Netturkalimuthu Profile - முகாளிமுத்து சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  முகாளிமுத்து
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Jan-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2016
பார்த்தவர்கள்:  207
புள்ளி:  72

என்னைப் பற்றி...

சொந்த ஊர் நெல்லை மாவட்டம் . நெட்டூர். படிப்பது, படிப்பது, படிப்பது மட்டுமே பிடிக்கும்.

என் படைப்புகள்
netturkalimuthu செய்திகள்
netturkalimuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
29-May-2017 6:15 pm

பெண்ணே !
நீ அமிர்தமா அமிலமா
தெரியவில்லை !
ஆனால்
உன்னால்தான் தீரும்
என் தாகம் !

நீ தேன்துளியா தீப்பிளம்பா
புரியவில்லை
ஆனால்
உன் ஸ்பரிசத்தால்
மட்டுமே தீரும்
என் தேடல் !

உன் இத்ழ்களுக்குள்
மறைத்து வைத்திருப்பது
புன்னகையா, பூகம்பமா
தெரியவில்லை
ஆனால்
உன் இதழசைவில்தான்
ஒளிந்திருக்கிறது
என் எதிர்காலம் !

காதலில் மூழ்குவதும்,
கடலில் மூழ்குவதும்
ஒன்றுதான் !
முத்தெடுத்து மீண்டு வரலாம் !
அல்லது மூழ்கி கதை
முடிந்தும் போகலாம் !

உன் பதில்
எதுவாக வேண்டுமானாலும்
இருக்கட்டும் !
அதுவரை காதலின்
கதகதப்பில் லயித்திருக்கிறேன் !

காத்திருக்கும் கனங்கள்
ரணமானவையாம்

மேலும்

netturkalimuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Apr-2017 10:20 am

'நாய் வாலை நிமிர்த்த நினைச்சவனும் பொண்டாட்டிய திருத்த நினைச்சவனும் ஜெயிச்சதா சரித்திரமே கிடையாது '

மேலும்

netturkalimuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2017 9:42 am

பெண்ணே !
உன் கண் களைப்
பார்த்தாலும்
கவிதை வருகிறது !

கால்களைப் பார்த்தாலும்
கவிதை வருகிறது !

உன் முகம் பார்த்தும்
கவிதை வருகிறது !

ஏன் உன் நிழல் கூட
எனக்கு கவிதைதான்...!

ஆனால் என் கவிதைகளுக்கு கால்களில்லை
உன்னை நாடிவர... !

மேலும்

netturkalimuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2017 6:13 pm

இருள் கவியத்தொடங்கும் அந்திமாலைப் பொழுது.கிராமம் என்ற நிலையிலிருந்து நகரத்தின் அரிதாரம் பூசி மெல்ல நகரத்தின் தோற்றத்திற்கு மாறிக் கொண்டிருக்கும் அந்த கிராமத்தின் வட எல்லையில் 'ரயில்வே கேட்' க்கு சற்று தள்ளி சீரான் இடைவெளியில் நன்கு வளர்ந்திருந்த மரங்களில் ஒன்றின் அடியில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் இருக்கை மீது சாய்ந்து நின்று கொண்டு ஒரு இலக்கில்லாமல் வெட்ட வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் சரவணன்.அவன் உள்ளம் கோபத்தில் குமுறிக் கொண்டிருந்தது. துரோகம் தந்த வலியால் துடித்து கொண்டிருந்தது.

ஆனந்தி ! இறைவன் படைப்பில் அவனை ஆச்சர்யப்பட வைத்தவள்.அவனை முழுதாய் ஆட்கொண்டவ

மேலும்

netturkalimuthu - Uthayasakee அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2017 11:25 pm

குழந்தை திருமணம்...

பருவமொட்டு விரியும் முன்
மணப்பெண் வேடம்...
பள்ளி செல்லும் வயதிலோ
பள்ளியறைப் பாடம்....

கன்னியாகும் முன்னே
விலை போகும் பெண்மை..
தொட்டிலில் ஆடிய மழலை
தொலைந்து போய் கிடக்கிறாள்
கட்டில் மேல்...

