Sivram Profile - சிவராமகிருட்டிணன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவராமகிருட்டிணன்
இடம்:  salem
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2011
பார்த்தவர்கள்:  193
புள்ளி:  231

என்னைப் பற்றி...

கணிதவியல் ஆராய்ச்சி மாணவர்.

என் படைப்புகள்
sivram செய்திகள்
sivram - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 9:56 am

அவள் எப்படிநடந்தாலும்
என்னுடன் எப்படியோ பேசிவிடும்
அவள் கால் கொலுசுகள்கூட இப்பொழுது
அவள் கடந்துசெல்லும்போது பேசுவதில்லை…

அந்த கொலுசுகள் எந்தன் தோழியென்று
அறிந்தவுடன் கழட்டி எறிந்துவிட்டாளா?
இல்லை அந்தகொலுசுகள் இசை நான்
கேட்காதவாறு இருக்க நடக்கப் பழகிவிட்டாளா?

இல்லை அந்த கொலுசுகளுள்ளும்
என்மீதான வெறுப்பைத் திணித்துவிட்டாளா?
என்தோழியல்லவா அவள் கால் கொலுசு
அவள் திணித்திருந்தாலும் நம்பியிராள்..

இவ்வகையான குழப்பத்தில் எண்ணங்களை
ஓடவிட்டுக்கொண்டிருக்கிறேன்…
என்றோ நான் கேட்ட என்தோழியான
கொலுசுகளின் இசையை நினைவுபடுத்தியவாறு…

மேலும்

sivram - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Feb-2017 9:49 am

பார்வையெனும் தூண்டிலால்
நெஞ்சத்தைத் தூண்டிவிடும்
மைபூசிய கயல்களின் கதிர்கள்
இயல்பாகவே கிடைக்கட்டுமென்று
முடிவு செய்திருந்தவன்.

திட்டமிட்டே செல்கிறேன்
அவள் வரும் இடங்களில்
அவள் வரும் காலங்களில்
எவ்வளவோ ஆசையுடன்
என்னுள் முரண்பட்டவனாய்.

ஏதோ ஒரு இடைவெளியில்
அந்த கயல்களைக் காணநேர்ந்து
அதன் கதிர்கள் முட்டும்முன்னே
என்பார்வைகளைத் தடம்மாற்றி
தவிர்த்துவிட்டு வந்தேன்…
என்னுள் முரண்பட்டவனாய்...

மேலும்

sivram - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2017 9:49 am

அவள் முன்னே வரும்போது
பார்க்கத் துணிவில்லாமல் தவறவிட்டுவிட்டு
என் பின்னே இருக்கும்போது
வேண்டினேன் தெய்வத்திடம்
" எனக்கு பின்னாலும் கண்களைக்கொடு...
அது யாரும் அறியாவகையில் வைத்துக்கொடு..." என்று.
தெய்வத்தின் பதிலாய்க் கேட்டது
"அவளைப் பார்க்கத் தவிர்த்த போதே
இருந்தும் பயனில்லாத குருட்டுக்
கண்களைப் பிடுங்கி இருக்க வேண்டும்" என்று.
என்று பிடுங்குவான் என்று
அவள் நினைவுடன் காத்திருக்கும் நான்...

மேலும்

sivram - sivram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2017 8:05 pm

எனது எவ்வைகயான துன்பங்களையும்
துடைத்தெறியும் ஆற்றல் கொண்டது
அவளிதழில் அரும்பி என்நெஞ்சத்தில்
குடிகொள்ளும் அவள்புன்னகை.

இப்பொழுதோ! நானொரு துன்பத்தில்.
தீர்த்து வைக்க வருவாளா? எனது
துன்பம் என்னவோ அந்த புன்னகையை
சிலநாள் காணவில்லை என்பதே.

காத்திருக்கிறேன் அவளின் கால்கொலுசின்
ஓசையது என்காதுகளில் விழுந்து
என்நெஞ்சத்தின் துன்பத்தை தனது
புன்னகையால் துடைத்தெறிவாளென்று.

மேலும்

புன்னகையில் சோகத்தை குழந்தை மட்டுமல்ல காதலியும் நீக்கக் கூடும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2017 8:44 am
sivram - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2017 4:21 pm

என்னைச் சுற்றியுள்ள
முள்மரக் காட்டில் படர்ந்து
ஒப்பனைத்து அழகாக்கிய
வானின் வெண்பனியே!

அறிவாயா நீ!
நெறிஞ்சி முள்போன்ற என்
நெஞ்சத்திலும் படர்ந்து
இன்பம் பயக்கும் பெண்பனியை.

வேப்பமரக் குயில்கூவிய
இசையில் இணைந்துவந்து
என் செவிப்பறையை
செழிப்பாக்கிய வெண்பனியே!

அறிவாயா நீ!
குரலில் இனிமைகலந்து
என் நெஞ்சத்தையும் இதமாக்கி
இசைத்துவிட்ட மென்பனியை…

நீ எனைவிட்டுப் பிரியும்
வெயில் காலம் வந்துவிட்டது.
உன்னிடம் விடைகொடுத்து அனுப்புகிறேன்!
எப்படியும் மீண்டும் வந்துவிடுவாய்.

என்னால் உறுதியாய்ச் சொல்ல இயலாது.
நீ மீண்டும் எனைச் சந்திக்க வரும் வேளையில்
உன்குளிருடன் என்னை நனைத்துச்ச

மேலும்

karthika su அளித்த போட்டியில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்

பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்

திமிர் பிடித்த பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மௌனமாக இருக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

அழகான பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

முறைக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

புடவை கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

தாவணி கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

சுடிதார் கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மேலும்

போட்டியின் முடிவு எப்பொழுது வெளியாகும்? 21-Feb-2017 11:22 pm
போட்டியின் முடிவிற்காக காத்திருக்கிறோம் 20-Feb-2017 12:06 pm
போட்டியின் முடிவுகள் இன்னும் அறிவிக்கவில்லை. முதல் பரிசு பெற்றவர்கள் மற்றும் அவர்கள் கவிதை??? 15-Feb-2017 8:27 am
சிறந்த தலைப்பை தந்து எங்கள் திறமைக்கு தூண்டுகோல் அளித்தமைக்கு நன்றி ... 03-Feb-2017 10:57 pm
sivram அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2017 7:16 pm

தீண்டிவிட எண்ணும்போது முள்
குத்திவிட்டது என்பதற்காக
ரசிக்காமல் இருந்துவிடுவேனா?
இப்பொழுது தொலைவில் நான்.
வேண்டுமானால் என் கண்களைக்
குத்தட்டும் இதழ்களால்...

மேலும்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2017 8:53 am
கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சி தோழியே... 08-Feb-2017 9:47 pm
அழகு ! அழகு ! 08-Feb-2017 9:46 pm
sivram - sivram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2017 10:02 pm

யாருடைய கூந்தலுக்கோ
ஒப்பனையாக மலர்ந்த மலருக்கு
ஒப்பனையாய் நாளை மலரப்போகும்
ஓர் மொட்டு...

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழியே... 06-Feb-2017 4:31 pm
அழகு ! 06-Feb-2017 4:25 pm
sivram - sivram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2017 9:03 pm

புன்னகையில் போர்ப்புரியும் விண்நகையாளே!
கண்களிலே இயல்கமழும் கயல்விழியாளே!

கன்னங்களைக் கிள்ளத்தோன்றும் பனிமலராளே!
தீண்டிவிட எண்ணவைக்கும் நனிஇதழாளே!

குரல்களிலே நனைத்துவிடும் மென்பனியாளே!
கொலுசுகளால் வருடிவிடும் இன்னிசையாளே!

மையினிலே மசியவைக்கும் இமையழகாளே!
மையினையே தோற்கவைக்கும் கார்குழலாளே!

நட்டுவைத்த மலர்ச் செடியின் நறுமுகையாளே!
கசந்துவிடும் காலங்களில் தேன்மலராளே!

இமைகளிலே பேசிவிடும் யாழ்மொழியாளே! - என்
இரவுகளை இன்பமாக்கும் இயல்மொழியாளே!

கண்டவுடன் கலந்துவிடும் கதிரொளியாளே! -என்
இருண்டுவிட்ட தனிமையிலே நிலவொளியாளே!

நினைவுகளில் நிறைந்துவிட்ட வெண்முகிலாளே! - நான

மேலும்

sivram - sivram அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2017 10:47 pm

இலைகளைத் தொட்டால்
சுருங்கும் தொட்டாஞ்சிணுங்கிபோல்
பார்வைகளால தொட்டவுடன்
இமைச் சுருங்கிப்போகும்
தலைத் திரும்பியே…

நான் என்ன
தீண்டத்தகாதவனா பார்வைகளால்…
திரும்பிய தலையும் மூடிய இமைகளும்
இயல்பு திரும்பும்வரை காத்திருக்கிறேன்
கண்களால் உன்னை மீண்டும் தீண்ட.

நாள்தொறும் இது தொடர்ந்தாலும்
எனக்கு சளைத்துவிடவில்லை. இந்த
தொடுதல் சுருங்குதல் விளையாட்டு.
உனக்கும் அப்படியே என்று நம்புகிறேன்!

மேலும்

நன்றி நண்பரே... மகிழ்ச்சி... 01-Feb-2017 8:10 am
நன்றி நண்பரே... மகிழ்ச்சி... 01-Feb-2017 8:09 am
அருமை 01-Feb-2017 1:21 am
sivram - sivram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2017 10:04 pm

கடல் அலைபோல் நீ...
என்னைத் தொடத் துணிந்து
தோற்றுப்போகிறாய் என்று
நினைத்துக்கொண்டு- நீ
தொடமுடியாத தொலைவில்
நின்றுகொண்டிருக்கும் நான்...

நீ தொட முயற்சித்திருக்கமாட்டாய்...
இருந்தாலும் என்னைத் தேற்றிக்கொள்கிறேன்
கண்களால் தொட முயற்ச்சித்து
என்னைப்போல தோற்றிருப்பாய் என்று...

நீ அலை போல்
என் பின் அலைந்திருக்க - நான்
கண்களைத் திருப்பிக்கொண்டு
காதுகளைக் கூர்மையாக்கிக்கொண்டேன்.
அலை எழுப்பும் அழகிய இசையைப்போல்
உன் கொலுசுகள் கொஞ்சும்
ஒலியை என் நெஞ்சத்தில்
இன்னிசையையாய் பதிய வைக்க...

உன் கண்கள் ஏமாற்றினாலும் - நான்
காணாத உன் கால்களின் கவிகளாய்
என்னுடன் பேசிவிட்டுச் செ

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே... 31-Jan-2017 8:19 am
அடடா.. அழகிய தேவதையை ராகம் மீட்டச் செய்கிறது இதமான கொலுசின் ராகம் 31-Jan-2017 12:54 am
sivram - sivram அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2017 9:51 pm

யாருமில்லா இருள் நிறைந்த
பாதையில் தனிமையில் பயணிக்க

செல்லும் வழியில் அங்கங்கே
ஒளிக்கு வைக்கப்பட்ட விளக்குகளாய்
அவள் அவள் முகம் தெரிய

அந்த விளக்கின் வெளிச்சத்தைச்
சுற்றித்திரியும் சிறு பூச்சிகளாய்
என் நினைவுகளும் உணர்வுகளும்…

பூச்சிகள் என்னதான்
விளக்கையேச் சுற்றித்திரிந்தாலும்
அந்த விளக்கு படைப்பட்டது
அந்த பூச்சிகளுக்காக இல்லையே…

அந்தபூச்சிகள் தொட முயற்ச்சித்து
விளக்கில் முட்டிமோதி வீழ்ந்தாலும்
அந்த விளக்கு காத்துக்கொண்டுதான்
இருக்கும் அதன் ஒளியை
யாருக்குக்கொடுப்பதென்ற சிந்தனையில்...

அது புரிந்தும் புன்னகைத்துக்கொண்டே
நடந்து சென்றேன் அந்த தனிமைப்பாதையில்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (30)

vendraan

vendraan

யாதும் ஊரே
PERUVAI PARTHASARATHI

PERUVAI PARTHASARATHI

கலைஞர் நகர், சென்னை-78
Balasubramani Murthy

Balasubramani Murthy

பெங்களூரு
SELVAMSWAMYA

SELVAMSWAMYA

திருவண்ணாமலை
anushadevi994

anushadevi994

செங்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (33)

vendraan

vendraan

யாதும் ஊரே
நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (30)

anbudan shri

anbudan shri

srilanka
நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
Mohamed Sarfan

Mohamed Sarfan

ஓட்டமாவடி-03 இலங்கை
மேலே