Selvamuthu Profile - செல்வமுத்து M சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வமுத்து M
இடம்:  கோலார் தங்கவயல்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2015
பார்த்தவர்கள்:  397
புள்ளி:  173

என்னைப் பற்றி...

தமிழ் கவிதைகள் படிப்பதிலும் படைப்பதிலும் எனக்கு மிகுந்த ஆர்வம் நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் பயணங்கள் எனக்கு பிடித்த விஷயம், தனிமை , இயற்கை எழில், பாட்டுக்கேட்பது மற்றும் சதுரங்கம் எனது பொழுதுபோக்கு...

என் படைப்புகள்
selvamuthu செய்திகள்
selvamuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2017 10:32 am

பெற்றோர்கள்
சொன்ன வார்த்தைகளை
கேட்க அன்று எட்டி கசப்பு
படித்து படித்து
சொன்னார்களே
அவைகள் அன்று
வெறுப்பை கூட்டின...

எதை இழந்தாலும்
பெற்றுவிடலாம்
காலத்தை பெறமுடியாது
காலம் பொன் போன்றது
என்றெல்லாம் சொன்னார்களே
கேட்டதா இந்த பாழும் மனசு...

சரிவர படித்திருந்தால்
காலத்தை பயன்
படுத்தியிருந்தால்
இன்று
ஏன் இத்தனை துன்பம்
ஏன் இத்தனை பற்றாக்குறை
ஏன் இத்தனை வலிகள்
ஏன் இத்தனை கவலைகள்...

இதை தலை எழுத்து
என்று சமாதானம் ஆவது
மூடத்தனம்
நம் தலை எழுத்தை எழதிக்கொள்வது
நாம் தானே தவிர
ஆண்டவன் அல்ல...

புரிந்தது விட்டதா
வீனடித்த காலம்
இப்போ எப்படி வேட்டு வைத்ததென்று

மேலும்

selvamuthu - karuvadu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 10:46 pm

என் காதல் மாறாதடி!

அழகினை கண்டு காமம் கொண்டு கானல் நீராய் போவதல்லடி என் காதல்!

அன்பை கண்டு காதல் கொண்டு வாழ்நாள் வரை கூட வருவதே என் காதல்!

காட்சிகள் மாறலாம் தோற்றங்கள் மாறலாம்
என் மேல் நீ கொண்ட காதல் கூட மாறலாம்
ஆனால் உன் மேல் நான் கொண்ட காதல் மாறாதடி!

கல்லில் வடித்த உருவமும் காலத்தால் சிதையலாம்
என்னவளே என்னில் வடித்த உன் உருவம்
மறையாதடி என் மரணம் வரை ......

ஏனெனில் உன்னை வடித்ததோ என் எண்ணத்தில் இல்லயடி
.................... என் இதயத்திலடி!

மேலும்

நன்றி தோழரே 22-Feb-2017 9:58 pm
அருமையான சிந்தை..... 22-Feb-2017 7:56 pm
selvamuthu - paavib அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2017 9:57 pm

Los Angeles - 20 th century fox தலைமையகம் , எந்நேரமும் portfolio வைத்துக்கொண்டு நடிக்க ஆசைப்படும் தேவதைகள் நிரம்பிய இடம் , அதில் எனது பிரிவில், ஒரு பனிச்சிற்பம் அலுவலகம் வந்து போகும் . அப்பா வைத்த பெயர் நுழையாததால் நாம வைத்த பெயர் "முத்தழகு " . ரத்த நிற கூந்தல் ,பால் நிறம் , சிறிய முகம் , முகத்தில் குழந்தை , உடம்பில் குமரி . அவளை தூரத்தில் இருந்து முன்னால் பார்க்கும் போது , காளை மாட்டின் திமில் ,ஏவுகணைகளை தாங்கி செல்லும் விமானம் , , பின்னால் பார்க்கும் போது Mickel angelo வின் உலகத்தை பற்றிய கண்டுபிடிப்பு , , என எண்ணங்கள் கலந்து கட்டி கூத்தாடும் .

