Sakthivel9092394992 Profile - சக்திவேல் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சக்திவேல்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  18-Oct-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Mar-2017
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  45

என் படைப்புகள்
sakthivel9092394992 செய்திகள்
sakthivel9092394992 - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 5:10 pm

காண்கின்ற இடமெல்லாம்
கதிராகித் தெரிகிறதே !
மாண்புடைய வேளாண்மை
மங்காது செழிக்கிறதே !!


ஆண்டவனால் அளித்திட்ட
அருங்கொடையாம் விவசாயம் !
வேண்டுவோம் எந்நாளும்
வேகமுறப் பல்கிடவே !!


தீண்டுகின்ற செந்நெல்லும்
திக்கெட்டும் சாற்றிடுமே .
யாண்டுமே உழைப்பன்றோ
யாங்கணுமே வேண்டுமென்றே !!


பாண்டவரின் பசுமையினைப்
பண்புடனே பாரதத்தில்
காண்கின்றோம் ஈங்கின்றே !
காட்சியிலே இயற்கையினை !!


மாண்பின் செந்தமிழர்
மலைமலையாய்க் குவித்திட்ட
ஆண்மையும் இதுவன்றோ
ஆளப்பிறந்தவர்கள் நாமுந்தான் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

கலகங்கள் இல்லாதவரை உரிமைகளை வென்றெடுக்க முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Mar-2017 1:01 am
அருமை 23-Mar-2017 6:27 pm
போற்றுதற்குரிய விவசாய மேலாண்மைக் கருத்துக்கள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் ------------------------ தற்போது இரண்டாவது பசுமைப் புரட்சி நடக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். காரணம், முதல் பசுமைப் புரட்சிக்குப் பின்பு மக்கள் தொகை இரட்டிப்பு அடைந்துவிட்டது. மாறாக விவசாயத்தைத் தொழிலாகச் செய்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாகி விட்டன. இதற்கிடையில் மக்களுக்கான உணவை உற்பத்தி செய்ய வேண்டுமானால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டியது அவசியம். அதற்குத் தேவை மற்றுமொறு பசுமைப் புரட்சி. 23-Mar-2017 5:51 pm
sakthivel9092394992 - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 8:25 am

ஆகாய... கங்கை
காய்ந்தாலும் காயும்
சாராய...கங்கை
காயாதுடா
ஆள்வோர்கள் போடும்
சட்டங்கள் யாவும்
காசு உள்ள பக்கம் பாயுதடா
குடிச்சவன் போதையில் நிற்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யரென்று கொஞ்சம்
நீ... கேளுடா
கள்ளுகடை காசிலேதான்டா...
கட்சி கொடி ஏறுது போடா...... மண்ணோடு போகாமல் நம்நாடு திருந்த செய்யனும் ..

மேலும்

sakthivel9092394992 - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2017 2:03 pm

நீ
படிக்க
மனமின்றி
ஒதுக்க,

உன் வீட்டு
குப்பத்தொட்டியில்
குடியிருக்கிறது
என்
கவிதை....!

நீ
மார்போடு
அரவணைத்து
அழகுபார்த்த
துணிகளெல்லாம்,
என்வீட்டு
அலமாரியில்.....

ஆக
கற்று
கொண்டிருக்கிறேன்,

கவிதை
எழுதுவதை
நிறுத்திவிட்டு
புடவைநெய்ய......

நீ
படித்துவிட்டு
கிழித்துபோடும்
கவிதையைவிட,

உடுத்திவிட்டு
அவிழ்த்துபோடும்
புடவை
எவ்வளவோ
மேல்....!!!

மேலும்

இனிமையான கவிதை.அருமையான வரிகள். 21-Mar-2017 1:29 pm
நன்றிகள் பல தங்கள் ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும்... 21-Mar-2017 10:25 am
அழகான பகிர்வு 20-Mar-2017 11:17 pm
sakthivel9092394992 - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2017 1:52 pm

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்

மேலும்

உன்மை காதல் 24-Mar-2017 7:35 am
மறவாத நினைவுகளின் மீட்டல் 20-Mar-2017 11:15 pm
sakthivel9092394992 - harine அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
உண்மைல என்னநல தங்கமுடியல சிரிப்பு ....... 28-Jul-2015 9:51 am
ஹா ஹா சூப்பர் நகைச்சுவை உண்மையே.........பரிசு பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி.......! 25-Jul-2015 11:29 am
மேலும்...
கருத்துகள்
மேலே