Prabavathibalamurugan Profile - பிரபாவதி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரபாவதி
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  25-May-2016
பார்த்தவர்கள்:  94
புள்ளி:  22

என்னைப் பற்றி...

என்னை நானே செதுக்கி கொள்ளும் ஒரு உளியாக இருக்கவே விரும்புபவள்.

என் படைப்புகள்
prabavathibalamurugan செய்திகள்
sankaran ayya அளித்த கேள்வியில் (public) Razeen மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jan-2017 9:48 am

சிலர் மலர் ரசிப்பார்
சிலர் மலர் பறிப்பார்
சிலர் மலர் பிழிந்து அத்தர் ஆக்குவார்...

மலர் ரசித்தவன்
கவிஞன், கவிதையாக்கினேன் என்றான் !
மலர் பறித்தவள்
மங்கை ,கூந்தலில் சூடி அழகு செய்தேன் என்றாள் !
மலர் பிழிந்தவன்
அத்தர் வியாபாரி, மலருக்கு மறுபிறவி தந்தேன் என்றான் .

இதில் யார் உயர்ந்தவர் நீங்கள் சொல்லுங்கள் ?

-----கவின் சாரலன்

மேலும்

ஆம் மலரரைத் தீண்டாமல் ரசித்தவன் --கவிஞன் மிக்க நன்றி கவிப்பிரிய விக்னேஷ் அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:33 pm
சபாஷ் அருமையான காரண விளக்கம் . ஆனால் கவிஞனை பொறுத்தமட்டில் இது எப்படி நியாயமாகும் ? கவிஞன் மலரை தொடவில்லை பறிக்கவில்லை தன் உபயோகத்திற்காக எடுத்துச் செல்லவில்லை . தன் கவித்துவ வரிகளில் மலரின் அழகே கவிஞன் உயர்த்திக் காட்டுகிறான் .மலர் மலர்ந்து சிரித்து வாடி உதிர்ந்து மடிந்து போகிறது. கவிஞனின் வரிகளில் காலம் கடந்து வாழ்கிறது. சொல்லப்போனால் கவிஞன்தான் கவித்துவத்தால் புனர் ஜென்மம் தருகிறான் Wordsworth ன் DAFFODILS படித்துப் பாருங்கள் . மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய ஜே கே . அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:31 pm
மலரை தீண்டாமல் ரசித்தவனே 13-Jan-2017 8:27 pm
எந்த ஒரு பொருளாயினும்,செயலாயினும் பிறர் தேவைக்கு பயன்படுத்தும் போது உயர்ந்தவர் ஆகிறார்... இங்கு மூவரும் தன் தேவைக்கு பயன்படுத்தியதால் யாரும் உயர்ந்தவர் இல்லை என்பதே என் கருத்து... மனமார்ந்த நன்றிகள்...! 13-Jan-2017 5:30 pm
gangaimani அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Nov-2016 11:05 pm

திருமுகம் திருடியது -கங்கைமணி

தெருவொன்றில் நான் கண்டேன்
தித்திக்க அவள் நின்றாள் !
தெம்மாங்கு பாட்டொன்றின்
திகட்டாத சுவையைப்போல்,
தண்ணீரின் தலைமீது
தள்ளாடும் பூவைப்போல்,
திக்கென்ற நெஞ்சுக்குள்
திகிலாகித்தான் நின்றாள்.

தரைமண்ணும் திருமண்ணாய்
தடம் பட்டு உருமாற,
தென்மேற்கு காற்றொன்று
திசைமாறித் தள்ளாட,
தார்ச்சாலை ஓரத்தில்
திகைப்போடு நான் நின்றேன்.,
தாய் விட்ட கண்டொன்றின்
தவிப்பாகத் தான் நின்றேன்.

தேன் கனியாள் தீஞ்சுவையாள்
திடுக்கிட்டு எனைக்கண்டு,
திசைமாறி முகம் நானி
திரைபோட்டு உடல் மூடி,
தரை கவிழ்ந்த தாமரையாய்
தலை குனிந்து நின்றவளை,
தீண்டாமல் ரசி என்றும்

மேலும்

வரிகள் ஒவ்வொன்றும் அழகாய் மலர்கிறது....மிகவும் அருமை நண்பா....வாழ்த்துகள்...! 11-Jan-2017 6:34 pm
நன்றி தோழி.தங்களைப்போன்ற கவிஞர்களின் வாழ்த்துக்களே என்போன்றவர்களுக்கு தூண்டுதலாக அமைகிறது.நன்றிகள் பல 27-Dec-2016 3:13 pm
உங்கள் படைப்புகள் தனித்துவம் வாய்ந்தது.மிக நேர்த்தியான வார்த்தைகள்தோழரே.எனது இனிய வாழ்த்துக்கள் ......... 26-Dec-2016 12:40 pm
உண்மை....தாங்கள் கருத்து என்னை அகம்மகிழச்செய்தது நன்றி நண்பரே 29-Nov-2016 11:40 pm
gangaimani அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2016 8:38 pm

யாருக்கு யாரழுவார்
யாரறிவார்...அந்நிகழ்வை!
ஊருக்காய்..அழுவோரும் ..
உறவுக்காய்..அழுவோரும் ..
பேருக்காய் அழுவோரே!
உயிர்விட்ட ஒருவனுக்கு
உண்மையிலே யாரழுவார்?!!

மண்ணுக்காய் அழுவோரும்
பொண்ணுக்காய் அழுவோரும்
மடிந்துவிட்ட ஒருவனுக்காய்
மனம் திறந்து அழுவாரோ?!

கடனுக்கு அழுவாரோ
கைகழுவிப்போவாரோ
பொய்நிறைந்த உலகத்தில்
மெய்யாக யாரழுவார்!

ஆரத்தழுவித்தான்-
அகக்கிழத்தி அழுவாரோ?!
மாளாது மாரடித்து
மகள் விழுந்து அழுவாரோ??!

மண்விடுத்து பொன்விடுத்து
மாளிகையும் தான்விடுத்து
மாண்டுபோன தகப்பனென்றே
மகன் கதறி அழுவாரோ?!!
யாரறிவார்..அந்நிகழ்வை.

அறிந்தோரும் தெரிந்தோரும்
அருக

மேலும்

கண்களை கலங்க வைக்கும் வரிகள்....தங்கள் படைப்புக்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கோணத்தில் பயனிக்கின்றது....தொடர்ந்தும் எழுதுங்கள்....வாழ்த்துகள்...! 11-Jan-2017 6:39 pm
நன்றி தோழி. எனது கவிதை தாங்கள் மனதை தொட்டிருக்கிறது என்பதை உணர்கிறேன். 25-Dec-2016 2:17 pm
உண்மை.வாழ்வின் கடைசி படிக்கட்டில் அமர்ந்து எழுதும் பொழுது வரும் வரிகள் கண்ணீரைத்தான் வரவழைக்கிறது என்னசெய்ய அதுவே உண்மையாகவும் இருக்கிறது.நன்றி sarfan 25-Dec-2016 2:15 pm
தாங்கள் கருத்தால் நான் மனம் மகிழ்ந்தேன்.எனது படைப்புக்கள் என்றாவது ஓர் நாள் உச்சம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக்கு. நன்றி ! 25-Dec-2016 2:09 pm
Uthayasakee அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Dec-2016 3:05 pm

விடியல் உனக்காக....

இரவுகள் மட்டும் உன் இடமல்ல...
விடியல்களும் உனக்கான படிக்கற்கள் தான்...
காமுகன் உன் கற்பை களவாடினாலும் பெண்மை இழக்காத கன்னி நீ...
புதுமைகள் செய்யலாம் காலடி வை புதுமை பெண்ணாய் நீ...

கண்ணில் ஈரம் வேண்டாம் நெஞ்சில் வீரம் கொண்டிடு...
பணிந்தது போதும் துணிந்தெழு...
உதயம் தரும் பெண்மையாய் நீயும் விழித்தெழு...
அடிபணிந்த காலங்கள் சாம்பலாகட்டும்..
இனி வரும் காலங்கள் உனை சரித்திரம் போற்றட்டும்...

இருள் வாசம் வேண்டாம் வாழ்வில்...
புது ஒளி வீசட்டும் உனக்குள்..
முடிந்தவை மண்ணில் புதையட்டும்
உனக்கான விடியல்கள் விண்ணில் பிறக்கட்டும்...

குனிந்தது போதும் நிமிர்ந்தெழு ந

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்...! 11-Jan-2017 6:47 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்...! 11-Jan-2017 6:47 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்...! 11-Jan-2017 6:46 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்...! 11-Jan-2017 6:46 pm
prabavathibalamurugan - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Nov-2016 3:54 pm

உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே காற்றில் ஆடும் தேதி
தாள்கள் கூட அழைக்கிறது என்னுடன்
நடந்து வா என்று ....
உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே
விண்மீன்கள்கூட கண் சிமிட்டுகிறது
என்னோடு உறவாடு என்று.....
வீசும் காற்றுகூட சொல்லுகிறது -உன்
கண்ணீர் துளிகளை துடைப்பதற்க்கு
நான் இருக்கிறேன் என்று......
உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே
உன் இதயம்கூட துடிக்கிறது என் ஆயுள் உள்ளவரை
நீ இருப்பாய் என்று....
மரணம் கூட ஜனனம் எடுக்க தயங்குகிறது
உன்னை விழ்த்துவதா என்று ........
உனக்கென யாரும் இல்லை -என்று
வருந்தாதே

