சூரியா உதயன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சூரியா உதயன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Apr-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Feb-2015
பார்த்தவர்கள்:  110
புள்ளி:  23

என்னைப் பற்றி...

என்றேனும் கவி படைக்க வேண்டும்!!

கவிதானென்று பிறர்
ஏற்கும் அளவினதாய்!!
செவி மடுக்கும் உள்ளங்கள்
நெகிழ்வில் நிலை
கொள்ளும் அளவினதாய்!!
நொடிப்பொழுதும் நினைவேற்றி
முணுமுணுக்கும் அளவினதாய்!!
கவியின் சாரம் மனம் மட்டுமின்றி
உணர்வை தொட்டு எழுப்பும் அளவினதாய்!!
கவி படைக்க வேண்டும்!!

என் படைப்புகள்
சூரியா உதயன் செய்திகள்
சூரியா உதயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2017 4:35 pm

காளையும்! காளையும்! - ஜல்லிக்கட்டு !
காளையும் காளையும்
தழுவுவது கண்டு
பொறுக்க முடியாமல்
பிரிக்கும் சதிதான்
மிருகவதையோ!!

ஆடு மாடை மிருகமாய்
அழைக்கும் வழக்கம்
தமிழக வறலாற்றில் -ஏன்
சங்க கால இலக்கியத்தில் கூட
இல்லையடா?

கருணைகொலை செய்பவனெல்லாம்
காப்பாற்ற போகின்றானாம்!!

விவசாயி வீடு போயி பாரு
காளைய வளக்க படும்பாடு!!
ஆனாலும்
மிருகமில்ல எம் புள்ளனு
கர்வத்தோட முத்தமிடும்
பாசத்துக்கு ஏது ஈடு!!

கட்டித் தழுவி -ஆடிக்
களிப்பதைக் காட்டிலும்
வேறெதைக் கொண்டு
விவரிப்பேன் வதையல்ல
விவசாய தோழனின்
வீர விழா இதுவென்று!!!

ஆதரிப்போம் ஜல்லிக்கட்டை!!!!

மேலும்

மரபுகளை என்றுமே பேணிக்காத்தல் எம் கடமை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Mar-2017 8:16 am
சூரியா உதயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jan-2017 1:14 am

ஜல்லிக்கட்டு!!

காளையும் காளையும்
தழுவுவது கண்டு
பொருக்க முடியாமல்
பிரிக்கும் சதிதான்
மிருகவதையோ!!

ஆடு மாடை மிருகமாய்
அழைக்கும் வழக்கம்
தமிழக வறலாற்றில் -ஏன்
சங்க கால இலக்கியத்தில் கூட
இல்லையடா!!

கருணைகொலை செய்பவனெல்லாம்
காப்பாற்ற போகின்றானாம்!!

விவசாயி வீடு போயி பாரு
காளைய வளக்க படும்பாடு!!
ஆனாலும்
மிருகமில்ல எம் புள்ளனு
கர்வத்தோட முத்தமிடும்
பாசத்துக்கு ஏது ஈடு!!

கட்டித் தழுவி -ஆடிக்
களிப்பதைக் காட்டிலும்
வேறெதைக் கொண்டு
விவரிப்பேன் வதையல்ல
விவசாய தோழனின்
வீர விழா இதுவென்று!!!

# பா சூரியா.

மேலும்

சூரியா உதயன் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Aug-2016 7:02 pm

எதில் இல்லை சுதந்திரம்!!!

காஷ்மீரிகளை எதற்கும் பயன்படுத்த
இராணுவதற்கு சுதந்திரம்!!
கலவரம் செய்ய
காவிகளுக்கு சுதந்திரம்!!
இந்தி சமஸ்கிருத
மொழி திணிப்பில் சுதந்திரம்!!
ஆவணக்கொலை செய்ய
சாதிவெறியர்களுக்கு சுதந்திரம்!!
வீதிதோறும் மதுசாலை
குடிக்க சுதந்திரம்!!
அரசியல் வாதிகளுக்கு
கொள்ளையடிக்க சுதந்திரம்!!
அரசு அலுவலகங்களில்
லஞ்சம் வாங்க சுதந்திரம்!!
அரசு பெயரால் நிருவனங்களுக்கு
நிலம் பிடுங்கிக சுதந்திரம்!
குடிக்க, விவசாயம் செய்ய நீர் வழங்காமல்
தாமிரபரணியை தாரை வார்க்க சுதந்திரம்!!
அணுஉலை, மீத்தேன், நீயூட்ரினொ என
மண்ணையும், மக்களையும் அழிப்பதில் சுதந்திரம்!!
எதிர்த்து போராடுபவர்

மேலும்

உண்மைதான்..சுதந்திரம் என்ற தேசத்தில் தானே கூண்டுக்கிளிகளின் வாழ்க்கை 26-Aug-2016 9:45 am
அருமையான படைப்பு.... 25-Aug-2016 9:40 pm
சூரியா உதயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 9:18 pm

நிகழ்வுப் பரிசு!!!

