கனவுதாசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கனவுதாசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Feb-2015
பார்த்தவர்கள்:  208
புள்ளி:  190

என் படைப்புகள்
கனவுதாசன் செய்திகள்
கனவுதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2017 10:57 am

நிறைவேறாத ஆசைகள்
நிறைய இருக்கலாம்.
நிறைவேற்ற முடியாத ஆசைகள்
நிறைய இருக்கலாம்
நிறைவேற்ற முடிந்தும்
நிறைவேற்றாதவை
நிறைய இருக்கலாம்.

எப்படி ஆகினும்
நம்மைப் பார்த்து
குறை சொல்கின்றன
ஆசைகள்
நீ எல்லாம் ஒரு மனிதனா?
என்று.

மேலும்

நதிகள் போல் மனிதனின் ஆசைகள் ஓயாமல் நகர்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Aug-2017 6:43 pm
கனவுதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2017 10:40 am

பணத்தைத் தேடி
வாழ்க்கை தொலைந்தது
பணமில்லாமலும்
வாழ்க்கை தொலைந்தது.

புலம்பல் இங்கே
பொது மொழியானது.

அச்சத்திலே தான்
வாழ்கிறான் எல்லாரும்
தன்னைப் போலவே
பிறனும் ஏமாற்றுவானோ?

காலம் கைகட்டி
வேடிக்கை பார்த்தது
எத்தனை சுலபமாய்
பலியானான் என்று.

மேலும்

கடந்து போனதையும் கடந்து கொண்டிருப்பதையும் கடக்க இருக்கும் நொடிகள் மீட்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Aug-2017 6:38 pm
கனவுதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2017 10:39 am

நேற்றை அழித்துத்
துடைத்துவிட்டு
மறுபடி
நேற்றில் வாழ
ஆசைப் படுகிறான்.

நாளையக்
கனவு பூமியில்
தனக்குப் பிடித்த
வேடந்தரித்து
புளகாங்கிதப் பட்டான்.

இன்று?

மேலும்

வாழ்க்கை இதற்குள் முடிந்து போகிறது 13-Aug-2017 6:37 pm
நிகழ்காலத்தில் வசிப்பதற்கு நேற்றும் நாளையும் எதற்கு ? அருமை . 13-Aug-2017 11:19 am
கனவுதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2017 10:37 am

ஒரு பிரளயம் அல்லால்
வேறென்ன வழி?

ஒவ்வொரு
சுவாசத்திலும் ஊழல்.

எல்லாச் சுரண்டலும்
அங்கீகரிக்கப்பட்டுவிட்டன.

எவனையும், எவனும்
எதுவும் சொல்லவிடாமல்
தடுப்பது எது?

அழிந்துபோவதில்
ஒன்றுபட்டார்கள்.

மேலும்

உண்மைதான்.. நிலையில்லா வாழ்க்கையில் நிலை பெரும் அறியாமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Aug-2017 6:34 pm
எதற்கு வம்பு என்கின்ற மன பயம் தனக்கு கிடைத்தால் போதுமென்ற சுயநலம் . முயன்றால் மாறும் . சிறப்பு . வாழ்த்துகள் ! 13-Aug-2017 11:27 am
கனவுதாசன் - கனவுதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2016 11:06 pm

உருவ மயக்கமும்
கருவ மயக்கமும்
பாடாய் படுத்துகின்றன.

அலங்காரங்களில்
அகங்காரங்கள்
ஓளிந்துகிடக்கின்றன.

எண்ணத்தைத்
தெரிவிக்க வந்த
வார்த்தைகள்
எண்ணத்தை
மறைக்கின்றன.

உள்ளுக்குள்
ஓதுங்கியும்,பதுங்கியும்
வாழ்ந்துகொண்டு
வாய்பேசும் வெளிப்படை.

காற்றீல்
புழுதிகள் மட்டுமல்ல
பொய்மையும்
சேர்ந்தே பறக்கின்றன.

மேலும்

நன்றி ...உங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு... 27-Feb-2016 11:30 pm
கனவுதாசன் - கனவுதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2015 12:30 pm

மனிதன் கிழிந்து கிடக்கிறான்
யார் தைப்பது?

மனிதன் ஒளிந்து கிடக்கிறான்
யார் கண்டுபிடிப்பது?

மனிதன் கொள்ளையடிக்கிறான்
யார் தண்டிப்பது?

மனிதன் திருடுகிறான்
யார் கண்டிப்பது?

மனிதன் பொய்யாயிருக்கிறான்
யார் திருத்துவது?

மனிதன் வஞ்சகம் செய்கிறான்
யார் நெஞ்சு பிளப்பது?

மனிதன் நடித்துக்கொண்டிருக்கிறான்
யார் ஒப்பனை கலைப்பது?

மனிதன் சிதறிக் கிடக்கிறான்
யார் சேகரிப்பது?


மனிதன் சூதாயிருக்கிறான்
யார் அகற்றுவது?

மனிதன் அழுக்காய் கிடக்கிறான்
யார் சலவை செய்வது?

மனிதன் விலங்காய்த் திரிகிறான்
யார் மனிதனாக்குவது !!!

மேலும்

ஏகன் அவர்களுக்கு அனேக நன்றி 04-Apr-2015 1:18 pm
அட நல்லா இருக்கே .....தொடர்ந்து எழுதுங்க -இதுப்போல் .வாழ்த்துக்கள் 04-Apr-2015 12:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
மேலே