Srimahi Profile - ஸ்ரீ தேவி சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீ தேவி
இடம்:  சென்னை. Tamilnadu
பிறந்த தேதி :  07-Jul-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-May-2014
பார்த்தவர்கள்:  215
புள்ளி:  123

என்னைப் பற்றி...

என் கவிதையில் காதல் மொழி இணைத்திருக்கும் ஆனால் நான் காதலில் இணைந்ததுஇல்லை......கனவுகளுக்கு பின்னால் ஓடுகிறேன்...இலக்கை எட்டிவிடுவேன் என்ற நம்பிக்கையில் ☺😊

என் படைப்புகள்
srimahi செய்திகள்
srimahi - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 8:59 pm

நான் விழித்துக் கொண்டேன்,
முழித்துக்கொண்டேன்
இந்த உலகத்தைப் பார்த்து ...

இது ஒரு ஏழைப்பெண்ணின் புதைக்கப்பட்ட உயிரின் எழுத்துகள்,
என் வலிகளை வரிகளாக தொடுக்கின்றேன்...

எழுத கற்றுக்கொள்கின்றேன்
எனக்கான முதல் கவிதையை,
எனக்கே எனக்கென்று துணை எழுத்து மட்டுமே!
எனக்கான சரியான இணை எழுதுக்கோள் என்று உலகமும் சொல்லட்டுமே!!!

அந்த வானவீட்டு நட்சத்திர ஓட்டைகளுக்கு சவால் விட்டு வென்றுவிட்டது
என் ஓட்டு குடுசையின் துளைகள்...

ஓய்வெடுக்கும் வயதில் ஓயாமல் ஓட்டம்பிடிக்கும் அப்பா!!!
வலிகளையும், வேதனைகளையும் முந்தானைக்குள் முடிந்து வைக்கும் அம்மா!!!
பயமுறுத்தும் பருவத்தின் பிடியில் படிக்கும் த

மேலும்

srimahi - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2017 2:52 pm

உன் விழியசைவில்
துடிக்கிறதடி
என் இதயம்...
வெயிலில் கூட உருகாமலிருந்த என்னை
உன் நுனி விரல் தீண்ட
மொத்தமாய் கரைந்துபோனேனடி...
விலகிநடக்கும் நிழலாக
அல்லாமல்
நிஜமாக என்னில் புதைந்துபோக
நீ வேண்டுமடி,
கேள்விக்குறியான
கனவாக அல்லாமல்
என் இரு கண்ணாக
நீ வேண்டுமடி...
உன்னை தேடிதேடி நான் தொலைந்தாலும் என்னிலே
ஒளிந்து கொள்ள நீ வேண்டுமடி...
உன் இதழ் முத்தத்தை மட்டும்
என் கன்னத்துக்கு பிச்சைப்போடு உயிரைக்கூட
உயில் எழுதுகிறேன்
உன் பெயரில்!!!

#ஸ்ரீதேவி#

மேலும்

srimahi - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2017 11:51 pm

என் விழிகளை அவள் வரும் பாதையிலே புதைத்துவிட்டு தவமிருந்தேன்...
பார்த்திருந்தேன்...
எதிர்பார்த்திருந்தேன்...

ஒருமுறை...வரவில்லை...
இன்னொரு முறை...இன்னும் வரவில்லை...
இன்னும் ஒருமுறைதான் பாரேன் என்று தந்தியடித்து கெஞ்சிய கண்களுக்காக,
மீண்டும் தலையை உயர்த்தினேன்...

என் காதல் தேரானது என்னவளை சுமந்துக்கொண்ட கர்வத்தில் தோள்களை சாய்த்துக்கொண்டு வந்தது...நின்றது...

நொடிப்பொழுதில் அலசி ஆராய்ந்து புரட்டிப்போட்டேன் பேருந்தை என்னவள் வாசம் செய்கிறாளா??? என்பதை உறுதி செய்ய...

இருந்தாள்...

பேருந்தின் கடைசி இடத்தில்
என்னிதயத்தின் முதல் பக்கத்தில்...

நிலவான வட்ட முகத்தில்,
நட்சத்தி

மேலும்

srimahi - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2017 9:42 pm

ஆண்: உனக்கு தெரியுமா???
பெண்: உனக்கும் தெரியுமா???

ஆ : அன்பே! உன்னால் தான்
நான் கவிஞனாய் திரிகிறேன் என்று உனக்கு தெரியுமா???
பெ : கண்ணே! கவிஞனுக்கு முன்னால் அவன் என் காதலன் என்று உனக்கு தெரியுமா???

ஆ : சூரியனும்கூட கண்கள் கூசிபோவான் உன்னை பார்த்த பின்பு என்று உனக்கு தெரியுமா???
பெ : ஓய்வெடுக்க அந்த சூரியனை வீட்டுக்கு அனுப்பி, உன் பார்வை ஒளிவீச்சிலே எந்தன் நாட்களை கரைப்பேன் என்று
உனக்கு தெரியுமா???

ஆ : ஒட்டிப்போயிருந்த என்
காலி கண்ணங்கள் உப்பிபோய் நிரம்பி வழிய செய்வது உன் முத்தங்கள் என்று
உனக்கு தெரியுமா???
பெ : முட்களுக்கும் சவால்விடும் உன் முள் தோட்ட தாடியில் எந்தன் இதழ்

மேலும்

srimahi - srimahi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2017 10:57 pm

சிலையை செதுக்கும்
சிற்பியெல்லாம்
தோற்றுப்போவார்
உன்னை பார்த்து
அணுஅணுவாய்
செதுக்கும்
என் கண்களின் முன்னால்!!!

மேலும்

நன்றி!!! உங்கள் பொன்னான நேரத்தை என் கவிதை வாசிப்பில் கரைத்ததுக்கு... 17-Mar-2017 2:52 pm
அட அருமை.. 17-Mar-2017 8:44 am
srimahi - srimahi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2017 9:21 pm

எட்டாத தூரத்திலிருக்கும்
அந்த வானத்தையே
எட்டிபிடித்து...
மேக மெத்தையில் கனவுகளை இழுத்துபோர்த்தி உறங்குகையில் பெண்ணானவள்
கற்பனைகளுக்கு உயிருட்டுகிறாள்!!!

மனக்கோட்டை கட்டி வாழும் பெண்களின் உள்ளங்களில் பெரும்பாலும்
வருங்கால கனவனையே கற்பனையால் செதுக்கி செதுக்கி சித்திரமாக்கி நெஞ்சோரத்தில் பதுக்கி வைக்கிறாள்...

அவைகள்...

தூங்குகையில் முன் நெற்றியில் நடனமாடும் ஒற்றை முடியை காதோரம் சொருகி தினமும் போதுமான அளவு
என்னை ரசிக்க வேண்டும்...

தாமதமாகி எழுந்த குற்றவுணர்வில் நான் பரபரக்க
'ஒருநாள் நான் எழுப்பினால் உலகம் நின்றுவிடாது'
என அன்பால் அதட்டி காப்பியை என் முன் நீட்ட வேண்டும்..

மேலும்

நன்றி!!! உங்கள் பொன்னான நேரத்தை என் கவிதை வாசிப்பில் கரைத்ததற்கு... 18-Mar-2017 10:31 am
காதலின் வேதம் உள்ளங்களை ஆள்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Mar-2017 8:19 am
நன்றி!!! உங்கள் பொன்னான நேரத்தை என் கவிதை வாசிப்பில் கரைத்ததற்கு... 17-Mar-2017 2:54 pm
அருமை 17-Mar-2017 10:14 am
srimahi - srimahi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Feb-2017 10:16 pm

எந்தன் விழியோரம்
தேக்கிவைத்த
ஓராயிரம் கவிதைகளை
வாசிக்க - உன் விழி தேவையடி
இந்த ஒருதலைக்காதலனுக்கு ...

காதல் கடலில் மூழ்கி
தத்தளிக்கும் என்னை
உந்தன் ஒரு வார்த்தை
கரை சேர்த்துவிடாதா???

என்னை உரசி உரசியே
உயிர் கொடுக்கும் உந்தன்
ஓரப்பார்வையை கணக்கெடுக்காமல்
பத்திரபடுத்தும்
என் இதயத்தின் துடிப்பே
நீதானடி ...

உன் கூந்தலிலிருந்து
தற்கொலை செய்யும்
ஓர் முடியும்,
காதோடு கதை பேசி ஓய்ந்து போன
ஒற்றை ரோஜாவும்
எந்தன் புதையல் சேமிப்பை
நீட்டிக்கொண்டே போவதை
நீ அறிவாயா???

என் காதல் உலகில்,
பகலில் தெரியும்
நட்சத்திரமெல்லாம்
என்னை பார்த்து கண்ணடிக்க,
இரவில் உதிக்கும்

மேலும்

நன்றி!!! 21-Feb-2017 2:36 pm
கவிதையில் * 21-Feb-2017 12:05 pm
உன் பின்னாடியே நடைபழகி ஓய்வில்லாத என் பாதங்கள் மீண்டும் மீண்டும் உன் வீட்டு வாசலிலே கோலமிடுகிறதே... அருமையான வரிகள் அற்புதமான படைப்பு ஒருதலை காதலின் வலியும் ஏக்கமும் காவிதியில் தெரிகிறது வாழ்த்துக்கள் தொடருங்கள் 21-Feb-2017 12:04 pm
நன்றி!!! 20-Feb-2017 10:44 pm
srimahi - srimahi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2017 1:51 pm

கவிதைகள் வேண்டுமா???
அன்பே,

உந்தன் அழகை அனுதினமும்
அகங்காரத்துடன் ஏந்திக்கொள்ளும் நிலை கண்ணாடியில்...
உன் ரசக்குள்ளா கண்களை உயர்த்தி காட்டு...

அதில்,
சிரித்தக்கொண்டு
சிறை கைதியாக
நான் தெரிந்தால்,
என்னுடனே
ஆயுள் தண்டனை பெற்று
ஓராயிரம் கவிதைகள்
வழிந்திருக்கும்...

ஒருவேளை அதில்
இயற்கையின் அழகை குத்தகைக்கு எடுத்து நிலவின் அக்காவாக
நீ தெரிந்தால்
மொழிகளும் உயிர் பெற்று
எழுத்துக்கலெல்லாம் கூத்தாடி
இலட்சம் கவிதைகள்
விழித்திருக்கும்...

ஒருவேளை அதில்,
கைக்கோர்த்தபடி நம்மோடு
காதலும் இணைந்து
தெரிந்தால்
சுற்றும் உலகம் நின்று
என்னுலகம் உன்னை மட்டும் சுற்றி
கோடி க

மேலும்

பீட்டா.அம்மா அழகு தான். நோட்டா கு. டு. ங் க. பாராட்டி. 15-Jan-2017 2:36 am
செம 14-Jan-2017 9:45 pm
நன்றி!!! 09-Jan-2017 6:13 pm
அருமை தோழி 09-Jan-2017 4:04 pm
srimahi - srimahi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2016 8:14 pm

மௌனங்கள் தூது பேசும் அவனது ''மொழியில்''
விடியாத பல பகல்கள் உண்டு அவனது ''விழியில்''
அடிக்கடி விழுந்தாலும் வலிப்பதில்லை அவனது ''கண்ணகுழியில்''
கள்வனாய் என்னை கொள்ளையடித்தான் அவனது ''சதிவழியில்''
ஈரெழு ஜென்மமும் தண்டனை பெற வேண்டும் அவன் ''மனைவி'' என்னும் ''பழியில்''

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

Anuthamizhsuya

Anuthamizhsuya

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

Santhosh Kumar1111

Santhosh Kumar1111

திருப்பூர் / சென்னை
Anuthamizhsuya

Anuthamizhsuya

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

Santhosh Kumar1111

Santhosh Kumar1111

திருப்பூர் / சென்னை
Anuthamizhsuya

Anuthamizhsuya

தூத்துக்குடி

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே