Saravana Prakash Profile - சரவண பிரகாஷ் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சரவண பிரகாஷ்
இடம்:  TIRUPUR
பிறந்த தேதி :  29-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Dec-2016
பார்த்தவர்கள்:  126
புள்ளி:  33

என்னைப் பற்றி...

மனிதர்களால் தர முடியாத ஆறுதலை எனக்கு எழுத்து தருகிறது..அதனால் எழுதுகிறேன்.

என் படைப்புகள்
saravana prakash செய்திகள்
saravana prakash - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jun-2017 9:44 pm

[வாழ்வின் முற்பகுதியை இன்னதென்று அறியாமலேயே கழித்து விட்டு,பிற்பகுதியை நினைத்து ஏக்கமும்,பயமும் கொண்ட அத்துணை இளைஞர்களின் மனநிலையில் இருந்து என் எழுத்தால் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கிறேன்]


எத்திசையும் சுற்றித் தெரியும் காற்றே!நான் எண்ணியதையெல்லாம் புசித்துக் கொள்ளும் பூக்களே!நாளும் என் மேனி தீண்டிடும் மரஞ் செடி கொடிகளே! வீழும் நட்சத்திரங்களே!சூரிய சந்திரர்களே!காதல் தூதுக்கு தவம் கிடக்கும் இயற்கை சக்திகளே!என் இதயத்தின் ரகசியப் பக்கங்களை முன் திறக்கிறேன்.அவளுக்கு அவசரமாய் ஓர் செய்தி சொல்ல வேண்டும்.இயந்திர உலகத்தில் என் இதயத்தில் ஓரத்தில் உள்ள ஈரம் காயும் முன் அச்சேதியை உங்கள் மூலம் அவள

மேலும்

saravana prakash - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2017 1:22 pm

அவளின் ஒரே ஒரு புன்னகையில்
எத்தனை பேரரசுகள் வீழ்ந்திருக்கும்
அவளை கைது செய்யுங்கள்....!

இமைகளின் வழியினால் என்னுள் ஊடுருவி
என் மனதினை கொள்ளையடித்த திருடி
அவளை கைது செய்யுங்கள்..!

தன் வெகுளித்தனத்தால் என் எண்ணங்களுக்கு
இடையே போர் மூட்டி என் அமைதிக்கு பங்கம் விளைவித்தவள்
அவளை கைது செய்யுங்கள்..!

எரிமலையாய் தவித்த என் இதயத்தை
உரியவன் அனுமதி இன்றியே,அன்பால் அணைத்தாள்
அவளை கைது செய்யுங்கள்...!

அவ்வபோது என்னுள் எழும் ஏக்கங்களை
அண்ணார்ந்து பார்க்காமலேயே கொலைசெய்துவிட்டால்
அவளை கைது செய்யுங்கள்..!

தேவதை ஒருத்தி பூமிக்கு வந்து
சாதா மனுஷி என பொய்வேஷம் போடுகிறாள்
அவ

மேலும்

saravana prakash - saravana prakash அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Apr-2017 4:37 pm

இப்போதாவது ஓய்வு கிடைத்ததே
என்று ஏக்கப் பெருமூச்சுவிட்டன
இரண்டு கைபேசிகள்
இரு வேறு திசைகளில்....

ஒரு காதல் கவிஞன் ஒளிந்தான்
என்று முகநூலும்
ஒரு காதல் கிறுக்கி ஒழிந்தாள்
என்று டிவீட்டரும்
சந்தோஷித்தன.....

இனி சுகமாக தூங்கலாம்
யாரும் நம்மை சீக்கரம் எழுப்பமாட்டார்கள்
இது அந்த தேநீர் கடையின்
ஏழாம் எண் மேஜையின்
கூக்குரல்.....

அடடா!இனி நம்மை யார்
எழுப்பிவிடுவார்கள்?
இது சூரிய சந்திரரின்
கவலை....

அவர்கள் இனி வரமாட்டார்களோ?
என ஏக்கப்பட்டது பூங்கா.....

இரவு நேர தூது
இனி இல்லை என
சுகமாய் இருந்தது
பூங்காற்று....

நாங்கள் அப்போவே சொன்னோமே
என்று அங்கலாய்த

மேலும்

நன்றிகள் பல.நேரம் இருந்தால் என் கட்டுரைகளை படிக்கவும்.. 28-Apr-2017 4:34 pm
மிக மிக அருமை ,,, வாசிப்பில் கரைகிறது உள்ளம் ,,,, 28-Apr-2017 4:31 pm
நன்றி 28-Apr-2017 12:03 pm
அருமை நண்பா 28-Apr-2017 11:56 am
saravana prakash - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2017 9:57 am

நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்.உமா என்ற ஆசிரியரை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஹிந்தி ஆசிரியர் எல்லோரும் அவரை உமாஜி என்று அழைப்போம்.அருமையாக ஹிந்தி சொல்லி தருவார்.அதனாலே எனக்கு ஹிந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது.

ஒருநாள் வகுப்பிற்கு வந்தார்.அன்று என்ன பாடம் எடுக்க போகிறார் என்று எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம்.உமாஜி இன்று பாடம் எதுவும் எடுக்கப்போவதில்லை என்றும் முக்கியமான அறிவுரைகள் வழங்க போவதாகவும் சொன்னார்கள்.எங்களுள் சிலர் செவிகளை கூர்மையாக்கி கொண்டோம்.பலர் இமைகள் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தனர்.

அன்று அவர் குமுளி(bubble gum) எடுத்து கொள்வதால் என்னென்ன தீமைகள் இருக்கிறது.அது உடலிற்கு எ

மேலும்

saravana prakash - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2017 9:30 am

மதிற்பிற்குரிய ஆசிரியப் பெருமக்களுக்கு,

உங்களால் பேரறிவோடு விளங்கும் ஒருவன்,நீங்கள் ஒளியேற்றி வைத்த அனல் விளக்கான ஒருவன் மிகுந்த மரியாதையோடும்,பரந்து விரிந்த மனதோடும் மாணவ சமுதாயத்தின் பிரதிநிதியாய் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நாளைய இந்தியாவின் எதிர்காலம் எங்களது கைகளில்,ஆனால் எங்களது எதிர்காலம் உங்களுடைய காலடியில் இருக்கிறது.

வாழும் தெய்வங்களே!எங்கள் முன்னேற்றத்திற்கு ஏணிப்படிகளாய் இருப்பவர்களே,உங்கள் கரங்களை படிகளாக்கி அல்லவா நாங்கள் மேலுயர்ந்தோம்.இந்த சமுதாயத்தில் உன்னிப்பாக கவனிக்க படவேண்டியவர்கள் நீங்கள்!நிர்வாணத்தை மறைக்க நெசவு நெய்ந்த தொழிலாளர்களுக்கு இந்த சமுதாயம்

மேலும்

Uthayasakee அளித்த படைப்பில் (public) nithyasree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-May-2017 8:41 pm

............எழுத மறந்த கவிதை அவன்.......

நான் கொண்ட மௌனத்திற்கு
புது மொழிகள் தந்தவன் அவன்

விழிகள் கேட்ட கேள்விகளுக்கு
உதட்டால் விடைகள் சொன்னவன்
அவன்...

என் மனவானிலே எட்டாம்
வானவில்லை வரைந்தவன்
அவன்...

என் வெட்கம் சொல்லிய
பாசைகளுக்கு பார்வைகளை
பாணங்களாய் வீசியவன் அவன்..

எனக்குள்ளே மாயங்கள் செய்து
என் இருதயத்தின் மாற்றங்களை
உணரச் செய்தவன் அவன்...

காதலை பதிலாய்த் தந்து
காலங்களை இடைவெளியாய்
விட்டுச் சென்றவன் அவன்...

வெற்றிடங்களில் வண்ணம் சேர்த்து
உள்ளத்தின் வெறுமைகளுக்கு
தன் உறவென்னும் முகவரியைத்
தந்து சென்றவன் அவன்...

கனவுகளில் கவிதைகள் சொல்லி
என் இரவுகளைக

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்....இனிய நன்றிகள் தோழி! 23-May-2017 9:05 pm
நீண்ட காலத்தின் பின் தங்கள் கருத்தினைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயா...மனமார்ந்த நன்றிகள்! 23-May-2017 9:04 pm
மிக அருமை...! வாழ்த்துக்கள் தோழி..! 23-May-2017 12:18 am
காதல் வலி அருமையான கவிதையாய் சகியின் படைப்பில். 22-May-2017 11:27 pm
saravana prakash - saravana prakash அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2017 5:24 pm

நொடி பொழுதும்
இரு மனங்கள் பிரியாத
காதல் இது !

பெற்றோரும்,உற்றோரும்,மற்றோரும்
சேர்த்து வைக்கும்
காதல் இது!

அஃறிணை காதல் என்றாலும்
அகிலத்தை ஆளும்
காதல் இது!

கண்ணாடி பார்க்கும் நேரத்திலும்
கழிவறை நேரத்திலும் விட்டு விலகாத
விசித்திர காதல் இது..!

முப்பொழுதும் கரங்களுக்கு
நாட்டியம் சொல்லித்தரும்
கவலையில்ல காதல் இது..!

அவளுள் அவன் தன்னையே
தொலைத்து கொண்டும் வாழும்
காதல் இது..!

அவனுக்காக அவள்
இமைப்பொழுதும் தூங்காத
உன்னத காதல் இது..!

அவளால் அவன் செவிகளுக்கு
100 முத்தங்கள், தினம் கொடுக்கும்
முத்தான காதல் இது..!

உறவுகளை மறந்து போய்
உலகம் அவளென புரி

மேலும்

நன்றிகள்... 19-May-2017 12:17 pm
அருமை.... 19-May-2017 9:25 am
saravana prakash - saravana prakash அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-May-2017 8:13 pm

என்றாவது கொலை செய்வதைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?நெஞ்சம் படபடக்காமல்,கைகள் தளர்ந்து போகாமல் கத்தியின்றி,ரத்தமின்றி ஒரு கொலை செய்யும் கலையை உங்களுக்கு சொல்லித்தரப்போகிறேன்.

தினம் தினம் கண்ணனுக்கு தெரிந்த மனிதர்கள் பலரை கொலை செய்ய வேண்டும் என உங்கள் மனம் குழம்பி இருக்கலாம்.உங்களோடு வாழ்கின்ற கண்ணனுக்கு தெரியாத ஒருவனை நீங்கள் கொலை செய்ய வேண்டும்.

அதிசயம் என்னவென்றால் இந்த செயலுக்கு சட்ட அத்தியாயங்களில் தண்டனைகள் குறிப்பிடவில்லை,மாறாக உலகம் உங்களுக்கு பூமாலை சூடலாம்.அந்த "ஒருவனை" அறிந்துகொள்ள வேண்டுமெனில் என் கடைசி வரிகளுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்.

மனிதா!நீ எச்சில் செய்த தே

மேலும்

saravana prakash - saravana prakash அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Apr-2017 9:29 am

ஆண்களின் சபிக்கப்பட்ட வாழ்வாக இருக்கும்.மாயை உலகாக இருக்கும்!
காற்று வெளிநடப்பு செய்யும்!மழை மறுபரிசீலனை செய்ய மறுக்கும்!நிலா நிலைத்திட மறக்கும்!பூமி பந்து வெறுமை ஆகும்!

பெண் என்பவள் உலகத்தின் எட்டாம் அதிசயம்.அவள் சொற்கள் கல்லுக்குள் இருக்கும் ஈரத்தையும் ஊற்றெடுக்க செய்யும்.

மனித உடல் 45 யூனிட் வரை வலிகளை தாங்கும்.அனால் பிரசவ காலத்தில் ஒரு பெண் 57 யூனிட் வரை வலிகளை தாங்கி மரணத்தின் கால்கள் தொட்டு புது உயிரை இந்த பூமிக்கு தருகிறாள்.

ஒவ்வொரு பெண்ணும் ஒரு படைப்பாளி.பெண்ணுக்கு அடையாளம் தாய்மை மட்டுமல்ல!
தன் வாழ்க்கையில் சொல்லமுடியாத துயரங்கள் சந்திப்பவள்.1 வயதில் வாழ்வு சாவா? என்ற நிலைய

மேலும்

உண்மை தான் ....நன்றிகள். 03-May-2017 8:55 pm
நன்றிகள் பல தோழி... 03-May-2017 8:55 pm
மிக சிறப்பான படைப்பு சகோ...மிக அருமை...பெண்மையின் உண்மையை உணர்த்தியது மிக அழகு.. வாழ்த்துக்கள். 03-May-2017 4:10 pm
சென்ற வாரத்தின் சிறந்த கதை : போற்றதற்குரிய பெண்ணியம் மேலாண்மைக் கருத்துக்கள் கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான். “நாம்பெற்றிருக்கின்ற வாழ்விற்கும், அந்த வாழ்வைத் தகுதியுள்ளதாக அமைத்துத் தந்ததற்கும், நாம் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்று பொவீ என்னும் அறிஞர் மொழிந்துள்ளார். இதனையேதான் நமது மகாகவி பாரதியாரும் “பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்.” என்று முழுமையாகப் பாடிச் சென்றார். எனவே பெண்ணின் பெருமையை உணர்வோம். புவி பேணி வளர்த்திட அவள் புகழ் பாடுவோம். 03-May-2017 2:48 pm
saravana prakash - saravana prakash அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2017 12:18 pm

என்னை மன்னித்து விடுங்கள்.உங்களை பற்றி உங்களுக்கு தெரியாத சிலவற்றை நான் பட்டியல் போட்டுவைத்திருக்கிறேன்,அவை உங்களை சற்று முகம் சுளிக்கவைக்கலாம்.

"வேளைக்கு சோறு இல்லை,நாளைய சோற்றுக்கு வேலை இல்லை" என்ற புலம்பும் சாதாரண இந்திய பிரஜையின் மனநிலையில் இருந்துதான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

"டீ யா இது!இதெல்லாம் மனுஷன் குடிப்பான,நீயெல்லாம் எப்போ மாறப் போறானே தெரியல!" என்று காலையில் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம் இரவில்அரசியல்வாதிகள் பங்கேற்கும் தொலைக்காட்சி
விவாதங்களை பார்த்துவிட்டு "இந்த நாடு எப்போ மாறப்போதோ !" என்ற ஏக்கத்தோடு முடிகிறது ஒவ்வொ

மேலும்

நன்றி ஐயா.. 03-May-2017 1:07 pm
என் பலநாள் உள்ளகுமுறல் உங்கள் எழுத்து வடிவில் !!!!! 03-May-2017 12:59 pm
saravana prakash - saravana prakash அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2017 11:56 am

// பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என ! //


[வாழ்க்கையின் மையப்பகுதியில் இருக்கும் வாலிபன் ஒருவன் தன எதிர்கால வாழ்க்கைத்துணைக்கு எழுதும் ஓர் கற்பனை கடிதம்]

வருத்தங்களையும்,மகிழ்ச்சிகளையும் சமஅளவில் சுமந்து கொண்டு இந்த கடிதம் உன்னை வந்தடையலாம்.எல்லோரும் நிகழ்கால புள்ளியில் இருந்து இறந்தகாலத்தை திரும்பி பார்ப்பார்கள்.நான் இருக்கும் காலத்தை எட்டி பார்க்கிறேன்!

என்னவளே!எங்கிருக்கிறாய்?எப்படி இருக்கிறாய்?மரத்தில் இருந்து தினம் உதிரும் பூக்கள் மாதிரி அன்பே உன்னை பற்றி நான் கொண்ட நம்பிக்கையும் தினம் தினம் உதிர்கிறது..!

வறுமை,வெறுமை,தனிமை இவற்றால் நான் சூழப்பட்டிரு

மேலும்

போற்றுதற்குரிய காதல் வாழ்வியல் மேலாண்மைக் கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் கற்பனைக்கு கடிதங்கள் காதல்:-- மலரும் நினைவுகள் --வாழ்த்துக்கள் 27-Apr-2017 7:02 pm
நன்றி தோழமையே... 27-Apr-2017 2:52 pm
வாழ்க்கையின் இணைவுக்காய் காதலெனும் போர்க்களத்தில் விழிகளின் தலைமையில் உள்ளங்கள் சண்டையிடுகிறது ஒவ்வொரு மனிதனுக்கும் இதயம் என்ற ஒன்றை இறைவன் கொடுத்தது அன்பினை மாசற்றதாக பரிமாறிக் கொள்ளத்தான் ..ஆனால் பலர் இதனை தவற விட்டு விடுகின்றனர் ஆனாலும் சிலர் அதனை புனிதமாக கையாள்கின்றனர் அழகான காதலின் நினைவுகளை சேகரித்து படைப்பினை எழுதி உள்ளீர் வாழ்த்துக்கள் 27-Apr-2017 12:13 pm
மிக்க நன்றி..... 27-Apr-2017 11:55 am
மேலும்...
கருத்துகள்
மேலே