மேலும்

உங்கள் வருகையால் என் உள்ளம் மலர்ந்தது .நன்றி தோழமைகளே 29-Dec-2016 1:22 pm
எதுவாக இருந்தாலும் உனைத் தாண்டி எதுவுமில்லை என்று சொல்லாமல் சொல்லும் காதல். அருமை தோழமையே. 27-Dec-2016 6:55 pm
தோழமையே 27-Dec-2016 4:26 pm
அருமை நண்பரே. 27-Dec-2016 4:24 pm
prabavathibalamurugan - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 3:04 pm

காற்றில் கலக்கவும் இல்லை -கண்ணீரில்
கரையவும் இல்லை உன் நினைவுகள்
கனத்த இதயத்துடன் உன்னை காண காத்துயிருந்த
நொடிபொழுதுகளுக்குத்தான் தெரியும் எனது வலிகள்
எனது மூச்சுக்காற்றுக்கூட உன் சுவாசம் தேடி
அலைகிறது உனக்கு ஏன் தெரியவில்லை
பலஆயீரம் அடி தள்ளி வந்தாலும் நீ தான் வருகிறாய்
என தலை நிமிராமல் என்னால் கணிக்க முடியும்
என்னை புரிந்து கொள்ள இவ்வளவு காலமா?-அட
காலம் கடப்பதை நினைத்து கூட நான் கலங்கவில்லை
உன்னவளின் நீ புரிந்து கொள்ளவில்லை
என்னும்போது விழி வாயில் நிற்கும் கண்ணீர்
துளிகள் கூட விழி தாண்ட மறுக்கிறது.

மேலும்

புரியும் நாளும் வரும் உம் இன்னலும் அன்று தீரும் 27-Dec-2016 4:27 pm
உங்கள் வருகைக்கும் ,பாராட்டுக்கும் மிக்க நன்றி 24-Nov-2016 2:45 pm
"காண காத்துயிருந்த நொடிபொழுதுகளுக்குத்தான் தெரியும் எனது வலிகள்..." மிகச் சிறப்பான வரிகள்...நன்று. 21-Nov-2016 5:37 pm
உணர்வை உயிர் கூடுத்த உங்களது படைப்பு அருமை .......அடுத்த படைப்பை எதிர் நோக்கி உங்கள் நண்பன் 18-Nov-2016 8:22 pm

கோபுரம் ஒரு நாள் குப்பையாகும் 

குப்பையும் ஒரு  நாள்  கோபுரமாகும் .......-ஏதும் நிரந்தரம் இல்லை 

மேலும்

prabavathibalamurugan - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2016 4:18 pm

நீ என்ன மரமா?- என் நினைவுகள் உன் இதயத்தை
முட்டி மோதவில்லையா? இன்னும் எவ்வளவு
காலம் சிறையில் அடைபட்டு இருக்கப்போகிறாய்?
உடைத்து வெளி வர மனமில்லையா?- இல்லை
மனமே இல்லையா??? உன்னிடம்
ஆகாயத்தில் மிளிரும் விண்மீன்கள் கூட -தன்
முகம் மறைக்கும் மேகத்தை கிழித்து வெளி வருகிறது -நீ
ஏன் இன்னும் கல்லாகி நிற்கின்றாய்? -உன்னவளின்
கரம்பிடிக்க யார் உதவி நாடி நிற்கின்றாய்? -வா என்றால்
வந்துவிடப்போகிறாள் -ஆனால்
அச்சொல்லோ உன் அகராதியில்
இல்லாத மாதிரி வெகுண்டெழுந்து சீறுகிறாய் - யார் வாழ்விற்காக
யாரிடம் கையேந்தி நிற்கிறாய்?-நான்கு சுவருக்குள் பேச வேண்டிய
விஷியத்தை நாற்புறமும் சிதறிவிட்டா

மேலும்

சில தயக்கங்கள் பல ஆதங்கங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Oct-2016 9:14 am
Geeths அளித்த எண்ணத்தை (public) KR Rajendran மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Sep-2016 4:25 pm

பெங்களூரில் அப்பாவி தமிழ் மாணவனை தாக்கிய கன்னட வாலிபரின் பெயர், மற்றும் தொலைபேசி என் இது, முடிந்தவரை இதை பகிரவும். 


Profile name: AC Venkatesh
Mobile number : +919150144349

Organisation
Yuva Karnataka

https://www.facebook.com/Yuvakarnataka
+91 96860 28888

Address
No 2/B JP Road Girinagar 1st Phase Bangalore
560085 Bangalore     

மேலும்

அந்தக் கொடியவன் ஈனப்பிறவியாகத் தான் இருப்பான். எங்கெங்கு மூடப்பழக்கவழக்கங்கள் நிறைந்திருக்கிறதோ அங்கெல்லாம் வன்முறையும் அநாகரிமும் வெறித்தனமும் செழித்தோங்கும். குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல்வாதிகளால் நாடு மொழி பண்பாடெல்லாம் சீரழிகிறது. நமது பண்பாட்டைப் பார்த்து அவர்கள் திருந்தவேண்டும். அவர்களது இன ஒற்றுமை மொழிப் பற்றைப் பார்த்து தமிழர்கள் திருந்தவேண்டும். முதலில் திருத்தப்பட வேண்டியவர்கள் கற்ற தமிழ் எட்டப்பர்களே. 18-Sep-2016 11:06 am
மிக்க நன்றி சகோதரி. 14-Sep-2016 10:27 pm
தகவலுக்கு நன்றி 14-Sep-2016 8:06 pm
prabavathibalamurugan - Mohamed Sarfan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2016 5:14 am

மனமே மனமே இணைந்து விட்டாய்
இரவாய் பகலாய் உறைந்து விட்டாய்
காதலும் அன்பும் வேராய் போனது
சுமைகள் வந்தால் தோளில் தோளாய்
என்றும் ஆதாரமாய் வாழ்ந்திட வேண்டும்

காற்றில் பறக்கும் சருகை போல
மூச்சுக் காற்றின் பரிமாற்றத்தில் சுவாசித்து
சந்தேகம் எனும் நஞ்சை தூசித்து
கல்லறை செல்லும் வரை நேசித்து
புரிந்து வாழ்வதில் தான் சுமையும் இனித்திடும்

மெளனங்களாலும் வார்த்தைகள்
மொழிபெயர்ப்பாகி வாழ்வின் பக்கத்தில்
அவைகள் கவிதையாகி ஆனந்தம் வாழ்ந்திட
இரு உயிர்களின் புரிதலில் தான் விடையுண்டு

பூக்கள் கோர்த்து பரிசுகள் தருவதை விட
வார்த்தைகள் சேர்த்து நேசத்தை புரிந்தால்
உன் இலக்கும் அவள்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Jun-2016 6:23 am
உண்மைதான்.. வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Jun-2016 6:23 am
இரு மனமும் இணையும் பொன்வேளை தங்கள் பொன்மொழி அழகு வாழ்த்துக்கள் ... 10-Jun-2016 8:21 am
திருமணம் என்பது இரு மனம் இணைவது வாழ்கையின் அர்த்தங்களை அழகாய் சொல்வது..நன்று.... 10-Jun-2016 8:15 am
prabavathibalamurugan - rajanmp87 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2016 11:08 pm

வாசம்
அவள்
கூந்தலின்
மொழி...

மௌனம்
அவள்
விழியின்
மொழி...

காந்தம்
அவள்
பார்வையின்
மொழி...

புன்னகை
அவள்
இதழின்
மொழி...

நாணம்
அவள்
கன்னத்தின்
மொழி...

அழகு
அவள்
தேகத்தின்
மொழி...

மின்னல்
அவள்
இடையின்
மொழி...

நலினம்
அவள்
நடையின்
மொழி...

மேலும்

அவள் மொழின் அழகு அருமை 31-Aug-2016 11:29 am
அழகான அவள் மொழி... 31-Aug-2016 9:51 am
தமிழணங்கு: காதல் ஓவியம் கவிதை நயம் பாராட்டுக்கள் -------------------------------------------------- காதல் கைகுழந்தையின் அன்பை போல அது எப்பொழுது யாருக்கு கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது 31-Aug-2016 9:40 am
கவியின் மொழியும் அழகு 31-Aug-2016 9:20 am
prabavathibalamurugan - prabavathibalamurugan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2016 3:38 pm

இந்த கண்களுக்கு
காரணமின்றி கலங்கவும் தெரியாது
வலியின்றி தவழவும் தெரியாது -
யாருக்கு தெரியும் இது
மரணத்தைவிட வலிமையானது என்று -இதை
உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்-இதை விட
உதிர்ப்பதற்கு வேறு ஒன்றும் இல்லை -என்று இது வெறும்
கண்ணீர் இல்லை கனக்கமுடியாமல் துடிக்கும் -ஓர்
இதயத்தின் மௌன ஓசை என்று ......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (18)

Razeen

Razeen

குளச்சல் (நாகர்கோவில்)
raghul kalaiyarasan

raghul kalaiyarasan

பட்டுக்கோட்டை
Brknhrt JR

Brknhrt JR

நெல்லை
sivram

sivram

salem
KR Rajendran

KR Rajendran

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (19)

sivram

sivram

salem
sekara

sekara

Pollachi / Denmark
gangaimani

gangaimani

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (18)

Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
sekara

sekara

Pollachi / Denmark
Sureshraja J

Sureshraja J

சென்னை

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே