Tamizha Tatch Profile - தமிழன் தெட்ச் சுயவிவரம்வாசகர்
இயற்பெயர்:  தமிழன் தெட்ச்
இடம்:  chennai
பிறந்த தேதி :  20-Feb-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-May-2017
பார்த்தவர்கள்:  7
புள்ளி:  13

என்னைப் பற்றி...

கவி எழுதி

என் படைப்புகள்
tamizha tatch செய்திகள்
tamizha tatch - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 7:31 pm

நியூட்டன் ஒளி துகள் ஆகப் போகிறது என்றார், மேக்ஸ்வெல்லோ அலையாகப் போகிறது என்றார்,
ஒளி துகளாகப் போகிறதா இல்லை அலையாகப் போகிறதா என்று எனக்குத் தெரியவில்லை,
நிச்சயம் உன் முகத்தில் பட்டு பிரதிபலித்து என்னை இரை ஆக்கப் போகிறது என்பதை மட்டும் நான் அறிவேன்!

மேலும்

tamizha tatch - படைப்பு (public) அளித்துள்ளார்
31-May-2017 10:57 am

மழையோடு உன்னைத் துளி ஆக்கி,
உன் இமையோடு என்னைக் கைதாக்கி,
உன் மடியோடு தவழும் வரம் வேண்டும்.

மேலும்

tamizha tatch - kitchabharathy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2017 7:31 pm

உன்னிளம் காந்தப் பார்வையால்
என் முழு கவனத்தையும் ஈர்த்தவளே...
கள்ளம் கபடமின்றி தினம் பேசியே
நெஞ்சில் காதலை நிரப்பியவளே....
உன்னால் இன்று
தன்நிலை மறந்து
தெளிவற்றுக்கிடக்கிறேன்....
உன்னைக் கண்ட போதையில்...
நீ வரும் பாதையில்....

அழகே...
காணும் கண்களையெல்லாம் மயக்கி
தெளிவாக திரியும் நிலவே...
உன் முகவரிதான் என்ன?
செவ்வாய் திறந்து சொன்னால்...
காதல் கவிதை வரைந்து அனுப்புவேன் நானும்....!
நீதான் எனக்கு துணையாக வேணும்...

மேலும்

அன்பின் கடிதங்கள் என்றுமே உள்ளத்தை வென்று விடும் 28-May-2017 11:20 am
அருமை சகோதரா 26-May-2017 4:10 pm
tamizha tatch - படைப்பு (public) அளித்துள்ளார்
25-May-2017 3:54 pm

அணுவைத் துளைத்தான் வில்லியம் குரூக்ஸ்,
என்னை அணு அணுவாய்த் துளைக்கிறாய் நீ! ஒரு அறிவியல் ட்ரூப்ஸ்,
இது விஞ்ஞான விபரீதமடீ; பெண்ணே!
எரிக்கும் எலக்ட்ரான்கள்தானோ உன் கண்ணே!
இயற்பியல், வேதியியல் எல்லாம் சற்று ஓய்வெடுக்கட்டும்,
உன் வினை மட்டுமே என்னை இங்கு மீட்டெடுக்கட்டும்!

மேலும்

tamizha tatch - tamizha tatch அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-May-2017 11:30 pm

அவள் கண்களில் காதல் மின்னோட்ம்!
இதழ்களில் தேடல் அலைவரிசை!
எங்கள் மனதின் அலைநீளமோ தூரமில்லை!
அதிர்வெண்ணுக்கு ஒன்றும் குறைவுமில்லை!
மின் திருத்தி கொண்டு நேர்மின்னோட்டமாக உயிருக்குள் புகுந்துவிட்டாள்!

இதற்கு இடையில் அவள் அப்பன் மின்தடையாக!!
ஆக! சேர்த்து வைத்துவிட்டேன் முன்கூட்டியே எம் காதலை மின்தேக்கியாக!

மேலும்

நன்றி சகோதரா 24-May-2017 8:29 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2017 4:15 pm
tamizha tatch - படைப்பு (public) அளித்துள்ளார்
23-May-2017 11:30 pm

அவள் கண்களில் காதல் மின்னோட்ம்!
இதழ்களில் தேடல் அலைவரிசை!
எங்கள் மனதின் அலைநீளமோ தூரமில்லை!
அதிர்வெண்ணுக்கு ஒன்றும் குறைவுமில்லை!
மின் திருத்தி கொண்டு நேர்மின்னோட்டமாக உயிருக்குள் புகுந்துவிட்டாள்!

இதற்கு இடையில் அவள் அப்பன் மின்தடையாக!!
ஆக! சேர்த்து வைத்துவிட்டேன் முன்கூட்டியே எம் காதலை மின்தேக்கியாக!

மேலும்

நன்றி சகோதரா 24-May-2017 8:29 pm
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-May-2017 4:15 pm
tamizha tatch - ALAAli அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2017 1:42 pm

வெய்யோன் ஓய்வெடுக்க நிலவவன்
கண்விழித்து சோம்பல் முறிக்கும்
அந்தி மாலை வேளை

வண்ண வண்ணப் பூக்கள்
வழிந்தோடும் நீரோடை
சில்லென்று காற்று வீச
சில்வண்டு நாதம் இசைக்க
மல்லிகை மணம் தூவ
மயில்கள் நடனம் ஆட
குயில்கள் கீதம் பாட
உன்னருகே நானிருந்து
மடி மீது தலை சாய்த்து
மகிழ்ந்திருந்தால் அது போதும்
எனை மறந்திருந்தால் அது போதும்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

நன்றி கவிப்பிரிய தமிழன் தெட்ச் அவர்களே 24-May-2017 1:05 pm
அருமை 23-May-2017 10:13 pm
மிக்க நன்றி தம்பி அண்ணாதுரை ராஜா ! 23-May-2017 5:13 pm
மிக்க நன்றி கிச்சா பாரதி அவர்களே ! 23-May-2017 12:00 pm
tamizha tatch - tamizha tatch அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2017 8:20 pm

கண்மை போடும் கயல்விழியே!
உன் கார்கூந்தல் மணமறியாச் சிறுவனடீ நான்!
உன் கூந்தல் மணமறிய மறுப்பாயோ?
இல்லை, என் விரல் கோதி, இதழ் நுகரத்தான் தடுப்பாயோ?
உன் இடைக் கூட வெட்கி நானுதடீ!
என்னைக் கண்ட இன்பத்தால் செய்வதறியாது ஏங்குதடீ!
என் விரல்பட அது சிந்து பாடுதடீ!
காதல் வினையெல்லாம் அது செய்துத் துடிக்குதடீ!
இதழ்நீர் சுவையின்பம் கொடுத்துவிடு, உன் இடையிலே என்னை அள்ளிச் சேர்த்துவிடு..

மேலும்

நன்றி சகோதரா #கிச்சாபாரதி 22-May-2017 9:49 pm
அழகிய எண்ணம் எழுதுங்கள் இன்னும்... 22-May-2017 8:52 pm
tamizha tatch - thamilthaasan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2017 10:11 am

என் இதயமாளிகை,
உன் வருகையினால் திறந்தது
உன் அன்பால் குளிர்ந்தது
உன் அரவணைப்பால் உருகியது
உன் சாய்வால் பலமானது
உன் ஆறுதலால் உறுதியானது
உன் பிரிவால் சருகாகி தகர்ந்தது...

மேலும்

மிக்க நன்றி நண்பரே... 22-May-2017 9:36 am
உணர்வுகளால் எழுந்ததால் உருகிவிடுகிறது... 20-May-2017 12:25 pm
ஆசைகளால் கட்டப்பட்ட மாளிகை .இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-May-2017 8:04 am
மேலும்...
கருத்துகள்
மேலே