நாம்
பட்டாம்பூச்சியாய் திரிந்த காலங்கள்!!
கடற்கரையில் கட்டிப் புரண்ட நினைவுகள்!!
பிறந்தநாள் கொண்டாட்டங்கள்!!

சுக, துக்க தருணங்களை
ஒருமித்த குரலாய்
எதிர்கொண்ட நொடிகள்!!

முதல் படம் பார்த்த
பிறந்தநாள் கொண்டாட்டம் முதல்!

கடைசி தினமன்று
ஆரவாரமற்று
பிறந்தநாள் கொண்டாடி
பிரியாவிடை தந்து
பிரிந்து சென்ற நொடி வரை!!

நிகழ்வுக் கடலின்
நினைவு அலைகள்
தழுவத் தழுவ
லயித்து நிற்கும்
இந்த
இனிய நண்பர்களின்

பிறந்தநாள் வாழ்த்து!!


நினைவுப்பரிசாய் ஏதுமில்லை!!

இதோ,
மனதை மகிழ்விக்கும்
நம் நினைவுகளே பரிசாய்!!!!

மேலும்

நட்பானது மனிதனின் வாழ்க்கையில் முழுமையான ஓர் பயணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2016 10:10 am
நினைவுகளை என்றும் சிறந்த பரிசு...அழகு.. 25-Aug-2016 9:22 pm
சூரியா உதயன் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 9:12 pm

என் செய்ய வேண்டுகிறாய்!!!!!

பழகிய நாட்களும்
பேசிய நொடிகளும்
நொடிக்கு நொடி
திரையிட்டு தொலைகிறதே!

உனக்கில்லையா?!!

உந்தன் உருவமும்
உருவத்தின் ஓசையும்
சிந்தையை சிதைத்து
நிலைகொள்கிறதே!

உனக்கில்லையா?!!

கலந்த நிலைகளும்
நிலைகளில் நிகழ்வுகளும்
நாட்களை நகர விடாமல்
நீட்டிக்க செய்கிறதே!

உனக்கில்லையா?!!

காதலர் தினமாம்!
நல்லதொரு நாளில்
யாரும் அறியாரென
காதலை புதைத்தாயே!

நிகழ்வுகளின் நிரூபணமாய்
உலவவிருக்கும் எனை
என் செய்ய வேண்டுகிறாய்!!!!!

மேலும்

புரிதலில் காதல் வாழும் இணைதலில் காயம் ஆறும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2016 10:08 am
அழகான கவி... 25-Aug-2016 9:17 pm
சூரியா உதயன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2016 8:52 pm

உன்னுள் நான்!!!

என்றும்
உன்னுடனே
இருக்க விருப்பம்!!

உற்று நோக்கி
தேடாதே!!

அக்னி ஜ்வாலை
எந்தன் உடல்!!

காற்றே
எந்தன் அசைவு!!

மழையே
எந்தன் மொழி!!

உன் காதலே
எந்தன் உருவம்!!

என்றும்
உன் கண்களில்
புலப்படாதவனாய்!!

உன்னுள் நான்!!!!!

மேலும்

காதலுக்குள் விழுந்தால் காணும் இடமெல்லாம் நினைவுகளின் எதிர்மறைகள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2016 9:58 am
நன்றி 25-Aug-2016 9:08 pm
அழகு..தொடர்ந்தும் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்... 25-Aug-2016 9:03 pm
சூரியா உதயன் - சூரியா உதயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2016 8:36 pm

யாருக்கு சுதந்திரம்!

யாருக்கு சுதந்திரம் - எத்தனை
பேருக்கு சுதந்திரம் - இந்த
ஊருக்கே சுதந்திரமா? - இல்லை
பேருக்கு சுதந்திரமா?

இலவசமாய் அரிசி வாங்கி - அதை
சமைக்க இருபது ரூபாய்க்கு
தண்ணீர் வாங்கும் - நம்
இன தமிழனுக்கு சுதந்திரமா?

பத்து ரூபாய்க்கு பயிர் செய்து
பாதியை கூலியில் விட்டு
மீதியை சந்தையில் விட்ட
நாதியற்ற உழவனுக்கு சுதந்திரமா??

முதல் தரமானவற்றை ஏற்றுமதி செய்து
மூன்றாம் தர உணவுப் பொருளுக்கே
மூச்சை திணரடிக்கும் விலையேற்றம் கண்டு
முடங்கிப்போன மரவனுக்கு சுதந்திரமா??

ஏதேன் போன்ற தமிழகத்தில்
மீதேன் திட்டத்தை கொண்டு வந்து
நன்செய் நிலத்தடியில் கூட

மேலும்

பறிக்கப்படும் உரிமைகள் எங்கும் எப்போதும் அடிமைத்தனத்தை தான் வெளிப்படுத்தும் 26-Aug-2016 10:03 am
அருமை...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்... 25-Aug-2016 8:42 pm
சூரியா உதயன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

உண்மையில் சுகந்திரம் பெற்றோமா

உங்கள் எண்ணங்களை கவிதை மற்றும் கதையாய் எழுதவும்

மேலும்

எது சுதந்திரம் நம் நாட்டில் " சுதந்திரம் " கொட்டி கிடைக்கிறது, ஊழல் செய்ய " சுதந்திரம் " கள்ள ஓட்டு போடவும்,ஓட்டை விற்கவும் " சுதந்திரம் " பெண்கள் மீது வன்கொடுமை செய்ய " சுதந்திரம் " விவசாயிகள் தற்கொலை செய்யவும், பசியில் வாடவும் " சுதந்திரம் " கல்வியையும், மருத்துவத்தையும் வியாபாரம் செய்ய " சுதந்திரம் " அரசே மதுபானம் விற்கும் " சுதந்திரம் " ஜாதி மத கொடுமைகள் செய்ய " சுதந்திரம் " இது தான் நாம் பெற்ற சுதந்திரமா 12-Aug-2017 4:30 pm
தேர்வான படைப்பு மிகவும் அழகானது..மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. 05-Nov-2016 9:09 am
நெஞ்சார்ந்த நன்றியைத் தேரிவித்துக்கொள்கிறேன். 04-Nov-2016 6:03 pm
முதல் பரிசு உண்மையில் சுதந்திர்ம் பெற்றோமா சுதந்திரம் காக்க உறுதி ஏற்போம் பாவலர் கருமலைத்தமிழாழன் சாக்கடையாய் நாடுதனை மாற்று தற்கா ----சாந்தமூர்த்தி விடுதலையைப் பெற்ற ளித்தார் தீக்கனலாய் வன்முறையை எரிய வைத்துத் ----தீய்ப்பதற்கா வஉசி செக்கி ழுத்தார் ! தாக்குகின்ற சாதிமதம் வளர்ப்ப தற்கா ----தன்னுடலில் தொழுநோயைச் சிவாவும் பெற்றார் ஏக்கத்தில் மக்கள்தாம் வாடு தற்கா ----ஏந்திகொடி குமரனுமே உயிரை விட்டார் ! வளந்தன்னை ஊழலிலே சுருட்டு தற்கா ----வாஞ்சிநாதன் ஆட்துரையைச் சுட்டுக் கொன்றார் அளவின்றி அரசியலார் சொத்தைச் சேர்க்கவா ----அல்லலினைத் தீர்த்தகிரி சிறையில் ஏற்றார் ! பளபளக்க ஆட்சியாளர் பவனி வரவா ----பட்டினியில் பாரதியார் பாடல் யாத்தார் களவுகொள்ளை அதிகார ஆர்ப்பாட் டங்கள் ----காண்பதற்கா வெள்ளையனை ஓட வைத்தார் ! அந்தமானில் கல்சோறு உண்டு முன்னோர் ----அரும்உயிரில் பெற்றளித்த அருமை நாட்டை சொந்தநலன் ஒன்றிணையே கொள்கை யாக ----சேர்ந்துசிலர் அழிப்பதனைக் காண்ப தோநாம் ! அந்நியனை விரட்டுதற்கே ஒன்று சேர்ந்து ----அடக்குமுறை எதிர்த்திட்ட முன்னோர் போன்று முந்திநின்று கயவரினை வீழ்த்தி நாட்டை ----முத்தாக ஒளிரவைக்க உறுதி ஏற்போம் ! எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் நாள் : 13-Oct-16, 10:17 am சேர்த்தது : கருமலைத்தமிழாழன் 03-Nov-2016 11:19 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 3:48 pm

தென்றல் மோதி திறந்திடும்
பூ இதழ்களில்
தேன்தனை சுவைத்திட
வட்டமிடும் வண்டுபோல்
தினம் என்னை மலர செய்யும்
திமிரானவன்
கருவிழி
பார்வைக்குள் அகப்பட்டு
கனவிலே மிதக்கின்றேன்
காதலை
சொல்லத் தெரியாமல் ..!!!

மேலும்

நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:46 am
நன்றி நன்றிகள் 30-Oct-2015 9:45 am
அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 08-Apr-2015 12:55 am
வார்த்தை தொகுப்பு அருமை ....... 27-Mar-2015 2:21 pm
சூரியா உதயன் - சூரியா உதயன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2015 7:08 am

மீனவன் என்ன தீவிரவாதியா?
ஊடுருவிட்டான் என உயிரை எடுக்க!

இதை கற்றுத்தரவே
காவித் தலைவன்
கடல் கடந்து - சென்றானோ?!!

கத்தியால் குத்திப்
பார்த்தவன் இன்று
முகத்தில் காரித்
துப்பியும் பார்க்கிறான்!

மானங்கெட்ட மத்திய
மாநில அரசுகளே
உண்மையில் உங்களுக்கு
சுரணை உண்டோ??!

ரணிலே உந்தன்
ரா(ஆ)ணுவத்தை
நசுக்கும் காலம்
தொலைவில் இல்லை!

இலட்சம் தமிழரின்
இரத்தம் குடித்தும்
அடங்காத வேட்கையை
உந்தன் உயிர் பறித்து
அடக்கிடும் நிலைக்கு
ஆளாக்காதே!

சாது மிரண்டால்
காடு கொல்லாது!
என்குடி திரண்டால்
உன் படை நில்லாது!

வந்தோரை வாழவைக்கும்
தமிழ் குணம் - எம்மை
சீண்ட

மேலும்

சூரியா உதயன் - சூரியா உதயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Feb-2015 11:16 pm

நித்தமும் பேசி
நிழலாக தொடர்ந்து
நெஞ்சோடு கலந்து
காதலாய் இசைந்து
பொடி நடை பழகி
தோளில் சாய்ந்து
மடியில் உறங்கி
காதோரம் கதை பேசி
கோபமாய் கடிந்து
உதட்டு மழையில் நனைந்து
கன்னம் குழியில் விழுந்து
உள்ளங்கையில் எழுந்து
உனக்குள் என்னையும்
எனக்குள் உன்னையும்
புதைத்து வளர்ந்த நம் -காதல்
கசந்ததும் ஏனோ???......
காரணம் சொல்லாயோ காதலியே......

மேலும்

@Mano ரெட்..... ..நன்றி தோழா..... 10-Feb-2015 7:08 pm
அருமை நண்பா ...red என என்னைபோல பெயர் கொண்ட இன்னொரு நண்பர் 10-Feb-2015 2:05 pm
இத்தனைக்கும் பிறகும் கசந்தாதா காதல் .... முடியாதே ....யோசிக்க வைக்கும் வரிகள் 05-Feb-2015 10:07 pm
நன்றி தோழா ..... 05-Feb-2015 9:46 pm
சூரியா உதயன் - சூரியா உதயன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 1:37 am

தீ பரவட்டும்

ஈடு செய்ய இயலாத
உன்தன் இழப்பிற்கு - கண்ணீரை காணிக்கையாக்காமல்
இன துரோகிகளின் குருதியை
காணிக்கையாக்கவே காத்திருக்கிறோம்
அதற்காய் முதலில்
வீரவணக்கம்!!!

காக்க வேண்டிய இந்தியமே
கயவர்களாய் மாறியதன்
துரோகம் கண்டு
நெஞ்சு பொறுக்காது
தீயை தழுவி
உன்தன் உயிரையே
விதையாய் விதைத்தாயே - தோழனே
அன்று உன் மீது பற்றிய - தீ
பரவட்டும் வேள்வித்தீயாய்
மக்கள் மனதில்

துரோகிகளே
நீங்கள் வெல்லவில்லை
நினைவிருக்கட்டும்
தோல்வியை தாமத -
படுத்தியுள்ளீர் அம்மட்டே!!

ஈழம் வெல்லும்!

மேலும்

நன்றி....@ரினோஷ & செந்தில் 04-Feb-2015 10:54 pm
சூப்பர் 04-Feb-2015 8:44 pm
வீரவணக்கம் !!! இவனை எண்ணி இளகுகிறது கண்கள் 03-Feb-2015 9:06 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (9)

பழனி குமார்

பழனி குமார்

சென்னை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (9)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே