Meenakshi Mohankumar Profile - மீனாட்சி மோகன்குமார் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  மீனாட்சி மோகன்குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  23-Mar-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jan-2017
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  21

என்னைப் பற்றி...

தமிழச்சி நான்
உங்கள் தோழி
தமிழின் மகள்
தாயின் காதலி
தந்தையின் தாய் தமயன்களின் தமக்கை
தமக்கைகளின் ஆசிரியை
உற்றார்க்கு உரியவள்
அற்றார்க்கு உறவானவள்
நான் மீனாட்சி....
கவிதை எழுத கற்க களமிறங்கி இருக்கிறேன்....தங்கள் கருத்துக்களோடு என் வரிகளை கொஞ்சம் திருத்துங்கள்.....

என் படைப்புகள்
meenakshi mohankumar செய்திகள்
meenakshi mohankumar - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2017 7:03 pm

ஒவ்வொரு தமிழனின்
இரு கண்களால் உலாவி
முத்தமிழின் இனிமையை உணர
நாற்றிசையும் எக்களிக்க
ஐம்பூதமும் அடங்கிப் போகும்
அறுசுவை கொண்ட நம் தமிழிடம்
ஏழறிவால் உண்டான
எண்திசையும்
ஒன்றாகி
அம்மாவில் தொடங்கி ஔவியம் வரை
அச்சம் தவிர்க்க
ஆதாயம் நம் தமிழ்
இமயம் முதல் குமரி வரை
ஈதல் கற்பிக்கும்
வள்ளல் நம் தமிழ்
உன்னிடம் ஆரம்பித்து என்னிடம் கூட
உருகிக் தான் பேசும்
உரிமையுடன்
ஒற்றுமையில் வேற்றுமை என்றாலும்
ஒன்றுபட்டு நிற்கச் செய்யும்
ஓங்குதனிச் செம்மொழி நம் மொழி
என

ஏகபோகமாய் புகழத் தான் ஆசை

மேலும்

meenakshi mohankumar - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2017 8:29 pm

சின்ன கோபம் தான்
சரியாகிவிடும் என்று
அவளை நினைத்து
என்னை தினமும் தேற்றிக்கொண்டேன், அவளைத் தேற்ற மறந்து.....
தேற முடியாத துயர் தந்து
சரியாகாத காயம் தந்து
மண்ணில் புதைந்தாள்.......
மனதில் புதைந்ததை மறந்து,
புதிதாய் மலர்ந்த மலர்
உரியவர் சூடும் முன்னே
உலர்ந்துதிர்ந்தாயே.........
உயிர் துவண்டு கிடக்கிறேன்......
உயிரே நீ போனதால்..

மேலும்

meenakshi mohankumar - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jan-2017 9:43 pm

அன்பில் அன்னையாய்
ஆசையை நிறைவேற்றுவதில் தந்தையாய்
இம்சையில் தோழனாய்
ஈகையில் தமயனாய்
உறவுல் கணவனாய்
ஊக்கமளிப்பதில் குருவாய்
ஐந்து நிமிடம் கூட பிரிய மாட்டேன் என்று கூறி
ஒன்றாய் வாழ்வோம் என்றாயே....
ஓரம் போனதேனோ....இதற்கு நீ
ஔடதமே தந்திருக்கலாம் உன் கையாலே.....
கண்ணால் உனைக்கண்ட
மகிழ்ச்சியில்
மரணித்திருப்பேன் மனமாற....💝
உன் மடியினிலே....

மேலும்

காதல்சூடி உயிர் வருக்கம் ?????? :) 30-Jan-2017 11:31 pm
meenakshi mohankumar அளித்த படைப்பில் (public) Balasubramani Murthy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jan-2017 9:27 pm

என் வீட்டு அழகி....
விளையாடக்கூப்பிட்டு,விடாமல்
தொல்லை செய்தவள்
இன்று
விளையாட மறுத்து
விளையாடுகிறாள்
முக பாவனையில்.....
மழலை மலர்
தன் வெட்கத்தில்
வெளிச்சம் வீசுகிறது...........

மேலும்

நன்றி சகோதரர்களே...... 29-Jan-2017 7:28 pm
அருமை :) 28-Jan-2017 10:17 pm
நயம் 28-Jan-2017 9:48 pm
meenakshi mohankumar - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jan-2017 7:27 pm

வளவளனு பேசுறவ வாய திறக்கலைனு
நான் பேச தொடங்கினதும்
அவ
தானா கத சொல்லத் தொடங்கி
என் காத திருகிப்புட்டா.........

மேலும்

meenakshi mohankumar - RKUMAR அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jan-2017 8:05 pm

இவள்
தலையில் பூச்சூடி
நடந்துவரும் ஆத்திச்சூடி

இவளைக்கண்டிருந்தால்
அவ்வையார் ஆத்திச்சூடிக்கு பதில்
அழகுச்சூடி எழுதியிருப்பார்

அழகுச்சூடி

அழகை விரும்பு
ஆத்திரம் கொள்ளாதே
இயன்றவரை காதலி
ஈயைப்போல் பின்தொடர்
உதைகூட கிடைக்கலாம்
ஊக்கமது கைவிடேல்
எண் பெண் இரண்டும் ஒன்று
ஏட்டு கணக்காய் எண்ணுவது நன்று
ஐயம் வேண்டாம்
ஒருத்தியை மட்டும் காதலி
ஓதாமல் இருந்தாலும் பின்னால் போகாமல் இருக்காதே
ஒளவை வயதானாலும் அன்புடன் காதல் வை
அஃதே உண்மைக்காதல்

மேலும்

நன்றி சார்பான் 29-Jan-2017 3:33 pm
அகர வரிசையில் காதல் இலக்கணம் 29-Jan-2017 10:48 am
நன்றி நட்பே 29-Jan-2017 7:24 am
நல்ல கவிக்கருத்து நன்றி நண்பரே 29-Jan-2017 7:23 am
meenakshi mohankumar - meenakshi mohankumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2017 10:34 pm

சென்று வா மனமே
என்று சொன்னவனிடம்
என் மனம்
செல்லாமல் போன பின்பு
எங்கு செல்ல....?
இத்தனைவருடம் உன்னுள் தானே
பதுக்கி வைத்திருந்தாய்
புதுமணப்பெண் கண்டவுடன்
என் மனம் கசக்கிறதா?
செல்லாத என் மனதை
நான் என்ன செய்ய?
உன்னால் தானே என் மனம்
செல்லாமல் போனது....
விழலுக்கிறைத்த நீர் போல
மனமற்றவனுக்கா நான் காதல் வார்த்தேன்?
எதற்கெடுத்தாலும் எனக்காக என்றாயே.....
உன்
திருமணமும் எனக்காகத் தானா?
நீ தராத
உன் திருமண அழைப்பிதழ்
வந்த

மேலும்

நிச்சயமாக சகோ......நன்றி.... 27-Jan-2017 5:37 pm
வாழ்க்கை ஒரு மிதிவண்டியை போல சமநிலையை அடைய முன்னேறி செல்ல வேண்டியது அவசியம் ஒரே இடத்தில் நின்று கொண்டு சமநிலையை அடைய முயற்சித்தால் கீழே விழுந்துவிடுவோம் ... வருந்தாதீர்கள் என கூறமுடியாது இதிலிருந்து மீண்டுவர மாற்றுவழியை தேடுங்கள் ...... 27-Jan-2017 3:14 pm
சேர்ந்தது சகோ.... அவரிடம் என் வரிகள.... என்னிடம் அஞ்சலில் வந்த அவரின் 🌹 திருமண அழைப்பிதழ்🌹..... 26-Jan-2017 10:04 am
கவிதை சேரவேண்டியவரை சேர்ந்ததா ????? 25-Jan-2017 3:18 pm
meenakshi mohankumar - meenakshi mohankumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2017 3:54 pm

உடைந்து போனேன்......
பெண்ணாய் பிறந்ததனால் இன்றைய நாள்
நான் பூமிக்கு பாறமாய்
எண்ணுகிறேன் என்னை ......
என் நாட்டுக்காய்
என் பண்பாட்டுக்காய்
என் விளையாட்டுக்காய் விழுந்த
உடன்பிறவா சகோதரர்களின்
"உடற்-மனக்-குருதி"
கண்டு........


அவர்களுக்காய் பெருமை கொள்ளவா....
எனக்காய் சிறுமை கொள்ளவா.....
என்னை நானே சினந்து கொள்கிறேன்........😡

மேலும்

உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் சகோதரி.... நாம் வீழ்த்தப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறோம் உயிருள்ளவரை தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடுவோம் இப்பொழுது சற்று விவேகமாக செயல் படுவதே நல்லது . 23-Jan-2017 5:19 pm
நன்றி சகோதரரே....... பெண்ணாய் இது வரை பெருமை கொண்டவள் தான் சகோ நானும்..... எங்களுக்காய் உம் போல் சகோதரர்கள் இருக்க இந்நிலையில் அவர்களுடன் நிற்க இயலஆத என் இயலாமை எனைக் கண்டு சிரிக்கிறது...... இத்தனை நாட்கள் சென்று வந்த என்னால் இன்றைய பிரச்சனையில் உடனிருக்க முடியவில்லை என்று என் மீதான என் சினத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை...... காலை முதல் வீட்டில் சிக்குண்டு கிடக்க நான் பெண் என்பது மட்டுமே காரணமாய் கூறப்பட, கண்கள் குளமாகிறது.......முதல் முறை பெண்ணாக பிறந்தது தவறோ என சிந்திக்கிறது மனம்.... 23-Jan-2017 4:15 pm
சினந்துக்கொள்ளும் அவசியமே இல்லை போராடிய எல்லாப்பெண்களுமே பராதிக்கண்ட புதுமை பெண்கள் தான்... பெண்களின் சக்தியை குறைவாக மதிப்பிட வேண்டாம் . 23-Jan-2017 4:06 pm
meenakshi mohankumar - n deivasigamani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jan-2017 11:42 pm

வெளியேறு வெளியேறு 'பீட்டா அமைப்பே' வெளியேறு !
வெளியேறு வெளியேறு இந்தியாவைவிட்டு வெளியேறு !!

கிடா கிடாவெட்டி சாப்பிடுவார்கள் இவர்கள்
மசாலாவுடன் கோழிக்கறியினை தள்ளுவார்கள் உள்ளே
பசுவின் கறியினையும் உண்ணுவார்கள் சேர்ந்தங்கே
மிருகவதை தடுக்கும் 'பீட்டா' இவர்கள்பெயர் !

களம் பலக்கண்டது எங்களது தமிழ்நாடு
காளையினையடக்கி வீரம் (செ)சொறிந்த தமிழ்நாடு
கோழையர்கள் என்று நினைத்தார்களா தமிழ்மக்களை
வீழவில்லை யென்றும் தன்மான தமிழர்கள் !

வெள்ளையருக்கு எதிராக விடு

மேலும்

நன்றி! உங்களின் கருத்திற்கு... 30-Jan-2017 3:33 pm
அருமை 29-Jan-2017 7:28 am
பீட்டா என்ற ஒன்றை பெரும்பான்மையினர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இப்பொழுதான் பீட்டா வெளிச்சத்திற்கு வந்துள்ளது... நன்றி! உங்களின் கருத்திற்கு... 23-Jan-2017 1:19 am
தங்கள் சினம் புரிகிறது நண்பரே. மாணவச் செல்வங்களின் போராட்டம் துவக்கப்படு ம் வரை ஏன் பீட்டா பற்றி மக் க ள் அ றியும்படி யாருமே பேசவில்லை பீட்டா இந்தியாவுக்குள் பல ஆண்டுகள் சென்ற பின்பும்? 23-Jan-2017 12:55 am
meenakshi mohankumar - meenakshi mohankumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2017 12:38 pm

ஏனடி
எனக்குப் பிடித்த
கிளிப்பச்சை நிறத்தோடு,
பிடிக்காத சிவப்பு சேர்த்து சேலை உடுத்தினாய்.....?
உருத்தும் என் கண்கள்
உன் ஆடையைத் திருத்தும் நோக்கில் பின் தொடர்ந்து,
இப்போது வரைத் திரிகிறது
உன் பின்னால்.....
குறுகுறுவெனப் பார்த்து
உன் பின்னலின் நீளத்தில்
என் உள்ளத்தைப் பின்னிக்கொண்டு
உன் தோழியைத் தொட்டு நீ தள்ளும்போது
விழுகிறது என் மனம்
உன் முக பாவத்தில்......
வரிசைப் பற்கள்,
வகிடெடுத்த தலை,
வசப்படுத்தும் கண்கள்
என வலைவிரிக்கத் தான் இப்படி வந்தாயோ...!
தலைகுனிந்து நீ நடக்க
நானும் குனிந்துப் பார்த்தேன்...
என் விருப்பச் சிவப்புப் புடவையில்
நீ,என்னைப் பார்த்து சிவந்ததை..

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

RKUMAR

RKUMAR

புதுவை
pugazhvizhi

pugazhvizhi

கும்பகோணம்
Idhayam Vijay

Idhayam Vijay

ஆம்பலாப்பட்டு
sarabass

sarabass

trichy
n deivasigamani

n deivasigamani

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (9)

sekara

sekara

Pollachi / Denmark
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
sarabass

sarabass

trichy

இவரை பின்தொடர்பவர்கள் (9)

sekara

sekara

Pollachi / Denmark
user photo

vasavan

sydney
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

பிரபலமான விளையாட்டுகள்

மேலே