sep-2016 12:08 am
அருமையான படைப்பு நண்பரே. நெருஞ்சி முள் குத்திய அனுபவம் எனக்கும் உண்டு. 31-Aug-2016 4:22 pm
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே. 30-Aug-2016 10:52 am
நன்றி நண்பரே. உங்கள் வித்தியாசமான கருத்துக்கள் தான் உயிரோட்டத்தை பூர்த்தி செய்கிறது. 30-Aug-2016 10:51 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (22)

அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
திவ்யா

திவ்யா

மலேசியா
அனுஷா தேவி

அனுஷா தேவி

செங்கோட்டை
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா

இவர் பின்தொடர்பவர்கள் (23)

இவரை பின்தொடர்பவர்கள் (22)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
PJANSIRANI

PJANSIRANI

நாமக்கல்
மேலே