மதிபாலன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மதிபாலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2015
பார்த்தவர்கள்:  327
புள்ளி:  283

என்னைப் பற்றி...

விண்மீன்களின் கண்சிமிட்டலில் இதயம் தொலைப்பவன்.அன்பின் பள்ளத்தாக்கில் உயிர்ப்பூவைத் தேடி அலைபவன் .காதல் நினைவுகளில் கற்பூரமாய் கரைபவன் .கவிதை ரசிக்கும் உள்ளங்களில் வாசனையாய் உறைபவன் .

--மதிபாலன்
mathibalan.2000@gmail .com

என் படைப்புகள்
மதிபாலன் செய்திகள்
மதிபாலன் - மதிபாலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2017 10:28 am

மெல்லத் தொடங்கும்
தூறலைப் போல
சன்னமாய்
மோதிக் கரைகிறது
உன் நினைவின் துளிகள்

மௌனத்தின் அடர்வனத்தில்
நீ
மறைந்துகொண்டிருந்தாலும்
என் உணரிகளின்
எல்லைகடந்து
எங்கே போய்விடுவாய் ?

நீள் தனிமையில்
இரவின் நொடிகளை
எண்ணிக்கொண்டிருக்கும்
உனக்குள் நானில்லையா ?

எனக்காய் சுடர்வதென்று
முடிவுசெய்தபின்
அன்புத் தீக்குச்சிக்கு
தலைநீட்ட மறுப்பதேன்
திரியே ?
எண்ணெய்க்குள் மூச்சடக்கி
எத்தனை நாள் தவமிருப்பாய் ?

உன்னைச் நோக்கி
நிரந்தரமாய் நீண்டிருக்கும்
என் அன்பழைப்பு
உன்
வருகைக்காக காத்திருக்கும்
என் உயிரூஞ்சல் !

#மதிபாலன்

மேலும்

மிக்க நன்றி ! 09-Aug-2017 6:01 pm
மன ஊஞ்சலில் காதலின் நினைவுகள் ஊசலாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 8:56 pm
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2017 10:28 am

மெல்லத் தொடங்கும்
தூறலைப் போல
சன்னமாய்
மோதிக் கரைகிறது
உன் நினைவின் துளிகள்

மௌனத்தின் அடர்வனத்தில்
நீ
மறைந்துகொண்டிருந்தாலும்
என் உணரிகளின்
எல்லைகடந்து
எங்கே போய்விடுவாய் ?

நீள் தனிமையில்
இரவின் நொடிகளை
எண்ணிக்கொண்டிருக்கும்
உனக்குள் நானில்லையா ?

எனக்காய் சுடர்வதென்று
முடிவுசெய்தபின்
அன்புத் தீக்குச்சிக்கு
தலைநீட்ட மறுப்பதேன்
திரியே ?
எண்ணெய்க்குள் மூச்சடக்கி
எத்தனை நாள் தவமிருப்பாய் ?

உன்னைச் நோக்கி
நிரந்தரமாய் நீண்டிருக்கும்
என் அன்பழைப்பு
உன்
வருகைக்காக காத்திருக்கும்
என் உயிரூஞ்சல் !

#மதிபாலன்

மேலும்

மிக்க நன்றி ! 09-Aug-2017 6:01 pm
மன ஊஞ்சலில் காதலின் நினைவுகள் ஊசலாடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 8:56 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2017 8:19 pm

......என்னைக் கொல்லாதே.....

என் உள்ளத்துக்கும் உனக்குமான இடைவெளியில்
சிக்கித் தவிக்கும் என் காதல்
விலகிடவும் முடியாமல்
நெருங்கிடவும் முடியாமல்
இனிய இம்சைகளை எனக்குள்
இலவசமாய் விதைத்துச் செல்கிறது...

கனவாக நினைத்தே அனைத்தையும்
மறந்திடத் துடிக்கிறேன்...
என் இரவுகளைக் கொல்லும்
நீயோ நனவாக வந்து எனையும்
கொல்லாமல் கொன்று செல்கிறாய்...

உன் பார்வைகள் சொல்லிய
மொழிகளில் என்னை
நீயாகவே மாற்றிக் கொண்டேன்..
இன்று உன் மௌனத்தின்
மொழிகளை அறிந்திடவே
காதல் அகராதியை நானும்
தேடி அலைகின்றேன்...

முற்றுப்புள்ளி வைக்கத் தவிக்கும்
என் காதலுக்கு முடிந்தால்
முடிவொன்றைச் சொல்லிவிடு...
இல்

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பரே... 18-Aug-2017 2:20 am
அழகு அழகு.....😊😊 15-Aug-2017 10:53 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பரே... 06-Aug-2017 7:40 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பரே... 06-Aug-2017 7:40 pm
யாழினி வளன் அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Aug-2017 8:23 pm

அதிகாலையின் அழகை
எதுவும் பேசாமலே பேசியது
புல்லில் படர்ந்திருந்த
பூவாய் பனித்துளி

சுடும் வெயிலின் சுடரழகை
சுட்டு சொல்லாமல் சொன்னது
பட்டு படர்ந்து என்னை
தொடர்ந்து வந்த நிழல்

அந்திமாலையின் அழகை
அபரிதிமாய் சொல்லிப்போனது
மறையப்போகிறேன் என்று மயக்கி
குறைவாகவே மென்கதிர்கள் வீசிய சூரியன்

இரவின் நிசப்த அழகை
இரையாமல் சொல்ல
வரப்போகிறேன் மெல்ல
என எட்டித்தான் பார்க்கிறது
வெண் கண்ணனாய் நிலவு

எங்கு நோக்கிட என
எண்ணி என் கண்களை
குழம்பி தவிக்க செய்ய
துள்ளி தான் வந்தது
மின்னி தகித்த நட்சத்திர கூட்டம்

எல்லாவற்றையும் ரசித்து
என்னையும் மறந்து
தன்னிலை துறந்து

மேலும்

இந்த அழகும் சுகமும் இனிமையும் இறைவன் தந்திட்ட செல்வமே , அதை வர்ணம் தந்து படைத்த யாழுக்கு நன்றி 06-Aug-2017 3:01 pm
நன்றிங்க:-) 06-Aug-2017 1:04 pm
அழகிய கவி ...யாழினி ..வாழ்த்துக்கள் 05-Aug-2017 9:28 am
வாசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க :-) 05-Aug-2017 12:44 am
மதிபாலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Aug-2012 12:23 am

காலை நேரம்
வீதியை பெருக்கி
கழுவிக் கொண்டிருந்தான்
சோலை
"என்ன காலங் காத்தால
மந்திரி வாராகளா " என்றாள்
"ஆமா சுந்தரி நீ வாரேயிலே
அதான் " என்றான் சோலை
"என்ன கிண்டலா ...
கொஞ்சம் கைல தண்ணி ஊத்து "
என்றாள் அஞ்சலை
"எதுக்கு பல் தேச்சு குளிக்கவா "
ன்னு டயூப்பினால் தண்ணி விட்டான்
"ஆமா பிச்சை எடுக்குற பொழைப்புக்கு
பல் தேச்சு சீவி முடிச்சு சிங்காரிச்சுகிட்டு
நிக்கனமாக்கும்
ஏய் ஏய் நிறுத்து ஒடம்பெல்லாம்
நனைச்சுப் புட்டியே சீ "
"அட கோயிச்சுகாத அஞ்சலை
ட்யூப் திரும்பிடிச்சு நா என்ன செய்வேன்
அந்தா பாரு அங்க பையில புது சேலை எல்லாம்
எடுத்து வச்சிருக்கேன் மரத்துக்குப்

மேலும்

சிறப்பாக கருதுரைத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் தூப்புக்காரி நாவலை படித்துப் பார்க்கிறேன். மிக்க நன்றி சகோதரி அஜந்தா . ----அன்புடன், கவின் சாரலன் 21-Sep-2014 3:23 pm
மிகவும் நன்றி ரசித்துப் படித்தமைக்கு சந்தோஷ் . இன்று தான் பார்த்தேன் -----அன்புடன் , கவின் சாரலன் 21-Sep-2014 3:14 pm
அருமை. சொல்வளம் உங்கள் விரல்களில் விளையாடுகிறது தோழரே.. நன்றி. இது போல் இன்னும் உங்களின் படைப்பாய் உலாவர, அதை நங்கள் கண்டு பரிமாற தயார். தொடருங்கள். அருமை. தெருவோர மக்களுக்கும் காதல் பூக்கும், அவர்களும் மனிதர்களே என்பதை தெளிவாக சொல்லிவிடீர்கள். நீங்கள் சொன்னது சரியே..... தூப்புகாரி நாவல் கூட இதுபோலத்தான். அனால் அதில் ஒரு தாயின் வலி வெளிபடுகிறது, அதை படியுங்கள் தோழரே. நன்றி. 21-Sep-2014 2:50 pm
கதையா ? கவிதையா என்று என் மனதில் அரங்கேறிய பட்டிமன்றத்தோடுதான் இப்படைப்பை படித்தேன். உங்களின் சொல்லாட்சியில் தமிழ் குடிமகனாக நான் மகிழ்ந்தேன் (( இதுக்குத்தான் நனைச்சியா ?" " அட நீ ஒன்னு உன்ன நெனைச்சேன் எடுத்தாந்தேன் " )) நனைச்சியா ? நெனைச்சேன் என்ற ஒரு சந்தம் இரு அர்த்தம் .... ஆஹா மிகவும் ரசித்தேன். நான் மெய் மறந்த கதை இது . நன்றி ஐயா ! 26-Sep-2013 11:27 pm
மதிபாலன் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2017 6:50 pm

நெஞ்சை அவளிடம் கொடுத்தேன்
நெஞ்சிற்கு அவள் வலியினை தந்து சென்றாள்
வானிற்கு நிலவைக் கொடுத்த இறைவன்
என் நெஞ்சிற்கு ஏன் நோவைக் கொடுத்தான்
பெண்ணையும் காதலையும் படைத்த இறைவன்
என்னையும் ஏன் படைத்தான் ?

-----கவின் சாரலன்

மேலும்

5 என்ன 50 எழுதலாம் காதல் முதலில் விழி ஆடல் பின் கண்ணீராடல் ! 06-Aug-2017 10:16 am
கண்ணீர் சிந்தத்தான்.. உண்மையான காதல் தோல்வியை பற்றி ஒரு ஐந்து கவிதைகள் எழுத முடியுமா? தப்பாக நினைக்க வேண்டாம் ரசிகனின் அன்புக் கட்டளை 05-Aug-2017 6:45 pm
ஆஹா அருமையான கருத்துக் கவிதை மிக்க நன்றி கவிப்பிரிய மதிபாலன் 26-Jul-2017 8:06 am
வலியோடுதான் வாழ்க்கை ;இதில் வருவதும் போவதும் இயற்கை. உடைந்த மனமே அமைதிகொள் ;உடன் படைத்தவன் வருவான் தொடர்ந்துசெல் ! 25-Jul-2017 7:14 pm
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2017 5:33 am

பார்வை மின்னல்
மூட்டிவிட்டுப் போகிறது
காதல் தீயை
அது என் உயிரைத்
தின்று தீர்க்கிறது

நீ தந்த இரவல் மூச்சில்
உயிர்வாழும் என்னை
இன்னும்
என்பெயரிட்டே
அழைக்கிறார்கள்

மனதின் விளிம்புவரை
நிரம்பியிருக்கும் உன்னை
பருகிக்கொண்டேயிருக்கிறேன்
தீரவில்லை நீ

விதைநெல் கூடையின் மீது வைத்த
இயந்திரக் கல்லாய் அழுத்தி
என்னை முளைக்கவைக்கிறாய்
நான்
விரும்பும் சுமை நீயல்லவா ?

வார்த்தைகளின் ஊற்று
உன்னிலிருந்து தொடங்குகிறது
என் கவிமூலம்
நீயாகிறாய்

எனக்காய் பிறப்பெடுத்த
தேன்கடல் நீ
உனக்குள் மூழ்கிப் போகும்
வரம் தரமாட்டாயா

எப்போது வருவாய் என்று
இதயம் கேட்

மேலும்

நண்றி நட்பே ! 25-Jul-2017 2:57 pm
Arumai 25-Jul-2017 10:46 am
ஆம் .நன்றி நண்பரே 24-Jul-2017 9:15 am
காத்திருத்தல் சுகம் .கைப்பிடித்தல் பரமசுகம் 24-Jul-2017 8:26 am
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jul-2017 7:52 pm

நீ
மௌனமாயிருந்தாலென்ன
உன்
இதயத்தின் ஒலிபரப்பு
கேட்டுக்கொண்டுதானிருக்கிறது !
நீ
இருளிலிருந்தாலென்ன
உன்
அன்பின் வெளிச்சம்
பரவிக்கொண்டுதானிருக்கிறது !

பேசாததால் நெருக்கம்
குறைந்துவிடவில்லை
தூரங்களால் நாம்
தொலைந்துவிடவில்லை

உன்னையும் என்னையும்
இணைக்கிறது
அன்பின் இழை
நம் சிரபுஞ்சி இதயங்களில்
என்றும் மழை !

#மதிபாலன்

மேலும்

.நன்றி 24-Jul-2017 3:55 am
மனதோடு கவிதை காதல் மழை பொழிகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jul-2017 7:39 pm
மதிபாலன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 9:43 pm

அடர்காடு பனியிரவு
ஒளிர்பௌர்ணமி நீயா

மலைமுகடு சிறுகுடிசை
நழுவும் உடை நீயா

மென்சாரல் குளிர்காற்று
அவிழ்மல்லிகை நீயா

தனித்தீவு அலைநடனம்
உயிரின் இசை நீயா?

#மதிபாலன்

மேலும்

மதிபாலன் - செல்வமுத்து மன்னார்ராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2017 8:26 am

காற்றுக்கும்
கடலலைக்கும்
வேலி போடுவேன்
கடல் மணலில்
நீ நடந்து வந்த உன்
பாதசுவடுகளை
சிதையாமல் பாதுகாக்க...

மேலும்

அன்பின் ஆழத்தில் ஒருத்தி வாழ்கிறாள் 01-Jul-2017 5:32 pm

சுவாசக் காற்றே!
என்னை விலகிச் செல்லாதே!
அவள் தேகத்தை தீண்டாதே!

எரிமலை பிழம்பை போல்
மின்னிடும் பேதை அவள் பார்வைகள்
தெளிந்த நீரோடை போல்
இன்னிசையில் சுதியாகும் கால் கொலுசுகள்

நான் காதலுக்கு புதிது
கனவுகள் கண்டு அஞ்சுகிறேன்
வாழ்வின் அர்த்தம் பெரிது
சுமையிடம் சுகத்தை கெஞ்சுகிறேன்.

என் இதயத்தின் உள்ளாடை காதல்
உன் என்புகளின் மேலாடை காதல்
என் உயிரின் சுவாசம் காதல்
உன் உமிழின் எச்சம் காதல்

நத்தை போல அவளும் நானும்
ஓர் உயிராகி விட்டோம்
நான் சதை
அவள் என்னை காக்கும் ஓடு

வானம் மேல் நாணயக்குற்றியை போல்
வெள்ளை முகம் கண்டால் உன் ஞாபகம்
கடலின் மேல் தள்ளாடும் அ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Apr-2016 11:38 pm
படைப்பு மிக அருமை தோழரே! உன் மௌனங்கள் அழகான வார்த்தைகள் இவ்வரி ஒன்றே இக்கவியை மேலும் எனதுப் பார்வையில் அழகூட்டுகிறது 09-Apr-2016 6:29 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-Mar-2016 5:24 pm
ஆழமான காதல் கவிதை.... வாழ்த்துக்கள் 21-Mar-2016 3:35 pm
மதிபாலன் - வித்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2016 11:12 pm

கனவெனும் பூக்களை கண்களில் வைத்து
நனவென மாற்றத் துடி

கடலின் மடியில் கதிரொளி பாய்ச்சும்
திடமுடன் செய்வாய் பணி

விதியின் சுழலில் நனைந்தெழும் நேரம்
மதியின் மயக்கம் தெளி

பாயும் நதிவழி பள்ளம் மறைந்தது
நீயுமுன் துன்பம் துடை

உதிரும் இலையில் உலகியல் நீதி
விதியின் சுழற்சி என

விழியின் விளிம்பில் நதியின் பொழிவென
வழிவது அன்பெனக் கொள்

விதைகள் வளர்ந்து விருட்சமாய் நின்றே
கதைக்கும் கதைகள் கேள்

நிலவின் மடியினில் நெஞ்சம் கிடத்தி
நிலவும் துயரம் மற

மழையின் துளியில் மகிழ்ந்து கிடக்க
விழையும் மனதில் திளை

மேலும்

நன்றி சார்... 29-Feb-2016 11:40 am
குறட்பாக்கள்..அருமை 29-Feb-2016 10:00 am
நன்றி தோழரே... 29-Feb-2016 9:48 am
இயற்கையை ,நெஞ்சின் இனிய நிகழ்வை நயம்படச் சொல்லும் குறள். நம்பிக்கை யூட்டி நலம்தரும் பாக்களில் கொம்புத்தேன் சிந்தும் சுவை . 29-Feb-2016 9:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
தௌபீஃக் ரஹ்மான்

தௌபீஃக் ரஹ்மான்

பொள்ளாச்சி
வாசு செநா

வாசு செநா

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (34)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (32)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
மேலே