Suchindran Profile - சுசீந்திரன் சுயவிவரம்பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  சுசீந்திரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Aug-2012
பார்த்தவர்கள்:  1118
புள்ளி:  1351

என்னைப் பற்றி...

பரிசுகள் கொட்டிய
பரிசல்களில்
பாத யாத்திரை செய்தன
என் கவிதைக் கனாக்கள்....
நிரப்பிய மை வெள்ளம் தீர்ந்த பின்னும்
இன்னும் எழுதவில்லை
கவிதையென்ற ஒன்றை
என் பேனா....
நான்
மலைகளில் முடவனாகவும்
மழைகளில் மூப்பனாகவும்
நடக்கிறேன்.
எப்போது நான் கவிஞனாவேன்.

-சுசீந்திரன்.

என் படைப்புகள்
suchindran செய்திகள்

என்ன ஒருஆணவப்  பேச்சு .......Rk நகர் தொகுதியில், விஞ்ஞான திருடன் என்று நீதிபதி சர்க்காரியா வால் பாராட்டப்பட்ட கருணாநிதியால் கட்டிக் காப்பாற்றப் பட்டுள்ள குடும்ப கழகத்தின் சார்பாக யார் நின்றாலும் வெற்றி பெறுவார்களாம்......அந்த கழகத்தின் செயல் தலைவரின் பேச்சு இது......இவ்வாறு பேசுவதிலிருந்தே தெரிகிறது அவர்களின் தோல்வி............ஏதோ தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் இவர் பின்னால் அணிவகுத்தது போலவும்......பரிசுத்த பிதாமகர் ஆகிவிட்டது போலவும் பீற்றிக் கொள்ளும் இவருக்கு  இதே தமிழ்நாட்டில் இவரிலும் புகழ்பெற்றவர்கள் தோற்றுப் போனதை நினைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.....இரண்டு குடும்ப ஆட்சி கூட்டங்களையும் ஓரங்கட்டி  தமிழ்நாட்டில் தமிழ்மக்கள் புரட்சிக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதை திரு.கோபாலபுரமும் திருமன்னார்குடியும் ஏப்ரல் 13  முடிவு தேதி அன்று உணர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.புது விடியல் துவங்கி இனி எங்கும் பன்னீர் புஷ்பங்களே.......

மேலும்

suchindran - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2016 3:37 pm

ஒளியென்ற கீற்றின் இருட்டில்...

ஆசனப் பரிமளங்களில்
விசக்கொல்லிகள்
விளையாடிக் சென்றதில்
நேசக் கைகள் ஈசனிடம்
இறைஞ்சிக் கேட்டன
இன்னொரு நாள் தவம்.

பவளமல்லிப் பாறைகளின்
பகலிரவு ஆட்டத்தில்
சமுத்திர கையெங்கும்
சத்திழந்த உயிர்த்திரவங்களின் சவம்.

இன்றைக்கு இரந்து
நாளைக்கு இறக்கும்
மூப்பான வாலிபம்
நாளை நடப்பது அறியாமல்
நடைபாதை வாசிகளின் பாதையில்
வீசிச் சென்றது கபம்.

ஒரு மௌனமும் மன்னிக்கப் பழகியதால்
மார்தட்டிய மூர்க்கங்கள்
ஆகாயவாலை அக்குளுக்குள்
சுருட்டிக் கொண்டு
இந்த ராச பாட்டையில்
எந்த சகடமும் இதுவரை செல்லவில்லை
என்பதோடு சுபம்.

ஒளியென்ற கீற்றின் இருட்டில்

மேலும்

சிறப்பான படைப்பு..யதார்த்தமான வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2016 7:01 am

அப்பா

அப்பாவின்
விரல்பிடித்து நடந்தபோது
 வராத ஆதங்கம்
மகனின் விரல் பிடித்து
 நடக்கும்போது வெளிவருகிறது
 அப்பா
எவ்வளவு
பொறுமையானவர்.

சுசீந்திரன்.

மேலும்

suchindran - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2016 1:22 pm

வெறுமை

அவனுக்கிது நடந்திருக்க வேண்டாம்
அவனின் இறுதி ஊர்வலத்தில்
பாடை பக்கங்களின் ஒரு பக்கத்தை
அவனே சுமத்திருக்கும்படியான நிலை ....
அவனுக்கது நடந்திருக்க வேண்டாம் .

சித்திர குப்தனின் பாவப் புத்தகங்களில்
பக்கங்களை பங்கிட்டதில்
அவனுக்கென்று ஒருபக்கம்
அதிகமாக அளித்து விட்டான் .
அரூபமாகி அவனின் சவத்தை
அவனே சுமந்து வந்ததை
என்னைப் போல் நீங்களும்தான் நம்பவில்லை .

முன்னர் முற்றத்தில்
வெறுமையென்று வாதிட்டபோது
எல்லாமே இருக்கிறதென்று
சொன்னவன் அவனே .

-சகடமிருந்து போன முற்றத்தை
சைக்கிள் வண்டி நிரப்பியது போலவும் -
சைக்கிள் வண்டி போன வெறுமையில்
பைக்கும் நாற்கால்

மேலும்

மனதோடு விவாதிக்கும் நிதர்சன வரிகள்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2016 7:19 am
அருமை 31-Oct-2016 3:27 pm
suchindran - sh2014 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2016 1:34 pm

நீண்ட வானம்
நீலக் கடல் நீளும் ரசனை
நெருக்கத்தில் நம் நேசம்
வேறென்ன வேண்டும் எனக்கு?


பரந்த பூமி
பசிய புல் வெளி
பக்கத்தில் நீ
வேறென்ன வேண்டும் எனக்கு?


நீண்ட தார்ச்சாலை
நீளும் பயணம்
அந்திப்பொழுது
அருகருகே நீயும் நானும்
வேறென்ன வேண்டும் எனக்கு?


மேகங்கள் காதல் கொள்ளும்
கறுப்பு மலையோரம்
கால் நனைக்கும் அருவி
கக்கத்தில் உன் வெப்பம்
வேறென்ன வேண்டும் எனக்கு?


சலசலக்கும் நீரோடை
சங்கீதப்பறவைகள்
பாட்டுக்கு இளையராஜா
பா எடுக்க நீ
வேறென்ன வேண்டும் எனக்கு?


கற்பனைக்குக் கவிதை
கால்தடவும் கடும்பனி
தலை சாய்க்க உன்மடி
தலைகோதும் உன்விரல்
வேறென்ன வேண

மேலும்

காதல் காெண்ட உள்ளம்..... காதலை தவிர வேறெதுவும் வேண்டாது....அருமையான கவி....வாழ்த்துக்கள் நண்பா... 27-Jul-2016 7:56 am
நன்றிகள் கருத்தில் மகிழ்ச்சி ! 26-Jul-2016 11:12 pm
வைரமுத்து போல் கவிதை"இது போதும் எனக்கு"! சிறப்பு படைப்பு!!! 26-Jul-2016 6:01 pm
"நடுநிசிக் குளிர்காற்று மடி மீது நட்சத்திரங்கள் வெப்பத்தில் நம்மூச்சு முடியாத பிரளயம் " அழகான வரிகள் அழகான படைப்பு... 26-Jul-2016 5:38 pm
suchindran - mathibalan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2016 8:20 pm

மாரி மனங்கொண்டு வாரித் தரும்போது
மண்ணில் புதுவெள்ளம் ஓடிவரும்!
ஏரி நிறைந்தோட நீரின் பரப்போடு
ஏறும் புதுமீன்கள் ஜாலமிடும்!

சேவல் அதிகாலை கூவி எழுமுன்பு
சீறும் இளங்காளை ஏரில் உழும்!
தூவும் பனிமூட்டம் தோலில் குளிரேற்ற
தூய மண்வாசம் நாசிபெறும்!

சேற்று வயலாடி நாற்று நடும்போது
சேர்ந்து களைப்பாற பாட்டுவரும்!
காற்றில் கலந்தோடும் பாட்டின் ருசிதேடி
காட்டுக் குயில்கூடக் கேட்க வரும்!

சாணி உணவூட்டி அமுத நீர்பாய்ச்சி
தாகம் தணித்தாலே பயிர்வளரும்!
பேணிப் பயிர்காத்துப் பூச்சிப் பிணிநீக்க
பிரிந்து சரமாகக் கதிர்மலரும்!

கொல்லும் வெயிலென்றும் கொட்டும் மழையென்றும்
காலம் பார்க்காமல் பணிநடக்க

மேலும்

மிக்க நன்றி தோழமையே . 06-Apr-2016 2:51 pm
மிகவும் சிறப்பான சிந்தனை நட்பே...!! அனைத்து வரிகளும் அழகு..!! 06-Apr-2016 1:03 pm
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி . 31-Mar-2016 8:06 am
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . 31-Mar-2016 8:04 am
suchindran - Murali TN அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2016 9:18 am

இன்றைய தினமணி கவிதைமணியில் எனது கவிதை....

அணையட்டும் சாதீ: முரளி

நமது தோழமைகள் பலர் படைப்புகளும் வெளிவந்துள்ளது.....  அன்புடன்
முரளி 

மேலும்

வாழ்த்துக்கள் சார்..! 28-Mar-2016 10:17 pm
வாழ்த்துக்கள் முரளி சார்..இன்னும் இது போன்ற பல வெற்றிப் படைப்புகளை தொடர்ந்து அளித்திட! 28-Mar-2016 4:43 pm
பாராட்டுகள். தொடரட்டும் உமது தமிழ் இலக்கியப் பயணம். நன்றி 28-Mar-2016 4:28 pm
வாழ்த்துக்கள் அய்யா..! 28-Mar-2016 4:12 pm
kavithasababathi அளித்த எண்ணத்தில் (public) KR Rajendran மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2016 6:04 pm

புதிய தொடர் .....


வேறு நிலாக்கள் நூல் தொடர் நிதானமாகவும் தெளிவாகவும்  உலா வருவதிலும், உயர்தர ரசிகர்களால் ஆராதிக்கப்படுவதிலும் ,  முன்னோடிக் கவிஞர்கள் பலரும் இத்தகு இலக்கியச் செயல் பாராட்டி வாழ்த்தியதிலும் மனம் மகிழ்கிறது.      வேறு நிலாக்களின் ஊர்வலம் தொடரும் இவ் வேளையில் நிலாக்களுக்கு இணையான இன்னொரு தொடர்  இன்று துவங்கும்.. சேர்ந்தே வளரும்.

'காலச்சுவடுகள்  '  
(தொடரின் தற்காலிக தலைப்பு) 

இனிய கிராமிய சந்தங்கள், பலவேறு சந்த வடிவங்கள் , அழகிய  விருத்தங்கள், தூய மரபுகள், எந்த வகைமையும் பூணாத ஆனால் ஒழுங்கான சீர்களும் புதிய வடிவங்களும் கொண்ட அழகிய கவிதைகள்  இத்தொடரில் பதிவாகும். வெறும் பிரச்சாரக் கவிதைகள், கோஷங்கள் , நேரடி அறிவுரைகள் இல்லாமல் நயம்,சுவை  கொண்ட இனிய கவிதைகள் மட்டுமே இங்கு இடம் பெறும்.   இந்நூல்தொடரில் ஆர்வம் உள்ளவர்கள் புதிய அல்லது பழைய படைப்புகளை தெரிவு செய்து மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். 

40 ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ்மாநாட்டில் முதல் பரிசு பெற்ற குருவிக் கரம்பை சண்முகம் அவர்களின் "புகாரில்ஒரு நாள் " என்ற அபூர்வ கவிதை உட் பட தமிழொளி, வல்லம்வேங்கடபதி ,  நா.காமராசன், மீரா,  சிற்பி, வைரமுத்து,  இன்னும் பல முன்னோடிகளின் முத்துக்கள் சிலவும் தேடி கொண்டு வந்து இந்நூலில் சேர்க்கப்பட்டு ஒரு காலப் பெட்டமாகத்  தரப்படும்.. இந்நூலும் சாகித்ய  அகடெமி, தமிழ்வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் மன்றங்களில் சபைகளில் சமர்ப்பிக்கப்படும். 

மரபு சார்ந்த மாறுபட்ட கவிதைகள் வருகவே ..!

மரபுகள் என்றும் வாழும்.  

சந்தங்கள்  வாழ்க..சொந்தகள் மலர்க..!
வாழ்க தமிழ்..வெல்க நற்கவிதைகள்...! 

நேசத்துடன்
கவித்தா 

மேலும்

வேறு நிலாக்களாகட்டும், இனி வரும் இந்த தொடராகட்டும், வழக்கம்போல் காலத்தால் அழிக்க முடியாத கவிதைகளின் கவிதைப் பெட்டகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.படித்து மகிழ காத்திருக்கிறோம். 31-Mar-2016 2:52 pm
வாழ்க வளமுடன் தங்களின் தொடர்.... வெற்றிக்கு வாழ்த்துக்கள் 24-Mar-2016 9:02 am
வாழ்த்துக்கள்........கவிஞரே......உங்களோடு பயணிக்க நானும் ஆர்வமாக உள்ளேன் ............. 18-Mar-2016 9:52 pm
மகிழ்வான செய்தி !! வாழ்த்துக்கள் தங்களுக்கு ! வரும் கவிதைகளைப் படிக்க ஆவலோடு காத்திருக்கிறேன் !! இத்தொடர் மிகச் சிறப்பான தொடராக அமையும் என்பதில் ஐயமில்லை !! 18-Mar-2016 6:50 pm
agan அளித்த எண்ணத்தை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Jan-2016 9:45 am

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :


ண, ன பொருள் வேறுபாடு

அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை
.அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒருராசி
கணை - அம்புகனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்புகன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடில, ழ, ள பொருள் வேறுபாடு
அலகு - பறவையின் மூக்கு, அளவு,ஆண்பனைஅழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் 
உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது, ,வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு(பொன்)கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்,படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்(தெய்வசபை), உல்லாசமாகவீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்பெரிய இரும்பு, கொழு கொழுத்துஇருத்தல்
கொளு - புறப்பொருள்வெண்பாமாலைத் துறை,பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒருமலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகுகோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொதுமண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்குதாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணிபெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனை
தால் -நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல்,விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகைகுத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,நன்மை, குணம்
,நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,பூரட்டாதி
நாளி - கல், நாய்நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,உழுகருவி, ஓர் உயிரி,வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவைபூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம்பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாததானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்பாளி - வரப்பு, எல்லைபாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல்,சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு,வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல்,குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி,வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது,பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன்,இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு,அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி,வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை,கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும்இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர்உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும்ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை,இளமை
வளை - கை வளையல், எலி
வளைவல் - வலிமை, விரைவு, திறமைவள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு,தொன்னைவல்லி - பூமி, பெண், பிரிதல், படர்கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம்,சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை,கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன்(இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒருகாதணி
வாலை - இளம்பெண், திராவகம்வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்வாளை - வாளை மீன்வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்றுவாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்திவிலா -
விலா எலும்புவிழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை,ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை,
விளைவி(விளைச்சல்)விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப்பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்),சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன்,ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம்,ஒருவகைக் கீரைர,


ற பொருள் வேறுபாடு

அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாகஅரவு - பாம்புஅறவு - அறுதல், தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம்,கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு,அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு,சிவன்
அறி - அறிந்துகொள்அரிய - கிடைத்தற்கு அரிதான,கஷ்டமானஅறிய - அறிந்துகொள்ள,தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று.18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்டபெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்),அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒருமரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி,ஒலி, பாசறை, சொல், குகை,வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு,அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை,சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை,நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை,வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி,தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை,சந்து, கடமை, தலைமை, விடை,உயரம், மூலை
இரு - இரண்டு, பெரிய, உட்கார்,அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி,ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு, இருப்பிடம்,ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்புஇருத்தல் - அமர்ந்திருத்தல்,காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல்,எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல்,முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல்,மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி,ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை,அரைப்படியளவு,உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம்,நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதிஉருக்குதல் - இளக்குதல், மெலியச்செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல்,பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள்,மருந்து, பாலில் இடும் பிரை, துளி,மழை, ஆடை, துன்பம், பாம்பின்விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப்பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு,வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்உறுதல், தீண்டல், குற்றம், புண்,கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை,இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை,கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக்கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின்பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல்,வருத்துதல், வெறுத்தல், கடிதல்,இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்கரடு - மரக்கணு, மணிக்கட்டு,முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை,கழுதை
கறம் - கொடுமை, வன்செய்கை
சிகரம் - மலை உச்சி

மேலும்

ஆமென் 25-Jan-2016 7:58 am
இந்தப் பதவுரைகளை அப்படியே தளத்தின் அகராதியில் சேர்க்கலாமே! 24-Jan-2016 6:23 pm
அர்த்தம் புரிந்தெழுத அவசியமான வார்த்தைகள் . பகிர்ந்தமைக்கு நன்றி. 22-Jan-2016 3:28 pm
மிக்க நன்றி ஐயா .பிரதி எடுத்துக்கொண்டேன் . 22-Jan-2016 2:55 pm
agan அளித்த எண்ணத்தை (public) udaya sun மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
09-Dec-2015 1:12 pm

மரக்காணம் அருகே
ஆலம்பாறை என்ற இடத்தில் இருந்து
கடலுக்குள் 5 கிலோ மீட்டர்
தொலைவில் பெரிய விசைப்படகில்
தங்கியிருந்து மீன் பிடித்துக்கொண்டு
இருந்துள்ளனர்.
அப்போது, திடீரென மேகங்கள் வானில்
இருந்து தாழ்வாக கடல் அருகே
இறங்கியும், கடல் நீர் சுழல் போல்
மேலெழுந்து மேகங்களுக்குள்
இழுக்கப்படும் அதிசய காட்சியை
அவர்கள் கண்டுள்ளனர்.
சுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த
அதிசய நிகழ்வை உடனடியாக தனது
செல்போனில் படம் எடுத்துள்ளார்
மதியழகன். மதியழகனின் படகிற்கு மிக
அருகில் இந்த நிகழ்வு நடந்ததாக
தெரிவித்துள்ளார் அவர்.
மீனவர்கள் மொழியில் இந்த நிகழ்வை
‘யானை தும்பிக்கையை இறக்கி
இருக்கிறது' எனச்
சொல்வார்களாம்.ஆனால், அறிவியல்
மொழியில் இதனை ‘டோர்னடோ' என
பெயரிட்டு அழைக்கிறார்கள். அதாவது
தமிழில் நீர்த்தாரை.
மீனவர்கள் கண்ட இந்த டோர்னடோ
குறித்து, கடலூர் துறைமுக
அதிகாரி கேப்டன் அன்பரசன்
கூறுகையில், ‘கடலின் மேல் வீசும்
காற்று குளிர்ந்த காற்றாகவும், கடலின்
காற்று சற்று வெப்பமாகவும்
இருந்தால், கடலில் நீர்த்தாரைகள்
எனப்படும் அதிசய நிகழ்வு ஏற்படும்.
பொதுவாக பருவநிலை மாற்றம்
ஏற்படும் போது இதுபோன்ற நிகழ்வுகள்
நடைபெறும். மீண்டும் இரண்டு
காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக
மாறும் போது, நீர்த்தாரைகள் மறைந்து
விடும். இந்த விநோத நிகழ்வின் போது
கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு
மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல
கிலோ மீட்டராக இருக்கும்.
இதற்கு ஆங்கிலத்தில் "டோர்னடோ"
என்று பெயர். இவைகள் ஐரோப்பா போன்ற
பகுதிகளில் அதிகம் காணப்படும். இவை
அனைத்தும் பருவகாலம் மாறும்
போது நடைபெறும் நிகழ்வுகள்' என
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : முகநூல்

மேலும்

Geeths அளித்த எண்ணத்தை (public) krishnadev மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-Oct-2015 9:58 am

நேற்று எழுத்து தோழமைகள் பங்கேற்ற மகாகவி தமிழன்பன் பிறந்தநாள்
விழா, தமிழன்பன் விருது வழங்கும் விழா, மற்ற நூல்கள் வெளியீட்டின் சில படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு

http://eluthu.com/images/data/ennam/f2/26271/rvusb26271.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26271/wkrem26271.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26271/njtsb26271.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26271/gxefq26271.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26273/txszr26273.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26273/buehp26273.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26272/nmafv26272.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26272/xfqts26272.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26272/ocyhq26272.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26272/sgkno26272.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26275/qewax26275.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26275/frqyg26275.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26275/ymniz26275.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26274/pxurn26274.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26274/qgfia26274.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26274/qbast26274.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26274/glqax26274.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26274/qujxk26274.jpg

http://eluthu.com/images/data/ennam/f2/26272/vrcwz26272.jpg

மேலும்

அருமை ...விருது பெற்றவருகளுக்கு வாழ்த்துக்கள் ...விழாவை பொறுப்பேற்று நடத்திய அத்துணை நல் உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள் ...,வாழ்க தமிழ் ...,வளர்க எழுத்து தளம் ...! 31-Oct-2015 12:35 pm
எப்போ வருவே.. சரவணா சனவரியில் வருவான்...நீ??? 25-Oct-2015 6:45 am
புகைப்படம் கண்டு மகிழ்ந்தேன்...அது மட்டும் தானே முடியும் :( 25-Oct-2015 2:09 am
விருதுக்காக என்னை அழைக்கவேண்டும் என்று சொல்லவில்லை .. அகன் அவர்களை குற்றமும் சொல்லவில்லை .. மனதில் தோன்றியது அவ்வளவு தான் .. 21-Oct-2015 3:18 pm
suchindran - மருத்துவ குறிப்புகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2015 1:15 pm

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு - அமெரிக்க ஆய்வில் தகவல்

பழைய சோற்றில் மற்ற உணவுப் பொருட்களில் இல்லாத வைட்டமின் பி6, பி12 போன்றவை வளமாக நிறைந்துள்ளது.

பழைய சோற்றில் லட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் உள்ளதால், அவற்றை
உட்கொள்வதன் மூலம் செரிமான பிரச்சனைகள் நீங்கி, செரிமான மண்டலம்
ஆரோக்கியமாக இருக்கும்.

பழைய சோற்றில் நோயெதிர்ப்பிற்கான காரணிகள் அதிகம் உள்ளது. இவற்றை
உட்கொள்ளும் போது, அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், உடல் உள்ளுறுப்புக்களை
பாதுகாப்பதோடு, உடலைத் தாக்கும் நோய் கிருமிகளை எதிர்க்கும் வகையில்
எப்போதும் விழிப்புடன் இருக்கச் செய்கின்றன. இதனால் உடலில் அடிக்கடி
ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். 

தினமும் காலையில் பழைய சோற்றினை சாப்பிட்டு வந்தால், விரைவில்
முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கலாம். நீண்ட நாட்கள் இளமையுடன்
காட்சியளிக்க விரும்பினால், பழைய சோற்றினை காலை உணவாக உட்கொண்டு வாருங்கள்.

முக்கியமாக பழைய சோற்றினை சாப்பிடுவதால், இக்காலத்தில் பலரும் சந்திக்கும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

நீங்கள் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், பழைய சோறு சாப்பிடுங்கள்.
ஏனெனில் இதனை உட்கொண்டால் உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியுடன்
இருக்குமாம்.

பழைய சோற்றில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

காலையில் பழைய சோற்றினை உட்கொண்டால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாமாம். குறிப்பாக சோர்வு என்ற ஒன்றையே மறந்துவிடலாம்.

தற்போது பலருக்கும் உள்ள இரத்த அழுத்தத்தை பழைய சோறு
கட்டுப்படுத்துமாம். எனவே இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், பழைய சோற்றினை
காலை உணவாக எடுத்து வாருங்கள்.

இக்கால தலைமுறையினர் அதிகம் சந்திக்கும் அல்சர் பிரச்சனையை பழைய சோறு
தடுக்குமாம். இதற்கு காரணம், அதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் தான்.

பழைய சோறு செய்வதற்கு சம்பா அரிசி அல்லது கைக்குத்தல் அரிசி தான்
சிறந்தது. ஏனெனில் இந்த அரிசியில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், தாது
உப்புக்களும் நிறைந்துள்ளது.

நம் முன்னோர்கள் எந்த ஒரு பழக்கத்தையும் காரணமின்றி
பின்பற்றமாட்டார்கள். மேலும் நம் முன்னோர்கள் ஆரோக்கியம் என்று கூறினால்
அதை மறுக்கும் நாம், வெளிநாட்டினர் ஆராய்ந்து, ஆச்சரியப்பட்டு கூறினால்
உடனே ஒப்புக் கொள்வோம். இப்போது நம் பழைய சோற்றை அவர்கள் ஆரோக்கியம் என்று
கூறுகிறார்கள். இப்போதாவது பழைய சோற்றின் மகத்துவத்தைப் புரிந்து
கொள்ளுங்கள். இந்த பழைய சோற்றினை தினமும் உட்கொள்ள முடியாவிட்டாலும்,
வாரத்திற்கு மூன்று முறையாவது உட்கொள்ளுங்கள். 

மேலும்

சித்ராவின் கவிதை ;அனைவரின் பார்வைக்கு ஆரோக்கிய உணவு நீராகாரம் -------------- ஏனென்று புரியாமல் எதற்கென்று தெரியாமல் ஆட்டு மந்தையென அடிவருடி ஒருவர்பின் ஒருவராக டோமினோக்களிலும் மெக்டொனால்டிலும் தவம் கிடக்கிறோம் காய்ந்து போன பிட்சாவிற்கும் அரைவேக்காட்டு பர்கருக்கும் உஷ்ண நாட்டின் பிரஜ்ஜைகள் நாம்.... வேட்டி மறந்தோம் புடவை துறந்தோம் மண்ணின் இசையை மறந்தோம் மரபு விழாக்களை துறந்தோம் அத்தனையும் கடந்து மண் மனம் வீசும் ஆரோக்கிய சமையல் மறந்தோம் நூடுல்சும் மக்ரூனியும் குழந்தைகளின் உணவானது கெலாக்சும் ஓட்சும் பெரியோர் உணவானது.... சுண்டி இழுக்கும் பாக்கெட் உணவுகள் எமனாவது அறியாமல் நாகரிகமாய் கொறிக்கும் கொடுமையை என் சொல்ல... மரணம் தேடி வந்த காலம் போய் மரணத்தை நாம் தேடும் இந்த மடமையை கலியுக கொடுமையை எப்படி சொல்லி ஏற்க வைப்பது.....! முதல் நாள் இரவில் மீறும் சாதம் மண் பாண்டத்திலிட்டு தண்ணீர் விட அது நீராகாரமாய் மாறும் அத்தனை சத்துக்கள் ஒருங்கே அமைந்த அருமருந்து.... சில்லென்ற நீராகாரத்தின் முன்னே பெப்சியும் , கோக்கும் பிச்சை வாங்கும்....! இளம் புளிப்பான நீராகாரத்தில் சற்று தயிர் விட்டு துளி உப்பிட்டு வெங்காயம் வெட்டிப் போட்டு மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு குடிக்க குடிக்க .... வயிற்றுக்குள் காஷ்மீரின் குளிரடிக்கும்....! உயிர்சத்து நிறைந்ததைf ஓரங்கட்டிவிட்டு உயிர் குடிக்கும் உணவிற்கா ஒற்றைக் காலில் நிற்கின்றோம் நாள் பட்ட அல்சரும் ஓசையின்றி ஒதுங்கி கொள்ளும் நோஞ்சான் பிள்ளைகளும் பயில்வானாய் மாறிவிடும்...! புத்துணர்வு குடிகொண்டு புது ரத்தம் பாய்ச்சிவிடும் அமெரிக்கன் கண்டுணர்ந்து ஆய்வறிக்கை வெளியிட்டான் நீராகாரம் சிறந்த உணவென்று! இனி....அமெரிக்க வீதிகளில் நீராகாரம் விற்கப்படலாம்.... அப்போதும் மமதை கொண்ட நம் வீதிகளில் துரித உணவுகளே துடிப்புடன் கோலோச்சும்.... நாம் நாகரிக மோகம் கொண்ட ஏமாளிகள்...சொன்னாலும் ஏற்காத கோமாளிகள்....! 26-Oct-2015 4:01 pm
ஹி ஹி 26-Oct-2015 1:39 pm
அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம். வாழ்க தமிழ் 11-Oct-2015 10:51 am
இதற்கு நான் ஒரு கவிதையே எழுதினேன். எனோ அதிகப்படியான புள்ளிகளைப் பெறவில்லை. எனினும்அருமையானத் தகவல். 04-Oct-2015 8:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (103)

KR Rajendran

KR Rajendran

கோவை
VMUTHUMANI

VMUTHUMANI

ஜகார்த்தா, இந்தோனேசியா
vellurraja

vellurraja

விருதுநகர் (மா) வெள்ளூர்
vasantha nila

vasantha nila

தஞ்சை

இவர் பின்தொடர்பவர்கள் (103)

Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
sekara

sekara

Pollachi / Denmark
sankarsasi

sankarsasi

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (102)

JAKIR

JAKIR

வந்தவாசி

என் படங்கள் (4)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே