Kitchabharathy Profile - கிச்சாபாரதி சுயவிவரம்



எழுத்தாளர்
இயற்பெயர்:  கிச்சாபாரதி
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  17-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jun-2010
பார்த்தவர்கள்:  497
புள்ளி:  329

என்னைப் பற்றி...

ஒரு கிராமத்திலிருந்து சினிமாக்காரனாக வேண்டும் என்ற நோக்குடன் வந்த நான் உதவி இயக்குநராகவும் பணியாற்றினேன். சூழ்நிலையின் காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது விபத்துக்குள்ளானேன். மருத்துவர்களின் சிறு தவறினால் பெரும் பாதிப்புக்குள்ளானேன்.ஓராண்டு காலம் படுக்கையில் மட்டுமே இருந்தேன். அதன் பின் தன்னம்பிக்கையுடன் மீண்டு(ம்) எழுந்து வந்தேன். கடந்த பத்து ஆண்டுகாலம் நான் பட்டபாடு வேறு யாரும் படக்கூடாது என்ற நோக்குடன் எழுதத் தொடங்கினேன். "தன்னம்பிக்கை எனும் தனல்" என்ற நம்பிக்கை புத்தகத்தை படைத்துள்ளேன். "எனக்குள் ஒரு தீ" என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளேன். தற்சமயம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மாற்றுத்திறனாளியாக இருக்கின்ற என்னை விரும்பும் ஒரு பெண்ணினை என்னுயிர் துணையாக இணைத்துக் கொள்ள ஆவல். சாதி மதம் கடந்து வாழ நினைக்கும் ஒரு தேவதையை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

என் படைப்புகள்
kitchabharathy செய்திகள்
kitchabharathy - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2017 6:28 pm

கன்னியவள்
கண் ஜாடை ஈர்ப்பை வெல்ல
எந்தக் கொம்பனாலும் முடியவில்லை....

காரணம்
பெண் மன ஆழத்தை
துல்லியமாய் கனித்துச் சொல்ல
எந்தக் கருவியும்
இன்னும் கண்டுபிடிக்கவில்லை...!

இதுவரை முயன்றவர்கள் அனைவரும்
மூழ்கிதான் போனார்கள்
கடலில் வீழ்ந்தல்ல...

பெண் கண் ஜாடை
காதல் ஈர்ப்பினில் விழுந்து..!

மேலும்

kitchabharathy - அசோக் ஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2017 3:47 pm

என்னை தொலைந்து போ என்றாலும்
உன் உறவில் ஒளிந்து கொள்ளவே ஆசை

மேலும்

கண்ணாமூச்சி ஆட்டம்தான் வாழ்க்கை....! 25-Feb-2017 6:15 pm
kitchabharathy - raghul kalaiyarasan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2017 3:35 pm

அழகே
அழுது
கொண்டே
இருக்கிறேன்
ஆறுதல்
சொல்வாய்
என
நம்பி...

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றி தோழர்களே 27-Feb-2017 4:01 pm
Simply Super.... 26-Feb-2017 12:04 am
நம்பிக்கைதான் வாழ்க்கை... அதை ஒருபோதும் கைவிடாதீர்கள்... 25-Feb-2017 6:13 pm
kitchabharathy - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2017 12:22 pm

பெண் மனம்
ஆழம் என்றால்....

ஆண் மனம்
நீளம்தான்...!

உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
இன்று நாம்
மூழ்கிப்போனதால்....!

மேலும்

kitchabharathy - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2017 12:15 pm

அமுக்கு பூட்டை பூட்டுவதற்கு
வேண்டுமோ ஒரு சாவி...

என்னிதயக் கதவை
வந்தென்று திறக்குமோ
உன் காதல் மெளனச் சாவி?

கண்டவுடன் புன்னகை பூ
பூக்குதே உன்னிதழ்

பேசத்தெரியாத ஊமையாய்
இல்லையே உன் விழிகள்...
செவ்விதழ் திறந்து
சிந்தினால் என்ன?
தேன் காதல் மொழிகள்..

மேலும்

kitchabharathy - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2017 12:02 pm

விரைவான வாழ்க்கையில்
படுவேகமாய் பயனிக்கிறது...
விவாகரத்து...!

காரணம்
ஒருவரை ஒருவர் அறியாமையும்
விட்டுக்கொடுக்க முடியாமையும்தான்...!

காதலும் காமமும்
தேவைக்காக மட்டுமே பயன்படுத்திவிட்டு
உடனே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்
இன்றைய காதலர்கள்....
விரைவு உணவை விரும்பும்
புதியதலைமுறையால்..
யூஸ் & ஃத்துரவாய்...
பலரது வாழ்க்கை!

மேலும்

Faza அளித்த படைப்பில் (public) SHAN PAZHANI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Feb-2017 11:54 am

பேசிய பலர்களது
குரல் இனிக்க வில்லை
உன் குரல் மட்டும் இனிக்கிறது...
உலகம் முழுவதும்
பல அழகிகள் இருந்தாலும்
நீயே மட்டும் என்னில் அழகியாய்...
பல பெண்கள் கடந்து சென்றும்
என்னை நீ மட்டும் கடத்தி சென்றாய்
உன் கண்களால்...
உணர்கிறேன் அன்பே
நீ தான் என் தேவதை என்று...

மேலும்

அருமை 19-Feb-2017 1:18 pm
வாழ்க்கைக்கு தேவைதான் இப்படியொரு தேவதை... 19-Feb-2017 11:23 am
அருமையான ....கவி 19-Feb-2017 9:42 am
எழுதிய விதியின் படைப்பிலக்கணங்கள் என்றுமே பொய்ப்பதில்லை 19-Feb-2017 8:58 am
kitchabharathy - kitchabharathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2017 8:59 pm

என்னிதயம்
ஈரம் நிறைந்ததாக
இருந்துததினால்தான்
நீ வந்து சென்ற
சுவடுகள்...
இனியும் என்னுள்...!

மேலும்

தங்களது ஊக்குவிப்பு என்னை முன்னேற்றுகிறது.....நன்றி நட்பே... 12-Feb-2017 12:04 pm
உண்மைதான்..காதலிக்கும் உள்ளம் எப்போதும் ஈரம் நிறைந்ததாகவே காணப்படுகிறது காரணம் மனதில் பதிந்த மங்கை எனும் மலரை வாடாமல் காப்பதற்கு..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Feb-2017 10:55 am
kitchabharathy - Jeeva Narayanan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jul-2016 12:56 am

பீரு கொண்டு திரியும் - இளைஞர்  கூட்டம்
எங்கள்  தேசத்தில்
வீறு கொண்டு நடைபோட
ஏழுவது எப்போழுது ?

எண்ணற்ற  சட்டங்கள்  உள்ள
எங்கள்  தேசத்தில்     
எண்ணற்ற குற்றங்கள் நிகழாமல்
தடுப்பது எப்பொழுது ?

பெண்களை  தெய்வமாக  பார்க்கும்
எங்கள்  தேசத்தில்
பெண்கள் உயிர்க்கு  பாதுகாப்பு
கிடைப்பது  எப்பொழுது ?

மருத்துவத்தை வியாபாரமாக  பார்க்கும்
எங்கள்  தேசத்தில்
மருத்துவத்தை  உயிர்  சேவையை 
செய்வது  எப்பொழுது ?

விஞ்ஞானத்தை  சாதனையை  பார்க்கும்   எங்கள்   தேசத்தில்
விவசாய  நிலைமையை  இனியாவது
எண்ணுவது எப்போழுது ?

நாறிப்போன எங்கள்  தேசம்
தேறப்போவது எப்போழுது ?
நாடித்தளரும் ம

மேலும்

kitchabharathy - sathishkumaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2016 4:33 pm

நான் உணர்ந்ததெல்லாம் உண்மையான
காதலே அன்றி
வெறும் பித்து பிடித்து
அலையும் காமத்தினால் அல்ல
அதனாலோ என்னவோ உன்னுடன்
உரையாடும் தருணங்கள் அனைத்தும்
என் வாழ்வின் ரணங்களாகி போகவே
நம்முடைய காதல் என்ற
ஒன்று பிறவாமலே
இறந்ததும் தான்
அடங்காத வேதனையடி

மேலும்

வழிகள் கூட இதமாக ஏற்றுக் கொள்ளும் நெஞ்சம் காதலின் வசியம் 09-Jul-2016 4:47 pm
காதல் வாழும் நமது சோகத்தில் 09-Jul-2016 4:47 pm
நினைப்பு இருக்கும்வரையில் காதல் வாழும் நெஞ்சில்! 09-Jul-2016 4:41 pm
kitchabharathy - kitchabharathy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2016 3:13 pm

நான் காணும் நேரமெல்லாம்
எழில் புன்னகை பூத்தவளே! தினம்
உன் கண் ஜாடையால்
என் நெஞ்சைக் கிள்ளியவளே !

உனக்கு நான் அடிமையான பின்னும்
பேசாமல் என்னை வதைப்பது சரியோ?

பூவே! தினம்
உன்னைத் தீண்டும் பொருளாகவே
நான் இருக்க வரம் கேட்டேன்
இல்லா சாமிதான் எனக்கு தரவில்லை
இருக்கும் நீயாவது
நான் கேட்ட வரம் தருவாயா?

அன்பே! ஆசை அழகே !
நான் உன் மீது கொண்ட காதலால்தான்
தினமும் நான் சிரித்துக் கொண்டே சாகிறேன்
அழுது கொண்டே வாழ்கிறேன்

இவ்வுலகில் காதல் ஒன்றுதான்
உருவாக்குவதும் கடினம்
உருவான பின்னே
பிரிந்த பெண்ணே
மறப்பதென்பதும் கடினம்தான் !

பென்சில் கோடாய்
நீ என்னை நினைத்

மேலும்

எத்தனை காலம் சென்றாலும் காதல் என்பது பருவம் மாறாது அன்று போல் என்றும் இருக்கிறது 26-Jun-2016 5:52 pm
kitchabharathy - kitchabharathy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2016 10:08 pm

மெழுகுவர்த்தியாய்
கண்ணீர் சிந்தும் பெண்ணே!
தினம் கலங்குவதேன் கண்ணே?!

காலம் கடந்து விட்டதே
என்று நீ எண்ணி
வருந்தாதே நெஞ்சே!

ஒரு ஆணுடன் சேர்ந்து
வாழும் வாழ்க்கைதான்
இன்பமென்று நினைத்து போதும்

உயிர் ஒன்று உள்ளவரை
எழும் மோக தாகத்தைத் துறந்து
பிறருக்கு வெளிச்சம் தரும்
ஒளிச்சுடராய் விளங்கிய
என் அன்னை தெரசாவை
நீ மறந்து விட்டால்
உன்னால் எப்படி வாழமுடியும்?
உலக வரலாற்றில்
உன்னாலும் இடம் பெற இயலும் !

பிறருக்காய் நீ வாழ்ந்து பார்
நீயும் ஒளிசுடர்தான்
என் மின்மினி பூச்சியே!

மேலும்

உண்மைதான்..விலைகள் உலகில் எல்லாம் விலைப் பொருளாகி விட்டது 26-Jun-2016 5:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (48)

aravind 628

aravind 628

திருமுட்டம்
prasanth 7

prasanth 7

வந்தவாசி [தமிழ்நாடு ]
saranyasaran

saranyasaran

கோவை
maghizhan

maghizhan

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (48)

Geeths

Geeths

கோவை
velu

velu

சென்னை (திருவண்ணாமலை)
மு.பாலு

மு.பாலு

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (49)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
lakshmi777

lakshmi777

tirunelveli
Parthiban B

Parthiban B

Ranganathapuram, Cuddalore

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே