முனைவர்கிபுஷ்பம் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  முனைவர்கிபுஷ்பம்
இடம்:  அய்யன்கோட்டை
பிறந்த தேதி :  26-Nov-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Feb-2014
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  11

என் படைப்புகள்
முனைவர்கிபுஷ்பம் செய்திகள்
முனைவர்கிபுஷ்பம் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2017 12:41 pm

என்னவனே ....
உன்னைப் பார்க்கும் முன்
ஏதோ ஏதோ பேச நினைக்கிறேன்
பரிதவிக்கிறேன் ,
ஆனால்...
உன்னை பார்த்தபின்போ
வார்த்தையில்லை ஏனோ?
பட படபடக்கிறேன்
ஒன்றும் பேசாமல் கழியும் நேரம்
நீ செல்லும் நேரம் வந்ததும்
என்னையறியாமல்
ஏதோ ஏதோ பேசத் தொடங்க
நீயும் மௌனமாய் சிரிக்க - நானோ
விடாமல் பேசித் தொடர
என் சிந்தை ஏனோ மறுக்கிறதடா?
உன்னைப் பிரிய .....

மேலும்

முனைவர்கிபுஷ்பம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-May-2017 12:24 pm

ஒரே வானில்

எண்ணம்

எண்ணற்ற வானிலையாய் மாறி

கனவுகளாய்

கற்பனைகளாய்

காதலாய்

சுக துக்கங்களை தாங்கி

உன்னக்காக துடிக்கின்றதே அது தான் இதயம் .

மேலும்

முனைவர்கிபுஷ்பம் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2017 1:14 pm

தொடர்ந்து
தொழிலில் ஓய்வில்லாமல்
மழை, வெயில் பாராமல்
உடலை வருத்தி
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி ....
நால்வரின் நலன் கருதி
தன் நலம் பாராமல்
நம்பிக்கையோடு
உழைப்பை அள்ளித்தருபவன்
ஆக்கம் புரிந்துகொண்டிருப்பவன் தான்
தொழிலாளி.

மேலும்

முனைவர்கிபுஷ்பம் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2017 2:28 pm

தன்னைத்தானே நேசித்துப் பார்
சுமையும் சுகமாகும்
தன்னைத்தானே உற்சாகப்படுத்திப் பார்
நீ உறங்க வைப்பாய் பல உள்ளங்களை
உள்ளத்திற்கு ஊக்கம் அளித்துப்பார்
உன்னையே உற்றுநோக்கிப்பார்
உன்னையே ஆரோக்கியமாக அழகுபடுத்திப்பார்
இயற்கையே உன்னை நேசிக்கும்
தன்னையே காதலித்துப்பார்
கத்தி வெட்டுக்கூட காணலாய் தோன்றும்
தனக்கு தானே ஆறுதல் கூறிப்பார்
ஆக்கம் அதிகரிப்பதை அறிவாய்
ஆனந்தம் பெறுவாய்
தன்னைத்தானே நேசித்துப்பார்
சோகமொன்றும் வராது
சோர்வில்லாமல் செயல் புரிவாய்
புன்னகை பூப்பாய்
புவியில் வேண்டியதை அடைவாய்
தன்னைத்தானே காதலித்துப்பார்
சுமையும் சுகமாகும் ........

மேலும்

முனைவர்கிபுஷ்பம் - இரா இராமச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Apr-2017 5:59 am

என்ன ஒரு சங்கட்டமான வாழ்க்கை😂

மேலும்

நன்று 21-Apr-2017 7:23 pm
முனைவர்கிபுஷ்பம் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2017 7:58 pm

பாதி விரிந்த மலர்
தயங்கியது
தென்றல் வர முழுதும்
விரிந்தது.
பாதி நிலா
தயங்கவில்லை
சிரித்து தவழ்ந்தது வானில் !

இந்தக் கவிதை மனித மனோவியலைப் பிரதிபலிக்கிறது
சொல்லுங்கள் !