அறியாத வயதில்
புரியாத விளையாட்டுக்கள்..
விடியாத இரவுகளில்
அணையாது எரிகிறது
மெழுகுவர்த்தி...

சிதைந்த அவள் உடலோடு
மரணிக்கிறது மலர்கள்...
மடிந்து உறைகிறது உதிரத்தோடு
கண்ணீர்...

தனிமையின் நரகமாய்
கடக்கின்றது நொடிகள்...
சுடுகாடு செல்லாமலே
மரணவாடை அடிக்கின்றது
நான்கு சுவர்களின் நடுவே...

உயிரற்ற கூடு உலாவித் திரிகிறது
உணர்வற்ற பிணமாய்....
இடைவேளையற்ற யுத்த

மேலும்

வலிமையான படைப்பு நன்று.... சமூக கொடுமைகளுக்கு எதிராய் குரல் கொடுக்க கவிஞர்கள் தவறியதில்லை. இது போன்ற கவிதைகள் இன்னும் எழுதுங்கள் .............. 16-Feb-2017 2:03 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:30 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:29 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:29 pm
netturkalimuthu - netturkalimuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Dec-2016 2:23 pm

எமனின் பாசக்கயிற்றை
நகலெடுத்து உன்
விழிகளுக்குள்
மறைத்து வைத்திருக்கிறாயோ ?

குயிலை சிறைபிடித்து
அதன் குரலை
அபகரித்தாயோ ?

காற்றோடு கலந்து
வீசி மலர்களிடம்
மகரந்தத்தை
கள்ளத்தனமாய்ய்
கவர்ந்து கொண்டாயோ ?

வித்தகியே !
என்ன விந்தை செய்து
எனக்குள் உன்னை
விதைத்தாய் ?

நீ வீசிய காதல்விதை
வளர்ந்து விருட்சமாய்
எனக்குள் !

இனியும் காதலிப்பதாய்
காலம் கடத்துவதில்
துளியும் நியாயமில்லை !
வலி தாங்க முடியவில்லை !

உயிர்வதை சட்டம்
அது காதலுக்கும்
பொருந்துமானால்
உன்னைக் கைது செய்ய
வேறு காரணம்
தேவையில்லை !

தள்ளி நின்று
தவிக்க விட்டது போதும் !
சம்மதம் சொல்லி
சங்கமித்தால

மேலும்

காத்திருப்பதும் ஒரு சுகமே ! காலம் கடந்துவிட்டால் அது ஜீரணிக்காத உணவு போல அடிக்கடி எண்ணங்களை அலைமோத வைத்து நினைவுகளை ஸ்தம்பிக்க வைத்துவிடுகிறது. கனவுகள் எல்லாம் கானலாகி விடுமோ என்று மனம் பதறுகிறது ! கருத்துக்கு நன்றி நண்பா ! 24-Dec-2016 12:42 pm
தவிக்க விட்டு ரசிப்பது காதலில் ஒரு பருவம் 24-Dec-2016 12:52 am
netturkalimuthu - netturkalimuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2016 9:45 pm

ஊர்ப்பசி போக்க
தன்பசி மறந்தவனுக்கு
பட்டினிச் சாவு !

உன் உயிருக்கு
மட்டுமல்ல ,
நீ விளைவித்த
பொருளுக்கும்
விலையில்லை !

உற்பத்தி செய்தவனே
பொருளுக்கு
விலை வைப்பது
உலக நீதி
அதற்கு விவசாயி
மட்டும் விதிவிலக்கு !

உருவாக்கியவனும்
உண்பவனும்
தள்ளி நிற்க,
விலை வைப்பவன்
வெள்ளை வேட்டி
இடைத் தரகன் !

அங்கு உன்
உழைப்பையும்,
வியர்வையையும்
சீந்துவாரில்லை !

அண்டை மாநிலங்கள்
நதி நீர்க்கு கைவிரிப்பு !
உன் வயிற்றிலோ
அணையா நெருப்பு !

"விவசாயிகள் பட்டினி சாவு"
ஊடகங்ளுக்கு விளம்பரம் ;
எங்களுக்கோ அதுவும்
ஒரு செய்தி !

ஒரு முறை 'உச்' கொட்டிவிட்டு
மறு நிமிடம்
மறந்து விட

மேலும்

வேளாண்மை இன்றி யுக மனிதர்களின் ஆயுள் இயங்காது அதை உணர்ந்தும் அதனை குழி தோண்டி புதைக்கும் செயலில் உலகின் செயல்கள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2016 9:05 am
நன்றி நட்பே ! 22-Dec-2016 10:05 pm
உழவன் ----விவசாயம் விழிப்பு உணர்வு இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் 22-Dec-2016 9:59 pm
இயற்கையை அழித்த பின்பு இது தான் நடக்கும். 22-Dec-2016 9:56 pm
netturkalimuthu - AUDITOR SELVAMANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Dec-2016 8:21 pm

பெண் பார்ப்பது...?
.
.
ஒரு வாலிபன் தன்னுடைய குருவிடம்...
எனக்கு என் தாயார் திருமணம் முடிக்க ஆசைப்படுகிறார். குருவே எனக்கும் அதில் ஆசைதான்... நான் எப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது என்றான்...
குருநாதர் சொல்கிறார்...
.
.
*அழகானவளை முடிக்காதே! அடுத்தவன் அவள் மீது ஆசைப்படக் கூடும்,
.
*அழகில்லாதவளை முடிக்காதே! ஒருவேளை உனக்கே அவளை பிடிக்காமலும் போகும்,
.
*உயரமானவளை முடிக்காதே! ஒவ்வொரு வார்த்தைக்கும் உன் கழுத்து சுலிக்கக் கூடும்,
.
*குள்ளமானவளை முடிக்காதே! உனக்கு அது சரியான ஜோடியாக இருக்காது,
.
*பருமனானவளை முடிக்காதே! உன் வருமானம் அவளுக்கு போதாது,
.
*மெலிந்தவளை முடிக்காதே! வீட்டி

மேலும்

பல பேருக்கு பட்ட பிறகு தான் பாஸ் தெரியுது. சூப்பர் ஜி ! 19-Dec-2016 2:40 am
netturkalimuthu - raghul kalaiyarasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Dec-2016 4:00 pm

என்னவளே
அணிகலன்கள்
அணியாதடி
அசிங்கமாயிருக்கிறது
அணிகலன்கள்..
உன்
தெவிட்டாத
தேகத்தில்
வைரமாயிருந்தாலும்
தங்கம்மாயிருந்தாலும்
அழகற்றுத்தான்
இருக்கும்..
என்னவளே
உன்னழகோடு
அவை
போட்டிபோட
முடியுமா
என்ன?

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றிகள் தோழா 03-Jan-2017 4:20 pm
உண்மைதான் போட்டி போட முடியாது நண்பா 01-Dec-2016 8:13 pm
இறைவன் படைத்த அழகின் சுரங்கம் பெண் தானே! 01-Dec-2016 5:06 pm
netturkalimuthu - netturkalimuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Nov-2016 3:04 pm

காற்று மேகத்தை
முத்தமிட்டால் மழை !

மழைத்துளிகள் மண்ணை
முத்தமிட்டால் வெள்ளம் !

வண்டுகள் மலர்களை
முத்தமிட்டால் தேன் !

ஆனால் பெண்ணே
உள்ளத்தால் ஒன்றுபட்டு
உணர்வுகளால் சங்கமித்த
நாம் காதலாய் கை கோர்த்து
வாழ்வில் ஒன்றுபட்டால் மட்டும் ஜாதிச் சண்டையா ?
என்ன நியாயம் ?

மேலும்

நிகழ்கால உலகில் ஜாதிகள் என்ற பெயரில் சிலர் இலாபம் உழைக்க பலர் இறையாகிக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Nov-2016 4:43 pm
netturkalimuthu - netturkalimuthu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2016 6:53 pm

வாக்குறுதி 
பெண்ணே !
 நீ எப்போது 
அரசியல்வாதியானாய் ?
எனக்கு கொடுத்த வாக்குறுதிகளை 
காற்றில் பறக்கவிட்டு எவனுக்கோ மாலையிட துணிந்து விட்டாயே !

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (1)

raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை
மேலே