sarabass - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  sarabass
இடம்:  trichy
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Feb-2013
பார்த்தவர்கள்:  2460
புள்ளி:  2998

என்னைப் பற்றி...

கவிஞர் ,கல்லூரிப் பேராசிரியர் மற்றும் பள்ளி முதல்வராகப் பணியாற்றியவர் .திருச்சியைச் சேர்ந்தவர் .கவிதை என் உயிர். எதைப் பார்த்தாலும் மனதில் நிலைநிறுத்தி கவிதை எழுதுவது எனது பொழுதுபோக்கு .இயற்கையின் காதலி நான் .படிப்பு ம். MSC .M PHIL (CHEMISTRY ),M .ED M .PHIL (EDUCATION ),P .G DGC

என் படைப்புகள்
sarabass செய்திகள்
sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2017 11:33 pm

அழகுமலர் சிரிக்கிறதே / அன்பினிலே அழைக்கிறதே /
நிலாமகள் நேரம் நிதமாகுமே /உதயமாகுமே காதலே /
( அழகுமலர் சிரிக்கிறதே ...)

கனவலைகள் கண்களிலே / காளையும் நான் இருந்திடுவேன் /
மதிமுகத்தாள் மனங்குளிர / மரணம்வரை துணைநிற்பேன் /
கனவலைகள் கண்களிலே / காலையும் நான் இருந்திடுவேன் /
மதிமுகத்தாள் மனங்குளிர / மரணம்வரை துணைநிற்பேன் /
கானம்பாடும் காதல் ராகம் / கேட்கும் போதிலே இன்பம் தரும் /
கருவிழியாள் கண்களிலே மலர்ச்சி வரும் /

( அழகுமலர் சிரிக்கிறதே ... )

நினைவலைகள் தொலைகிறதே / நிம்மதியும் போனதுவோ /
நிம்மதியும் போனதனால் / கதறிடுமே என் மனமோ /
நினைவலைகள் தொலைகிறதே / நிம்ம

மேலும்

sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2017 4:33 pm

ஆலமரத்தடியில் ஆண்சிங்கமாய்
அமர்ந்துகொண்டு கண்ணியமாய்
சாலச்சிறந்ததொரு தீர்ப்புதனைச்
சாற்றிடுவார் நாட்டாமைதான் !
காலமாற்றத்தினால் நாட்டினிலே
காணவில்லை எம்மருங்குமின்று .
பாலகனுக்கும் வீரம்வருமே
பாரினிலே நாட்டாமையினால் .
சீலமெங்கிலும் வேண்டுமின்றே
சிறப்புசெய்வர் சல்லிக்கட்டைதான் !

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jan-2017 11:33 am

ஊரோர் சபைதனிலே
உலகாளும் மன்னவன்முன்
உரிமைக்குரல் தருகின்ற
உன்னதத்தின் கண்ணகியை
உறவாகப் பெற்றெடுத்த
உறையுளாம் தமிழகம் !

சிலம்பு உணர்த்தும்நீதி
சிந்திக்க வேண்டியநீதி
சிறப்புமிக்கக் கற்புக்கரசியை
சிறப்பிழந்த மன்னன்முன்
சீறிப்பாய வித்திட்ட
சிங்கத்தின் வீரகர்ஜனை !

மன்னவனே ! மனுநீதி இழந்தவனே !
மாசற்றப் பெண்மணி நான் !
மக்களை ஆளும் நீயோ நீதியை
மறந்து நேர்மையை
மறந்து என்கணவன் கள்வன் என்கிறாய் !
மரபான நீதி பிறழ்ந்ததே!

மேலும்

sarabass - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2017 6:15 pm

நிலையில்லா உலகினிலே நிலைத்திடுமா கனவுகளும்
மலைமலையாய் உன்நினைவு மறந்திடுமா என்னுள்ளம்
களையிழந்த மதிமுகத்தாள் கண்களிலே கண்ணீரே !
சிலையாகி நின்றுவிட்டேன் சித்திரமே பாராயோ !

பாராயோ நீஎன்னை பார்த்துவிடும் தூரத்தில்
வாராயோ தேனிசையே வந்தருகே நில்லாயோ
சேராயோ என்னோடு சேர்ந்துவிடும் நாளருகில்
சீரான செவ்விதழால் சிந்துகின்றாய் சிரிப்பொலியை .

சிரிப்பொலியை நான்கேட்டு சிந்தையும் மயங்கி
உரித்தாக்கும் மோனநிலை உணர்வாயோ எனதழகே !
விரிவாக்கும் தனைநோக்கி விரைந்திடுமே காதல்தீ
பரிதாபம் வேண்டாமே பாசத்தால் காண்பாயே !

கண்டேன் கனியமுதே கன்னல் சுவைதரும்

மேலும்

sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2017 12:37 pm

நூல் - 3 ஒரு பா ஒருப ஃது .

காப்பு :-

கண்டேன் கனியமுதே கன்னல் சுவைதரும்
பெண்ணே எழிலுடைய பேசாத சித்திரமே
மண்ணே மதிமுகமே மாசற்றக் காதலால்
விண்ணே அழகே வியந்து .

நூல் - காதல் அழிவிலாக் கண் .

கண்களில் நாணுதல் கண்டேன் கனவிலும் .
உண்மையைச் சொல்லுமோ உன்றன் இதயமும்
கண்களா யென்னிதயம் காணா விடில்வாடிப்
புண்களாய்ப் போகும் பொழுது (1)

பொழுது விடிந்த பொழுது மனத்தால்
அழுது வடித்தேன் அகமுடைந் தாலும்
உழுது விதைத்தாயே உன்றன் முகத்தை
பழுது படாமல்நீ பார் (2)

பார்த்ததும் என்னுள் பனிபோல் குளிர்ச்சியால்.
ஈர்த்தது உன்விழி இன்பத்தால் என்னுயிரே
நான்வரும் தோற்றம் நலமுடன் தோன்

மேலும்

பேசாத பொற்சித்திரமே சுட்டும் விழிச்சுடரில் மெட்டாய் நான் உருக சிட்டாய் என் நெஞ்சமது சித்திரம் பேசுதடி அருமை சகோதரி முகநூலில் நான் selvam swamya பேரில் வலம் வந்தும் உங்களின் பாக்கள் நடையை கற்றுக்கொள்ளவே தோல்வியடைந்தேன் வெறும் ௯ வது படித்ததாலும் காதும் பேசவும் முடியாததாலும் என்னால் இயலவில்லை பாக்கள் நடையை இருந்தாலும் நேற்று இந்த தளத்தில் நுழைந்தேன் தொடர்ந்து கற்றுக்கொள்வேன் என் இனிய நல்வாழ்த்துக்கள்!வாழ்க வளமுடன் 02-Jan-2017 1:05 pm
sarabass - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2017 4:58 pm

கிராமிய கவிதைச் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

வெள்ளாம வெளஞ்சிருக்கு கண்ணம்மா !
வெதச்ச நெல்லும் கதிராச்சு கண்ணம்மா !
வெந்த நெஞ்சும் மாறிடிச்சு கண்ணம்மா !
வெள்ளி மெட்டி வாங்கித்தாரேன் கண்ணம்மா !

தைமகளும் பொறந்திடுவா பொன்னம்மா !
தழைக்குமடி தரிசுகளும் பொன்னம்மா !
தரமான வெள நெலமும் பொன்னம்மா !
தந்திடுமே வெள்ளாம பொன்னம்மா !

நாத்துநட வாடிபுள்ள கண்ணம்மா !
நட்டு வெச்சா சோறுண்டு கண்ணம்மா !
நல்ல மழை பெய்யுமடி கண்ணம்மா !
நகரத்துக்குப் போவாதடி கண்ணம்மா !

கண்ணீரு வேணாமடி பொன்னம்மா !
தண்ணீரு வந்திடுமே பொன்

மேலும்

மிக்க நன்றி 03-Jan-2017 11:48 am
மாட்டையும் தான் ஓட்டிக்கிட்டு மலையோரம் போயிக்கிட்டு கண்ணம்மா நம் கஞ்சிக்கே ஏர் உழுவோம் கண்ணம்மா சிறப்பான கிராமிய மணம் 02-Jan-2017 5:51 pm
sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2016 4:59 pm

காவியத்தில் கண்ணதாசன் கருத்தோங்கும் வண்ணதாசன்
பாவியற்றும் பாவலன்பார் பாரினிலே அற்புதம்பார் .
காவியங்கள் படைத்திடவே காசினியில் தோன்றிட்டான்.
சேவித்தும் ஏற்றிடுவோம் செம்மைமிகுப் பாக்களினை.

அற்புதமான படைப்பாளி அகிலத்திற்கோர் சான்றாகிப்
பொற்புடையக் கவிதைகளால் பொன்றாத இடந்தன்னைக்
கற்றவர்கள் சபைதனிலே காலமெல்லாம் இடம்பெறவே
உற்றவர்கள் முன்னிலையில் உன்னதமாய் நின்றிடுவான் .

கண்ணதாசன் பாடல்கள் காலத்தை வென்றுவிடும் .
விண்ணுலகும் இவன்புகழை விதந்தோதி வாழ்த்துரைக்கும் .
மண்ணுலகில் பிறந்தாலும் மகேசனாம் எந்நாளும்
பண்ணதனில் போற்றிடுவோம் பக்குவத்தின்

மேலும்

அற்புதக் கவிஞன் பற்றிய அழகுக் கவிதை.மிக நன்று! 05-Sep-2016 4:01 pm
மிக்க நன்றி 04-Sep-2016 10:09 pm
அவர் வாழ்க்கை ஓர் கஷ்டத்தில் ஓவியம் அதை உணர்த்தும் அவர் வழி காவியம் 26-Jun-2016 5:36 am
sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2016 5:04 pm

நிலைத்திருக்கும் நினைவுகளில் நிழலாடும் கனவுகளே !
கலையாத கனவுகளில் காலத்தின் நித்தியங்கள் .
விலைகொடுக்க முடியாத விந்தையான நினைவலைகள் .
மலைமலையாய்த் தெரிகிறது மாசற்றக் காதலுள்ளம் .

நினைவுகளின் வாழ்க்கையிலே நிசமாகும் காதல்மனம் .
மனையாளாய் இருந்தநாளே மனத்தினிலே நிலைத்திருக்கும் .
எனைமட்டும் நேசித்த என்னவனின் அன்புள்ளம் .
வினையாகக் கட்டுப்பட்டு விளையாட்டாய்ப் பற்றிக்கொண்டேன் .

அந்தநாளின் நினைவெல்லாம் அப்படியே பிம்பமாக
இந்தநாளில் கண்முன்னே இனிமையாகத் தெரிகிறது .
எந்தநாளும் அந்நினைவு எனைவிட்டுப் போகாது .
பந்தத்தின் பண்புமிகு பக்குவத்தின் நன்னாளாம்

மேலும்

முற்றிலும் உண்மை . மிக்க நன்றி சகோ 10-Sep-2016 11:42 pm
மனதில் பதிந்த நினைவுகள் மரணம் வரை அழிவதில்லை 10-Sep-2016 11:13 pm
sarabass - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Sep-2016 3:57 pm

எனதருமை மாணவனே ! எல்லோர்க்கும் இனியவனே !
உனதருமை நீயுணர்ந்து உலகினிலே சிறந்திடுவாய் !
சினத்தையுமே நீவிடுத்து சிந்தையிலே அமைதியான
மனத்தினிலும் மேலோங்கி மகிமையுடன் வாழ்ந்திடுவாய் !

இன்றுனக்குப் பிறந்தநாளாம்; இல்லத்திற்குத் திருநாளாம் .
என்றென்றும் அன்புடைய என்னுடைய மாணவனே !
உன்றன்மனம் நானறிவேன் உலகத்தார் யாரிவரோ!
முன்கோபம் கொண்டவனே ! முகவழகு கெட்டுவிடும் .

அற்புதமான மாணவனே ! அகிலத்தின் சான்றாவாய் !
பொற்புடைய கல்வியினால் பொன்றாத இடந்தன்னைக்
கற்றவர்கள் முன்னிலையில் களிப்புடனே பெற்றிடுவாய் !
உற்றவர்கள் உனையும்தான் உன்னதமாய்ப் போற்றிடுவர் .