---கவின் சாரலன்

மேலும்

பூவலகம் வாழும் வரை நிலவும் வாழும். ஆனால் உலகில் வாழும் பூவின் வாழ் நாளோ ஓர் நாளே. தன் வாநாளின் நீட்சியை கருதியே மலரத்தயங்கியது. ஆனால் தென்றலெனும் குழந்தையின் பிஞ்சு விரல்களால் தன்னை வருடவே அக்குழந்தையுடன் விளையாடி மகிழ்விப்பதற்க்கு மலந்தது மலர்! 30-Apr-2017 11:01 am
"பூ மண்ணில் மலர்வது என்பதால் எப்போதும் தீமைகளுக்கு அருகாமையில் இருக்கவேண்டி இருப்பதால் அதற்கு அச்சம் எழுகிறது. நிலா அப்படியில்லை மனிதனின் கரங்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது .அதனால் மனிதர்களிடமிருந்து பாதிப்பு ஏற்படாது என்ற அளவுகடந்த நம்பிக்கையில் அது சிரிக்கிறது அல்லவா" ---ஆஹா ஆஹா அருமை நான் சிந்திக்காத உயரத்தையெல்லாம் தொட்டுக் காட்டியிருக்கிறீர்கள் . மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி மனோவியல் பிரிய அதி நட அன்புடன்,கவின் சாரலன் 29-Apr-2017 3:36 pm
பாதி விரிந்த மலரின் தயக்கத்திற்கு காரணம் மொட்டிலேயே சருக்காக்கும் சமூகம் முழுவதும் விரிந்தால் என்னாகுமோ என்ற பயத்தால் எழுந்த பாதிப்பு. என்றாலும் புயலாய் சாய்த்துப்போகும் இம்மமானுட வர்க்கத்தில் தென்றலாய் வருடும் ஒருவரை நம்பித்தான் ஆகவேண்டும் என்ற நம்பிக்கையில் விளைந்தது. பூ மண்ணில் மலர்வது என்பதால் எப்போதும் தீமைகளுக்கு அருகாமையில் இருக்கவேண்டி இருப்பதால் அதற்கு அச்சம் எழுகிறது. நிலா அப்படியில்லை மனிதனின் கரங்களுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறது .அதனால் மனிதர்களிடமிருந்து பாதிப்பு ஏற்படாது என்ற அளவுகடந்த நம்பிக்கையில் அது சிரிக்கிறது அல்லவா 29-Apr-2017 10:11 am
"தங்களுடைய கவிதைக்கான மதிப்பீடை படிப்போர் கையில் ஒப்படைத்திருக்கும் குணம் தங்கள் பொறுமையை எடுத்து காட்டுகிறது.. நல்ல கவிஞனுக்கான அடையாளத்தை எடுத்து காட்டுகிறது.. எந்த விதமான கருத்தையும் ஏற்றுக் கொள்வேன் என்ற தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது..." ----ஆஹா எத்தனை அழகான வித்தியாசமான சிறப்புப் பார்வை ! மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய ஷாந்தி -ராஜி அன்புடன்,கவின் சாரலன் 26-Apr-2017 5:19 pm
முனைவர்கிபுஷ்பம் - நா கூர் கவி அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2014 9:00 am

தோழமை நெஞ்சங்களுக்கு நாகூர் கவியின் வணக்கங்கள்.

தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்கிறார்களே... ஏன்...?

அப்படி சொல்ல காரணம் என்ன...?

தெரிந்தோர் அவர்களது கருத்துக்களை மனம்விட்டு பகிரலாம்.

உங்கள் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் நான்....!

மேலும்

கருத்திற்கு நன்றி ஐயா 15-Feb-2014 9:53 am
குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயர் சூட்டவே விரும்பாத பெற்றோர் பலர். தமிழில் நல்ல சொற்களா இல்லை. தமிழ் இனிமையான மொழி இல்லையா? இந்தியத் திருநாட்டில் பெரும்பான்மையான மக்களின் பயன்பாட்டில் இருக்கும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே. (சமஸ்கிருதம் தவிர வேறு மொழிகளுக்கு வீம்புக்காக போராடி வாங்கினார்கள் செம்மொழித் தகுதியை) தமிழர்கள் பெரும்பாலோரிடம் (பிற மொழிக்காரர்களைப் போன்று) இன உணர்வு இல்லை. காவிரிப் பிரச்சனையில் கூட நம்மிடம் ஒற்றுமை இல்லை. தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் கூட ஒருமித்த குரல் எழுப்பும் நிலை தமிழரிடம் இல்லை. தமிழில் ’திரு’ என்ற அழகான சொல் இருக்கும் போது கடைப்பெயர்களில், சரக்கு உந்து, பேருந்து வண்டிகளிலின் பெயர்களில் உரிச்சொல்லாக அச்சொல்லைப் பயன்படுத்த 99;9999% தமிழர்கள் விரும்புவதில்லை. மொழிப் பற்று இல்லாதவர்களுக்கு இனப்பற்று இருக்காது. இனப்பற்று (வெறி அல்ல) இல்லாதவர்களை நிச்சயமாக அந்த இனத்தின் எதிரியாகத் தான் நினைக்க முடியும். 14-Feb-2014 11:02 pm
கருத்திற்கு நன்றி 14-Feb-2014 10:43 pm
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் பழந் தமிழன் இங்கு சொல்லியிருப்பது நேர் மாறாகத் தெரிகிறது. எந்த மொழி இனமானாலும் எதிரியாவதற்கு வேறு பிளவுகள் பூசல்கள் காரணமாயிருக்கலாம் அதைப் பொதுமைப் படுத்துவதற்கில்லை 14-Feb-2014 10:22 pm
முனைவர்கிபுஷ்பம் - முனைவர்கிபுஷ்பம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2014 4:51 pm

