Pugazhvizhi Profile - புகழ்விழி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  புகழ்விழி
இடம்:  கும்பகோணம்
பிறந்த தேதி :  10-Apr-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  17-Feb-2016
பார்த்தவர்கள்:  582
புள்ளி:  144

என்னைப் பற்றி...

விண்ணைப் படைத்து விண்ணிலே விண்மீன்களை மிதக்கவிட்டு மண்ணைப் படைத்து மண்ணிலே மனிதனை உலவவிட்ட ஏக இறைவனுக்கே புகழனைத்தும் !

நான்....................உலகின் பார்வையில் அதீத பேச்சாற்றல் மிக்கவள்

உற்றார் பார்வையில் ஏதும் அறியா பேதை

பெற்றோர் பார்வையில் எதற்கும் அஞ்சாத வீரமகள்

ஆனால் என் மனதின் பார்வையில்rnவிரும்பியதை செய்து முடிக்க வேண்டும்
என் பெற்றோர் நினைத்ததை உடனே செய்து முடித்தல் வேண்டும் அது என் விருப்பத்திற்கு மாறானதாக இருந்தாலும் சரி.

பெற்றோரின் கனவு நான்rnமருத்துவம் படிப்பது........
ஆனால் விதி வித்திட்டதுrnபொறியியல்rnrnபொறியாளர் ஆனாலும் நாட்டிற்கு சேவை அளிப்பதே கனவு.

மாவட்ட ஆட்சியராய் கடமையாற்றுவதே இலட்சியம்.

காலம் முழுதும் எழுத்தாளராய் இருப்பது ஆசை.

என் பேச்சும் எண்ணமும் எழுத்தும் வையத்தைமுன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் என்பது நம்பிக்கை.

மொத்தத்தில் நான் இயற்கையின் ரசிகை....,...........தமிழ் மொழியின் காதலி............

என் படைப்புகள்
pugazhvizhi செய்திகள்
pugazhvizhi - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2017 1:05 pm

சொல்லாமல் புரிந்து
கொள்வாய் என

சொல்லாமலே நின்றேன்
என்னுள் கிடந்த
ஆசைகளை !

சொல்லாமல் போனதால்
என்னவோ இன்று
இல்லாமல் போனது
என் காதல் !

மேலும்

pugazhvizhi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2017 11:52 pm

உயிரில் கலந்த
முதல் துளியோ !

உணர்வில் பூத்த
முதல் பூவோ !

பருவத்தில் தெரிந்த
முதல் உறவோ !

எல்லாம் நீயென்றே
நினைத்தேன் இதுவரை !

இல்லாத உறவை
இருப்பதாய் நினைத்தது
என் தவறோ !

என் உணர்வை
உன்னிடம் எதிர்பார்த்தும்
என் தவறோ !

காதல் எதிர்பார்த்தேன்
தரவில்லை நீயும் !

இன்றென் தவறுக்கு
மன்னிப்பை கேட்கிறேன்
தருவாயோ நீயும் !

மேலும்

pugazhvizhi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2017 11:34 pm

புரிந்து கொள்வாயென
பிரிந்து நின்றேன் !

பிரிந்து நின்ற
காரணம்
உனக்கும் புரியவில்லை
என் விதிக்கும்
புரியவில்லை போல

பிரிந்துவிட்டது உன்னை
மொத்தமாக என்னிடமிருந்து !

மேலும்

pugazhvizhi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2017 11:06 pm

உன்னில் கொண்ட
ஆசையை உன்னிடம்

மறைக்கவும் மனமில்லை
சொல்லவும் வழியில்லை

எதற்கும் வழி
இல்லா காதல்
புதைந்து தான்
போகுமோ !

மேலும்

pugazhvizhi - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2017 10:41 pm

மௌனம் ---- குறுங்கவிதை


கொல்லுகின்றாய் மௌனத்தால் மரகதமே !
கொள்ளைகொண்டாய் மனத்தினையும் அழகாக !
வெல்லுகின்ற கருவிழியால் மயக்குகின்றாய் !
வெந்தழலே என்செய்வேன் சொல்வாயே !
கல்மனமும் கரைந்திடுமே உன்னன்பில் !
காளைநான் ஏங்குகின்றேன் மொழிகேட்க !
சொல்லுகின்ற காதல்வரி வாழவைக்கும் !
சொல்லிவிடு விரைந்துநீயும் என்னிடமே !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

அழகான வரிகள் 29-Mar-2017 10:49 pm
pugazhvizhi அளித்த படைப்பில் (public) raghul kalaiyarasan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Mar-2017 10:19 pm

உயிரற்ற பொருளும்
உணர்வுடன் பேசியது
உன் உருவம்
பதிந்த புகைப்படமாக !

மேலும்

படைப்பை கண்டெடுத்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே 30-Mar-2017 5:14 pm
நன்றி தோழமையே 30-Mar-2017 5:13 pm
காதல் கற்பனை நயம் போற்றுதற்குரிய கவிதை & அழகு வண்ண ஓவியம் பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 29-Mar-2017 10:22 pm
அழகு... தொடர்ந்து வரையுங்கள்...கவிதைகளை! வாழ்த்துக்கள் 29-Mar-2017 10:01 pm
pugazhvizhi - pugazhvizhi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2017 7:44 am

உள்ளம் தந்த பின்னும்
வெள்ளமாய் புரளும் ஆசையை
கள்ளம் ஏதும் இன்றி
கள்வனை தேடி சென்று
அள்ளி அவனை அணைக்காது
தள்ளி வைத்ததால் தானோ
எள்ளி நகையாடுது உலகம் !

மேலும்

நன்றி நட்பே 21-Mar-2017 6:50 pm
உலகத்தின் நகைப்பை உள்ளம் கவலை கொள்ள கூடாது தோழியே 21-Mar-2017 4:32 pm
இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 1:44 pm
pugazhvizhi - pugazhvizhi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2017 9:56 pm

மாயம் செய்த
இதழின் மொழிகளே
காயம் தரும்
காதலில் மட்டும் !

மேலும்

நன்றி 21-Mar-2017 7:34 am
காதலும் காயமும் சிறப்பாக உள்ளது! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 20-Mar-2017 8:54 pm
நன்றி நட்பே 20-Mar-2017 7:40 pm
அருமையான கவி.... 20-Mar-2017 1:54 pm
Mohamed Sarfan அளித்த படைப்பை (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Mar-2017 9:09 am

உரிமை யுத்தம்
உலகம் எங்கும்
குப்பை போல
சடலம் குவியும்

முள்ளின் மேலே
பூக்கள் பூக்கும்
மூச்சின் ஓய்வில்
தேகம் தகனம்

சிலுவை ஏந்தும்
அகதிப் பறவை
கழிவின் நதியில்
உதிரம் சிந்தும்

மின்னல் கீற்று
பசுமை வேரில்
அஹிம்சை கற்று
நிம்மதி தேடும்

பாலை நிலா
வறுமை முகம்
ஊமைப் பேனா
சிலுவைக் கூடு

வானம் சிதறி
நதியில் ஓடும்
வானவில் கூட
கர்ப்பமாகும்

இருளும் பகலும்
விதியின் பக்கம்
பனியும் முகிலும்
நதியின் ஏக்கம்

விழிநீர் ஊற்றி
மதியும் பயணம்
மெய்கள் இன்று
ஒளிந்த துன்பம்

பட்டாம் பூச்சி
குடம்பி உள்ளே
நச்சுப் பாம்பு
காவல் தேடும்

சிகப்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-May-2017 8:55 am
நீல மையால் நீளும் இரவு விடியும். வாழ்த்துக்கள் நண்பா... 30-Apr-2017 6:07 pm
மிகப்பெரிய வார்த்தைகள் எல்லாம் உங்களை போன்றவர்களின் ஆதரவில் கிடைத்த அனுபவங்களே! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Mar-2017 10:39 am
அருமை. தத்துவ வித்தகராகிவிட்டீர் கவிஞரே. வளர்க. 25-Mar-2017 12:08 am
pugazhvizhi - pugazhvizhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2017 4:30 pm

வந்தாரை வாழ
வைக்கும் மண்ணடா !

வசந்தம் பொங்கும்
வசுந்தரை காண்ணடா !

மன்னாதி மன்னனும்
மண்டியிடும் மண்ணடா !

மகிமை கொண்ட
மண்ணெல்லாம் பொன்னடா !

நீ......................

இதை அறியாத
இழுதை மடையனடா !

வாசமுள்ள மண்ணின்
வாசமறியா வஞ்சகனடா !

எங்கள்...........

ஏராளனுக்கு நண்பன்
ஏறு தானடா !

ஏழ்மையிலும் உழவனுக்கு
ஏறுதான் துணைவனடா !

அந்த...................

துணைவனும் களிப்பில்
துள்ளிகுதிக்கும் மண்ணடா !

தடையை தகர்த்தெறியும்
துணிச்சலுள்ள மண்ணடா !

வஞ்சிப்போரை விரட்டியடிக்கும்
வீர மண்ணடா !

மேலும்

நன்கு புனையப்பட்டது... 14-Feb-2017 10:48 pm
வீரமும் ஆக்ரோஷமும் அருமை 12-Feb-2017 1:29 pm
மாடும், உழவும் எங்கள் மண்ணின் நேசமடா! 12-Feb-2017 12:34 pm
pugazhvizhi - pugazhvizhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2017 12:23 pm

ஒன்றே குலமென
ஒன்றி வாழும்
நாடு என
நகர் எங்கும்
கூவலிட்ட நாட்டிலே

காக்கை கூட்டம்போல்
கூடி வாழ்ந்த - எங்கள்
கூட்டுக்குள் பயங்கர
கயவர் போல்
கூட்டைக் களைக்க
வந்த ஆரியர்களே......... !

பாட்டன் முப்பாட்டன்
காலம் முதல்
பாரம்பரியத்ததை எங்கள்
நெஞ்சில் உரம்
போட்டு வளர்த்த
எறுழ்வலி மிக்க
ஏறு தழுவலை
எங்களிடம் இருந்து
பறிக்க நினைத்தவனே............!

சாணக்கியம் கொண்டு
சட்டங்கள் இயற்றி
சாசனம் இட்டாலும்
சாதூரியமாய் எங்களை
சிறைப் பிடித்தாலும்
சமுத்திரம் போல்
சங்கமமாகி இருக்கும் - நாங்கள்
சாதுயர் அடைந்தாலும்
சல்லிக்கட்டு நடப்பதை
சாத்தியம் ஆக்காமல்
சாய மாட்டோம்.............!

மேலும்

pugazhvizhi - pugazhvizhi அளித்த ஓவியத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2017 4:09 pm

மறதியிலும்
மறக்காத
ஒரே உணர்வு
முதல் காதல்...........

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே