இராகுல் கலையரசன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இராகுல் கலையரசன்
இடம்:  பட்டுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2016
பார்த்தவர்கள்:  408
புள்ளி:  101

என்னைப் பற்றி...

கருவறையில் இருந்த கல்லை
கடவுள் என்பதை கண்டு
தன்னை கருவறை யாக்கி
என்னை கடவுள் ஆக்கியவளை
என் அம்மா என்பதா?
பெண் பிரம்மா என்பதா?

-தாயின் செல்லப்பிள்ளை
தமிழின் ஆசை பிள்ளை.

என் படைப்புகள்
இராகுல் கலையரசன் செய்திகள்
உதயசகி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jul-2017 7:06 pm

.........கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்........

காதல் துளிகள் : 04


16.நீ என் அருகில் இல்லை
என அறிந்தும் குடை பிடித்துச்
செல்கிறேன்..
என் குடைக்குள் மழையாக நீ
வருவாய் எனும் நம்பிக்கையில்..

17.சுவரில் வண்ணமாகாத பல
சித்திரங்கள்..
நாட்குறிப்பின் திகதிகளோடு
தொலைந்து போகின்றன...

18.காத்திருப்புகளின் பயணத்தில்
காதல் எழுத வேண்டிய பக்கங்களில்
காயங்கள் கையொப்பமிட்டுச்
செல்கின்றன..

19.கடந்த காலங்களில் சுமந்த
நினைவுகள்..
காதலின் உறைவிடத்தில்
ஒளிந்து கிடக்கும் முகவரிகளைத்
தேடி அலைகின்றன..

20.நீ என்னை விட்டு விலகியும்
நான் உன்னை நிழலாகத்
தொடர்வதன் அர்த்தம்- ந

மேலும்

வரிசை கட்டும் வார்த்தைகளின் சங்கிலி .மெதுவாய் மறையட்டும் காதலின் உயிர்வலி . 23-Jul-2017 7:17 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பரே... 22-Jul-2017 7:09 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பரே... 22-Jul-2017 7:08 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...மனதினிய நன்றிகள் நண்பா... 22-Jul-2017 7:07 pm
கீர்த்தி ஸ்ரீ அளித்த படைப்பில் (public) kirthi sree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jul-2017 8:54 pm

விடையும் தெரியாது
வழியும் தெரியாது
இருந்தும்
உன் பாத சுவடிலே
என் பாதம் நகர்கிறது......என் காதலா

மேலும்

நன்றி நண்பா 22-Jul-2017 5:28 pm
அழகிய வரிகள்... 22-Jul-2017 5:11 pm
நன்றி நண்பா 21-Jul-2017 5:29 pm
அழகிய வரிகள்.... 20-Jul-2017 4:05 pm
இராகுல் கலையரசன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2017 12:59 am

நாட்டினில் நடக்கும் வன்முறை கண்டால்
நரம்பொடு நாடியும் துடிக்கும் !
சூட்டுடன் எதிர்த்தால் ஆணவ அரசோ
தொல்லைகள் ஆயிரம் கொடுக்கும் !
தீட்டிய திட்டம் சரியிலை யெனினும்
செயல்பட வைத்தது நெருக்கும் !
கூட்டிய வரியால் மக்களின் நெஞ்சைக்
கூரிய ஈட்டியாய்ப் பிளக்கும் !

விற்பனை யாகும் கலப்படப் பொருளால்
விளைவுகள் பயங்கர மாகும் !
பற்றுடன் தமிழைப் பேசிட மறப்போர்
பாசமும் போலியாய்த் தோன்றும் !
நற்றமி ழறிந்தும் அறிந்திடாற் போல
நாவினில் ஆங்கிலம் உருளும் !
பெற்றவர் தம்மைக் காப்பகம் அனுப்பும்
பிள்ளையும் மிருகமாய்த் தெரியும் !

தஞ்சையின் கதிரா ம

மேலும்

கருத்துள்ள கவிதை தோழி 20-Jul-2017 4:00 pm
இராகுல் கலையரசன் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jul-2017 12:39 am

சங்கு கழுத்தினில் தங்க மணிச்சரம்
அங்க மழகாக்கும் ! - அதில்
பொங்கும் சிரிப்பது மங்கைக் கனியிதழ்
தங்கும் வரமாகும் !

கஞ்ச மலரென வஞ்சி முகமதில்
மஞ்சள் களைகூட்டும் ! - அவள்
கொஞ்சு மிளமையும் நெஞ்சம் கவர்ந்திட
கெஞ்சி உறவாடும் !

செண்டு மலர்மணம் கொண்ட வனிதையின்
கெண்டை விழிபேசும்! - அவள்
வண்டு கருவிழி கண்ட அவன்மனம்
உண்டு பசியாறும்!

சிந்து மழையினில் சிந்தை குளிர்ந்திட
சொந்தம் வலுவாகும் ! - அவள்
சந்த மிசைத்திட வந்த கவியதும்
முந்தி விளையாடும் !

செம்மை யழகுடன் கும்மி யடிப்பவள்
கம்மல் அசைந்தாடும் ! - கவிக்
கம்பன் உறவென அம்மன் வடிவென
நம்பிக் கதைபேசும் !

மின்ன லிடையினைப்

மேலும்

கொஞ்சும் மொழி பேசும் உறங்கும் இதயத்தை தட்டி எழுப்புகிறாள் பாவை.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jul-2017 10:03 am
அழகிய கவி தோழி 20-Jul-2017 3:55 pm
கவிதை ,கவிதை -அருமை எழில் .. 20-Jul-2017 3:40 pm
செம்மை யழகுடன் கும்மி யடிப்பவள் கம்மல் அசைந்தாடும் ! - கவிக் கம்பன் உறவென அம்மன் வடிவென நம்பிக் கதைபேசும் ! ---பாடல் துள்ளலோ துள்ளல் 20-Jul-2017 3:06 pm
இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 4:20 pm

அழகே
பேசுவாயா
மயிலொன்று
குயிலாக
கூவுவதை
காண
வேண்டுமடி...

மேலும்

இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2017 4:14 pm

அவளின்
காதணிந்த
கம்மல்
என்
காதலையும்
சேர்த்து
ஆடிக்கொண்டு
இருக்கிறது
அவள்
தலையசைக்க
என்
மனங்கலங்க.....

மேலும்

இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 3:37 pm

என்னவள்
உதட்டை ஈரப்படுத்திக்கொண்டாள்
நானும் என் கவிதையும்
புத்துயிர் பெறட்டுமென....

மேலும்

இராகுல் கலையரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 3:31 pm

எனது வயது குறைவு
அவளை எனக்கு தாயாக்கியது
அவளின் வயது முதிர்வு
என்னை அவளுக்கு தாயாக்குகிறது....

மேலும்

கி கவியரசன் அளித்த படைப்பை (public) அனுசுயா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-May-2017 9:49 am

மறைந்த தொடர்வண்டி சத்தம்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
யாசித்தவனின் குழலோசை

வயல்வெளி
புற்கள் மேல் விழுகிறது
கொட்டிய செங்கல்

உயர்ந்த கட்டிடம்
மேல் நோக்க விழுகிறது
பெருமூச்சு

உலகவெப்பமயமாதல் கருத்தரங்கு
விஞ்ஞானியின் வருகைக்கு தயாராகிறது
குளிரூட்டிய அறை

சிட்டுக்குருவி கவிதை
வெற்றிக்கு பரிசாகிறது
சாம்சங் கைபேசி

ஓய்வெடுக்கும் இரவு
ஈரமான வாயுடன் வருகிறது
சிறுவனின் புல்லாங்குழல்

தேர்வறை
கூட்டிப் பெருக்க வருகின்றன
விரல் நகங்கள்

இடையில் கட்டிடக் கம்பிகள்
மேலெழுந்து வருகிறாள்
நிலவுப் பாட்டி

செங்கல் சுமந்தவன்
கட்டத் தவிக்கிறான்
பள்ளிக் கட்டணம்

தூக்கி வைத்த மூட்டை

மேலும்

நன்றி தோழர் 22-May-2017 8:52 am
நன்றி தோழர் 22-May-2017 8:51 am
நன்றி தோழர் 22-May-2017 8:51 am
நன்றி நண்பரே 22-May-2017 8:51 am

01. சிறகுகள் இருக்கிறது
ஆனாலும் பறக்க முடியவில்லை
சிலையாய் சிட்டுக்குருவி

02. சுயம் நலமில்லை
சுயநலமுமில்லை
மனநோயாளி

03. முடி காணிக்கையோ?
மொட்டையாய் நிற்கிறது மரம்
இலையுதிர்காலம்

04. குறைமாத பிரசவமோ??
குப்பைத்தொட்டிலில் குழந்தை!

05. வறண்டு கிடக்கிறது நிலம்
ஆனாலும் பசுமையாய் இருக்கிறது
சுவரில் சித்திரம்

06. உடைந்துபோன நிலா
ஓடை நீரில்..

07. எவர் வருகைக்காக காத்திருக்கிறதோ
விடிந்த பின்பும் விழித்துக்கொண்டு
அணையா தெரு விளக்கு

08. அரைகுறை ஆடையில்
அலைந்து கொண்டிருக்கிறது
நாகரிகம்

09. விளக்கேற்றுகிறது விட்டில்பூச்சி
இருண்ட வீடு

10. சுவைக்கவி

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. 18-Apr-2017 4:13 pm
அருமை... 18-Apr-2017 10:40 am
பழனி குமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Apr-2017 8:37 am

சுருக்கெழுத்து வடிவமாய்
சுட்டெரித்த முகங்களாய்
சுருங்கிட்ட இதயங்களாய்
சுறுசுறுப்பிலா அரசுகளால்
சுடுகாடானது விளைநிலம்
சுயநலக் கொள்கைகளால் !

உணர்வுகளை மதிக்காமல்
உள்ளங்களை மிதிக்கிறது !
வியர்வைசிந்த உழைக்கும்
விவசாயப் பெருமக்களை !
தலைசாயும் நிலையிலின்று
தலைநகரச் சாலையிலின்று !

செவிடான சூழ்நிலையில்
செழிப்புடன் மத்தியஅரசு !
பதவிவெறி பணத்துடன்
அலைகிறது அரசுமிங்கு !
உண்மைக்குக் காலமில்லை
உழவர்க்கோ வாழ்வில்லை !

போராடுகிறான் விவிசாயி
போர்க்களத்தில் தனியாக !
அமர்கின்றனர் அரைமணி
ஆதரவென அரசியல்வாதி !
பயனென்ன சிந்தியுங்கள்
பலனொன்றும் இல்லாமல் !

நிர்வாணக் கோலத

மேலும்

எதுவாயினும் விரைவாக நடந்தால் சரியே அண்ணா . மிகவும் நன்றி 15-Apr-2017 6:50 am
உண்மையே நண்பரே . நன்றி 15-Apr-2017 6:49 am
நடுவண் அரசு வேளாண்மை செய்வோரின் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டியது மாநில அரசுதான் என்று அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் மூலம் தெரிவித்துவிட்டது. பிரதமர் அவர்கள் வேளாண் பெருமக்களுக்காக ௧௦ நிமிடங்கள் ஒதுக்கி இந்த முடிவை அறிவித்திருந்தால் போராட்டம் தொடர்ந்திட வாய்ப்பில்லை. தமிழக ஆளுங்கட்சியும் நெருக்கடியான நிலையில் மவுனமாக உள்ளது. அவர்கள் சென்னை திரும்பி வந்து சில நாட்கள் ஓய்வுக்குப்பின் முதல்வர், வேளாண் அமைச்சர் ஆளுஞர் ஆகியோரைச் சந்தித்துப் பேசவதே நல்லது. 14-Apr-2017 11:36 pm
உங்கள் எண்ணமும் வழிகாட்டுதலும் மிகவும் சரிதான் பிரியா. அப்படி நடந்தால் நிச்சசயம் வழி பிறக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன் ...ஆனால் நடைமுறையில் முடியுமா என்றும் யோசிக்கவேண்டும். எனக்கும் அந்த ஆசைதான் ...நாமே முதலில் மாறிட வேண்டும் ..அகிம்சை வழி என்பதெல்லாம் காந்தியோடு சரி. இந்த காலத்தில் எடுபடாது ...தீர்வும் காண முடியாது என்பது மறுக்க இயலா உண்மையே . காலம் கூற வேண்டும் . மிக்க நன்றிம்மா . 12-Apr-2017 3:01 pm
இராகுல் கலையரசன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Apr-2017 6:59 pm

வார்த்தைகளுக்கு
காவி கட்டி
ஏகாந்த வீதியில் நடக்காவிட்டால்
கவிதை
துறவு பூண்டு
வனவாசம் போய்விடும் !

----கவின் சாரலன்

மேலும்

நீங்கள் ரசிப்பதினால்தான் மனமுவந்த கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய ராகுல் அன்புடன்,கவின் சாரலன் 04-Apr-2017 5:06 pm
மிக்க நன்றி கவிப்பிரிய சார்பான் அன்புடன்,கவின் சாரலன் 04-Apr-2017 5:06 pm
நீங்கள் ரசிப்பதினால்தான் மனமுவந்த கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய ராகுல் அன்புடன்,கவின் சாரலன் 04-Apr-2017 3:05 pm
மிக்க நன்றி கவிப்பிரிய சார்பான் அன்புடன்,கவின் சாரலன் 04-Apr-2017 3:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (77)

சிகுவரா

சிகுவரா

சென்னை
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
குழலி

குழலி

விருதுநகர்
கே அசோகன்

கே அசோகன்

திருவள்ளுர்(தற்பொழுது மே

இவர் பின்தொடர்பவர்கள் (78)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (78)

அருண்

அருண்

இலங்கை
உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே