puthuvaipraba - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  puthuvaipraba
இடம்:  புதுச்சேரி
பிறந்த தேதி :  02-Dec-1973
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-Dec-2012
பார்த்தவர்கள்:  220
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நீங்கள் ஏதேனும் சொல்லும் அளவிற்கு வளர ஆசைப்படும் பேராசைக்காரன்

என் படைப்புகள்
puthuvaipraba செய்திகள்
puthuvaipraba - எழுத்து அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

போட்டி தலைப்புகள்:

வின் ஞானம்
அரும்புகள்
மகிழ்ச்சியின் முயற்சி
உரிமைகள் பறிக்கப்படும்
மீண்டும் மீண்டும்

மேலும்

போட்டி முடிவுகள் எண்ணம் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-Dec-2015 4:42 pm
போட்டியின் முடிவுகள் என்று வெளிவரும் 18-Dec-2015 4:28 pm
போட்டியை அறிவிப்பதும் ஆனால் முடிவுகளை அறிவிக்காமல் காலம் கடத்துவது..அல்லது அதை அப்படியே மறந்துவிடுவது என்பது இணையங்களில் சமீப காலமாக நிகழ்ந்துவரும் கொடுமை. கவிதை எழுதுபவர்கள் வேலைவெட்டி இல்லாதவர்கள் என்றும் போட்டிகள் எனும் பெயரில் அவர்களின் உணர்வுகளை எப்படி வேண்டுமானாலும் சிதைத்து அழிக்கலாம் என்றும் இணையத்தளம் நடத்துபவர்கள் நினைக்கிறார்கள். கவிஞர்களின் திறனை வளர்க்க போட்டி நடத்துவது சரி. ஆனால் ...அதே சமயம் போட்டி முடிவுகளுக்காக அதில் கலந்து கொண்டவர்கள் ஆவலோடு காத்திருப்பார்கள் என்கிற எண்ணம் தங்களுக்கு இல்லாதது வருத்தம் தருகிறது. எழுத்து போன்ற தளத்திற்கு இது அழகல்ல. நிர்வாக காரணங்களின் பொருட்டு இந்த தாமதம் ஏற்பட்டு இருப்பின் அதை அறிவிப்பாய் தளத்தில் வெளியிட்டிருக்கலாமே... பதினைத்து நாட்கள் ஆகியும் போட்டியாளர்களுக்கு முடிவு பற்றி எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தது நீங்கள் அவர்களின் மன உணர்வினை மதிக்க மறந்ததால்தான் என்று தோன்றுகிறது. எதிர்காலத்திலேனும் போட்டி அறிவிப்பதில் காட்டும் அதே ஆர்வத்தினை முடிவுகளை அறியத்தருவதிலும் காட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வருத்தங்களுடன் புதுவைப்பிரபா 16-Dec-2015 4:59 am
வின் ஞானம் என்றால் என்ன? 15-Dec-2015 7:34 pm
puthuvaipraba - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 5:04 pm

உலக உருண்டையில்-
முதலில் தோன்றியது காற்று
பின் - நீர்
அதன் பின்- தமிழ்.

உலக அறிவியலில்
மொழி வரலாற்றை
துவக்கியது தமிழ்
உலக மொழிக்கெல்லாம்
தாய்மொழியும் தமிழே!

மொழி இன உணர்வோடு
இருப்பவனெல்லாம் தமிழன்
இனக் கொடுமைகள் கண்டு- கொதித்து
எழுபவனெல்லாம் தமிழன்

ஒட்டுமொத்த உலகமே
அழிந்தொழிந்தாலும்
தமிழ் மட்டும் எஞ்சிநின்று ஒலிக்கும்
பின்னரது வேர்பிடித்து செழிக்கும்

அன்றும்-இன்றும்-என்றும்
தமிழன்தான்
மாந்த இனத்தின் தலைப்பிள்ளை
தமிழும் தமிழனும் இல்லாமல்
இந்த உலகம் சுழன்றிட வாய்ப்பில்லை.

------------------------------------------------------------------------------------------

மேலும்

சிந்தனை சிறப்பு ... வெற்றி பெற வாழ்த்துக்கள்... 15-Jan-2015 5:31 pm
puthuvaipraba - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 9:04 am

ஏழையாய் இருப்பதற்கு
ஏன் வருத்தப்படுகிறாய்....?

மேகத்தை பிழிந்தெடுத்து
முகத்தை நீ கழுவிக்கொள்

முழுநிலவை பொடிசெய்து
முகப்பூச்சு போட்டுக்கொள்

வானவில்லை தொட்டெடுத்து
வண்ணப் பொட்டு வைத்துக்கொள்

விண்மீன்கள் தேர்ந்தெடுத்து
காதில் மூக்கில் அணிந்துக்கொள்

இப்போது பார்...
நீ பிரபஞ்சப்பேரழகி

சரி..
செல்பேசி தான்
காதல் வளர்க்கும் சாதனமா ?
மின்னஞ்சல் அனுப்பினால்தான்
காதல் வளர்ச்சி சாத்தியமா ?

குறுஞ்செய்தி பகிர்ந்தால்தான்
நம் காதல் வளருமா ?
முகநூல் கணக்கின்றி
கொண்ட காதல் தளருமா?

நாம் ஏழை ...
நமக்கெதற்கு இதெல்லாம்?

வா..
இப்படியே காதலிப்போம் !
-------------

மேலும்

puthuvaipraba - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 11:42 pm

சாக்கடையை வாரி
சாப்பிட நினைப்பாயா?
கூவத்து நீரில்
குளிக்க நினைப்பாயா?

பின் –
சாதியை எதற்கு
சாப்பிட்டு வளர்கிறாய்?
மதத்தில் எதற்கு
தினம் குளித்தெழுகிறாய்?

சாதி மதமென்பது நச்சு செடி
அதற்கெதற்கு
தினம் நீ தண்ணீர் ஊற்றுகிறாய்?

போ...
அதன் வேரில் வெந்நீர் ஊற்று

எந்த சாதிக்கு பிறந்தவன் ?
என்று பேசுவதை நிறுத்து
என்ன சாதிக்க பிறந்தவன்?
என்ற கேள்வியால்
உன் சிந்தையை திருத்து

சாதி மதங்களை அழித்துவிடு
இல்லையேல் ...
அது உன்னை அழித்துவிடும்

ஆம்.
மதம் – சாதி துறக்கப்பார்
மனிதனாய் மட்டும் இருக்கப்பார்
------------------------------------------------------
இத

மேலும்

எந்த சாதிக்கு பிறந்தவன் ? என்று பேசுவதை நிறுத்து என்ன சாதிக்க பிறந்தவன்? என்ற கேள்வியால் உன் சிந்தையை திருத்து beautiful lines 15-Jan-2015 12:27 am
நல்ல காத்திரமான படைப்பு தோழரே . தொடருங்கள் .. 15-Jan-2015 12:10 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

user photo

puduvai.ve.senthil

புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

user photo

puduvai.ve.senthil

புதுச்சேரி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

user photo

puduvai.ve.senthil

புதுச்சேரி
மேலே