Sankaran Ayya Profile - கவின் சாரலன் சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  5652
புள்ளி:  8678

என் படைப்புகள்
sankaran ayya செய்திகள்
sankaran ayya - Idhayam Vijay அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 11:42 am

ஒரு விகற்ப பஃறொடை வெண்பா :

கண்ணில் மலர்ந்து கருவாகி நின்றாடும்
மண்ணில் விரிந்து மலராய்க் கமழ்ந்திடும்
வெண்கமலம் தேன்பருகும் வண்டாய்ப் பறந்திடும்
வண்ண மயிலிரண்டு வான்போற்றும் காதலில்
பண்ணெழுப்பும் வீணை நரம்பு......

மேலும்

நல்லொதொரு காதல் வெண்பா வாழ்த்துக்கள் விஜய் 25-Feb-2017 10:06 am
இனிய வெண்பா வாழ்த்துக்கள் அன்புடன்,கவின் சாரலன் 25-Feb-2017 10:00 am
அடடா..மிக அழகான கவிதை நண்பா 25-Feb-2017 9:57 am
sankaran ayya - malar1991 அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 5:26 pm

இப்படிக்கு இவர்கள்.

😢😢😢😢😢😢😢😢😢😢
😊😊😊😊😊😊😊😊😊😊
☺☺☺☺☺☺☺☺☺☺
மாணவர்களின் புரிதல்
@@@@@@@@@@#@##
நன்றி: "தி இந்து" 23-02-2017

மேலும்

நன்றி கவிஞரே. 25-Feb-2017 11:17 am
குறைந்தவைகள் இல்லை என்று படிக்கவும் ---கவின் 25-Feb-2017 9:43 am
கம்ப ராமாயணம் வெண்பாவினால் அல்ல விருத்தப் பாவினால் ஆனது. நளன் தன் துர் ஆகூழினால் நாடிழந்து மக்களை இழந்து விதி துரத்தி அடிக்க மனைவியையும் பிரிந்து போகும் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறான்.இலக்கிய சோகம் . கோவலன் கட்டிய மனைவியை துறந்து நாட்டியக்காரியுடன் வாழ்கிறான் .பொன் பொருளிழந்து மனைவியிடமே வந்து சேருகிறான் .சொந்த சோழ நாட்டைத் துறந்து பிழைப்பிற்காக பாண்டிய நாடு வருகிறான் . இவைகள் இலக்கிய சோகங்கள் என்ற கோணத்தில் பார்க்கப்பட வேண்டும் . பாரதியின் வசன கவிதையே பாடப் புத்தகத்தில் வராத போது அது வழிவந்த புதுக் கவிதை வருவது தூரத்து சாத்தியமே . பல திரைப்பட பாடல்கள் இலக்கியத் தரத்தில் சுவையில் குறந்தைவைகள் இல்லை என்பது உண்மை . அன்புடன், கவின் சாரலன் 25-Feb-2017 9:41 am
sankaran ayya - sathish3 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 4:10 pm

Nanpagal

மேலும்

நண் பகல் 25-Feb-2017 11:58 am
வெண்பொங்கல் பிரித்து எழுதுங்கள் . உங்கள் NANPAGAL லுக்கும் VITAI KITAIKKUM . அன்புடன்,கவின் சாரலன் 25-Feb-2017 8:47 am
sankaran ayya - Bharath selvaraj அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2017 9:09 pm

கஸல் கவிதை என்றால் எந்த வகை கவிதை?

  
      எப்படி எழுதுவது  தெரிந்தார் சொல்லுங்கள்...

மேலும்

எனது பகுதியில் கஸல் விளக்கமும் கஸல் மொழி பெயர்ப்புகளும் தமிழில் எனது கஸல்களும் பதிவு செய்திருக்கிறேன் . படிக்கவும் .அது வழி முயன்றால் நீங்களும் கஸல் இனிமையாக எழுதலாம் . அன்புடன், கவின் சாரலன் 25-Feb-2017 8:42 am
sankaran ayya - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2017 10:39 am

பொய்கையில் சிரிக்கிறது தாமரை
புன்னகையில் சிரிக்கிறாய் நீ
கற்பனையில் மலர்கிறேன் நான்
கவிதையில் சிரிப்பது நீதான்
மலர் இல்லை !

----கவின் சாரலன்

மேலும்

அருமை தோழா 25-Feb-2017 1:56 pm
sankaran ayya - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2017 10:04 am

வண்ணக் கிறுக்கல்கள்
வானவில் போல் வளைந்து சிரிக்கும்
கலைவதில்லை இவை !
கவிதை என்று பெயர் !

-----கவின் சாரலன்

மேலும்

மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன், கவின் சாரலன் 24-Feb-2017 9:34 am
உண்மைதான்..கவிதைகள் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நிழலாக பயணிக்கின்றது அவைகள் பொய் சொல்வது தொடக்கத்தில் உணர்ந்தாலும் முடிவிடத்தில் அவைகளின் உண்மைத்தன்மை புரிகின்றது 24-Feb-2017 12:16 am
ஆஹா அருமையான கருத்துக் கவிதை . நிறைய பதிவு செய்யலாமே ! மிக்க நன்றி கவிப்பிரிய பெருவை பார்த்தசாரதி அன்புடன், கவின் சாரலன் 23-Feb-2017 5:50 pm
எண்ணமெனும் வண்ணத்தை ஏட்டினிலே தெளிக்கும்போது எழுத்துக்களாக விரிந்து பரந்து கவிதையெனும் ஓவியமாக காண்போர் கவனத்தைக் கவரும் 23-Feb-2017 10:44 am
sankaran ayya - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 10:13 am

பாலைவனத்தில் தென்றலுக்கு
காத்திருந்தது ஒரு பாரசீக ரோஜா !
வீசிய புழுதிப் புயலில் வேரறுந்து
பாலை மணலில் புதைந்து போனது !

நெடும் பயணம் கொண்ட
பாலைப் பயணியின் ஒட்டகத்தின் காலடியில்
இடறி வெளிப்பட்டது ரோஜா செடி !
ஏதென்று வாடிய மலர்ச் செடியை கையிலெடுத்தான்
தோல்பை நீரினால் வாட்டம் போக்கி
எடுத்துச் சென்றான் தன் இல்லம்

தொட்டியில் பூத்துக் குலுங்குகிறது
பாலைவனத்து ரோஜா !

---கவின் சாரலன்

மேலும்

sankaran ayya - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 9:22 am

பனையோலை தன்னில் எழுதினர்முன் னோர்கள்
மனஓ வியச்சித் திரங்கள் அவைகள்
கணினித் திரையில் எழுதுகிறோம் இன்று
மனஓ வியம்எத்த னை ?

----கவின் சாரலன்

மேலும்

sankaran ayya - muraiyer69 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2017 7:36 pm

இது எப்போதோ  செய்திருக்க வேண்டியது   

இப்போதாவது செய்ய முனைகிறார்களே
 அது வரைக்கும்  
முனைவோருக்கு  நன்றி 

மேலும்

மேலும் ... ஆட்சேபிக்க முடியா ஆணையை மாநில அரசு பிறப்பிக்க முடியுமா ? ....... வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட தேசம் நம் தேசம், நம் மாநிலத்தில் ஒரு உணர்வுள்ள பாரம்பரிய திருவிழா யாருக்கும் / எதற்கும் துன்பம் இல்லாமல் கொண்டாடுவதை மற்றவர்கள் எப்படி தீர்மானிக்க முடியும், அன்றியும் யாரோ வெளி நாட்டுக்காரன் (மாமிசம் இல்லாமல் சாப்பிட தெரியாதவர்கள்) எப்படி தடை போடலாம் - மு.ரா. 20-Jan-2017 10:16 am
நன்று, இன்னும் சொல்லப்போனால் பஞ்சாயத்து ராஜ் மூலமும் இது போன்ற அவசர / அவசிய சட்டங்களை நிறை வெற்றி கொள்ளலாம் என்றும் கூட சொல்கிறார்கள் - மு.ரா. 20-Jan-2017 10:00 am
FLASH NEWS : இதோ இப்பொழுது படித்த செய்தி . ஜல்லிக் கட்டு தடையை நீக்க EXCUTIVE ORDER கொண்டுவருவோம் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார் . மத்திய அரசு SUB --JUDICE என்ற காரணத்தால் கை விரித்துவிட்ட நிலையில் இந்த மாநில மாற்று வழி வரவேற்க தக்கது. ORDINANCE EXECUTIVE ORDER இவைகளின் சட்ட ரீதியான நிலைப்பாடு என்பதை உற்று நோக்க வேண்டும். நாடாளு மன்றம் தடையை நீக்கி அவசர சட்டம் கொண்டுவந்தாலும் அதையும் சட்ட ரீதியாக நீதி மன்றத்தில் சேலஞ் செய்யமுடியும். ஆட்சேபிக்க முடியா ஆணையை மாநில அரசு பிறப்பிக்க முடியுமா ? சட்ட வல்லுநர்கள் விளக்க முடியும் . ஏதோ வெளிநாட்டு நிறுவனத்தின்" காருண்ய கண்ணீருக்கு " உள் நாட்டு மாட்டு விளையாட்டிற்கு என்ன மதுரைச் சோதனையடா ! செய்திக்கு வாழ்த்துக்கள் மு.ரா அன்புடன், கவின் சாரலன் 20-Jan-2017 9:11 am
sankaran ayya - sankaran ayya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2017 9:27 pm

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
சாமியே ஐயப்போ சாமியே ஐயப்போ !

ஜல்லிக்கட்டு பொதிய மலைக்கு
சாமியே முருகப்போ சாமியே முருகப்போ !

வேல் எடுத்து வீரம் விளைவித்த தமிழ் முருகா
வீர விளையாட்டிற்கு தடை விதிக்கும் வேதனையை என் சொல்வது ?

நோக்க நோக்க நொடியில் நோக்க
நீக்க நீக்க தடையை நீக்க !

----கவின் சாரலன்

மேலும்

உண்மை மிகப் பெரிய வலராற்று உண்மை . மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன், கவின் சாரலன் 29-Jan-2017 9:44 am
ஒன்றிணைந்த போராட்டம் வெற்றியில் முடிந்தது 29-Jan-2017 9:41 am
sankaran ayya - sankaran ayya அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 9:48 am

சிலர் மலர் ரசிப்பார்
சிலர் மலர் பறிப்பார்
சிலர் மலர் பிழிந்து அத்தர் ஆக்குவார்...

மலர் ரசித்தவன்
கவிஞன், கவிதையாக்கினேன் என்றான் !
மலர் பறித்தவள்
மங்கை ,கூந்தலில் சூடி அழகு செய்தேன் என்றாள் !
மலர் பிழிந்தவன்
அத்தர் வியாபாரி, மலருக்கு மறுபிறவி தந்தேன் என்றான் .

இதில் யார் உயர்ந்தவர் நீங்கள் சொல்லுங்கள் ?

-----கவின் சாரலன்

மேலும்

(ஜல்லிக்கட்டு அறப்போருக்கு நடுவில் ஒரு நிஜமான பூம்படைப்பு) - மு.ரா உங்கள் இந்தப் பாராட்டை மனமுவந்து ஏற்கிறேன் . ஜல்லிக்கட்டு ---செல்ல மாட்டை அன்புடன் தழுவும் ஒரு வீர விளையாட்டு . மலர்க் கவிதை --- உங்கள் வரிப்படி ஒரு பூம்படைப்பு . ஜல்லிக்கட்டு அறப்போர் ---தமிழரின் வீர விளையாட்டு பற்றிய சாத்வீகப் போராட்டம் மட்டுமல்ல எதிர்கால சமூக அரசியல் மறுமலர்ச்சியின் புதிய ஆரம்பத்தின் சத்தியம் . இந்த அறப் போராட்டம் , அரசியல் , சினிமா சினிமா பிரபலம் வேறு பல சுய நல சக்திகள் நீங்கலான தமிழ் மாணவ இளைஞர்களின் தூய அற மறுமலர்ச்சி இயக்கம் என்பதில் தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் பெருமைப் பட வேண்டும். தலை நிமிர்ந்து நிற்கும் தமிழர்களை நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள மனிதர்களும் தலை நிமிர்ந்து பார்க்கச் செய்த அற்புத அறப் போராட்டம். வாழ்த்துக்கள் மிக்க நன்றி கவிப் பிரிய மு. ரா அன்புடன்,கவின் சாரலன் 22-Jan-2017 8:25 am
படைப்பும், கீழே உள்ள அனைத்து கருத்து மற்றும் விளக்கங்களும் மிகவும் அருமை, (ஜல்லிக்கட்டு அறப்போருக்கு நடுவில் ஒரு நிஜமான பூம்படைப்பு) - மு.ரா. 22-Jan-2017 6:34 am
ஆம் மலரரைத் தீண்டாமல் ரசித்தவன் --கவிஞன் மிக்க நன்றி கவிப்பிரிய விக்னேஷ் அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:33 pm
சபாஷ் அருமையான காரண விளக்கம் . ஆனால் கவிஞனை பொறுத்தமட்டில் இது எப்படி நியாயமாகும் ? கவிஞன் மலரை தொடவில்லை பறிக்கவில்லை தன் உபயோகத்திற்காக எடுத்துச் செல்லவில்லை . தன் கவித்துவ வரிகளில் மலரின் அழகே கவிஞன் உயர்த்திக் காட்டுகிறான் .மலர் மலர்ந்து சிரித்து வாடி உதிர்ந்து மடிந்து போகிறது. கவிஞனின் வரிகளில் காலம் கடந்து வாழ்கிறது. சொல்லப்போனால் கவிஞன்தான் கவித்துவத்தால் புனர் ஜென்மம் தருகிறான் Wordsworth ன் DAFFODILS படித்துப் பாருங்கள் . மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய ஜே கே . அன்புடன்,கவின் சாரலன் 17-Jan-2017 4:31 pm
nithyasree அளித்த எண்ணத்தை (public) muraiyer69 மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Apr-2016 5:50 pm

தமிழ் மொழியின் பெருமை.....!

*  ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஒரே இனத்தால், ஒரே மொழியால் தொடர்ந்து ஆளப்பெற்று வந்த நாடு நம் தமிழ் நாடு என்பதே நம் தாய் மொழியான தமிழ் மொழியின் தொன்மைக்கு சான்று.

*  2000ம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர்கள் இந்தியாவைப் பற்றி எழுதியிருக்கும் குறிப்புகளில் பல தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன. 

*  2300 ஆண்டுகளுக்கு முன்னைய சில பிராமியக் கல்வெட்டுக்கள் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன.

*  2400 ஆண்டுகளுக்கு முன்புள்ள பாணினி காலத்திலேயே தமிழில் ‘நற்றிணை’ என்னும் சிறந்த இலக்கண நூல் தோன்றியிருக்கிறது.

*  3500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என உறுதியாக நம்பப்பெறுகிற நூல்களில் ‘அகத்தியம்’ எனப்படும் இலக்கிய நூல் ஒன்று. 

*  3000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நூல்களில் இன்று நம்மிடையே சிறிதும் அழியாமல் முழுவதுமாகக் கிடைத்துள்ள நூல் ‘தொல்காப்பியம்’ ஒன்றே. 

*  உலகில், பெயரைக் கொண்டே மொழியின் தன்மையை அறியும் பெயர் வேறு எந்த மொழிக்கும் கிடையாது. 

*  இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்.

*  வேறு எந்த மொழியையும் பெயராக சூட்டிக் கொள்ள முடியாது தெலுங்கு, ஹிந்தி,....... என்று ஆனால் நம் தாய் மொழியான தமிழை பெயராக சூட்டிக் கொள்ள முடியும் தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ் மாறன்.... என்று.

*  உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.

ஆனால் நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.

1.தொன்மை (Antiquity)
2.தனித்தன்மை (Individuality)
3.பொதுமைப் பண்பு (Common Characters)
4.நடுவு நிலைமை (Neutrality)
5.தாய்மைத் தன்மை (Parental Kinship)
6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)
7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)
8.இலக்கிய வளம் (Literary prowess)
9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)
10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)
11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)


 தமிழின் பெருமையை சான்றோர்கள், அறிஞர்கள், மேலை நாட்டவர்கள் என பலரும் கூறியவவையாவன:

★  தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

★ நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

★ தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

★ தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

★ தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

★ எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

★ “தான் பிறரால் பெறுவதை விட அதிக வெளிச்சத்தைப் பிறருக்கு அளிக்கும் மொழி தமிழ்” - ராபர்ட் கால்டுவெல்

★ "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு
முற்றோன்றி மூத்த குடி”
-ஐயனாரிதனார் 

★ “தமிழ் வடமொழியின் மகள் அன்று; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி; தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.” - டாக்டர் கால்டுவெல்

★ தமிழின் சிறப்பை உணர்ந்த மேலைநாட்டறிஞர் டாக்டர் ஜி.யு.போப், தமிழை நன்கு கற்று அதன் சிறப்பினை உணர்ந்ததால் தமது கல்லறையில் ‘ஒரு தமிழ் மாணவன்’ என்று பொறிக்கச் செய்தார்.

★ திராவிட மொழிகளின் பழம் பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழிவளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கும் ஒரு சேம அருங்கலச் செப்பமாக விளங்குவது தமிழே.
- பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார்

தமிழின் பெருமையை உணர்த்தும் சங்க கால நூல்கள்: 

@  “ என்றுமுள தென்தமிழ்
இயம்பி இசை கொண்டான் ”
“ எத்தி றத்தினும் ஏழுல கும்புகழ்
முத்தும் முத்தமி ழும்தந்து முற்றலால்”
என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

@  "எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்!" -  பெரியபுராணம்.

@  "நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்!" – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

@  "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?"
– திருவிளையாடற் புராணம்

@  "கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்?" - மதுரைக் கலம்பகம்

@ "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்" - தமிழ்விடு தூது.

@  "ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ்" -  தண்டியலங்காரம்

@  "ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!"
- மனோன்மணீயம்

@  "அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்" - புறநானூறு

@  "ஆடல் பாடல் இசையே தமிழே" - சிலப்பதிகாரம்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்!" என்று பாரதியாரும்

"தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!" என்று பாவேந்தரும் தமிழின் பெருமையை தங்களின் பாடல்கள் மூலம் கூறியுள்ளனர்.

தமிழராய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்..! தமிழின் பெருமையை உணர்வோம்...! தமிழை போற்றி வளர்த்திடுவோம்...! 

வாழ்க தமிழ்...!

மேலும்

தங்கள் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா...! 14-Feb-2017 5:42 pm
மிக்க நன்றி ஐயா...! 14-Feb-2017 5:41 pm
தமிழ் மொழியின் ஈடில்லாச் சிறப்பினை மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள் .பகிர்கிறேன் . பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தமிழ்ப் பிரிய நித்யஸ்ரீ அன்புடன்,கவின் சாரலன் 24-Dec-2016 10:11 am
* இணையத்தில் அடி எடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ். * வேறு எந்த மொழியையும் பெயராக சூட்டிக் கொள்ள முடியாது தெலுங்கு, ஹிந்தி,....... என்று ஆனால் நம் தாய் மொழியான தமிழை பெயராக சூட்டிக் கொள்ள முடியும் தமிழ், தமிழ்ச்செல்வி, தமிழ் மாறன்.... என்று. *********************** excellent / touching - மு.ரா. 24-Dec-2016 3:21 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (310)

PERUVAI PARTHASARATHI

PERUVAI PARTHASARATHI

கலைஞர் நகர், சென்னை-78
SELVAMSWAMYA

SELVAMSWAMYA

திருவண்ணாமலை
Vivek Anand

Vivek Anand

திருவண்ணாமலை/ ஆஸ்திரேலிய
saranyasaran

saranyasaran

கோவை
selvamuthu

selvamuthu

கோலார் தங்கவயல்

இவர் பின்தொடர்பவர்கள் (310)

Geeths

Geeths

கோவை
velu

velu

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (311)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே