முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முனைவர் நந்துதாசன் நாகலிங்கம்
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  19-Apr-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Oct-2011
பார்த்தவர்கள்:  726
புள்ளி:  267

என்னைப் பற்றி...

நான் தற்போது தமிழ் திரைப்படத் துறையில் பாடலாசிரியராக உள்ளேன். (படங்கள்: யாமன், தூவெண், சிறப்பான பயணம், கரு, மஞ்சள், ஒரு ஊர்ல ஒரு கார்ல, etc ). மேலும் சிறப்பான பயணம் என்னும் படத்திற்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு படம் (யாமன்) இயக்க வேலைகளும் நடந்துக் கொண்டிருக்கிறது.

என்றும் உங்களுடன். முனைவர்.நந்துதாசன் நாகலிங்கம்
http://kavithaikaathalan.blogspot.com

என் படைப்புகள்
முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் செய்திகள்

மரணமானது அதுவும் ஜனனம் போன்றது
அந்த தருணம் என்பது யாரும் அறிவதில்லையே
இந்த உருவமானது அழியும் இயற்கையானது
அந்த மூச்சி காற்றிலே உசுரும் ஊசலாடுது
இது எழுதி வச்ச கணக்குன்னுதான் கூறமுடியுமா
உன் பணத்தை வச்சி விதியை கொஞ்சம் மாற்ற முடியுமா ?

மேலும்

முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

1.புதுக்கவிதை, உரைநடை கவிதையாக இருக்கலாம்...
2.பதினான்கு வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
3. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே எழுத வேண்டும்

மேலும்

முடிவு எப்பொழுது அறிவிக்கப்படும் ? ஆவலுடன்... 09-Oct-2018 12:43 pm
முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் - புகழ்விழி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2016 11:56 pm

கவிதைகளுக்கும் நகைச்சுவைகளுக்கும் உள்ள வரவேற்புகள் ஏன் கட்டுரைகளுக்கும் சிறுகதைகளுக்கும் வருவதில்லை.கவிதைகளை தாண்டி கட்டுரைகளுல் சிறந்த கருத்துகள் இருப்பின் ஏன் கட்டுரைகளுக்கு அதிக பார்வைகள் கிடைப்பதில்லை

மேலும்

இன்றைய காலகட்டத்தில் எல்லாரும் ஷார்கட்டை விரும்புகிறார்கள் காரணம் நேரம் இருப்பதில்லை அதேசமயத்தில் பொருமையும் இருப்பதில்லை இது அவர்கள் தவறு இல்லை காலத்தின் கட்டாயம் சமைக்க நேரம் இல்லை ரெடிமேடு சாப்பாட்டை சாப்பிடுகிறார்கள் இப்படிப்பட்டவர்கள் எதிர்பார்ப்பது சொல்வதை சுருங்கச்சொல் விளக்கவேண்டியதை என்று தானே தெறியவருகிறது, முன்பெல்லாம் சினிமாகூட மூனுமணி நேரம் ஓடும் இப்போது நேரம் குறைந்து கொண்டே வந்துவிட்டது காரணம் படம் பார்க்க நேரமில்லை குறட்டை விடும் சத்தம் இதுதான் காரணம் அதற்காக உங்கள் படைப்பை யாரும் விரும்பவதில்லை என்று பொருள் இல்லை 28-May-2016 5:41 pm
பதிலளித்தமைக்கு நன்றி தோழமையே.தமிழின் சுவையை அனைத்து படைப்புகளிலும் அனைவரும் அறிய வேண்டுமென்று தான் நினைக்கிறேன்.அழகு கவிதைகளில் மட்டுமில்லையே.எழுத்திலும் உச்சரிப்பிலும் அனைத்திலும் தமிழ் அழகே.உயிரிலும் மேலோங்கி உணர்வில் ஊறிய எம் தமிழின் அழகை அனைத்து படைப்புகளிலும் அனைவரும் கண்டால் சிறப்பே.தமிழில் தாங்கள் கண்ட இன்பத்தை அனைவரும் காண வேண்டும். 23-May-2016 11:03 pm
அன்பரே அவர்களுக்கெல்லாம் அதன் சுவை தெரிவதில்லை ...தமிழின் மூலைமுடுக்கெல்லாம் இன்பம் இருக்கின்றது என்பதை அவர்கள் இன்னும் அறியாமல் இருக்கின்றார்கள்....அவ்வளவுதான்.. 23-May-2016 7:37 pm
பதிலளித்தமைக்கு நன்றி தோழமையே.ஆனால் அனைத்து படைப்புகளுக்கும் மதிப்பளித்தால் சிறப்பாக இருக்குமென கூற விரும்புகிறேன்.அனைவரின் திறனையும் ஊக்குவிக்கலாமே. 21-May-2016 9:29 am

தூக்கம் ,துக்கம்
கலந்த இரவில்
கவிதை எழுதுகிறேன்
நாளை நடக்கவிருக்கும்
எதையோ எண்ணி
கவிதை எழுதுகிறேன்
தெரு பெற்ற பிள்ளை
கை நீட்டி யாசிப்பது போல்
கவிதை எழுதுகிறேன்....
வேற்று வாக்குறுதிகளை
ஏற்று வண்ண கனவுகளில்
கவிதை எழுதுகிறேன்...
நீர் நிலம் காற்று ஆகாயம்
வானம் வசப்படுமென்று
கவிதை எழுதுகிறேன் ...
சிந்திக்க தெரியாமல்
சந்திக்க முடியாமல்
கவிதை எழுதுகிறேன்....
பெண்ணை மதித்து
மண்ணை மிதித்து
கவிதை எழுதுகிறேன்...
சமூக அவலங்கள்
சுமூகமாக கவிதை எழுதுகிறேன்..
நிலாவை, சூரியனை விண்மீன்களை
விரட்டி விரட்டி
கவிதை எழுதுகிறேன்...

இன்னும் முடியவில்லை
தமிழும் மடியவில்லை.

மேலும்

நன்றி தோழரே, உங்கள் பாராட்டுகள் எனக்கு மேலும் உற்சாக ஊக்கம் தரும். 20-May-2016 8:08 pm
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள்போற்றுதற்குரிய படைப்பு . பாராட்டுக்கள் தொடரட்டும் நம் தமிழ் இலக்கியப் பயணம் . நன்றி 20-May-2016 2:03 am

நம் தமிழ் 4000 , 5000 ஆண்டுகளுக்கு முன் உருவானது என வரலாறு கூறுகிறது. ஆனால் சமஸ்கிருதம் என்னும் வடமொழியை நாம் தமிழில் கலந்து பேசுவதால் சிலர் சமஸ்கிருதத்தை முதலில் தோன்றிய மொழி என பதிவிடுகிறார்கள். கீதையில் இருந்து பல சொல்லாடல்களை திருவள்ளுவர் பயன்படுத்தியதாக சிலர் கூறி வருகிறார்கள். வெறும் 400 ஆண்டுகள் வரலாற்றை உள்ளடக்கிய வடமொழியை மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழியோடு இணைப்படுத்தி பேசுவதும், தமிழை தரந் தாழ்த்தி பேசவதும் எந்த விதத்தில் நியாயம்? நீங்களே பதில் கூறுங்கள் தமிழ் புரவலர்களே.

மேலும்

மன்னிக்கவும் நண்பரே...நான் பெண் என்பதை தாங்கள் அறியவில்லை போலும்.. 18-May-2016 10:04 pm
உண்மை தான் திருவாளர் முருகேஷ் அவர்களே. கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா? 18-May-2016 12:06 pm
அத்தகையோரின் அறியாமையை கண்டு வருந்துகிறேன்...இவ்வுலகில் உண்மைக்கு புறம்பானதே என்றும் மதிப்பு பெறும்.தமிழ் என்றைக்குமே அன்னைமொழி..அதன் பெருமையை சொல்லிப்புரிய வேண்டுவதில்லை..தமிழ் தமிழ் தான்...வடமொழி வடமொழி தான்.... 18-May-2016 8:49 am
முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-May-2016 1:31 am

நம் தமிழ் 4000 , 5000 ஆண்டுகளுக்கு முன் உருவானது என வரலாறு கூறுகிறது. ஆனால் சமஸ்கிருதம் என்னும் வடமொழியை நாம் தமிழில் கலந்து பேசுவதால் சிலர் சமஸ்கிருதத்தை முதலில் தோன்றிய மொழி என பதிவிடுகிறார்கள். கீதையில் இருந்து பல சொல்லாடல்களை திருவள்ளுவர் பயன்படுத்தியதாக சிலர் கூறி வருகிறார்கள். வெறும் 400 ஆண்டுகள் வரலாற்றை உள்ளடக்கிய வடமொழியை மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழியோடு இணைப்படுத்தி பேசுவதும், தமிழை தரந் தாழ்த்தி பேசவதும் எந்த விதத்தில் நியாயம்? நீங்களே பதில் கூறுங்கள் தமிழ் புரவலர்களே.

மேலும்

மன்னிக்கவும் நண்பரே...நான் பெண் என்பதை தாங்கள் அறியவில்லை போலும்.. 18-May-2016 10:04 pm
உண்மை தான் திருவாளர் முருகேஷ் அவர்களே. கழுதைக்கு கற்பூர வாசனை தெரியுமா? 18-May-2016 12:06 pm
அத்தகையோரின் அறியாமையை கண்டு வருந்துகிறேன்...இவ்வுலகில் உண்மைக்கு புறம்பானதே என்றும் மதிப்பு பெறும்.தமிழ் என்றைக்குமே அன்னைமொழி..அதன் பெருமையை சொல்லிப்புரிய வேண்டுவதில்லை..தமிழ் தமிழ் தான்...வடமொழி வடமொழி தான்.... 18-May-2016 8:49 am
முனைவர் நந்துதாசன் நாகலிங்கம் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2016 5:51 pm

எல்லா தொகுதிகளிலும் நோட்டா மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள்
பெற்றால் விளைவு ?
அல்லது
ஒரு தொகுதியில் நோட்டா அதிகம் வாக்குகள் பெறுகிறது
சொல்வோம் 5 லட்சம்
மற்ற வேட்பாளர்களுக்கு முறையே 4 லட்சம் 3 லட்சம் 2 லட்சம் 1 லட்சம்
கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம் .
நோட்டா ( NONE OF THE ABOVE ) ஒரு வேட்பாளரும் இல்லை. அதிருப்தி
அல்லது எதிர்ப்பினை தெரிவிக்கும் ஒரு வாக்காளர் அடையாளப் பதிவு .
இச் சூழ் நிலையில் 4 லட்சம் பெற்றவரை வெற்றியாளராக அறிவிக்க வேண்டுமா ?
பெரும்பான்மையினர் நிராகரித்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றவர் என்று
அறிவித்தால் சன நாயக மரபிற்கு முரண் அல்லவா ?
அப்படி

மேலும்

And so மை டியர் நந்து தாசன் வள்ளுவன் ---வள்ளுவனை அறிவேன் இந்த நந்து யார் ? உங்கள் ஆதரிச கவிஞரா எழுத்தாளரா மனிதரா ? உங்கள் புதுச்சேரிக் கவிஞர் கனக சுப்பு ரத்தினம் பாரதியை ஆதரிசமாகக் கொண்டு தன்னை பாரதி தாசன் என்று ஆக்கிக் கொண்டார் . தற்போதைய தமிழ்ப் படங்களின் பரிச்சயம் எனக்கில்லை . ஒரு புரட்சி உருவாக சமூகச் சூழல் அல்லது அரசியல் போக்கு எதுவாக இருக்கக் கூடும் ? மிக்கநன்றி புரட்சிச் சிந்தனைப் பிரிய நந்து தாசன் வள்ளுவன் அன்புடன்,கவின் சாரலன் 18-May-2016 10:30 pm
இளைஞர்கள் எழுச்சி பெற்று புரட்சி நிச்சயம் வெடிக்கும். உண்மை வாழ்க்கை தான் இப்பொழுதெல்லாம் சினிமா வடிவில் வருகிறது. ஆதலால் சினிமா புரட்சி நிச்சயம் உண்மை புரட்சியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை . இனி என்னை நந்து தாசன் வள்ளவன் என அழைக்கவும் 18-May-2016 1:47 am
வித்தியாசமான பார்வை. பாராட்டுக்கள். புரட்சியெல்லாம் இங்கே சினிமாவில்தான் சாத்தியம். மிக்க நன்றி நாகலிங்கம் அன்புடன், கவின் சாரலன் 17-May-2016 7:00 pm
ஒருவகையில் சரி. மிக்க நன்றி மகேந்திரன் அன்புடன், கவின் சாரலன் 17-May-2016 6:54 pm

அம்மாவின் உறவிற்கு ஈடேதைய்யா
அப்பாவின் அன்பிற்கு இணை ஏதைய்யா
புரியாமல் நாம் வாழ்கிறோம்
தெரியாமல் வழி மாறினோம்
தாயின் முகம் எதுவென்று தெரியாதைய்யா
தந்தையிடம் உறவேதும் கிடையாதைய்யா
எதற்காக நாம் வாழ்கிறோம்
பூமிக்கு சுமையாகிறோம்

ஆராரோ தாலாட்டு வேண்டும் அம்மா
நான் தூங்கி நாளாச்சி எங்கே அம்மா
தோள் மீது நான் சாய வா வா அப்பா
ஊரென்ன பேரென்ன தெரியாதப்பா
உனக்காக எனக்காக வாழுவதில் இன்பமில்லை
நமக்காக வாழ்ந்தாலே அது போதுமே
கருவாகி உருவானதே

எதற்காக நாம் இங்கு பிறந்தோமைய்யா
சென்மங்கள் பல வேண்டி தொழுதோமைய்யா
நமக்கான நல் வாழ்க்கை இதுதானய்யா
எல்லார்க்கும் எல்லாமே கிடைக்கா தைய்யா
உன் கையே உ

மேலும்

உண்மைதான்..தாய் தந்தை அருகே இருக்கும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு பயணத்திலும் அவர்களின் வழிகாட்டலில் நல்லபடியாய் அமைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-May-2016 8:16 am
ஈடு இணை அல்லாத இதயத் தெய்வங்கள் அன்னையும் தந்தையும் அவர்கள் நமக்கு தந்த முதல் முத்தம் முதல் காயம் அன்பு அறிவு கருணை இப்படி வாழ்க்கையின் பக்கமெங்கும் அவர்கள் தான் அருமையான படைப்பு வாழ்த்துக்கள் ... 17-May-2016 3:58 pm

தூக்கம் ,துக்கம்
கலந்த இரவில்
கவிதை எழுதுகிறேன்
நாளை நடக்கவிருக்கும்
எதையோ எண்ணி
கவிதை எழுதுகிறேன்
தெரு பெற்ற பிள்ளை
கை நீட்டி யாசிப்பது போல்
கவிதை எழுதுகிறேன்....
வேற்று வாக்குறுதிகளை
ஏற்று வண்ண கனவுகளில்
கவிதை எழுதுகிறேன்...
நீர் நிலம் காற்று ஆகாயம்
வானம் வசப்படுமென்று
கவிதை எழுதுகிறேன் ...
சிந்திக்க தெரியாமல்
சந்திக்க முடியாமல்
கவிதை எழுதுகிறேன்....
பெண்ணை மதித்து
மண்ணை மிதித்து
கவிதை எழுதுகிறேன்...
சமூக அவலங்கள்
சுமூகமாக கவிதை எழுதுகிறேன்..
நிலாவை, சூரியனை விண்மீன்களை
விரட்டி விரட்டி
கவிதை எழுதுகிறேன்...

இன்னும் முடியவில்லை
தமிழும் மடியவில்லை.

மேலும்

நன்றி தோழரே, உங்கள் பாராட்டுகள் எனக்கு மேலும் உற்சாக ஊக்கம் தரும். 20-May-2016 8:08 pm
வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள்போற்றுதற்குரிய படைப்பு . பாராட்டுக்கள் தொடரட்டும் நம் தமிழ் இலக்கியப் பயணம் . நன்றி 20-May-2016 2:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

சங்கேஷ்

சங்கேஷ்

rajapalayam
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அ பெரியண்ணன்

அ பெரியண்ணன்

தருமபுரி,காமலாபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி

இவரை பின்தொடர்பவர்கள் (16)

தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
esaran

esaran

சென்னை
மேலே