பத்தாவது

மேலும்

மிக்க நன்றி 10-Sep-2016 11:43 pm
மன நிறைவான அர்ச்ச னை பூ த்தூறல்கள் 10-Sep-2016 11:00 pm
sarabass அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Sep-2016 2:51 pm

காலைக் கதிரவனைக் கண்டலர்ந்த தாமரையும்
மாலைச் சுடரால் மயங்குவதேன் ? - பாலையிலும்
சோலைப் பனித்துளியாய்ச் சொந்தங்கள் சேர்ந்திட
ஓலை அனுப்பிடுவோ மோம்பு .

மேலும்

சிந்தைக்கு விருந்தாகும் படைப்பு. மோம்பு என்றால் என்னவென்று சொல்லுங்கள் கவிஞரே. 11-Sep-2016 12:03 am
மிக்க நன்றி 10-Sep-2016 11:44 pm
சிறப்பு.. 10-Sep-2016 10:52 pm
sarabass - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2016 3:57 pm

எனதருமை மாணவனே ! எல்லோர்க்கும் இனியவனே !
உனதருமை நீயுணர்ந்து உலகினிலே சிறந்திடுவாய் !
சினத்தையுமே நீவிடுத்து சிந்தையிலே அமைதியான
மனத்தினிலும் மேலோங்கி மகிமையுடன் வாழ்ந்திடுவாய் !

இன்றுனக்குப் பிறந்தநாளாம்; இல்லத்திற்குத் திருநாளாம் .
என்றென்றும் அன்புடைய என்னுடைய மாணவனே !
உன்றன்மனம் நானறிவேன் உலகத்தார் யாரிவரோ!
முன்கோபம் கொண்டவனே ! முகவழகு கெட்டுவிடும் .

அற்புதமான மாணவனே ! அகிலத்தின் சான்றாவாய் !
பொற்புடைய கல்வியினால் பொன்றாத இடந்தன்னைக்
கற்றவர்கள் முன்னிலையில் களிப்புடனே பெற்றிடுவாய் !
உற்றவர்கள் உனையும்தான் உன்னதமாய்ப் போற்றிடுவர் .

பத்தாவது

மேலும்

மிக்க நன்றி 10-Sep-2016 11:43 pm
மன நிறைவான அர்ச்ச னை பூ த்தூறல்கள் 10-Sep-2016 11:00 pm
sarabass - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2016 5:04 pm

நிலைத்திருக்கும் நினைவுகளில் நிழலாடும் கனவுகளே !
கலையாத கனவுகளில் காலத்தின் நித்தியங்கள் .
விலைகொடுக்க முடியாத விந்தையான நினைவலைகள் .
மலைமலையாய்த் தெரிகிறது மாசற்றக் காதலுள்ளம் .

நினைவுகளின் வாழ்க்கையிலே நிசமாகும் காதல்மனம் .
மனையாளாய் இருந்தநாளே மனத்தினிலே நிலைத்திருக்கும் .
எனைமட்டும் நேசித்த என்னவனின் அன்புள்ளம் .
வினையாகக் கட்டுப்பட்டு விளையாட்டாய்ப் பற்றிக்கொண்டேன் .

அந்தநாளின் நினைவெல்லாம் அப்படியே பிம்பமாக
இந்தநாளில் கண்முன்னே இனிமையாகத் தெரிகிறது .
எந்தநாளும் அந்நினைவு எனைவிட்டுப் போகாது .
பந்தத்தின் பண்புமிகு பக்குவத்தின் நன்னாளாம்

மேலும்

முற்றிலும் உண்மை . மிக்க நன்றி சகோ 10-Sep-2016 11:42 pm
மனதில் பதிந்த நினைவுகள் மரணம் வரை அழிவதில்லை 10-Sep-2016 11:13 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (651)

sirojan Piruntha

sirojan Piruntha

மட்டக்களப்பு, இலங்கை
Bathmanathan Loaganathan

Bathmanathan Loaganathan

ச்'சாஆ, மலேஷியா
user photo

velayutham avudaiappan

KADAYANALLUR
Vishanithi R

Vishanithi R

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (652)

Siva

Siva

Malaysia
krishnan hari

krishnan hari

chennai
Parthiban

Parthiban

பெங்களூரு

இவரை பின்தொடர்பவர்கள் (653)

springsiva

springsiva

DELHI
thamizhmukilan

thamizhmukilan

பேராவூரணி
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே