~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்
இடம்:  தமிழ்நாடு (திண்டிவனம்)
பிறந்த தேதி :  19-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2017
பார்த்தவர்கள்:  368
புள்ளி:  117

என்னைப் பற்றி...

இயற்கையும் நானும் நண்பர்கள்
~ரா.ஸ்ரீராம் ரவிக்குமார்

என் படைப்புகள்
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் செய்திகள்

மயிலம் தான் ...
மைலம் தவறு ...
இங்கே மயில்கள் உண்டு ...மயிலம் முருகர் கோவில்  மலையில் உண்டு ...மயிலியம்மன் உண்டு ...

தேசிய நெடுஞ்சாலை பதாகைகளிலும் தவறாக உள்ளது ...சில மக்களும் இதனால் தவறாக எழுதுகிறார்கள் ...
ஆங்கிலத்தில் Mailam = தமிழில் மயிலம்

ஏற்கனவே நிறைய ஊர்கள் திரிந்து விட்டது ...
அதில் மயிலம் சேராமல் செய்வோம் ...

மேலும்

பாராட்டப்பட வேண்டிய கருத்து கறுப்பர்கள் என்று அடையாளப்படுத்தி இன்டியா இன்டியன் என்று அந்நியன் பெயர் கொடுத்திருக்கிறானே அந்தப் பெயரை யார் மாத்துவது எப்பொழுது மாத்துவது ? 25-Jul-2017 9:04 am
நான் அங்க தான் இருக்கின்றேன் எனக்கே தெரியவில்லை நல்ல தகவல் 25-Jul-2017 12:56 am
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2017 2:51 am

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடருது
செருப்பினை கொண்டு தங்களை தாங்களே
அடித்துக்கொண்டதாக செய்தி வருகுது
இன்னும் என்ன என்னவெல்லாமோ சொல்லுது

புகைப்படம் பார்த்ததும் மெய்யாலுமே மனசு வலித்தது
செய்தி முழுவதும் படித்து முடித்ததும் கோபம் பொங்கி வந்தது

அவர்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத
அவலங்களை ஆறுதலாக என்னவென்றுகூட கேட்காத
ஈரமற்ற மோடி அரசாங்கத்தின் மிதப்பு மீது கொஞ்சம் வந்தது

தமிழக விவசாயிகளின் வயித்திற்கான உரிமை கூக்குரலை
தன் இனத்தின் பிரச்சனை என்று முன்னெடுத்து செல்லாமல்
"அவர்கள் தனிவிருப்பம்" என்று தள்ளிநின்று பார்க்கும்
வீரமற்ற எடப்பாடி அரசாங்கம் மீது கொஞ்சம் வந்த

மேலும்

உண்மை தான் தோழி! 25-Jul-2017 12:58 am
நன்றி:-) 25-Jul-2017 12:36 am
கருத்துக்கு நன்றி... இயல்பான கோபத்தில் வந்த வார்த்தை என்பதாலோ என்னவோ... கவித்துவமாக வரவில்லை என்ற நெருடல் எழுதும் போது எனக்கும் ஏற்பட்டது . அதையே சரியாக சொல்லி விட்டீர்கள் முயற்சிக்கிறேன் 25-Jul-2017 12:35 am
ஊழல் குளம் போல அரசு அதில் மீன்கள் அரசியல்வாதிகள் ... மக்களின் கண்ணநீரை தண்ணீராய் உறிஞ்சியபடி 25-Jul-2017 12:33 am

என்னவள் வரைய நான்
***********************
காற்றில் உன் கூந்தல் தழுவி
கன்னத்தில் ஓவியம் தீட்ட
கடவுள் படைத்தக் காகிதம் நானா?
காகிதத்திர்க்கும் வியர்க்குதடி
காதல் ஓவியம் பூக்குதடி
உன் "கைகள்" தொட்டுத் திருத்த.........

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

மேலும்

பிரம்மன் படைப்பு
*****************
உளிகள் இல்லாமல்
வலிகள் இல்லாமல்
அவளைச் செதுக்கி!

கருப்பு தேகத்தில்
சிரிப்பு மொழியெழுதி
மனதைக் கொள்ளையிட்டக்
கொள்ளைக்காரி அவள்!

இரவென தேகம் படைத்து
பகலெனப் பற்க்கள் படைத்து
அன்பால் அவள் சுவைக்க
பிரம்மன் படைத்த இன்னொரு
படைப்பாக நான்!