உணவளிப்பவன் நிலையைக் காப்பாற்றுவோம்
நேற்று உணவில்லை
இன்று உடையில்லை  
நாளை .. நாளை  நம் சந்ததியுமில்லை
நமக்கெல்லாம் உயிருமில்லை
இன்றோ நமக்கொரு நாதியில்லை
நம் விவசாயிகளோ தலைநகர வீதியிலே
சிந்தித்துப்பாருங்கள் ...
நமக்கே இந்த கதி என்றால்
நம் சந்ததிகளுக்கு ?
தமிழின உழைக்கும் வர்க்கமே
ஒன்றுபடு நம் குரல் ஓங்கட்டும்
நாம் ஒன்று பட்டால் ஊருக்கெல்லாம் சோறு போடுவோம்....
பல கோடி உயிர்களைக் காப்போம்.
ஆனால், இன்றோ...
நம் விவசாயிகள்  நாளை
நம் பெறப்போகும் நிலையை உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்
உணர்வோம் ....
நேற்று உணவை இழந்தோம்
இன்று உடை இழந்தோம்
நாளை உணர்வை இழக்காமல்  நமக்கான
உறைவிட உலகைக் காத்து
பலகோடி உய்ரிகளை காக்க
ஒன்று பட்டு ஒரே மனதாய் ஓங்கி நிற்போம்
நம் விவசாயம் நம் போராட்டம்
விரைவோம் விளை நிலம் காப்போம் .
               கி. புஷ்பம்

மேலும்

முனைவர்கிபுஷ்பம் - நா கூர் கவி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2014 9:00 am

தோழமை நெஞ்சங்களுக்கு நாகூர் கவியின் வணக்கங்கள்.

தமிழனுக்கு எதிரி தமிழன்தான் என்கிறார்களே... ஏன்...?

அப்படி சொல்ல காரணம் என்ன...?

தெரிந்தோர் அவர்களது கருத்துக்களை மனம்விட்டு பகிரலாம்.

உங்கள் பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் நான்....!

மேலும்

கருத்திற்கு நன்றி ஐயா 15-Feb-2014 9:53 am
குழந்தைகளுக்கு தாய் மொழியில் பெயர் சூட்டவே விரும்பாத பெற்றோர் பலர். தமிழில் நல்ல சொற்களா இல்லை. தமிழ் இனிமையான மொழி இல்லையா? இந்தியத் திருநாட்டில் பெரும்பான்மையான மக்களின் பயன்பாட்டில் இருக்கும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே. (சமஸ்கிருதம் தவிர வேறு மொழிகளுக்கு வீம்புக்காக போராடி வாங்கினார்கள் செம்மொழித் தகுதியை) தமிழர்கள் பெரும்பாலோரிடம் (பிற மொழிக்காரர்களைப் போன்று) இன உணர்வு இல்லை. காவிரிப் பிரச்சனையில் கூட நம்மிடம் ஒற்றுமை இல்லை. தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் கூட ஒருமித்த குரல் எழுப்பும் நிலை தமிழரிடம் இல்லை. தமிழில் ’திரு’ என்ற அழகான சொல் இருக்கும் போது கடைப்பெயர்களில், சரக்கு உந்து, பேருந்து வண்டிகளிலின் பெயர்களில் உரிச்சொல்லாக அச்சொல்லைப் பயன்படுத்த 99;9999% தமிழர்கள் விரும்புவதில்லை. மொழிப் பற்று இல்லாதவர்களுக்கு இனப்பற்று இருக்காது. இனப்பற்று (வெறி அல்ல) இல்லாதவர்களை நிச்சயமாக அந்த இனத்தின் எதிரியாகத் தான் நினைக்க முடியும். 14-Feb-2014 11:02 pm
கருத்திற்கு நன்றி 14-Feb-2014 10:43 pm
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றான் பழந் தமிழன் இங்கு சொல்லியிருப்பது நேர் மாறாகத் தெரிகிறது. எந்த மொழி இனமானாலும் எதிரியாவதற்கு வேறு பிளவுகள் பூசல்கள் காரணமாயிருக்கலாம் அதைப் பொதுமைப் படுத்துவதற்கில்லை 14-Feb-2014 10:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே