Rmahalakshmi Profile - ஆர் மகாலட்சுமி சுயவிவரம்



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆர் மகாலட்சுமி
இடம்:  கோவில்பட்டி (துத்துக்குட
பிறந்த தேதி :  12-May-1967
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jan-2017
பார்த்தவர்கள்:  834
புள்ளி:  655

என்னைப் பற்றி...

கல்வித்தகுதி: B.A. B.Ed (Economics), Hindi - Praveen, M.Sc. (Yoga)
குடும்பத்தலைவி

கவிதை மற்றும் சிறுகதை எழுத பிடிக்கும்

என் படைப்புகள்
rmahalakshmi செய்திகள்
rmahalakshmi - rmahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2017 11:48 pm

காதல்!
அன்று ...
போஸ்ட்டல் தந்தியைப்போல்,
நோக்கியோ செல் போன் போல்,
பாண்டி பஜார் நடைபாதைக் கடை போல்
நம் காதல் நிலைக்கும் என்றோம்!
இன்று...
மூன்றுமே மறைந்து விட்டது, நம் காதலைப்போல்!
குப்பையில் கிடக்கும் காலாவதியான மருந்து மாத்திரை போல்,
நினைவுகள் மட்டும் நெஞ்சில்! ,

மேலும்

நன்றி சகோதரரே! 28-May-2017 10:39 pm
உண்மைதான்..பெற்றோரை கூட பாரமாக என்னும் உலகம் காதலை எங்கனம் வாழ வைக்கும் 24-May-2017 4:17 pm
rmahalakshmi - rmahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2017 12:06 am

வெண்டைப் பிஞ்சு விரல்கள்!
என் வீட்டு, தோட்டத்தில்,
நீ தொட்ட வெண்டைக்காய்கள்,
என் வீட்டு அலமாரியில்,
காட்சிப் பொருளாய்,
காய்ந்து வெடித்து, விதைகள் தெரிய சிரிக்கிறது!
உன் வெண்டைப் பிஞ்சு விரல்கள்,
வெண்டைக்காய் மேல் பட்டதால்!

மேலும்

நன்றி சகோதரரே! 28-May-2017 10:38 pm
மென்மை தான் காதலின் முகவரி 24-May-2017 4:21 pm
rmahalakshmi - rmahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2017 12:37 am

வானமும், பூமியும்!
துவைத்து பிழிந்தது வானம், கார்மேகங்கள் வெளுத்திட!
வழிந்த நீரை, மழையெனப் பருகியது பூமி, மண் பசுமை அடைந்திட!
இது நடந்தது நேற்றைய கனவில்!
இன்று, திண்ணையில் அமர்ந்து, வானத்திடம் வேண்டுகோள் வைக்கிறேன்,
என் கனவை பலித்திடச் செய்ய மாட்டாயா என்று!

மேலும்

நன்றி சகோதரரே! 28-May-2017 10:36 pm
உங்கள் பாரதக்கனவு இன்று ஈழத்தில் பலித்தது 24-May-2017 4:36 pm
rmahalakshmi - rmahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2017 12:50 am

நான், நீ!
தீவாய் தனித்திருந்தேன்,
மலையாய் மனதில் நுழைந்தாய்,
தீபகற்பமானேன் நான்!
சிகரமெனும் கிரிடமாய்,
என் வாழ் நாள் முழுவதும் நீ!

மேலும்

நன்றி சகோதரரே! 28-May-2017 10:34 pm
அதுவே உண்மையான நேசம் 24-May-2017 4:41 pm
rmahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 1:01 am

நீ!
பதினாறு வயது இளமைக்கு,
பத்து ஆறு வயது முதுமைக்கு,
முதுமையிலும் பதினாறாய் என் இதயத்தில் நீ!

மேலும்

rmahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 12:57 am

என்னவள்!
வளைந்த வானவில் வானத்தில்!
நிமிர்ந்த வானவில் என் இதயத்தில்,
என்னவள்!

மேலும்

rmahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 12:53 am

நேரம்!
பலருக்கு போதாது,
சிலருக்கு போகாது,
எனக்கு இருப்பதே தெரியாது, நேரம்!
என் அருகில் நீயிருந்தால்!

மேலும்

rmahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
24-May-2017 12:57 am

இனிமை!
தண்ணீர், முத்துகளாய் தாமரையிலையில்,
கண்ணுக்கு இனிமை சேர்க்க!
சாதனைகள், சொத்துகளாய் வாழ்க்கையில்,
மனதிற்கு இனிமை சேர்க்க!

மேலும்

நன்றி சகோதரரே! 28-May-2017 10:32 pm
அழகான வாழ்க்கையின் உணர்த்தல்கள் 24-May-2017 4:42 pm
rmahalakshmi - rmahalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2017 11:04 pm

எச்சரிக்கை!
வாழக்கை ஒரு மலைப்பாதைப் பயணம்.
வளைவுகள் நிறைந்தது.
வளைவுகளில் பார்த்து வரவும்.
வாழந்து பார்த்தவர்கள் கூறும்,
எச்சரிக்கை!

மேலும்

அனுபவங்கள் ஆயிரம் புத்தகங்களுக்கு ஒப்பானது 25-Feb-2017 10:10 am
rmahalakshmi - bhagavathilakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2015 12:46 pm

ஆண்களின் காதலை விட
பெண்களின் காதல்
எப்பவும் அழகோ அழகுதான்.....
விரட்டி விரட்டி காதலிக்கும் போது
ஒரு வார்த்தை பேசமாட்டாளா
என்று ஏங்கிய நம்மை
பேசி பேசியே கொள்ளும் போது
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
தங்கம் ,மா ,செல்லம் ,அம்முகுட்டி,
என்று நாம் கொஞ்சும் போது அவள்
மௌனமாக சிரிக்கும் போதும்
பெண்களின் காதல் அழகுதான்....
காய்ச்சல் என்று சிறிய பொய்
சொன்னாலும் கூட உடனே நம்பி
கண்ணீர் சிந்தி நம்மை
காதல் மழையில் நனைய வைக்கும்போதும்
பெண்களின் காதல் அழகோ
அழகுதான்....
ஆயிரம் முத்தங்கள் அலைபேசியில்
கொடுத்துவிட்டு
நேரில் ஒரு முத்தத்திற்கு நம்மை
தவிக்கவிடும்போதும்
பெண்களின் காதல் அழகோ

மேலும்

நான் படித்ததில் பிடித்த வரிகள் 20-Nov-2015 4:22 pm
நான் படித்ததில் பிடித்த வரிகள்.. 20-Nov-2015 4:22 pm
அனுபவித்து எழுதியவருக்கு எனது வாழ்த்துக்கள் 20-Nov-2015 3:24 pm
மிக மிக அருமை தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Nov-2015 3:23 pm
மேலும்...
கருத்துகள்
மேலே