வெள்ளிகிழமை ,ஓர் சுபமுகூர்த்த வேளை, முத்தழக

மேலும்

நன்றிங்க !!!! 22-Feb-2017 9:47 pm
அருமை... 22-Feb-2017 7:54 pm
selvamuthu - selvamuthu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2017 4:00 am

சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
அவள் கொஞ்சும்
மழலை மொழியிலே
முத்தம் ஒன்னு கேட்பாள்...

நீல வண்ண
கண்ணனைப்போல்
குறும்பு பல செய்வாள்
நித்தம் எந்தன்
மடியில் அமர்ந்து
குட்டி கதை கேட்பாள்...

முயல்கதை யானைகதை
பூனைகதை புலிகதை
ஆர்வத்துடன் கேட்பாள்
குட்டி கதை முடியுமுன்பே
தூங்கி என் மடியில் சாய்வாள்

அவள் பிஞ்சுபாதம் என்
நெஞ்சில் பட்டால்
என் கவலைகள் தீரும்
அவள் வஞ்சிக்கொடியாய்
வளற என் இதயம்
இறைவனிடம் வரம் கோரும்

என் பொழுதுகள் அவளாலே
அர்த்தமாகின்றன
அவளின் முகம் பார்த்தே
என் பசி அனைத்தும் தீருகின்றன
இறைவா உனக்கு கோடி
நன்றிகள் என் வாழ்வில்
இந்த சின்னவளை இணைத்ததிற்காக

மேலும்

தங்களின் கருத்துக்கு மகவும் நன்றி ஐயா.. 22-Feb-2017 8:45 am
போற்றுத்ற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் 22-Feb-2017 5:15 am
selvamuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 4:00 am

சின்ன சின்ன பாப்பா
சிங்கார பாப்பா
அவள் கொஞ்சும்
மழலை மொழியிலே
முத்தம் ஒன்னு கேட்பாள்...

நீல வண்ண
கண்ணனைப்போல்
குறும்பு பல செய்வாள்
நித்தம் எந்தன்
மடியில் அமர்ந்து
குட்டி கதை கேட்பாள்...

முயல்கதை யானைகதை
பூனைகதை புலிகதை
ஆர்வத்துடன் கேட்பாள்
குட்டி கதை முடியுமுன்பே
தூங்கி என் மடியில் சாய்வாள்

அவள் பிஞ்சுபாதம் என்
நெஞ்சில் பட்டால்
என் கவலைகள் தீரும்
அவள் வஞ்சிக்கொடியாய்
வளற என் இதயம்
இறைவனிடம் வரம் கோரும்

என் பொழுதுகள் அவளாலே
அர்த்தமாகின்றன
அவளின் முகம் பார்த்தே
என் பசி அனைத்தும் தீருகின்றன
இறைவா உனக்கு கோடி
நன்றிகள் என் வாழ்வில்
இந்த சின்னவளை இணைத்ததிற்காக

மேலும்

தங்களின் கருத்துக்கு மகவும் நன்றி ஐயா.. 22-Feb-2017 8:45 am
போற்றுத்ற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் 22-Feb-2017 5:15 am
selvamuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 12:06 am

உன்னை கானாத கண்கள்
முகத்தில் இரண்டு புண்கள்
உன்னை நினைக்காத நெஞ்சு
வெடித்து சிதறும் இலவம் பஞ்சு
உன் கூந்தலேறி உதிர்ந்த பூக்கள்
தேவலோக அர்ச்சனை பூக்கள்
கோடைகாலத்து சாரல் உன் பார்வை
பதினெட்டு வயதை போர்த்திய
மழலைப்பருவம் உன் உள்ளம்....

மேலும்

selvamuthu - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 9:09 am

இயற்கை உபாதையை அடக்க
முடியாத இரு ஜீவன்களின் இன்பத்தில் பிறந்தது ஒரு துன்பம்
--- அனாதை குழந்தை

தன் வயிற்று பசியை போக்க
அடுத்தவனின் உடல்பசிக்கு
கனத்த இதயத்தோடு உணவாகுபவள்...
--- விலைமாது

ஆயிரம் அறிவுகளை உள்ளடக்கி
தன்னிடம் பழகுபவரை எல்லாம்
மேதையாக்கும் ஒரு உன்னத நண்பன்
--- புத்தகம்

மேலும்

selvamuthu - srimahi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2017 10:16 pm

எந்தன் விழியோரம்
தேக்கிவைத்த
ஓராயிரம் கவிதைகளை
வாசிக்க - உன் விழி தேவையடி
இந்த ஒருதலைக்காதலனுக்கு ...

காதல் கடலில் மூழ்கி
தத்தளிக்கும் என்னை
உந்தன் ஒரு வார்த்தை
கரை சேர்த்துவிடாதா???

என்னை உரசி உரசியே
உயிர் கொடுக்கும் உந்தன்
ஓரப்பார்வையை கணக்கெடுக்காமல்
பத்திரபடுத்தும்
என் இதயத்தின் துடிப்பே
நீதானடி ...

உன் கூந்தலிலிருந்து
தற்கொலை செய்யும்
ஓர் முடியும்,
காதோடு கதை பேசி ஓய்ந்து போன
ஒற்றை ரோஜாவும்
எந்தன் புதையல் சேமிப்பை
நீட்டிக்கொண்டே போவதை
நீ அறிவாயா???

என் காதல் உலகில்,
பகலில் தெரியும்
நட்சத்திரமெல்லாம்
என்னை பார்த்து கண்ணடிக்க,
இரவில் உதிக்கும்

மேலும்

நன்றி!!! 21-Feb-2017 2:36 pm
கவிதையில் * 21-Feb-2017 12:05 pm
உன் பின்னாடியே நடைபழகி ஓய்வில்லாத என் பாதங்கள் மீண்டும் மீண்டும் உன் வீட்டு வாசலிலே கோலமிடுகிறதே... அருமையான வரிகள் அற்புதமான படைப்பு ஒருதலை காதலின் வலியும் ஏக்கமும் காவிதியில் தெரிகிறது வாழ்த்துக்கள் தொடருங்கள் 21-Feb-2017 12:04 pm
நன்றி!!! 20-Feb-2017 10:44 pm
selvamuthu - selvamuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Feb-2017 2:59 am

இந்த பூலோகம்
தேவலோகமாகிறது
இவள் இங்கே
வாசம் செய்வதால்
பூக்களெல்லாம்
மாநாடு நடத்துகிறது
இவளை தங்களின்
தலைவியாக அங்கீகரிக்க...

இவள் தேர்தலில்
போட்டியிட்டால் இவளுக்கு
முன்மொழியவும்
வழிமொழியவும்
கிளிகளும் மயில்களும் போட்டிபோட்டு வரிசையில் காத்துக்கிடக்கும்

எல்லோரும் நதியில்
குளித்தால் புனிதமாகிறார்கள்
இவள் மட்டும் நதியில் குளித்தால்
நதி புனிதமாகிறது...

இவள் சூட்டியிருக்கும் பூக்களுக்கே
இவளை சூடிக்கொள்ள ஆசை...

இவளின் நகங்களுக்கு
வண்ணம் பூச
வானவில் தரையில் தோன்ற ஆசைப்படுது...

இவள் கடற்கரையை தன்
பார்வையால் மோதினால் போதும்
கடல் முழுக்க அழகு படலம் உர

மேலும்

Thanks for your comments my Friend... 07-Feb-2017 10:17 pm
கவி மிக அருமை நண்பரே 07-Feb-2017 9:45 pm
கருத்துக்கு மிகவும் நன்றி தோழமையே.... 07-Feb-2017 8:25 pm
சிறப்பான நடை சகோ 07-Feb-2017 7:10 pm
selvamuthu - selvamuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2017 10:45 am

முகத்தை மூடி
உன் கண்களை காட்டி
என் இதயத்தில் காதல் தீயைமூட்டி
எனை வாட்டி வதைக்கும் அழகே...
மலர்ந்த ரோஜா போன்ற உன்
முக தரிசனத்தை காட்டிவிடு
இல்லையேல் உன் இதயத்தில்
எனை பூட்டிவிடு...

மேலும்

மிகவும் நன்றி நன்பரே... இவ்வையகத்தில் அன்புக்கு அனைத்தும் அடிமையாகி இதயத்தில் சிறைபட்டுபோகிறது.. 31-Jan-2017 6:56 am
ஆயுள் சிறையை எதிர்பார்க்கிறது காதல் மனம் 31-Jan-2017 12:39 am
தேன் கவிதை 30-Jan-2017 6:26 pm
Thanks Boss for your comments... 30-Jan-2017 5:26 pm
selvamuthu - selvamuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jan-2017 10:00 am

அள்ள அள்ள குறையாத
இன்பச்சுரங்கமடி நீ
பூலோகத்தில் தோன்றிய
அழகு தேவதையடி நீ
ஆயிரம் நிலவொளியின்
பிரகாசத்தை உன் ஒருத்தியின்
முகத்தில் கண்டேனடி நான்...
அழகென்ற சொல்லுக்கு நீ
அதை அராதிக்கவே நான்...

வானவில்லுக்கு வண்ணம்
உன் ஆடையிலிருந்து தந்தாயோ
மின்னலுக்கு ஒளி
உன் கண்ணிலிருந்து தந்தாயோ
கார்மேகத்துக்கு கருமை
உன் கார்குழலிலிருந்து தந்தாயோ
பூமிக்கு பசுமை உன் பார்வையிலிருந்து தந்தாயோ
அழகென்ற சொல்லுக்கு நீ
அதை அராதிக்கவே நான்...

நதிக்கு நெளிவு உன் நளினத்திலிருந்து தந்தாயோ
நீருக்கு தெளிவு உன்
சிந்தையிலிருந்து தந்தாயோ
பசும்பாலுக்கு வெண்மை
உன் மனதிலிருந்து தந்தாயோ
தேனுக்கு சுவை

மேலும்

selvamuthu - selvamuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2016 9:20 pm

தென்றல் தீண்டா கற்பூரபொம்மை...
விரல் மீட்டா வீணை...

வண்ணம் தொலைத்த வானவில்...
தண்ணீரில் அழும் மீன்....

சிப்பிக்குள் முடங்கிய கங்கை...
வண்டு மொய்க்கா வெள்ளைரோஜா...

பூஜையற்ற துளசிமாடம்...
புன்னகை இழந்த தங்கப்பதுமை...

சமுதாயத்தில் எத்தனையோ ஏற்றம்
ஆனால் இன்னும் உனக்கில்லை மாற்றம்....

என் இரு விழிகளும் ஓடையாகிறது
உந்தன் கோலத்தை கண்டு....

மேலும்

அருமை ! வெற்றிபெற வாழ்த்துக்கள் 27-Aug-2016 1:24 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

Sureshraja J

Sureshraja J

சென்னை
Sri Loganathan

Sri Loganathan

திருப்பத்தூர்,வேலூர்
Anuthamizhsuya

Anuthamizhsuya

தூத்துக்குடி
user photo

GuGu

சாத்தனுர்

இவர் பின்தொடர்பவர்கள் (23)

sivram

sivram

salem
gangaimani

gangaimani

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (23)

J K Balaji

J K Balaji

அவனியாபுரம்,மதுரை
AUDITOR SELVAMANI

AUDITOR SELVAMANI

கோவை

பிரபலமான விளையாட்டுகள்

மேலே