Karunanidhy Profile - கருணாநிதி சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கருணாநிதி
இடம்:  பாண்டிச்சேரி-திருச்சி
பிறந்த தேதி :  25-Jun-1961
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Aug-2014
பார்த்தவர்கள்:  2506
புள்ளி:  4420

என்னைப் பற்றி...

இலக்கண-இலக்கிய பரிச்சயமில்லாத ஆனால் தமிழில் எழுத ஆர்வமுள்ள ஒரு தமிழன்!

என் படைப்புகள்
karunanidhy செய்திகள்
karunanidhy - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2016 9:42 am

உன் நிழல் பட்ட
மண் எடுத்து வந்து
ரோஜா செடிக்கு வைத்தேன்
எத்தனை எத்தனை
நிறங்களில் எவ்வளவு
ரோஜா பூக்கள்
நித்தம் நித்தம்
என் இதய தோட்டத்தில் ..

உன் விரல் கொண்டு
குளத்து நீரில் தகதகத்த
நிலவின் கறை தொட்டாய்
சிலிர்த்த நிலவு
நொடியில் கறை நீங்கி
வெளுத்து பாலாக மாறியது
ஆம்..
அப்படித்தான் உன்
அன்பைக் கொண்டு
மோகம் தீண்டிய என்
இதயத்தின் கறைகளை
நானும் போக்கிக் கொள்கிறேன்

இரு..
இதோ..
உனது பேச்சொலி கேட்டு
புல்லாங்குழலிசையோ என்று
திகைத்து ஏங்கி நிற்கும்
இந்த ஆயர்பாடி பசுக்களை
சமாதானம் செய்துவிட்டு
வந்து விடுகிறேன்..
என் மனதையும் சேர்த்துதான்
சொல்கிறேன்!

மேலும்

கவி அருமை 24-Aug-2016 2:21 pm
காதலுக்கு தூது அனுப்பும் காலமா இது? நேரடியாக சொன்னாலே அதை புரிந்துக் கொள்ள இயலாது... என்ன செய்வது எண்ணச் சொல்லை தப்பென்று கூறிவிட்டால்...அதை கூட தாங்க முடியாது...போனது ஆண்கள் நெஞ்சம்...! 20-Aug-2016 10:47 pm
இயல்பான வரிகள்..வாழ்க்கையில் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை யாராலும் மாற்ற முடியாத இலக்கணம் 20-Aug-2016 10:41 am
karunanidhy - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2016 9:18 am

("கர்ணா" படத்தில் வந்த இனிய பாடல்..
"மலரே மௌனமா மௌனமே வேதமா?..இந்த சந்தத்தில் எனது வரிகள்..நண்பர்களின் பார்வைக்கு)

அழகே அமுதமா .. அமுதும் கசக்குமா
அழகு நிலைக்குமா.. நினைத்தால் கிடைக்குமா -அன்பே
அழகே அமுதமா.. அமுதமே சேருமா

கானல் நீரில் கூட காதல் தெரிவதில்லையோ
மோன நிலையில் நம்மை வாழ்த்தி மகிழ்வதில்லையோ
ஏனோ மனம் தடுமாறுதே ஏனோ கனம் சுமைகூடுதே
ஏனோ மனம் தடுமாறுதே ஏனோ கனம் சுமைகூடுதே
விழிகள் திறவா நினைவில் ..சுகமா
உன்மடி மீது உயிர்... போக்கவா ?

அழகே அமுதமா .. அமுதும் கசக்குமா

இரவு முடிந்தபின்னும் வெளிச்சம் காண மறந்தேன்
மார்பில் தென்றல் வந்து மாய்க்கும் மாயை அறிந்தேன்

மேலும்

சிறப்பான வரிகள்... 20-Aug-2016 10:48 am
karunanidhy - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2016 9:15 am

உற்று நோக்குகையில்
உணர்வுகள்
ஒவ்வொன்றுமே
இயல்பானவை போலவே தோன்றலாம்

உணரும்போது
அது உண்மையல்ல என்பதும்
புரியலாம்

ஒவ்வொரு உணர்வுமே
ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு
மாறுபட்டும் தோன்றலாம்

அதன் விளைவாகவே
எவற்றின் மீதும்
பிரியமோ காழ்ப்போ
விருப்பமோ வெறுப்போ
உருவாகலாம் ..
இதற்கு நிகழ்வுகளும்
சக மனிதர்களும் ..
ஏன் ..
சரித்திரமும் கூட
சான்று கூறலாம் !

உணர்வுகளின் அடுக்குகளில்
வன்மங்களும் குரோதங்களும்
நேயங்களும் நிர்மலமான
எண்ணங்களும் ..
மோகங்களும் காமங்களும்
தூசி படிந்தே கிடக்கக்கூடும்..
எது மேலேறி வருகிறது
எது அமிழ்ந்து ஆழத்தில் மறைகிறது
எது வெளிப்ப

மேலும்

உண்மைதான்..உணர்வுகள் ஏதோ ஒன்றை முதலில் சொல்லி முடிவில் இன்னுமோர் கருத்தை ஏற்றுக் கொள்கிறது 20-Aug-2016 10:51 am
karunanidhy அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Aug-2016 11:29 am

ஏதோ ..
தப்பு செய்து விட்டது போல்
வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த
மேகக் கூட்டமொன்றை
பின்தொடர்ந்தேன் ..

திரும்புகையில் ..
அவற்றில் கொஞ்சத்தை
கைது செய்து
கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்
இப்போது ..!

மலையில் ..
மோதிப் பிரிந்து
கலைந்த மேகங்களில் ..

கொஞ்சம்
கலந்தன .. மீண்டும் வானில்

கொஞ்சம்
பரவின .. பச்சை மரங்களில் ..

கொஞ்சம்
படர்ந்தன ..என் மேனியில் !

சில்லென்ற நினைவுகளோடும்
மேகங்களின் மிச்சத்தோடும் ..
மெல்ல கண்களை மூடியபடி
நீண்ட நாட்களுக்குப் பின்
நிம்மதியானதொரு
உறக்கத்திற்கு ஆயத்தமாகிறேன் ..!

மேலும்

நன்றி நண்பரே ! 16-Aug-2016 7:14 pm
நன்றி நண்பரே ! 16-Aug-2016 7:14 pm
நன்றி சார் ! 16-Aug-2016 7:13 pm
கவிதையின் சொற்காட்சியில் கண்ணை மூடினேன். மனதில் இயற்கைக்காட்சிகள் ஒரு அழகிய சலனப்படமாய் கவரி வீசி நிற்கிறது. 10-Aug-2016 10:18 pm
karunanidhy - karunanidhy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 11:38 am

சகியே..

**

என் முடிவுகளை எல்லாம்

நீதான் ..

தீர்மானிப்பேன் என்கிறாய்

எப்போதுமே ..!

எதிர்மறையாய் பேசுகிறாய் ..

எப்போதுமே..!**

ஆனால் ..

எப்போதுமே..

என் முடிவுகளை

ஏற்றுக் கொள்கிறாய் ..

தோற்று தோற்று

என்னை வெற்றி காண்கிறாய் !**

எப்போதுமே..

உனது சொல்லுக்குதான்

நான்..

கட்டுப் பட வேண்டும்

என்றே சொல்கிறாய்**

எப்போதுமே ..

உனக்கு கட்டுப்படுவதுபோல்

நான் பேசுவதை

தெரிந்தும் கூட

எப்படி ரசிக்கிறாய் ..

..மாறி மாறி

தோற்பதால் நாம்

இருவரும்

வெற்றியல்லவா

பெறுகிறோம்

எப்போதுமே !

………………………………

மேலும்

நல்ல கருத்து! நன்றி நண்பரே! 16-Aug-2016 7:10 pm
சொல்லாமல் ரசிப்பது சுகமே!ஆனால் சொல்லாமல் விடுவதும் காயமே! இனி என்ன செய்வது 08-Aug-2016 1:46 pm
karunanidhy - karunanidhy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 11:57 am

தூரத்தில் ..
புலிகளின் உறுமல்கள்
சிங்கங்களின் கர்ஜனைகள்

மேலே.. ..
கழுகுகளின் வட்டமடிப்பு
சுட்டெரிக்கும் வெயில்

சற்று நேரத்திற்கெல்லாம்
நிசப்தம் கூடிய அமைதி
கரு முகில்கள் ..
இளம் தூறலாய் மழை..
குளிர்ந்த காற்று ..

அப்போதும் ..
இப்போதும்..
எப்போதும் ..
கவலையின்றி சிரிக்கும்
மலைச்செடியின் மலர்கள்..
பசுந்தென்றல் வீசும் மரங்கள்..
இன்னிசை ரீங்காரம் எழுப்பியபடி
தேனை சேகரிக்கும் தேனீக்கள் ..
யோகத்தில் ஆழ்ந்ததாய்
பிரமிக்க வைக்கும் மலை ..

இவைகளின் நடுவே ..
பாடம் பயில்பவனாய்
மௌனமாய் ..நானும் !

மேலும்

உண்மைதான் நண்பரே! 16-Aug-2016 7:09 pm
நிலைகள் தன்மையானவை நிலை பெற்று நகரும் வரை 08-Aug-2016 1:45 pm
karunanidhy - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2016 11:57 am

தூரத்தில் ..
புலிகளின் உறுமல்கள்
சிங்கங்களின் கர்ஜனைகள்

மேலே.. ..
கழுகுகளின் வட்டமடிப்பு
சுட்டெரிக்கும் வெயில்

சற்று நேரத்திற்கெல்லாம்
நிசப்தம் கூடிய அமைதி
கரு முகில்கள் ..
இளம் தூறலாய் மழை..
குளிர்ந்த காற்று ..

அப்போதும் ..
இப்போதும்..
எப்போதும் ..
கவலையின்றி சிரிக்கும்
மலைச்செடியின் மலர்கள்..
பசுந்தென்றல் வீசும் மரங்கள்..
இன்னிசை ரீங்காரம் எழுப்பியபடி
தேனை சேகரிக்கும் தேனீக்கள் ..
யோகத்தில் ஆழ்ந்ததாய்
பிரமிக்க வைக்கும் மலை ..

இவைகளின் நடுவே ..
பாடம் பயில்பவனாய்
மௌனமாய் ..நானும் !

மேலும்

உண்மைதான் நண்பரே! 16-Aug-2016 7:09 pm
நிலைகள் தன்மையானவை நிலை பெற்று நகரும் வரை 08-Aug-2016 1:45 pm
karunanidhy - karunanidhy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2016 2:59 pm

இவரா..
அவரா..
இந்த அம்மாவா..
அந்த அம்மாவா..
யார் நம்மை கூட்டிப் போகப்போகிறார்கள்
தத்தெடுத்துக் கொண்டு..
என்று எல்லா சிறுவர்களும் ..
வந்தவர்களை பார்க்க
அப்புறம் ஒரு நாள் வருகிறோம் என்று
அவர்கள் எல்லோருமே
போய்விட்ட அந்த மாலைப் பொழுது
மட்டும் ..
மறக்க முடியாததாகி விடுகிறது
அந்த சிறுவர்கள் அனைவருக்கும்!

மேலும்

சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீரழிவுகள் மற்றும் மதக் கலவரங்களால் அநாதரவாக்கப்பட்ட குழந்தைகள். முறையற்ற வழியில் பிறந்து அரசின் தொட் டில் குழந்தை காப் பகங்களில் அடைக்கலமான குழந்தைகள். · தாய், தந்தையரை இழந்து உறவினர்களாலும் புறக்கணிக்கப் பட்ட குழந்தைகள். · வறுமை மற்றும் ஏழ்மையால் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் சொந்தப் பெற்றோர்களால் தத்துக் கொடுக்கப்படும் குழந் தைகள் போன்றோர் பற்றிய வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் அடங்கிய போற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் குழந்தைகள் நமது தெய்வங்கள் . 08-Aug-2016 3:05 pm
நன்றி நண்பரே! 08-Aug-2016 11:27 am
நன்றி நண்பரே! 08-Aug-2016 11:27 am
அருமை 08-Aug-2016 10:16 am
Murali TN அளித்த படைப்பை (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Jun-2015 11:29 am

உணவு....!

