சூரியன்வேதா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சூரியன்வேதா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  24-Sep-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Jan-2012
பார்த்தவர்கள்:  601
புள்ளி:  403

என்னைப் பற்றி...

இயற்கை காதலன்

என் படைப்புகள்
சூரியன்வேதா செய்திகள்
சூரியன்வேதா - Kavitha அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 2:06 pm

கை கோர்த்து நடக்கவில்லை...
கனவில் நாம் நடந்த தூரங்கள் கணக்கே இல்லை....

அதிகமாய் நாம் பேசவில்லை....
தனிமையில் உன்னிடம் பேசாத வார்த்தைகள் ஒன்றும் இல்லை...

நாம் பார்த்து கொள்ளவில்லை...
உன்னை காணாத நாள்கள் என்னிடம் இல்லை....

சேர்ந்து சென்ற இடம் இல்லை...
உன் நினைவின்றி நான் எங்கும் செல்லவில்லை....

உன் உலகில் நான் இல்லை...
என் உலகம் நீ இன்றி வேறில்லை..

கனவெல்லாம் நினைவாக கை கொடுத்தாய் ஒரு நாள்..
இமைகள் நான் திறக்கும் முன்னே எங்கே சென்றாய்...

வழி தடங்களை விட்டு சென்ற நீ..
என் வலி உணராமல் , வழியும் கூறாமல் சென்று விட்டாய்...

எப்படி மறப்பேன் என் உணர்வே உன்னை.....

மேலும்

மிக உணர்வுப்பூர்வமான வரிகள் வலிகள் வாழ்த்துக்கள் 👍 19-Aug-2017 11:03 am
நன்றி 18-Aug-2017 4:11 pm
நன்றி 18-Aug-2017 4:11 pm
அருமை ..வரிகளை உணர முடிகிறது ...நன்று ..கவிதா 18-Aug-2017 3:06 pm
சூரியன்வேதா - சூரியன்வேதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 12:46 am

எண்ணிக்கையில் எண்ண முடியாது
அவளது முத்தங்களை
வர்ணிக்கையில் நிறுத்த முடியாது
அவளது வெட்கங்களை
விண்மின்களும் மிஞ்சமுடியாது
அவளது கன்னங்களை
வெண்ணிலவும் வெல்ல முடியாது
அவளது அங்கங்களை
சொர்கலோகமும் சொல்லமுடியாது
அவளது இன்பங்களை
நொடிப்பொழுதும் அழிக்க முடியாது
அவளது அம்சங்களை

மேலும்

நன்றி தோழி 19-Aug-2017 10:58 am
அருமை தோழா!! 19-Aug-2017 12:49 am
உங்கள் கருத்திற்கு நன்றி தோழரே ! 18-Aug-2017 8:50 am
அவளது அழகுகள் அதிகமோ அதிகம் ! அனைத்தையும் சொல்லிட தேவை பல பதிகம் ! அருமை . வாழ்த்துகள் . 18-Aug-2017 5:52 am
சூரியன்வேதா - கே என் ராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 2:41 am

வெம்மையால் வெறுமை

காயும் வேனலுக்கோ கருணையில்லை
கானல் நீருக்கோ பஞ்சமில்லை
விளையும் பயிறுக்கோ செழுமையில்லை
வீசும் காற்றிக்கோ குளிர்ச்சியில்லை
வெந்த மனத்திற்கோ அமைதியில்லை
வேர்க்கும் உடலுக்கோ ஓய்வுமில்லை
தாகம் தணிப்பதற்க்கோ தண்ணீருமில்லை
குறைகொண்ட உள்ளத்திற்கோ விடிவுமில்லை
இறைவன் நினைத்தாலன்றி இந்நிலைக்கு ஒரு முடிவுமில்லை

மேலும்

வதைக்கின்ற வெம்மையினால் விளைந்ததிந்த விருத்தமா ? மழைகொஞ்சம் பொழிகிறதே இன்னுமென்ன வருத்தமா ? அருமை ! அருமை ! 18-Aug-2017 5:26 am
எல்லாம் இயற்க்கையின் செயல் ! 18-Aug-2017 2:48 am
சூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 2:30 am

காய்ந்த நிலத்தில்
கனத்த மழை
அவள் முத்தம் !

மேலும்

சூரியன்வேதா - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 2:07 am

இதயத்தில் தேள்
இறங்கும் வாள்
அன்பே கேள்
ஒரே ஒரு நாள்
நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்

கூடுவிட்டு தான்
கூடு பாயும்
வித்தை தனை
கற்றாவது
ஒரே ஒரு நாள்
நான் நீயாக வேண்டும்
நீ நானாக வேண்டும்

அந்த ஒரு நாள்
என் வலியில் நீ எனை உணர்ந்திட வேண்டும்
என் விழியில் நீ உனை கண்டிட வேண்டும்
என் தவிப்பில் நீ சுழன்று உழன்றிட வேண்டும்
என் தகிப்பில் நீ மரித்து எரிந்திட வேண்டும்
என் தனிமைகளில் நீ காய்ந்து துணைதேடிட வேண்டும்
என் தாபத்தில் நீ சாய்ந்து உருகிட வேண்டும்
என் புலம்பலில் நீ மாய்ந்து மருகிட வேண்டும்
என் புதிர்களில் நீ பதில் தேடி திரிந்திட வேண்டும்
என் கனவுகளில்

மேலும்

வித்தை தெரியாத காதல் நித்தம் முடியாத வலியோடு கருத்துக்கு நன்றி ... 18-Aug-2017 8:11 pm
தங்கள் கருத்துக்கு நன்றி 18-Aug-2017 8:09 pm
வார்த்தைகளுக்கு நன்றி ... இந்த மகிழ்ச்சி தேரில் சிரித்து ஏறிக்கொள்கிறது என் கவிதை இப்படிப்பட்ட வார்த்தைகளை விழுங்கி வளர்ந்துகொள்கிறது என் கவி விதை 18-Aug-2017 8:08 pm
Mika நன்றி ... 18-Aug-2017 8:04 pm
சூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Aug-2017 12:46 am

எண்ணிக்கையில் எண்ண முடியாது
அவளது முத்தங்களை
வர்ணிக்கையில் நிறுத்த முடியாது
அவளது வெட்கங்களை
விண்மின்களும் மிஞ்சமுடியாது
அவளது கன்னங்களை
வெண்ணிலவும் வெல்ல முடியாது
அவளது அங்கங்களை
சொர்கலோகமும் சொல்லமுடியாது
அவளது இன்பங்களை
நொடிப்பொழுதும் அழிக்க முடியாது
அவளது அம்சங்களை

மேலும்

நன்றி தோழி 19-Aug-2017 10:58 am
அருமை தோழா!! 19-Aug-2017 12:49 am
உங்கள் கருத்திற்கு நன்றி தோழரே ! 18-Aug-2017 8:50 am
அவளது அழகுகள் அதிகமோ அதிகம் ! அனைத்தையும் சொல்லிட தேவை பல பதிகம் ! அருமை . வாழ்த்துகள் . 18-Aug-2017 5:52 am
சூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2017 12:29 pm

இயந்திரங்களாய்
சுழலும்
மனிதர்கள் எல்லாம்
இயற்க்கையாய்
இயங்கும்
இன்பவனம் !
பூக்களும்
புற்களும்
பூச்சிகளும்
புறாக்களும்
புன்னகைக்கும்
பூங்காவனம் !
இவற்றோடுதான்
என்றும்
அமைதிகாணும்
மனிதமனம் !

மேலும்

அமைதியின் வாசலை தேடி பறந்து போகிறது மனப் பறவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Aug-2017 12:38 am
சூரியன்வேதா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2017 10:50 pm

உலகப் பந்தை
அடிக்கும் மட்டை
மதம் !

=================

உலக உருண்டையின்
உயிரோட்டம்
மனிதநேயம் !

மேலும்

இனி அவ்வாறே செய்கிறேன் தோழரே ! 17-Aug-2017 10:16 am
அருமையான சிந்தனை. மூன்று வரிக் கவிதை அனைத்தையும் ஹைக்கூ என்று அழைப்பதால் ஒரு பெற்றோர்க்குப் பிறந்த குழந்தைகளுக்கெல்லாம் ஒரே பெயரைச் சூட்ட முடியுமா நண்பேரே? ஹைக்கூக்காரர்களை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. தங்கள் படைப்புக்கு பொருத்தமான தலைப்பைத் தாருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 17-Aug-2017 1:31 am
சூரியன்வேதா - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Aug-2017 11:07 pm

நாம்
செய்யும் தவறுகள்
அனைத்தையும்
தவறாமல்
மன்னிப்பவன்

நாம்
நலமுடன் வாழ
அக்கறையுடன்
என்றும்
சிந்திப்பவன்

நம்
தாய்க்கு அடுத்து
அளவு கடந்து
அன்பை கொடுத்து
நேசிப்பவன்

நம்
உடல் தளர்ந்து
முதுமை கண்டும்
நம் பெயரை
வாசிப்பவன்

நட்பு என்ற
நறுமணத்தையே
உயிர்
மூச்சி வரை
சுவாசிப்பவன்

என்றென்றும்
நம் நினைவில்
வாழும்
நம் உயிர்
நண்பன் !

மேலும்

நல்ல நண்பன் வாழ்வின் நிழல் 06-Aug-2017 12:44 am
சூரியன்வேதா - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Jul-2017 9:58 pm

அவ்வப்போது
நான்
தேனியாகிறேன்
உன் இதழினை
முத்தமிடும்போது !

அவ்வப்போது
நான்
புலவனாகிறேன்
உன் அழகினை
வர்ணிக்கும்போது !

அவ்வப்போது
நான்
மழலையாகிறேன்
உன் அன்பினை
அனுபவிக்கும்போது !

அவ்வப்போது
நான்
பிணமாகிறேன்
உன் பிரிவினை
எதிர்நோக்கும்போது !

மேலும்

சூரியன்வேதா - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2017 9:34 pm

பணக்காரனுக்கு
மதிப்பு
ஏழைக்கு
தவிப்பு

மேலும்

சூரியன்வேதா - சூரியன்வேதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Feb-2015 12:46 am

வெறும் பொழுதுபோக்கு
போர்வைக்குள் மட்டும்
நாங்கள் இல்லை !
சமுக சிந்தனையிலும்
நாட்டின் வளர்ச்சியிலும்
மனிதநேய புரட்ச்சியிலும்
நாங்கள்
இல்லாமல் இல்லை !
ஏனெனில்
எங்களுக்கு
அப்துல் காலமும் பிடிக்கும்
அஜித் குமாரரும் பிடிக்கும்

மேலும்

சூப்பர்பா 23-Jul-2015 6:12 pm
ஆக்கமும் அதற்கான புதுமை வழிகளும் தென்படுகிறது வரிகளில்... வாழ்க வளமுடன் 18-Feb-2015 12:39 am
நன்று 17-Feb-2015 11:53 pm
ஆஹா அப்படியா ..... 17-Feb-2015 7:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (239)

மகேஷ் லக்கிரு

மகேஷ் லக்கிரு

தஞ்சை மற்றும் சென்னை
ஜெர்ரி

ஜெர்ரி

தூத்துக்குடி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
தௌபீஃக் ரஹ்மான்

தௌபீஃக் ரஹ்மான்

பொள்ளாச்சி
J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (239)

பூவதி

பூவதி

புங்குடுதீவு
suriyan

suriyan

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (239)

Mani Raj

Mani Raj

rashipuram
myimamdeen

myimamdeen

இலங்கை
மேலே