selvi sivaraman - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  selvi sivaraman
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  29-Aug-2016
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  72

என் படைப்புகள்
selvi sivaraman செய்திகள்
selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 5:30 pm

"மாடா உழைச்சு ஓடா தேய்ந்தவன்" என்பது நம் நாட்டுப் பழமொழி. மனிதனுக்கு உழைத்துச் சாவதற்காகவே பிறந்தவை மாடுகள். ஓய்வெடுக்க முடியாமல், ஓட ஓட விரட்டப்பட்டு, வண்டி இழுத்து, பட்டினியால் உடல் வற்றி, தன் முகத்தையே பார்க்கும் கன்றுக்குகூட பால் கொடுக்க முடியாமல், குடம் கணக்கில் நமக்குப் பால் கொடுக்கும், உழைக்க மட்டுமே பிறந்த பாவப்பட்ட, பரிதாபமான உயிரிகள் நம் மாடுகள்.

செயற்கை வாழ்க்கைக்குள் மனிதன் புகுந்த பிறகுதான் மாடுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. இயற்கையோடு இயைந்து, நோய் நொடியில்லாமல் வாழ்ந்த காலத்தில் தன்னைக் காத்துக் கொள்வதைவிட, தன் இயற்கைச் செல்வங்களை, கால் நடைகளை, மரம் வளர்ப்பபை, நிலத்தடி

மேலும்

selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 5:22 pm

🌺ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

🌺 "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு
அவனுடையது தான். .

🌺"அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை
கொடுத்து வாங்க பலரும் தயாராக
இருந்தனர். ஆனால் இவன்
விற்கவில்லை.

🌺 "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே
எரிந்துகொண்டிருந்தது.

🌺"ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார்கள். தீ
முழுவதுமாக பரவிவிட்டதால் அதை
அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று
எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .

🌺வணிகனோ செய்வதறியாமல் கண்ணில்
நீரோடு புலம்பிக

மேலும்

selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 12:04 pm

♥அழகான இளம்பெண்ணுக்கு தொழிலதிபர் சொன்ன பதில்!

♥-பூஜா என்ற ஒரு அழகான இளம்பெண், ”பணக்கார ஆண்மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்” என்று இணையதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

♥மேலும், இது குறித்து பூஜா கூறியதாவது, ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் ஆண்மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்றார்.

♥இந்த பதிவை பார்த்த தொழிலதிபர் ஒருவர் அப்பெண்ணிற்கு பதில் அளித்து கூறியதாவது,

“உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத்துடன் உலாவி வருகிறார்க

மேலும்

selvi sivaraman - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2017 11:50 am

காமம் கசந்த வயதினுளும்
காதல் இனித்து வாழ்வதே
வாழ்க்கை.....

உண்மை காதலை யாரும் மறைக்க முடியாது..
தன்னிச்சையாக தும்மல் போல் வெளிப்பட்டு விடும்...

இனித்து வாழ்ந்த இளமை போகும்
ஓடியாடி இருந்த காலம் போகும்

உடனிருந்த அனைத்தும் போனாலும்
உண்மையான அன்பே உயிருள்ளவரை
உயிரோடு_வாழும்...

மேலும்

தங்களின் ஊக்கத்திற்கு நன்றிகள் பல தோழரே... 24-Mar-2017 9:50 am
மறுப்பில்லா வசந்தங்கள் இனிமையான வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Mar-2017 12:21 am
selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2017 4:59 pm

அப்பான்னு நினைச்சேன்...!
அசிங்கமாய் தொட்டான்.....!

சகோதரன்னு பழகினேன்....!
சங்கடமாய் தொட்டான்........!

மாமான்னு பேசினேன்......!
மட்டமாய் நடந்தான்.....!

உறவுகள் அனைத்தும்
உறவாடவே
அழைக்கின்றன.....!

பாதுகாப்பை தேடி
பள்ளிக்கு சென்றேன்...!

ஆசிரியனும்
அரவணைத்து
மறுக்காதே மதிப்பெண்
குறையும் என்றான்....!

நட்புக்கரமொன்று நண்பனாய்
தலைகோதி தூங்கென்றான்....!

மரத்த மனம்
மருண்டு சுருண்டு
தூங்கையில் கைப்பேசியில்
படமெடுத்தான்
அவனும் ஆண்தானே...!

கதறி அழுது கடவுளிடம்
சென்றேன்
ஆறுதலாய்
தொட்டு தடவி
ஆண்டவன்
துணையென்றான்
பூசாரியான்....!

அலறி ஓடுகிறேன்
எங்கே போவேன்?

மேலும்

தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே.. 21-Mar-2017 10:27 am
கண்ணீர் சிந்தும் வலிகள் இந்த உலகில் எத்தனை வன்மங்கள் பெண்ணின் உயிரை களவாடுகின்றது மனம் நோகும் உண்மைகள் எண்ணற்றவை கண்டும் உள்ளங்கள் திருந்தவில்லை என்பதே அழிவின் தொடக்கம் 20-Mar-2017 11:51 pm
selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2017 11:45 am

ஆதவனும் ஆசைப்படுவான்
நம் காதல் காண......!!!

முழுமதியும் மழை பொழியும்
நாம் வளம் காண......!!!

மேலும்

நன்றி தோழரே.. 21-Mar-2017 10:27 am
அழகான உள்ளங்களில் மடியில் நினைவுகளும் சிறைப்படுகிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 10:28 pm
selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2017 12:03 pm

விலகி போனாய்
நெருங்கி வந்தேன் !!!

வெறுத்து போனாய்
விரட்டி வந்தேன் !!!

இனி நிச்சயம்
வற்புறுத்த மாட்டேன் !!!

உன்னை மட்டும் அல்ல
உன் நிழலையும் !!!

மேலும்

உங்கள் வாழ்த்துக்களால் மனம் மகிழ்கிறேன் .. நன்றி தோழரே... 21-Mar-2017 10:26 am
சில விதிகளில் பாதையில் பல நியதிகள் மறைந்து போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 10:35 pm
selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Mar-2017 2:03 pm

நீ
படிக்க
மனமின்றி
ஒதுக்க,

உன் வீட்டு
குப்பத்தொட்டியில்
குடியிருக்கிறது
என்
கவிதை....!

நீ
மார்போடு
அரவணைத்து
அழகுபார்த்த
துணிகளெல்லாம்,
என்வீட்டு
அலமாரியில்.....

ஆக
கற்று
கொண்டிருக்கிறேன்,

கவிதை
எழுதுவதை
நிறுத்திவிட்டு
புடவைநெய்ய......

நீ
படித்துவிட்டு
கிழித்துபோடும்
கவிதையைவிட,

உடுத்திவிட்டு
அவிழ்த்துபோடும்
புடவை
எவ்வளவோ
மேல்....!!!

மேலும்

இனிமையான கவிதை.அருமையான வரிகள். 21-Mar-2017 1:29 pm
நன்றிகள் பல தங்கள் ஊக்கத்திற்கும் ஆக்கத்திற்கும்... 21-Mar-2017 10:25 am
அழகான பகிர்வு 20-Mar-2017 11:17 pm
selvi sivaraman - selvi sivaraman அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Mar-2017 11:45 am

ஆதவனும் ஆசைப்படுவான்
நம் காதல் காண......!!!

முழுமதியும் மழை பொழியும்
நாம் வளம் காண......!!!

மேலும்

நன்றி தோழரே.. 21-Mar-2017 10:27 am
அழகான உள்ளங்களில் மடியில் நினைவுகளும் சிறைப்படுகிறது..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 10:28 pm
selvi sivaraman - pugazhvizhi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2017 6:08 pm

தன்னை தன்னுள்
புதைத்து
தன்னவனை தனக்குள்
இணைத்து
தன்னுயிரை தன்னில்
சுமந்து
தனக்கென என்றும்
வாழாது
தன்னினம் காக்க
போரிடுவாளே !

மேலும்

நன்றி நண்பரே 08-Mar-2017 7:39 pm
அழகிய வரிகள் நச் என்றிருக்கிறது 08-Mar-2017 6:57 pm
selvi sivaraman - Mohamed Sarfan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2017 8:18 am

மனதில் பதிந்த
கனவுகளை
அழிக்கின்றேன்

பூக்கள் பூக்கும்
நினைவுகளை
பறிக்கின்றேன்

கடலில் நீந்தும்
மீன்களோடு
அழுகின்றேன்

எந்தன் சுவாசம்
முகவரியின்றி
அலைகின்றது

பாலை வனத்தில்
குடிசை போட்டு
உறங்குகின்றேன்

உலகத்து நதிகள்
என் கண்ணீரை
விலை பேசியது

மனதின் வலிகள்
இன்று பூமழையாக
புவியில் விழுகிறது

மேலும்

மிகவும் அருமை....வாழ்த்துகள் ஸர்பான்! 23-Mar-2017 5:18 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 03-Mar-2017 7:46 am
நல்ல இருக்கு உங்களுடைய கவிதை மேலும் எழுத வாழ்த்துக்கள் 01-Mar-2017 7:47 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 01-Mar-2017 6:57 pm
selvi sivaraman - selvamuthu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2017 9:34 am

வாழ்க்கையே
ஒரு போராட்டம்
உரிமைகளுக்காக
தண்ணீருக்காக
நல் கட்டமைப்பு வசதிக்காக
வேலைவாய்ப்புக்காக
உயர்கல்விக்காக
இட ஒதுக்கீட்டுக்காக
தனியார் மயமாக்குதலை
எதிர்த்து போராட்டம்
உழவர்களின் வாழ்வாதார
போராட்டம்
உணவுக்காக உண்ணாவிரத
போராட்டம்
மனிதன் பிறந்திதலிருந்து
இறக்கும் வரை ஏன்
இறந்தபின்பும் கல்லரைக்காக
போராட்டம்
சுதந்திர நாட்டில்
தினம் தினம் எத்தனை போராட்டம்...

அடிமை சங்கிலியை
ஒடைத்தெறிக்க அன்று
ஆங்கிலேயரிடம் போராட்டம்
கொத்தடிமையை ஒடைத்தெறிக்க
இன்று முதலாளிகளிடம் போராட்டம்
எல்லை பங்கீட்டில்
வெளிநாட்டு போராட்டம்
நதி பங்கீட்டில்
உள்நாட்டு போராட்டம்
என்று தனியும்

மேலும்

தங்களின் கருத்தை படிப்பதற்கே எனக்கு மிகவும் மகிழ்ச்சி... 28-Feb-2017 3:53 pm
உண்மைதான்..அப்படி போராடுவதால் தான் பூமியில் சிலர் மூன்று வேலை கையேந்தாமல் பசியை விரட்டுகின்றனர் 28-Feb-2017 10:18 am
மேலும்...
கருத்துகள்
மேலே