அந்த அடர்ந்த காட்டின் நதியோரம்..... நதி என்று சொல்வது சரியா என்று தோன்றவில்லை... காட்டாறு என்றே கொள்வோம்... அபரிமிதமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.... கொஞ்சம் மேட்டிலிருந்து இறங்கும் பொழுது மீன்கள் துள்ளிக் குதித்து இறங்கியது.... கொஞ்சம் தூரத்தில் நிலம் சமனடைய நீரோட்டம் சற்று அமைதி அடைந்தது..... துள்ளிய மீன்கள் சுற்றி வலம் வந்து தன் கூட்டத்துடன் சற்று கரையருகே ஆராய்ச்சியில் இருந்தது......

தண்ணீரில் யாரங்கே ஒரு குச்சியை நட்டு வைத்தது...? இந்த நீரோட்டத்திலும் ஆடாது நிற்கும் குச்சி அந்தச் சிறிய மீனுக்கு வியப்பை உண்டாக்க தாய் மீனை அழைத்தது..... தூரத்தில் இருந்து பார்

மேலும்

நன்றி சார்! 09-May-2016 10:26 pm
Philosophical..and has a moral too! 09-May-2016 10:07 pm
மிக்க நன்றி திரு ஜின்னா. 07-Jun-2015 8:42 am
மிக அருமை தோழரே... கதை மாதிரி எனக்கு தோன்ற வில்லை... இது வாழ்கையில் நாம் தெரிந்து கொள்ளும் ஒரு செய்தியாகவே படுகிறது.... செய்தி மட்டுமல்ல அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு விசயமாகவே தெரிகிறது... நல்ல விசயங்களை வெகு அருமையாக புரிய வைத்து விட்டீர்கள்... அந்த கொக்கு மீன் உணவில் ஆரம்பித்து இடையில் விவசாயில் அழுகும் நிலையில் தொடர்ந்து இறுதியில் சூப்பர் மார்கெட் சூபெர்வைசர் வரை உணவின் பல பரிமாணங்களை அழகாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள் தொடருகள்... 07-Jun-2015 12:19 am
karunanidhy - Murali TN அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2016 9:31 am

தோழர் K .R . ராஜேந்திரன் அவர்களின் படைப்பு மீண்டும் அமெரிக்க மின் சஞ்சிகை பாலசந்திரிகை -யில்..   வாழ்த்துக்கள் திரு ராஜேந்திரன்...   காண சொடுக்குக..அன்புடன்

முரளி 


மேலும்

நன்றி அம்மா. இவையெல்லாம் 100% உங்களைப் போன்றோரின் ஆசிகள். இந்த தாயன்பு வார்த்தைகள்தான் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தி. நீங்கள் சொன்னதுபோல் எதுகை மோனையில் கவனம் செலுத்தி ”குழந்தை வெண்பாக்கள்” சிலவற்றைப் படைக்க எண்ணியுள்ளேன்.அம்மாவின் ஆசிகளில் வெண்பாக்களை நல்ல முறையில் படைக்க முயற்சி செய்வேன். 08-May-2016 10:53 am
மனம் நிறைந்த வாழ்த்துகள் இராஜேந்திரா ! 04-May-2016 12:06 am
நன்றி தோழரே,,,எனக்கு "முயற்சி" என்பதன் பின்புலமாக இருப்பதே நீங்கள்தான். கூடவே நம் தளப்பெரியோர்களின் வழிகாட்டல்கள் உயரம் தொடவைக்கிறது. 03-May-2016 2:26 pm
arumaiyaana pataippu manamaarntha vaalththukkal 02-May-2016 4:22 pm
Geeths அளித்த எண்ணத்தை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Apr-2016 6:45 pm

எழுத்து - தமிழ் கூற்று எண்ணம் போட்டி முடிவு


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எழுத்து நடத்திய எண்ணம் போட்டியின் வெற்றியாளர்...

ஷ்யாமளா ராஜசேகர்

மற்றும் 
பா கற்குவேல்
 
வாழ்த்துக்கள்

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

மிக்க நன்றி புனிதா ! 28-Apr-2016 10:03 pm
நன்றிப்பா ! 28-Apr-2016 10:03 pm
மிக்க நன்றி ராஜன் சார் ! 28-Apr-2016 10:03 pm
மிக்க நன்றி ! 28-Apr-2016 10:02 pm
karunanidhy - KR Rajendran அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2016 2:36 pm

--என் காலடிப் பாதை--
 

ன்புத் தோழமைகளுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும் என் மரியாதை கலந்த வணக்கங்கள்.

இன்றோடு இந்த தளத்தில் இணைந்து 8 மாதங்கள் முடிந்து இன்று 9 ஆவது மாதத்தில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கியிருக்கிறது என் பாதை. 

சாதாரணமாக  எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை தமிழ்ப்பற்று இங்கு இழுத்து வர,ஆரம்ப சூழ்நிலையில் அதிகம் படிக்கவில்லையே என தன்னம்பிக்கையின்றி எழுத ஆரம்பித்தபோது அந்த ஆரம்ப காலகட்டத்தில் தயக்கம் இருந்தது. தளத்தோழர்கள் உங்களின் கருத்து ஊக்கம்தான், தயக்கம் போக்கி, இந்த தளத்தில்  தொடர்ந்து என்னை எழுத வைத்து முதல் பாதை அமைத்துத் தந்தது.  நீங்கள்  தந்த கருத்து  உற்சாக பாதையில் கொஞ்சம் கொஞ்சமாய் தாழ்வு மனப்பான்மை மறைந்தே விட்டது. அதற்காக ஒவ்வொருவருக்கும் என் மனதார நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்த விவசாயம் மற்றும் கிராமியம் கலந்து நான் எழுதும் படைப்புகளுக்கு வாழ்த்து தந்த  உற்சாகத்திலும், பலர் எழுதும் கவிதைகளை வாசித்து வாசித்தும் என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன்

முதன் முதலாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக்கொண்ட  கொண்ட   நம் “எழுத்து” தளம் நடத்திய”மீண்டும் மீண்டும்” எனும் கவிதைப் போட்டியில் தளத் தோழர்களோடும்,  தமிழறிஞர்களோடு நானும் பங்குபெற்றேன். பள்ளிப் படிப்பைக் கூட பாதியிலேயே விட்டு வந்த கிராமியத்தவன் நானும் தமிழறிஞர்களோடு பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். முதன் முதலில் நான் பெற்ற பரிசும் இதுவே. 

அதன் பின் வந்த ”காட்சிப்பிழைகள்” எனும் கசல் திருவிழாவில் பங்கு பெற்று இந்த தளத்தில் எனது 100 ஆவது கவிதையாக அதை  சனவரி முதல் நாளன்று பதிவு செய்தபோது மகிழ்ச்சியில் மனம் திளைத்தேன். உங்கள் ஒவ்வொருவரின் கருத்திலும் என்னை மேம்படுத்திக் கொண்டேன்.உங்கள் ஒவ்வொருவரின் பாராட்டிலும், கருத்திலும் மகிழ்ந்தேன்.அதில் கருத்திட்ட கவித்தா சபாபதி  அய்யா ”வாழ்நாளில் நான் ரசித்த காதல் கவிதைகளில் உலகளாவிய கவிதை என்றும்,  மிகச்சிறந்த 10 கவிதைகளின் முன்வரிசையில் மீட்டுகிறது”என்றும்,   திரு கருணாநிதி அய்யா "கசல் கவிதை தங்கக் கிரீடமாக தமிழன்னைக்கு சமர்ப்பித்து ..மண் வாசம் வீசும் பசுமையான கவிதை ஒன்றை உலகத் தரத்திற்கு உயர வைத்துள்ளவர்" என்றும், திரு இராஜன் அய்யா "தளத்துக்கு மேலும் ஒரு நல்ல படைப்பாளி கிடைத்திருக்கிறார்." அந்த கசல் தொடருக்கு வித்திட்ட திரு ஜின்னா அவர்களின் உணர்வுப்பூர்வமான கருத்துகள், அதை கசல் மாலையாக்கிய திரு முரளி அய்யா மற்றும் உங்கள் பலரின் ஊக்கத்தில் என்னை நானே இன்னும் உயர்த்திக்கொள்ள முடிவெடுத்தேன். அந்தக் கவிதை கசலின் முழு இலக்கணத்தில் இல்லையென்றாலும் தளத்தில் உள்ள இலக்கணத்தோடு உள்ள கசல் கவிதைகளை பார்த்து முயற்சியும் பயிற்சியும் எடுத்துக்கொண்டு என்னை இன்னும் மெருகேற்றிக் கொண்டேன்.  

அதன் பிறகு மருத்துவர் திரு கன்னியப்பன் அய்யா அவர்களின் பெருமையான  சந்திப்பு.. இந்த சந்திப்புக்கு பிறகுதான் இலக்கணப் பாக்களின் மீது ஈர்ப்பு தோன்றியது. என்னைப்  போன்றோர் கவிதை படைப்புகளை எழுதுவதே கடினம். அதிலும் இலக்கணம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. இலக்கணப் பாக்களின் அருகில் செல்லக் கூட அருகதை இல்லை என்றிருந்த நான், முயன்று என்னை ஆயத்தப் படுத்தி, இலக்கணப் பாக்களின் பக்கம் திரும்பி எனைப்போன்ற விவசாய மக்களுக்காக எனது அனுபவத்தில் உதித்தவற்றையெல்லாம் எடுத்து உழவனதிகாரம் எனும் குறட்பா அதிகாரத்துக்கு முயன்றேன். அதில் சரிபார்ப்பு முன்னோட்டமாக மூன்று குறட்பாக்கள் எழுதினேன். அதில் சியாமளா அம்மா அவர்களின் வாழ்த்து மற்றும் சிறுபயிற்சி,   நான் எழுதிய இம்மூன்று குறட்பாக்கள் பார்த்து திரு சுசீந்தரன் அய்யாவிடம்  கிடைத்த பாராட்டுகள், எசக்கியேல் அய்யாவிடமிருந்து வந்த கருத்துகள், திரு சங்கரன் அய்யாவிடமிருந்து வந்த கருத்துகள், திரு ஆவுடையப்பன் அய்யா, திரு மு.ரா அய்யா, திரு முரளி அய்யா, திரு இராஜன் அய்யா, திரு பழனிகுமார் அய்யா, திரு ஜின்னா போன்றோரின் கருத்துகள் எல்லாமே ஒவ்வொரு படியாக என்னை உயரத்துக்கு கொண்டு வந்தது. 

இன்று 9 ஆவது மாதம் காலடியெடுத்து வைக்கும் இந்த நாளில் அந்த குறள் வெண்பாக்களோடு மீதமுள்ள 7 குறள்களையும் ஒரு அதிகாரமாகவே ”உழவன் - உழவனதிகாரம்” எனும் தலைப்பில் கவிதைகள் பகுதியில் பதிவிட்டிருக்கிறேன். உழவுப் பரம்பரையில் வந்த விவசாயி என்ற முறையில் இதற்காக பெருமை கொள்கிறேன்.  தளம் நுழைந்த இந்த 8 மாத காலத்திற்குள்  நான் பெற்ற மிகப்பெரிய சொத்துகள் பெரியோர்களின் ஆசி, தோழர்களின் முகம் காணா நட்பு மற்றும் மிகப் பெரிய தன்னம்பிக்கை. கிராமியத்தவன், பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவன் என்ற தாழ்வு மனப்பானமையை தூர விலக்கிய தன்னம்பிக்கைதான் முதல் படியானது. 

அதே போல நான் எதிர்கொண்ட துயர சம்பவம் உதயா எனும் உடன்பிறவா தம்பி உதயகுமாரின் இழப்பு. அவர் கல்லூரியில் படித்தாலும் ”வருங்கால வயல்களின் தளபதி” என்று அன்போடு வாய் நிறைய அழைத்து மகிழ்ந்த அந்த உடன்பிறவா தம்பியின் இழப்பு. என் கிராமிய எழுத்துகளில் அவன் எப்போதும் நிறைந்திருக்கிறான். முகம் காணாவிட்டாலும், பொங்கல் சாரல் கிராமியத்தோடு கலந்த நட்பு என்றும் நிலைத்திருக்கும். 

எதையெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டுமோ அதையெல்லாம் உதயா உட்பட உங்கள் ஒவ்வொருவரின் கவிதைகளிலிருந்தும், கட்டுரைகளில் இருந்தும் கற்றுக்கொண்டேன். அதற்கு நம் ”எழுத்து” தள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், ”எழுத்து” தள குழுமத்துக்கும் இதன் மூலம் நன்றி சொல்லிக் கொள்கிறேன். 

ஒருமுறை மருத்துவர் அய்யா என் படைப்பு ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததை பார்த்த பின்னர்தான் மொழிபெயர்ப்பு ஆசை வந்தது. அந்த மாதத்திலிருந்தே ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை காரணமாக முடிவு செய்து ஆங்கில மொழிகளில் உள்ளவற்றை உள்வாங்க ஆரம்பித்தேன். காரணம் மேலை நாட்டார்கள் அப்படி என்னதான் எழுதுகிறார்கள் என்று புரிந்து அதைவிட அதிகம் நம் மொழியில் தரவேண்டும் என்பதற்காக இப்போது ஆங்கிலத்தை அயராது முயன்று கற்று வருகிறேன். 

விரைவில் என் படைப்பு ஒன்றை நானே ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.. உங்களால் ஓரளவுக்கு தமிழில் தேறிவிட்டேன். வெகுவிரைவில் ஆங்கிலத்துக்கும் உங்கள் ஆதரவு தேவை. நான் எழுதப் போகும் ஆங்கில மொழி பெயர்ப்பு எப்படி இருக்கப் போகிறதென்று தெரியாது. ஒன்றுமட்டும் உண்மை. எழுதப் போகும் எந்தப் படைப்பானாலும் சரி. அதற்குரிய மரியாதை அளித்து உயர்வாகவே முயற்சிப்பேன். 

வாழ்த்துங்கள், உங்கள் வாழ்த்துகளில் வளர்கிறேன்      

மேலும்

தங்களின் வாழ்த்துகளே ஆசிகள். இந்த வாழ்த்தில் முயற்சி உற்சாகம் முன்னின்று நடத்தும். நன்றி அய்யா 27-Apr-2016 8:34 pm
உங்களின் பாதையில் என் பயணங்கள் என்றும் தொடரும். வாழ்த்துக்கு நன்றி அய்யா. 27-Apr-2016 8:29 pm
வாழ்த்துக்கள்! தொடருங்கள்! 26-Apr-2016 4:44 pm
அருகதை என்ற வார்த்தையை தவிர்க்கவும் தம்பி..! இந்த இனிய உலகில் யாரும் யாருக்கும் சளைத்தவர்களில்லை.. நம்மை போன்ற சராசரி படைப்பாளிகளுக்கு நமது மாறாத நட்பொன்றே நல்ல ஆறுதலாக இருக்க முடியும். நாமிருவரும் சந்தித்து உரையாடும் காலம் விரைவில் வரும் தம்பி..! 26-Apr-2016 2:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

Giri Bharathi

Giri Bharathi

தாராபுரம், திருப்பூர்.
Mohamed Farzan

Mohamed Farzan

சம்மாந்துறை, இலங்கை.
Kavi Tamil Nishanth

Kavi Tamil Nishanth

வேலூர்
Saleem Khan

Saleem Khan

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
user photo

selval

விர்ஜினியா, அமெரிக்கா

இவர் பின்தொடர்பவர்கள் (109)

Geeths

Geeths

கோவை
s.r.jeynathen

s.r.jeynathen

மதுரை
Saleem Khan

Saleem Khan

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (111)

நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
ரசிகன்

ரசிகன்

நல்லூர்-விருத்தாச்சலம்
சகி

சகி

ஈரோடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

பிரபலமான விளையாட்டுகள்

மேலே