kanavulagavaasi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kanavulagavaasi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Jul-2017
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  3

என் படைப்புகள்
kanavulagavaasi செய்திகள்
kanavulagavaasi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2017 12:22 pm

என் உடையவளே என் காதலே
உன் முடிவற்ற கண்களின் பீடிப்பில்
இருந்து என்னை விடுவித்துக்கொண்டேன்
இலையுதிர்காலத்தின் ஏகாந்தத்தை கொண்ட
உன் இருப்பின் சுகத்திலிருந்து விடுபட்டேன்
மழைநாளில் சாளரத்தின் வழி கண்ட அந்த
இன்னொரு உலகத்தில்தான் தற்போது என்
இருப்பு இருக்கக்கூடும்.
விரைவில் இவ்விடம் நிரந்தரம் கொள்ளலாம்
இவ்விடம் தூதுமடலுக்கான சாத்தியங்களற்று
விளங்குகிறது.
காற்றில் அலைய விட்டிருக்கும் இத்தகவல்
உன்னை அடையும் என்ற நம்பிக்கையில்
இன்றிரவு என்னால் நிம்மதியாய் உறங்க இயலும்.

என்னை அடையும் வழி உனக்குத் தெரியும்
வந்து சேர்.

மேலும்

kanavulagavaasi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2017 12:21 pm

உங்கள் ரகசியங்கள் யாவும் காற்றில்
கசியாமல் மானம் காத்து நிற்கிறது.
இருபக்கம் வாசற்கொண்டு பூனையை சுத்தலில்
விடுகிறது.
வெயிலில் மிளிர்ந்து நிழல் தருகிறது.
மழைஊறி பாசிபடிந்த சுவர்களை கண்டதுண்டா?
சொர்க வாசட்சுவர் அது.
உங்கள் இருப்பின் போது தாங்கிய
சுவர் இறப்பின்பின் புகைப்படத்தை தாங்குகிறது.
ஆணி ஊன்றிய உங்கள் சுத்தியல் அடிகளுக்கு
உணர்வுகள் இல்லா அச்சுவர் கத்தத்தான்
செய்கிறது.

மேலும்

kanavulagavaasi - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2017 12:19 pm

Ever wonder who cleans your shit! yes another human like you.

மனித கழிவுகளை மனிதன் அகற்றவேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு விட்டோம் என அரசாங்கமோ, வெகுஜெனமோ சொல்கிறார்கள். உண்மையில் நீங்கள் தான் காரணம். ஆம் நீங்கள்.

சாதாரண மிட்டாய் காகிதத்தை தெருவில் வீசுவதில் தொடங்குகிறது இந்த குப்பை கலாச்சாரம். சுத்தமான ஒரு இடத்தை குப்பைக்குவியலாக்குவது எளிது, அது அனைவராலும் இயலும். உங்களை மாதிரியாகக் கொண்டு பலரும் அதே இடத்தில குப்பைகளை கொட்டியப்பின், அதே குப்பைக்குவியலில் நீங்கள் வீசிய காகிதத்தை மட்டும் பொறுக்க சொன்னால் கூட அவ்வளவு குப்பையும் புரட்டி நீங்கள் வீசியதை எடுப்பீர்களா? இல்லை அந்த குப்பை குவியல

மேலும்

கருத்துகள்

மேலே