பாம்பாட்டி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாம்பாட்டி
இடம்
பிறந்த தேதி :  02-Dec-1990
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Sep-2015
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  18

என் படைப்புகள்
பாம்பாட்டி செய்திகள்
பாம்பாட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2018 5:40 am

ஊரான் போட்டு வச்ச ஒரு படி நெல்ல
ஒய்யாராமா ஒங்கி வளந்த நம்மளோட நெல்ல
உழவன் வெதச்சு விக்க உரிமை இல்லையா
இல்ல களவன் கடையில் வைக்க உதிச்ச சூழ்ச்சியா..

மேலும்

உண்மைதான் நட்பே .............காலம் மாறும் .........ஒன்றுபடுவோம் ஒருங்கிணைப்போம் .......... 20-Mar-2018 11:25 am

வறண்ட பூமி இறந்த கால் நடைகள்
உடல்கள், அங்கும் இங்கும்;
விண்ணைத் தாக்கும் துர்நாற்றம்
மண்ணும் கைவிட்டு சூட்டுவிட
வானமும் பொய்த்தப் பின்
போவதெங்கே என்றுதேம்பி தேம்பி
அழுகிறான்

மேலும்

இந்த நஸ்ர்ச்செய்தியைக் கேட்டு அகமகிழ்ந்தேன் நண்பர் வேலாயுதம் அவர்களே உள்ளம் உருகி தொழுதிட ஆண்டவன் எப்போதும் விடுவதில்லையே தங்கள் கருத்திற்கு நன்றிகள் நண்பரே 13-May-2017 7:42 pm
தங்கள் கவிதை படிக்கும் இந்நேரத்தில் இங்கு மழை பொழிந்ததால் எங்கள் குலதெய்வ அருளால் எங்கள் கிராம விவசாயிகள் வேளாண்மை சிறப்பாக அமைந்துள்ளது பச்சைப் பட்டுடுத்தி மதுரை அழகரும் அருளாசி அருளியுள்ளார் 13-May-2017 6:05 pm
வருகை தந்தமைக்கும், நல்ல கருத்து தந்தமைக்கும் ,நண்பரே பாம்பாட்டி மிக்க நன்றி 12-May-2017 11:09 am
அருமை... 12-May-2017 10:57 am
பாம்பாட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-May-2017 10:53 am

எடுபடாது போகுமே எந்த பேச்சை பேசினும்
விடுபடாத வீட்டினுள் இருந்ததென்ன ஆவியே
வடுபடாமல் வாழ்வதா வகுந்துவிட்டு போவதா
திருந்திடாத தீயரை என்ன செய்யலாகுமோ.....

மேலும்

பாம்பாட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Apr-2017 11:07 am

உயரமாக ஓங்கி வளர்ந்த மரங்களுடைய பாண்டிய கண்டத்திலே
தேன் குழல் சுற்றி படர்ந்திருக்கும் செழிப்பொடு கூடிய அத்திமரத்திலே
உச்சத்து இருக்கும் பொன் மலர் கண்டு பிடுங்க எண்ணிய வண்ணப் பெண்டு
அங்கு வீற்றிருக்கும் வேலனை கண்டு வேங்கை வேங்கை என்றலறினாலே
-அரவிந்தன்

மேலும்

இராசேந்திரன் அளித்த படைப்பில் (public) KR Rajendran மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Nov-2016 5:04 pm

(கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி பாட்டியற்றல்.)

விளம், மா, விளம், மா, விளம், காய் வரிசை, முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனை )

வாடியே பயிர்கள் வருத்தமோ டழவே
--------வான்துளி மண்ணிறங்கித்
தேடியே பயிர்க்கால் பாய்ந்திடத் துளிர்க்கும்
-----------தினம்தினம் வயலதிலே
ஓடியே வரும்பாற் கீரிகள் முயல்கள்
-----------உறங்கிட நிழல்தேடி
நாடியே வந்து பெண்குயில் பாட
----------- நடமிடு வாய்மயிலே..!
.
..
கீரிகளில் ஒருவகை பாற்கீரி ( பால் கீரி ) சிறிது வெண்மை கலந்திருக்கும்

மேலும்

கொடுக்கப்பட்டுள்ள விளம், மா, விளம், மா, விளம், காய் என்ற வாய்பாட்டின்படி அமைந்த ஆசிரிய விருத்தம் அருமை. நல்ல கட்டுக் கோப்பு! வாழ்த்துகள் இராசேந்திரன். 15-Oct-2019 8:41 am
ஐயா உள்ளத்து வரும் கவி அனைத்தும் உன்னதமே, உள்ளன்போடு தமிழ் ஈர்த்தது நம்மை,ஆதலாலே நாம் நம் உரையாடல், கவி இவற்றிற்கு வடிகால் தேடுகிறோம். மரபுகளை நேசிப்போம், அன்பரே உங்கள் கவி அருமை முயலும் மயிலும் அயில் தனில் உறங்கலாம், உம் கவியில் வெளிப்படுவது ஆச்சரியம்......நன்று 06-Apr-2017 3:38 pm
மரபுவழியில் ஒரு மகிழ்வான கவி.வாழ்த்துக்கள் 08-Feb-2017 6:19 pm
மிக்க நன்றி அய்யா. நீங்கள் சொன்ன எண் வகை அதுவும் அறிவேன் அய்யா. அது அறிந்தால்தானே அய்யா ஒரு பாடல் திறம்பட இயற்ற முடியும். மேலும் இது நீங்கள் நினைத்திருப்பதைப் போல் ஓலைச் சுவடிக் காலத்துப் போட்டியல்ல அய்யா. யாப்பை செம்மைப் படுத்தும் பயிற்சி. அசைக்காக, தளைக்காக பழஞ்சொற்களை தேடியெடுத்து போடும் மெத்தப் படித்தவனும் அல்ல என்பதால் நான் காணும் காட்சிகள் .இயற்கையாகவே பாடலாக்குகிறேன். இயற்கையாக இருந்தால்தான் எங்களைப் போன்ற கடைக்கோடி மக்களின் மனதிலும் யாப்பு ஆசையை வளர்க்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. இன்றைய முகனூலில் கவிஞர் என அடைமொழியிட்டு என்று தனக்குத்தானே திருநாமம் சூட்டிக்கொண்டு பொழுதுபோக்குக்காக தமிழை எழுதுபவர்களைப் போலல்லாது அதை உயிராக நினைத்து முயல்கிறேன். திரு கன்னியப்பன் அய்யா மற்றும் உங்களைப் போன்றோரின் ஏகலைவன் நான் அவ்வளவு எளிதில் சோடை போக மாட்டேன். உடும்புப் பிடி முயற்சி. நான் பிறரைப்போல் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் இதோ நான் இயற்றிய ஒரு தாழிசை இது யாப்பு பயில ஆசைப்படும் என் போன்ற கடைக்கோடி மாணவர்களுக்காக. மோனை இயைபு எதுகையொடு முரணென அளபெடை அந்தாதி இரட்டைத் தொடையுடன் செந்தொடை கொண்டதோர் செம்மையே யாப்பு ! இதில் சீர்மோனை அமைவில் முதலடியில் ஒரூஉ மோனையும், இரண்டாம் அடியில் இணைமோனையும், மூன்றாம் அடியில் பொழிப்பு மோனையும் கொண்டு எழுதியிருக்கிறேன் அய்யா. இதில் நீங்கள் சொன்ன அந்த ”எண்” அடக்கம். ( இதே போல் எனது இன்னொரு அறுசீர்க் கழி நெடிலடி விருத்தமும் இதே நாளில் நம் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.அதையும் படித்து தாங்கள் நினைப்பதை சொன்னால் மகிழ்வேன்.) 21-Nov-2016 7:28 pm
பாம்பாட்டி - சிவராமகிருட்டிணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 9:53 am

கூந்தலை வலைபோல் பிண்ணி
மார்பின் மீது போட்டுக்கொண்டு
கண்களைக் களி நடனமாடும்
கயல்களாய்க் கொண்டு
யாரைப் பிடிக்கக் காத்திருக்கிறாளென்று
எட்டிப் பார்த்தேன்.
எப்படி விழுந்தேன் என தெரியாமல்
விழுந்தபின் எழுந்து வந்தேன்
என் மனதை அந்த
வலையிலேயே விட்டுவிட்டு.

மேலும்

உங்களது வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி நண்பா. மகிழ்ச்சி. 21-Nov-2016 7:17 pm
அருமை 21-Nov-2016 6:47 pm
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி... மகிழ்ச்சி. 21-Nov-2016 5:35 pm
நன்று .வாழ்த்துக்கள் 21-Nov-2016 5:29 pm
பாம்பாட்டி - பாம்பாட்டி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 4:26 pm

என்னிடம் சொல்லிக் கொள்ளாமல்
உன் கண்ணீர் துளிகள், எங்கே அவசரமாக கீழிறங்குகின்றன

என்னிடம் எதை பிடிக்காமல்
உன் கருவிழிகள், அந்த பக்கம் திரும்பி கொண்டன

என்னிடம் எது பிடித்ததென்று
அதே விழிகள் என்னை ஓரமாய் பார்த்து ஜாடை பேசுகின்றன

என்னிடம் நீ உள்ளாய்
என்ற உன் இதழ்வாய், எதனால் கோபித்து சிலும்புகின்றன

என்னிடம் இதுவரை தான் நீ
என்று எதுவரை எல்லை விதித்தாயோ ,
அந்த எல்லையை காதல் அறியாதே........ என் காதலி

மேலும்

வருடுகிறது கவிதை !! வாழ்த்துக்கள் தொடருங்கள்...! 21-Sep-2015 10:39 am
நன்றி தோழரே... 21-Sep-2015 9:52 am
அழகிய பொழுதுகள்... அழகிய வரிகள்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Sep-2015 11:32 pm
நன்றி தோழரே... 20-Sep-2015 7:20 pm
பாம்பாட்டி - அம்ருதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2016 10:23 am

அறத்தினில் பிறந்து
அகத்தினில் வளர்ந்து
பொய்மைகளை புறங்கண்டு
செம்மொழியாய் உயர்ந்தவளே
என் தமிழே எனதுயிரே
நின் பாதம் பணிந்தேனே

மேலும்

அழகு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2016 8:45 am
அருமை.....இன்னும் எழுதுங்கள்....வாழ்த்துகள்.... 21-Nov-2016 4:24 pm
பொம்மைகளை புறங்கண்டு என எதனை குறிப்பிடுகிறீர் 21-Nov-2016 10:38 am
பாம்பாட்டி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Nov-2016 7:17 pm

மந்திர விழியாள் மந்திரம் உருட்டி
சுந்தரி சிரித்தாள் எனை மயக்க
எந்தர மாளுநல் தந்திர குறியாள்
முன் தின பார்வையில் எமையாண்டால்.

ஆண்டாள் எமையவள் செயலாள் தினஞ்சிறு
சான்றாய் சிறு இதழ் விரித்தாளே
மாண்டேன் ஐயோ மடையன் தையால்
மாரணிச் சீருடை வளைவாலே

பொய்யேன் பொழிந்தேன் பொய்யாய் உரைத்தேன்
மையாள் விழியில் மயங்கேனே - ஐயோ
மறந்தேன் தனையோ இழந்தேன், எனையோ
குழப்பினள் அவள் விழியாளே

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

ஹாஜா

ஹாஜா

ஐக்கிய அமீரக குடியரசு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே