Thevarasa Priyanthan Profile - தேவராசா பிரியந்தன் சுயவிவரம்எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவராசா பிரியந்தன்
இடம்:  கிளிநொச்சி இலங்கை
பிறந்த தேதி :  13-Nov-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2016
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  41

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
thevarasa priyanthan செய்திகள்
thevarasa priyanthan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2017 1:35 pm

திறக்கும் உன் இதயம்.......
உனக்குள் என் காதல்
தினம் உருகுது என் சாதல்
மயக்கும் பார்வை எண்ணி
அணைக்கும் தலகணை
திறக்கும் இதயமுள்ளே
மறுக்காமல் உள்ளே
சென்றேன் பெண்னே
அக்கணம் நினைக்கும்
போதேல்லாம்
உன்னில் நான் உறைந்து
போகிறேனே

மேலும்

உள்ளத்தின் உறைதல்கள் என்றும் மீளாதவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 11:10 pm
thevarasa priyanthan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2017 1:33 pm

எழுவாய் எழுவாய் தமிழ் வாசம் பூசியே எழுவாய்
புகுவாய் புகுவாய் தமிழ் வாசல் நீ
புகுவாய்
இனிதாய் இனிதாய் தமிழ் பரப்பிட
வருவாய்
இதுநாள் இதுநாள் எம் தமிழ் வாழ்ந்திடும் நன்னாள்
தமிழ் வாழ்க தரணி போற்ற

மேலும்

தமிழின் மகிமையே நம் அடையாளம் 20-Mar-2017 11:07 pm
thevarasa priyanthan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2017 1:31 pm

புறாக்களே உங்கள் மூதாதையர்
கடிதங்களை காலில் சுமந்த
காலங்கள் வெறுமையானது நீர்
காதலில் விழுந்ததால் என்னவோ
பாடப்புத்தகத்தில் படித்தேன் அன்று
உம் வீர வரலாறு கண்டு திகைத்தேன் இன்று
போருக்கு போகும் முன் மன்னன்
தோள்களில் நிற்பவன் நீ மட்டும் தான் என்று
தூது போன புறாவே உன் காதல் தூது செல்ல
யார் வருவார் ..நான் வரவா .................
நிலையில்லா உலகில் உன் காதல்
மட்டுமே எமக்கு புதுமையாய் தெரிகிறது ஏனோ
உன் வீர வரலாற்றை தவிர

மேலும்

உண்மைதான்..சில நிதர்சனங்களின் தன்மையை யாராலும் புரிந்து கொள்ள முடிவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 11:02 pm
thevarasa priyanthan - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Mar-2017 1:29 pm

முட்கம்பி வேலிகளை
முட்டிய நாட்களை
தட்டி பார்க்கிறேன்
கம்பிகள் சிவந்தன
முதுகுகள் வலித்தன
இன்னுமே மறக்கல
பாய்ந்தும் விழுந்தும்
பதறியும் உடல் கீரியும்
பதைபதைத்து உறவுகளை
தேடிய அந்த நாட்கள்
மறைந்து ஓடியது ஆயினும்
மனத்தில் உறைந்த படியால்
மறைக்க மறுக்கிறது மனம்

மேலும்

உண்மைதான்..மண்ணுக்குள் மக்கிப் போனது உயிர்களின் ஜனனம் 20-Mar-2017 11:01 pm
thevarasa priyanthan - kavipriyai அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

தனலட்சுமி அல்லது தனலக்ஷ்மி பெயரை வர்ணித்து கவிதை எழுதுக

1) அழகு பற்றி இருக்கலாம்

2) காதல் கவிதையாக இருக்கலாம்

மேலும்

முதல் பரிசு தோழர் சுரேஷ்ராஜா ஜெ கவி ராஜா கவிதை கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே அவளை பார்த்த ஒரு நொடியில் என் இதயம் நின்றுவிட்டது நொருங்கியேவிட்டது வந்துட்டாலே என்னைப் பார்த்து வந்துட்டாளே சிரிச்சிட்டாலே என்னைப் பார்த்து சிரிச்சிட்டாளே நாணம் கொண்டாளே என்னைப் பார்த்து வெட்கப்பட்டாலே நொறுக்கிட்டாலே என்னை ஒரு நொடியில் நொறுக்கிட்டாளே திணித்துவிட்டாலே அழகால் என்னைத் திணித்துவிட்டாலே கொன்னுட்டாளே என்னைக் கொன்னுட்டாலே 19-Dec-2016 8:34 pm
eluthu./kavithai/310283 முதல் பரிசு கவிதை 19-Dec-2016 8:33 pm
அழகு எத்தனை ஆடைகள் போட்டாலும் உனக்கு மட்டும் வசீகரமாகத் தோற்றளிப்பது ஏன்! உடைகளின் நேர்த்தியால் என்னை வென்றுவிட்டாய் நீ? என்னவளே உன் கண்கள் போதும் என்னை கொள்வதற்கு? சர்வமும் சக்திமயமாகும் உன் அழகைப் பார்த்தால்? பச்சிளம் குழந்தை கூ ட உன் அழகில் தோற்றுபோகும்புடி ? உன் முகம் பார்க்க தேவையில்லை உன் பெயரைப் போதும் நீ அழகானவள் என்று சொல்வதற்கு? 10-Dec-2016 12:06 pm
மிக்க நன்றி ஐயா அவர்களே . உங்கள் தமிழ் பற்றும் பெயர் பற்றும் என்னை மகிழ்விக்கின்றன 17-Nov-2016 9:11 pm
thevarasa priyanthan - thevarasa priyanthan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Nov-2016 2:21 pm

ஏ புள்ள தனலட்சுமி
எங்க நீ போயிட்ட - நா
வாங்கிவந்த மல்லிப்பூ
வாடமுன்னே வாவனடி
கொள்ள அழகியே - உன்
கொலுசு சத்தம் கேக்குதே
மெல்ல நடந்து வா - என்
மேனி சிலுர்க்குதடி

சின்ன காதலாகி உன்னை
சிறைவைக்க காத்திருக்கு
உன்னை உறவாக்க
என் இதயம் தொறந்திருக்கே
எப்ப நீ உள்ள போவ
ஏதாவது பேசு புள்ள
வண்ண இடையுடையாள்
வந்து மனம் திறவாயோ

அப்பாடஉன்னழகு
என்னுள்ளே கலந்திட்டு
அழகான உன் வரவு
அப்படியே உறஞ்சிட்டு
உன்அழகின் காதலாகி
நின் அழகை வர்ணிப்பேன்

திரும்பி மட்டும் போகாத
திருடனாய் மாறிடுவேன்
அப்படியே இருந்துவிடு
அடி புள்ள தனலட்சுமி


தே .பிரியன்

மேலும்

thevarasa priyanthan - Sureshraja J அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2016 9:12 am

அழகாக முடியை விரித்துப்போட்டு
ஆட்டம்போடும் அழகான மோகினியாவாள்

அவள் பார்வையினில்
காந்தசக்தி உள்ளதென கண்டுபிடிக்க நாசாவும் தவறியதே

அவள் மூச்சுக்காற்றில்
கூந்தல் அசைந்தாடும் அழகை கண்டவன் செத்தான்

அவள் இதழில்
சிரிக்கவும் சிரிக்காமல் மெலிய புன்னகை அழகு

அவள் அசையும்போது
அசைந்தாடும் கம்மலும் ஓர் அழகு

அவள் விரல் நகங்களில்
எத்தனை ஆண் நெஞ்சங்கள் கீறப்பட்டுள்ளனவோ

அவள் முந்தானையில்
மின்னல் அவள் வெண்மேகமென பற்றிக்கொண்டது

மேலும்

மிக்க நன்றி தோழா 14-Nov-2016 1:44 pm
Nice 06-Nov-2016 2:27 pm
ஹா ஹா ஹா ..உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழா 05-Nov-2016 11:30 am
போதும் பெண்ணே!இனி கவிஞன் உன்னை வம்புக்கு இழுக்காமல் விட மாட்டான் 05-Nov-2016 7:35 am
thevarasa priyanthan - Sureshraja J அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2016 10:58 pm

அடியே வெள்ளை மோகினியே
அரிதாரம் பூசிய வெண்ணிலவே
அப்படி பார்க்காதேடி
உன் விழி மட்டுமல்ல
உன் மொழி மட்டுமல்ல
உன் நகக்கீறலும் கவிபாடுதே
உன் காதோர லோலாக்கும் சந்தம் பாடுது
புருவமும்
இமையும்
விழியும்
அழகுப்பார்வையும்
சங்குக்கழுத்தில் வட்டமிடுது

மேலும்

ஹா ஹா ஹா உண்மை தோழரே 04-Nov-2016 8:09 am
வெள்ளையடிச்ச கொள்ளைக்காரி இவள் 04-Nov-2016 7:30 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

abi malaysia

abi malaysia

கிள்ளான் ,மலேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (3)

abi malaysia

abi malaysia

கிள்ளான் ,மலேசியா
Sureshraja J

Sureshraja J

சென்னை
kavipriyai

kavipriyai

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (1)

abi malaysia

abi malaysia

கிள்ளான் ,மலேசியா
மேலே