Prasannapugazh Profile - பிரசன்ன ரணதீரன் புகழேந்தி சுயவிவரம்வாசகர்
இயற்பெயர்:  பிரசன்ன ரணதீரன் புகழேந்தி
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  29-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2017
பார்த்தவர்கள்:  9
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் திறந்து வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தகம் என்னை நீங்கள் புரட்டலாம் கிழிக்கலாம் எரிக்கலாம் சிலாகிக்கலாம் விமர்சிக்கலாம் இவற்றை நீங்கள் கடக்கும் போது என் எழுத்துகள் உங்கள் மனதில் எங்காவது அரித்து கொண்டு இருக்கும் ஆனால் என் உதிரத்தின் ஒவ்வொரு அணுவும் தமிழ் பாட துடித்து கொண்டிருக்கும்.

என் படைப்புகள்
prasannapugazh செய்திகள்
prasannapugazh - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Mar-2017 9:43 pm

சர்வ அதிகாரி

மேலும்

prasannapugazh - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2017 6:32 pm

முழுமதியை உன் முகத்திற்கு உவமையாக்க
நான் ஒன்னும் கவிஞன் அல்ல பெண்ணே!
அந்த முழுமதியை என் கண்ணில் சிறைவைத்து
பரிசளிக்கும் உன் காதலன் பெண்ணே!
அந்த கயவன் மரணத்தை சூட்சமமாக வைத்தான் !
அதை ஏன் உன் கண்களில் வைத்தான் பெண்ணே ?
உன்னை கேசாதி பாதம் வரை பாட
என்னால் இயலாது பெண்ணே!
ஏனென்றால்
உன் கயல் விழியை பாடவே
என் ஆயுள் பத்தாது!
உன் கார்குழலிடை அசைவு
வெளியிடும் காற்று போதும் பெண்ணே!
என் ஆயுள் முழுதும் நான் சுவாசிக்க

மேலும்

prasannapugazh - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2017 2:49 pm

பால்வீதி ஓடையில் பொன்நிற வேளையில்
உன் கைகோர்த்து மிதந்திட தோனுதடி
விண்மீன் புடை சூழ பகலவனும் நிலவனும் நமை காக்க வேணுமடி
உன் ஈர்ப்பிசையில் நானிருக்க என் ஈர்ப்பிசையில்
நீ இருக்க காதலின் விசையில் வாழ்வோமடி
உயிர் காற்று குறையும் தருணத்தில்
மீதமிருக்கும் உயிர்மூச்சின் பங்கிட்டில் மீளுயிர் சுவாசம் கொள்வோமடி
பேரண்ட வலையில் சுற்றி திரிவோமடி
வான் கடந்து நமை பிரிக்க ஒரு கூட்டம வந்தால்
எரிக்கல் கொண்டு எறிந்திடுவோமடி
காதலின் ஒவ்வொரு அனுவையும் ரசிப்போமடி
இவ்வளிமண்டலம் முழுதும் காதலை நிரப்பி நிறைவோமடி

மேலும்

prasannapugazh - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2017 2:47 pm

​கருங்குழல் பற்றி இழுத்தான் நீ வரவில்லை
சபைதனில் பதி நடுவே ஏசினான் நீ வரவில்லை
அவையோர் முன் பரிகசித்தான் நீ வரவில்லை
அங்க நாயகன் வேசி என்றழைத்தான் நீ வரவில்லை
தமையன் சொல் மாறா துகிலுரிந்தான் நீ வரவே இல்லை
இழுத்தான் மாதர் குலமே இகழும் வரை நீ வரவில்லை
கோ மகன் விந்தன் உனை அழைத்தேன் நீ வரவில்லை
நா வற உனை தொழுதேன் நீ வரவில்லை
இறுதியாக இருகரம் துறந்து உன்னை சரணடைந்தேன்
நீ வந்தாயே தந்தாயே
உன்னை சரணடைய மறந்து காரிய பல செய்தேனே
என் மன்னா உன்னை சரணடைந்தேன் உன்னை சரணடைந்தேன்……

மேலும்

prasannapugazh - prasannapugazh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2017 2:00 pm

வானத்தை தீண்ட கதிரவன் கதறிய நேரமது காலை பனி மெல்ல படர்ந்த அத்தருணத்தில் ஒரு உரத்த குரல் ‘ஜானு’ ‘ஜானு’ என்று. தூங்கி கொண்டிருந்தவளுக்கு உறக்கம் கலையவில்லை இன்னும் உரக்க ஜானு என்றழைக்க மார்கழி குளிர் மெய்ந்த தன்னுடலை அசைத்தாள் ஜானகி கண்ணை திறக்க மனம் மறுக்க உறக்கம் கலைத்தாள்.

“என்னங்க காலங்காத்தாலே உங்களுக்கு என்ன பிரச்சனை” என்று சொல்லி கொண்டே கடிகாரத்தை நோக்கினாள் ஜானகி ஆறு இரண்டை தழுவி கொண்டிருந்தது.

“ஒரு பிரச்சனையுமில்ல இன்னிக்கு எனக்கு ஆடிடிங் சீக்கிரம் ஆபிஸ் போனும் எனக்கு லஞ்சு வேனா ஒகேவா” என்றான் பார்த்திபன்

“இத நேத்தே சொல்லகூடாதா” என்று நொந்து கொண்டாள் ஜானகி.

“சொன்ன மட்டும் என

மேலும்

மிக்க நன்றி தோழி 05-Mar-2017 10:04 pm
கதை மிக அருமை!!! 04-Mar-2017 5:33 pm
மிக்க நன்றி தோழரே 19-Feb-2017 12:48 pm
நெஞ்சை தொடும் கதை! மாதரசிகளின் காதில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வி, கதை படிப்போர் மனதிலும் நிற்கும் கேள்வி! நன்றாக கதை எழுதியிருக்கிறீர்கள்! நல்ல கதைகள் மேலும் தொடர வாழ்த்துக்கள்! 17-Feb-2017 10:31 pm
மேலும்...
கருத்துகள்
மேலே