மேலும்

கண்ணோடு கலங்காதே
விண்ணோட பிள்ளை நீ
என்னோடு கைகோர்ரடா
தமிழா

கதிராமங்கலம் கொதிக்கின்றது
என் நெஞ்சு வெடிக்கின்றது
வெட்கங்கெட்ட வெட்கங்கெட்ட
பூமி தானடா
தமிழா

வேடிக்கை பார்க்க
நாம் என்ன கோழ
வேட்டியை மடிச்சு காட்டும் நேரம்டா
தமிழா

முன்வச்ச கால
பின் வைக்க மாட்டோம்
முன்னேற நீ
வந்து நில்லடா
தமிழா

பதவிக்காக தாய்நாட்டை வைக்கும்
பதவி வெறிபிடித்த நிறைந்த ஊரடா

கட்சி வெறி ஜாதி வெறி
என்னதான் உங்கள் கொள்கை நெறி
சுடுகாடா சுண்ணாம்பா
ஆனாலும்
தீராதா உங்கள் வெறி

வேசம் மிட்டு வேசம் மிட்டு
வேடிக்கை பார்த்து
ஓட்டுக்காக மட்டும் தான்
நம் காலில் விழுகுது

மேலும்

உணர்வுகள் வெடிக்கின்றது தோழா! 24-Jul-2017 12:54 am
வீரத்தின் அடையாளம் நாம் 23-Jul-2017 8:55 pm

நஞ்சு உள்ளே
அமிர்தம் நெகிழிப் பையில்!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

மேலும்

நன்றி நண்பா! 21-Jul-2017 11:27 am
யதார்த்தமான சிந்தனை.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jul-2017 10:01 am

விவசாயின் கண்ணீர்
*******************
வான் மழை நீர்யின்றி
வெடிப்பு விட்ட விலைச்சல்
நிலமே!

எங்கள் கண்ணீர்த் தண்ணீர்
ஆகச் சொட்டியும் உன் மேனிக் குளிரவில்லையா!

பச்சைப் பாசிகள் படர்ந்த உன்னில்
பிள்ளையாகத் தவழ்ந்த மண்ணில்
ஈரமின்றி வீழ்ந்துக் கிடக்கிறேன்~கருகிப்
போன உன் மார்புகள் மீதுக் கண்ணீர் விட்டும் வேர்கள் நனையவில்லையா!

ஆழமாகப் பள்ளம் எடுத்தும்
ஆழ்த்துளைக் கிணறு யிட்டும் ~உன்
தேகத்தின் உள்ளேத் துளி ஈரமில்லையே......

செயற்கை நரம்புகள் புதைக்கப்பட்டு
உதிரங்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டு
காசுப் பார்த்தக் கூட்டத்தாலே
வீழ்ந்துக் கிடக்கே அணைகள் ~எல்லாம்!

வான் மழையே உதிரம்

மேலும்

நன்றி நண்பா! 21-Jul-2017 11:23 am
காலம் நாளுக்கு நாள் உழவனின் அவலத்தில் குளிர் காய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jul-2017 10:16 am

நஞ்சு உள்ளே
அமிர்தம் நெகிழிப் பையில்!

~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

மேலும்

நன்றி நண்பா! 21-Jul-2017 11:27 am
யதார்த்தமான சிந்தனை.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jul-2017 10:01 am

என் முதல் ஓவியம்

மேலும்

பிச்சை கொடுக்க
பிச்சையெடுத்தாள் ஏழை
வரதட்சணை

மேலும்

உண்மை நண்பா. 21-Jun-2017 4:57 pm

நெகிழிப் பைகளால்
போர்த்தப்பட்டிருக்கிறாள்
செயற்கை நஞ்சுகளால்
கொலை செய்யப்பட்டவள்

இறந்த தாயின்
அங்கங்களில்
பசியாறத் துடிக்கும்
குழந்தையாய்

நாற்திசை பயணித்தும்
மரணிக்கும் வேர்கள்

மேலும்

எழுத்து தளம் முன்பு போல் பொலிவுடன் இல்லை.... பல எழுத்தாளர்கள் சென்றுவிட்டார்கள்.... பொறுத்திருப்போம் நிலை மாறும்..... தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 18-Jun-2017 4:39 pm
ஆம் தோழரே இயற்கையை நாம் காக்க வேண்டும் தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி 18-Jun-2017 4:34 pm
தேடி பிடிக்க வேண்டியிருக்கிறது நல்ல கவிதையை . வாழ்த்துக்கள் 17-Jun-2017 11:51 pm
இயற்கை மேலாண்மைக் கருத்துள்ள கவிதை நயம் இயற்கையைக் காப்போம் இறைவழி காண்போம் 17-Jun-2017 2:22 pm
மேலும்...
கருத்துகள்

இவரை பின்தொடர்பவர்கள் (12)

மேலே