sethuramalingam u - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  sethuramalingam u
இடம்:  vickramasingapuram
பிறந்த தேதி :  16-Nov-1968
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-May-2011
பார்த்தவர்கள்:  919
புள்ளி:  415

என்னைப் பற்றி...

அன்புக்கு நான் அடிமை ......வேறொன்றும் கூறுவதற்கில்லை
Natpukga sethu_ram66@yahoo.com

என் படைப்புகள்
sethuramalingam u செய்திகள்
sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jan-2017 12:58 pm

இனிமையான கரும்பு போல
தித்திக்கும் தேனை போல
திகட்டும் சர்க்கரை பொங்கலுடன்
வேகமும் விவேகமும்
தூய்மையும் உழைப்பும்
நமக்கு கிடைத்திடவும்
பொங்கட்டும் புதுபொங்கல் !

உழவு செய்து
விதை விதைத்து
வியர்வை சிந்தி
தன் நோய் பாராமல்
பயிர் நோய்க்கு மருந்திட்டு
தனி மனிதன்
ஒவ்வொருக்கும் உணவளித்து
உள்ளம் மகிழ செய்யும்
உழவரை போற்றுவோம் !

பனியில்லா
"தை" யில்
பணமில்லா
பரிவர்தனையுடன்
பனைஓலையின்றி
பாசமெனும் பாலையிட்டு
பாயச பொங்கலிட்டு
வரவேற்போம் .

"தை" மங்கையை !

என்றும் அன்புடன்
உ.சேது

மேலும்

sethuramalingam u - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2017 5:33 pm

#உண்மையே உன் விலை என்ன..?

முழு பூசணிக்காய் சோற்றுக்குள்
என்றதெல்லாம் சங்க காலம்
முழு பூசணிக்காய்
சோற்று பருக்கைக்குள்
நம்பித்தான் ஆக வேண்டும்
கலிகாலத்தில்....!

உண்மையை குப்பிக்குள் அடைத்துவிட்டு
பொய் காற்றில் ஒத்து ஊதல்
ஏகாந்தமாயிருக்கிறது
சாதகமானவர்களுக்கு
இனிக்கத்தான் செய்கிறது
அரசியல் பந்திகளில்..!

நேரத்திற்கேற்ப பசப்பு மொழிகள்
காரியம் நிறைவேற
உண்மையின் கண் கட்டப்படுகிறது
சில நேரங்களில்..!
புதைக்கப்படுகிறது
பல நேரங்களில்..!

சாட்சியமற்றுப்போவதற்கு
விலை நிர்ணயங்கள்
பலவாறான உண்மைகளுக்கு
பட்டியலிட்டு...!

அரிச்சந்திரர்களுக்கு
உண்மையின் விலை
அறிந

மேலும்

மிக்க நன்றி சகோ..! நான் நலம். தாங்கள் நலமா..? 10-Jan-2017 5:33 pm
மிக்க நன்றி சகோ..! 10-Jan-2017 5:32 pm
சரியா சொன்னேங்க ....... எப்படி இருக்கீங்க சாந்தி ......நலமா ...... 10-Jan-2017 11:28 am
உண்மை உரக்கச் சொல்லப் பட்டது. 08-Jan-2017 6:48 pm
sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 1:34 pm

எழுத்து நண்பர்கள் , சகோதர , சகோதிரிகள் அனைவருக்கும் என்
இனிய "புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "

பணமில்லா பரிவர்தனையுடன்
பாசமெனும் பாலையிட்டு
பாயச பொங்கலிட்டு வரவேற்போம்
"தை" மங்கையை !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
உ.சேது

மேலும்

sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Dec-2016 2:18 pm

ஒரு ஊரிலிருந்து மற்ற ஊருக்கு , பேங்க் மற்றும் டி.என். பி.எஸ். சி . தேர்வு எழுத செல்பவர்கள் தாங்கள் தேர்வு எழுத செல்லும் கல்லூரியின் பெயர் , அதன் இடம் அது எங்கு இருக்கிறது , நாம் சென்று அடைய வேண்டிய இடத்தின் தூரத்தை முந்தைய நாளில் முடிவு செய்வது நல்லது , மேலும் ஹால் டிஃக்கெட் , ஐ.டி சான்றிதழ் போன்றவற்றை முந்தைய நாளில் எடுத்து வைத்தால் குறித்த நேரத்தில் , குறித்த இடத்திற்கு சென்று நிம்மதியாக தேர்வு எழுத வழிவகுக்கும் ....தற்பொழுது நடந்த போஸ்ட்மேன் தேர்வு எழுத வந்த மாணவிகள் எழுத முடியாமல் சென்றுவிட்ட சூழ்நிலையால் இதை உங்களிடம் பகிர்கிறேன் ....

என்றும் அன்புடன் ..
உ.சேது

மேலும்

பயனுள்ள தகவல் பகிர்வு 20-Dec-2016 9:15 am
sethuramalingam u - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2016 4:48 pm

நீ
யார் நீ
அன்பு தாய் நீ
அன்பு தங்கை நீ
அன்னமிட்ட கை நீ
ஆதிபராசக்தி நீ
அன்னை வேளாங்கன்னி நீ
முகராசி நீ
முத்துச்சிப்பி நீ
மூன்றெழுத்து நீ (அம்மா )
குமரி பெண் நீ
குமரி தோட்டம் நீ
கன்னித்தாய் நீ
தனிப்பிறவி நீ
தங்கக்கோபுரம் நீ
எங்கள் தங்கம் நீ
நம்நாட்டு மணிமகுடம் நீ
நதியைத் தேடித்தந்த கடல் நீ
ஒருதாய் மக்கள் நீ
ஒளி விளக்கு நீ
குடியிருந்த கோயில் நீ (மக்கள் மனதில்)
அன்று கண்ட முகம் நீ
நீரும் நெருப்போடும் கலந்தாய் நீ
உன்னை சுற்றும் உலகம் இனி
"தெய்வ மகள்" நீ

என்றும் அன்புடன்
உ. சேதுராமலிங்கம்

மேலும்

C. SHANTHI அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2016 9:56 pm

நோட்டுக்கு வேட்டு

நாட்டுக்குள்ள வீட்டுக்குள்ள பெட்டிக்குள்ள
காந்தியோட கணக்குலதான் கள்ளப்பணம்
கட்டுக்கட்டா தூங்க வெச்சி அழகு பாத்த
பம்மாத்து காரருக்கு பதமா வேட்டு..!

ஊரையடிச்சி ஒலையிலதான் போட்டு போட்டு
சேர்த்த பணம் அத்தனைக்கும் வந்தது வேட்டு
மாரடிச்சி அழறாங்க மறைவா நின்னு
உழைக்காம சேர்த்த பணம் உதவாதுன்னு..!

காந்தி மட்டும் சிரிச்சாரு நோட்டுக்குள்ளே
நோட்டுந்தானே சிரிக்குதிப்போ நாட்டுக்குள்ளே
பேரிச்சை கொண்டுதான் சேர்த்த பணமும்
பேரிச்சை பழத்தையும் காணல அதுவும்..!

ரோடுன்னும் பாலமின்னும் ஒப்பந்தம் போட்டு
ரொக்கமா "அடிச்சாங்க" காந்தி நோட்டு
அக்கம் பக்கம் அறியாம சேர்த்த சொத்து

மேலும்

மிக்க நன்றி சகோ.. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..! 06-Jan-2017 4:45 pm
மிக்க நன்றி ப்ரியா. தாமதமான பதிலுக்கு என் வருத்தங்கள்..! 06-Jan-2017 4:45 pm
மிக்க நன்றி சகோதரரே. தாமதமான பதிலுக்கு வருத்தங்கள். 06-Jan-2017 4:44 pm
அருமை .........சாந்தி மோடியின் முடிவு சரிதான் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர் .. பண முதலைகள்தான் ஏற்றுக்கொள்ளவில்லை ...... 09-Dec-2016 12:35 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Nov-2016 2:57 pm

காலம் விசித்திரமான கற்பனையில் ...
பிறப்பிலே எவன் கண்டான் சாதியினை
ஆராய்ந்துக் கூறியதுண்டா ஆதாம் ஏவாளை
இச்சாதி இம்மதமென இயம்பிடவும் இயலுமா
கற்பனையில் மிதக்கிறது கருத்துக்கள் இங்கே !

விழிகளில் தெரிகிறதே
சாதிவெறி எரிகிறதே !
அறிவுள்ள அறிவிலியும்
அறைகூவல் விடுவதேனோ !
இருவேடத்தால் இருநிலையும்
இதயத்தில் கொள்வதேனோ !

மதிகெட்டு வணங்குகிறார் முழுமதியை
மதியுள்ளவன் கால்பதித்து ஆய்கிறான் !
சாதிமதமென வேற்றுமை காண்போர்
சந்திரமண்டலம் சென்றும் பிரிந்திடுவார்
சாதிக்கொரு கட்சியும் தொடங்கிடுவார் !

மதம்பிடித்து அலைகிறார் மதமென்று
பித்தர்களாய் பிதற்றுகிறார் பிரிவென்று !
சுகம்கா

மேலும்

மிக்க நன்றி கணபதி 21-Nov-2016 6:39 am
மிக்க நன்றி வினோத் 21-Nov-2016 6:38 am
சாதிகள் ஒழியவேண்டும். வரிகள் அருமை, வாழ்த்துக்கள். 20-Nov-2016 3:14 pm
மனதில் மனிதம் விதைக்கும் கவிதை 20-Nov-2016 9:41 am
sethuramalingam u - யாழ்மொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jul-2016 2:08 pm

விடியல் காணாத
என் உலகில்
அஸ்தமனங்க நிரந்தரம்...

ஆடைகளின்
அத்தியாவசியம் அறிந்ததுதான்
என்
அன்றாட நிர்வாணம்...

என்
அட்சயக்குடங்கள்
அமுதம்தர மறுத்ததில்லை
இங்கு;
புறமெய்திட நேர்ந்தாலும்
பிழையில்லை...

ஆண்மை தூரிகையால்
என் பெண்மைக்குள்
புனையப்பட்ட ஓவியங்களில்
இதுகாறும் எவரும்
"வர்ணங்கள்" பிரயோகிக்கவில்லை...

என்
சாதி கூறும் அந்தரங்கத்தில்
சுகங்களன்றி சூளுரைகள்
தொடுக்கப்பட்டதில்லை...

என்னை தாசி என்பது
இவர்களின் வழக்கம்
உண்மையில் சமத்துவம்
என்னில் மட்டுமே அடக்கம்....

மேலும்

நிஜம் .....அருமை .....டா எப்படி இருக்குற .....நலமா என்றும் அன்புடன் அண்ணா 20-Oct-2016 1:54 pm
உண்மைதான்..தூ சான பார்வையில் தூய்மையும் அழுக்காகத்தான் தெரிகிறது 26-Jul-2016 8:41 am
அருமை! துளிகள் ஒவ்வொன்றும் அருமை! வாழ்த்துக்கள் ... 25-Jul-2016 4:05 pm
sethuramalingam u - C. SHANTHI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2016 6:26 pm

#ஆதலினால் கன்னம் சிவந்தது..!

கல்லூரி செல்லும் அவளை
கைதட்டி வழி நிறுத்த
வழி தெரியா பேர்வழி
வழி கேட்பதாய் எண்ணி
வஞ்சி நிமிர்ந்த அந்நொடியில்
காற்றினிலே பறக்க விட்ட
முத்தமவளை தொடும் முன்னே
அவன் கன்னத்திலே
இறக்கிவைத்தாள்
காரிகையும் ஓர் அறையை..!

சிவந்த கன்னம் பருக்கும் முன்னே
இடமகன்றான் அவமானமுடன்
நடுவழி முத்தமெல்லாம்
அவன் காடு செல்லும் வரை
மறந்திருப்பான் இனியவனும்
மதித்திருப்பான் பெண்ணினமும்..!

மேலும்

மிக்க நன்றி கீர்த்தனா...! 18-Nov-2016 10:27 pm
அருமையான படைப்பு அம்மா ... 04-Nov-2016 11:40 pm
மிக்க நன்றி ப்ரியா..! 01-Nov-2016 5:24 pm
மிக்க நன்றி சகோ..! 01-Nov-2016 5:23 pm
Kalaracikan Kanna அளித்த படைப்பை (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
15-Dec-2015 6:56 am

என் நீண்ட இரவுக்கு
வழித்துணையாய் வா
நடு வானில் இருக்கிறது நிலா.

நீ என் அருகில் இருந்தால்போதும்
சொர்க்கத்தின் மீதும் கல் எறிவேன்.

உன் கையில் களிமண்ணாய் நானிருந்தபோது
என் வடிவங்களை நீயே தீர்மானித்தாய்.

உன்னை மீண்டும் மீண்டும் நெய்து
நான் கிழிந்துபோகிறேன்.

என் கண்ணீர் பருகி வளரும்
பூச்செடி நீ.

உன் பருவத்தில் பூக்களை விதைத்தவன்
என் பார்வையில் முட்களை விதைத்திருக்கிறான்.

உன் விழிமெழுகில் விழத்துடிக்கும்
விட்டில் நான்.

எச்சரிக்கை ஏதுமில்லா பல வளைவுகள் கொண்ட சாலை நீ விழிகளால் பயணித்து விபத்தானவன் நான்.

உன் மார்பில் ஒளிரும் மச்சத்தைவிடவா
பொன்வானில் நிலா ஒளிரப்போகிறது

மேலும்

நன்றி மா 20-Jan-2016 8:06 am
நன்றி நண்பா 20-Jan-2016 8:06 am
அருமை. வாழ்த்துக்கள் ! 18-Jan-2016 1:32 pm
நீ என் வாழ்வில் வருவாயென, நான் இந்த உலகில் வாழ வந்தேன் என சொல்லாமல் சொல்கிறதோ கவிதை அழகிய சொல்லாடல்களுடன் ! 18-Jan-2016 12:35 am
sethuramalingam u - nagarani madhanagopal அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Nov-2015 1:28 pm

நண்பர் சந்தோஷ் குமார் சென்னைத் தமிழ் அகராதியை
வெளியிட்டார். இது என் குழந்தைகளின் பிரத்யேக மழலை அகராதி..பாட்டா- பேண்ட்கலர் வா வா - பௌர்ணமி நிலவுமுண்டு ஃபிரி – மிளகுபான்ஃபிரி – எருக்கு இலைகொட்டம் பட்ட நுண்டு – கட்டம் போட்ட துண்டு.மாயா, காஞ்ச்சு - பேய், பூச்சாண்டிசின்ன பிரஷ் மவம் – பனை மரம்பெய்ய பிரஷ் மவம் – தென்னை மரம்ஹேர் டைல் மவம் – ஆலமரம்ஜூமேசர்- பென்சிலை அழிக்கும் ரப்பர்மிஸ்கி – மிக்ஸிபடவர் - பவுடர்செப்பட்டர்- செப்டம்பர்எளனி மக்கு – கொட்டாங்குச்சிகம்பர் – கம்யூட்டர்அப்ப பப்ப பப பபபை – அப் அபௌ த வேல்ட் சோ ஹை...
(ரைம்ஸ்)சட்ட தீம்பி பாக்குது – சட்டை உள் பக்கம் போட வேண்டியது
வெளிப்பக்கமாக இருக்கிறது..வீடு தேஞ்சிடுச்சா? – வீட்டுக்கு வர்ற வழி தெரிஞ்சிடுச்சா?அச்சவழாய நம - அருணாச்சலேஸ்வராய நமஹ.சுப்பிக் கொடு – குழம்புக்காயை வாயிலிட்டு உறிஞ்சி,
காரமில்லாமல் கொடுகுப்பை – குட் பாய் 

மேலும்

நமக்குப் புரியாவிட்டாலும், அந்த மழலைப் பேச்சுகளுக்கு கோடி கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் இணை எதுவுமாகாது. இதைப் பதிவுசெய்த என் அன்புத்தோழரின் குழந்தை மனதுக்கும், பதிவிற்குக் காரணமான அந்த அன்னைக்கும், அவரது குழந்தைக்கும் நன்றிகள் பற்பல. 18-Nov-2015 8:01 pm
ஹா ஹா.. மழலை அகராதி.. ரசனை. ரசனை.. ரசித்தேன். நான் சென்னை அகராதி வெளியிடவில்லை. தோழர் பிரபாவதி வீரமுத்துவின் பதிவை பகிர்ந்தேன். அவ்வளவே 18-Nov-2015 2:06 pm
sethuramalingam u - Geeths அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2015 11:37 am

பாப்பாவின் பண்புகள் - சிறுவர் தின கவிதை


பாப்பாவின் பண்புகள்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (64)

Sureshraja J

Sureshraja J

சென்னை
user photo

k VIGNESH

தாயகம்
user photo

sakkaraivasan

தி.வா.கோவில்,திருச்சி
Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்

இவர் பின்தொடர்பவர்கள் (65)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
மணிகண்டன்

மணிகண்டன்

ஆய்க்குடி - தென்காசி
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (64)

snekamudan sneka

snekamudan sneka

எப்போதும் உங்கள் இதயம்

பிரபலமான எண்ணங்கள்

மேலே