உமர் - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  உமர்
இடம்
பிறந்த தேதி :  24-Jun-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Jan-2014
பார்த்தவர்கள்:  4136
புள்ளி:  1604

என்னைப் பற்றி...

என் படைப்புகள்
உமர் செய்திகள்
உமர் - ஜெனி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2023 4:22 pm

So happy to visit again

மேலும்

உமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2023 6:59 pm

நிலையில்லா ஓடத்தில்
நீயும் நானும் பயணத்தில்
நித்திரையின் ஆரம்பத்தில்
நிகழ்ந்துவிட்ட மாற்றத்தில்

முத்திரையும் பதித்துவைக்க
சித்திரமும் செதுக்கிவைக்க
கையுறையும் காலுறையும்
காணாமல் போனதென்ன

நீந்தவும் தெரியாது
நீச்சலும் அறியாது
விரைப்பான முறுக்கோடு
சிறப்பாக நீந்தி
நீர்க்கடலை பிளந்து
நீந்தியதன் மாயமென்ன..!

மேலும்

உமர் - 😍தமிழ் அழகினி✍️ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2022 8:26 am

கனவில் என்னை அர்பணிக்கிறேன்
நினைவில் உன்னை அரவணைகிறேன்
பகலில் உன்னை தேடி தொலைகிறேன்
மரணம் வரை காத்து கரைகிறேன்
இந்த காதல் என்ற ஒன்றிலே
காலம் முழுவதும் உன்னுடன் வாழ்கிறேன்



உங்கள்
😍தமிழ் அழகினி✍️

மேலும்

வழக்கம்போல இதுவும் ஒரு காதல் பதிவு தான் 21-Feb-2023 6:19 pm
அருமை..!!👌👌👌 09-Nov-2022 11:41 am
கிளவர்களையும் வாலிபர்களையும் உசுப்பேத்தி கெடுக்காதீர் என்று நீங்கள் சொல்வதை தான் நான் ஏற்க மறுகிறேன்....... தவறுகளை நான் உளமார வரவேற்கிறேன்.... அப்போதுதான் என்னுடைய தவறு எனக்கு புரியும் சரி செய்யவும் முடியும்...... இந்த எண்ணத்தில் தான் நான் கூறுகிறேன் சகோ....... 11-May-2022 8:04 am
எவரெல்லாம் எழுத்துகளைக் கற்று எழுதத்தெரிந்து எதையும் ஏழுத அத்தனையும் கவிதை என்பது வேடிக்கைக் குறியது . குறைந்தது குறள் வெண்பாவையாவது எழுதப் பழகி தமிழச்சி யாக மாறுங்கள் என்று தானே எழுதியுள்ளேன். நீங்கள் எழுதுவதை நீங்களே கவிதைஎன்று கூறிக்கொள்ளுதல் முறையல்ல . அந்த துண்டுத் துண்டு சொற்றொடர்களில் என்ன இலக்கணம் உள்ளது . .கொஞ்சமாகிலும் இருந்தால் என்ன வகைக் கவிதை என்று விளக்குங்கள் பார்க்கலாம். கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வதில் தவறொன்றும் கிடையாது. 10-May-2022 3:57 pm
பிரியா அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jun-2022 4:08 pm

என்னை அறியா மனதில் வந்தன எதிர்மறை எண்ணங்கள் ...
வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை ....
ஆனால், ஏதோ ஒன்று என்னை பின்தொடர்ந்து வருகிறது ....
என்னசெய்ய என்னுள் இருக்கும் மனதை கேட்க தான் செய்தேன் ....
மனமோ ஏதும் கூறவில்லை ....
என்ன செய்வது என்று அறியா பேதையாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் இவ்வுலகில் ....
என்ன செய்ய என்று யாரிடம் கரணம் கேட்டாலும் யாரும் கூறஇயலாது ...
என் வலி என் மனதில் மட்டுமே

மேலும்

வலிகள் விலகும் வழிகள் தோன்றும்..! வருந்த வேண்டாம் வாழ்க்கை மாறும்..!! விழிகள் பூக்கும் நிலைகள் சேரும் சிறந்த முறையில் சீக்கிரம் ஆகும்..!!! 05-Nov-2022 10:20 am
மனதின் வலியை கவிதையில் ஏற்றுங்கள். நல்ல மனமாற்றம் கிடைக்கும். 14-Aug-2022 3:55 pm
Yes..daily spking with her.....she is my energy booster always..tnx fr ur comment 01-Aug-2022 7:00 pm
உங்க அம்மாகிட்ட கொஞ்சநேரம் ஃபோன் போட்டு பேசுங்க ம்ம் .. மனசு கொஞ்சம் இதமாகும் .. 01-Aug-2022 10:51 am
உமர் - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2022 1:55 pm

Father's Day

அப்பா தினம்
அப்பாக்கள் தினம்
அப்பாக்கள் தினம் தினம்

அந்தோ.. முதியோர் இல்லத்தில்...!

மேலும்

அச்சோ...!! உண்மைதான்.!!👌 05-Nov-2022 3:53 am
உமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2022 8:26 pm

"என்னய்யா..தலைவர் குடியேறப் போற புது வீட்டுக்கு முன்னாடி இவ்வளவு போலீஸ்...என்னாச்சு..?!"



"அட நீ வேற... வீட்டு முகப்புல பேர் எழுதுன பயபுள்ள... கோதை இல்லம் னு எழுதுறதுக்கு பதிலா.. போதை இல்லம்னு எழுதிட்டான்யா..."


"அடப்பாவி..!!"

மேலும்

உமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2022 8:07 pm

"ஹலோ... திவ்யா இருக்காங்களா..?"


"திவ்யாவா...அப்படி யாரும் இல்லியே.....ப்ரியான்னுதான் இருக்கா....அவளும் வெளிய போயிருக்கா.."


"சரி...சரி...ப்ரியா வந்தா நான் போன் போட்டதா சொல்லுங்க.."


"நீங்க யாரு..?!"


"நான் னு சொல்லுங்க தெரியும்.."


"யாரு நீங்க..உங்க பேரு என்ன..?!'


"தெரியாத ஆட்கள்ட்ட பேர் சொல்லக்கூடாதுனு எங்கம்மா சொல்லியிருக்காங்க..."


"அடிங் கொய்யால......"

மேலும்

உமர் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2022 11:15 am

அதிகாலை பொழுதே...!
செல்லமாய்...
இதமாய்....
என்னவளின் இதழில்
ஒரு முத்தம் இட்டு வை...!!

அவள் கண்ணசைத்து விழித்தால்...
என் பெயரை சொல்லி...
எனை அழைத்துப் பேச..
அவள் காதில் மெல்ல ஓதி விட்டு செல்லு..

மேலும்

உமர் - ஆர் எஸ் கலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2022 1:01 pm

இடுக்கண் தலை தூக்கி
கிடுக்கிப் பிடி
பிடித்திருந்த காலத்தில்
உன்னை ஈன்று எடுத்த எனக்கு
என்ன ஒரு துன்பத்தைக்
கொடுத்து விட்டாயடா மகனே.

போர்க்களத்தில்
நீ மாண்டிருந்தால்
நெஞ்சம் நிமிர்த்தி
நான் வாழ்ந்திருப்பேன்.

வழிப்போக்கில் நீ
மாண்டிருந்தால்
தாறுமாறாக
வண்டி செலுத்திருப்பாய்
தவறு உன்னிடம் என்று
என்னை நானே
தேர்த்திக் கொண்டிருப்பேன் .

கூடி விளையாடி
கூட்டமாய் நீர்த்தாக்கில்
இருக்கும் போது மாண்டிருந்தால்.
உன்னை அறியாமல்
நடந்த விபத்து என
மனக் காயத்தை ஆத்திருப்பேன் .

நோயின் தாக்கம் கண்டு
பேயின் பார்வை பட்டு
பாயில் வீழ்ந்து மடிந்திருந்தால்
காலத்தின் தண்டனையென
ஏற்றுக் கொண்டிருப்பேன்.

மேலும்

நன்றி சகோ 17-Jul-2022 2:05 pm
அருமை..!! 16-Jul-2022 9:42 pm
நன்றி 16-Jul-2022 2:25 pm
உமர் - சக்கரைவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2019 8:06 am

கன்னமிரண்டின் உரசலுக்கு
*************************************************************************

வண்ணவண்ண வண்டினங்கள் பறந்துலவி சேர்க்கையிட
புன்னகைப் பூக்களதும் வாய்திறந்து தேனவிழ்க்க
பெண்மோகம் தூண்ட ஆணுணர்வு விஞ்சிநிற்க
சன்னலோரப் பார்வையில் என்னையிழுத்துச் சாய்த்தவளே
எண்ணங்கள் ஆயிரமாய் என்மனதை வாட்டுதடி
கன்னமிரண்டின் உரசலுக்கு உணர்ச்சிகள் கூடுகையில்
பின்னமோ உன்மனது முழுமைதான் எப்போ

மேலும்

தகா பின்னம் தகு பின்னம் ஆவதற்கும் வழியுண்டு . தன்னால் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா 16-Feb-2019 3:36 pm
இது தகா பின்னம் ஐயா..!! 16-Feb-2019 11:31 am
உமர் - உமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Sep-2018 11:22 am

வாலிப வண்ணத்தின் ஓவியமே நீ
மானிட எண்ணத்தின் காவியமே நீ
ஜானிடை மெல்லியதின் தங்கமே னி
வானடை மழைதன்னின் மேகமே னி

காலத்தின் வேகத்தில் நொடிமுள்ளே நீ
காதலின் மோகத்தில் பனைகள்ளே நீ
பேரிடர் மோதலின் பனிப்பூவே நீ
கோரிடும் வறியோர்க்கு செல்வமே நீ

வந்திடுவாயோ...மணம் தந்திடுவாயோ...மனம்
வென்றிடுவாயோ...வனம்
மாற்றிடுவாயோ...சுமை
போக்கிடுவாயோ..சுகம்
கூட்டிடுவாயோ.. எமைச்
சேர்ந்திடுவாயோ...!!
.........................................................
கருத்திலே கள்ளூற்றி கவிதைகள்
நீ பாடி
பொருத்தவா பார்க்கிறாய் பொய்களை நீ கூட்டி...!

சிக்கமாட்டேன் சிங்காரி நான்...
சிப்பாயின் வழிமகள் நான்...!

மேலும்

உமர் - உமர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2018 7:31 am

வார்த்தைக்குள் வசப்படாத என்
வரலாற்றின் வத்திக்குச்சியே...!
உன் போதையில் என் பாதை
மறந்துவிட்டேன்...!

உன் கண்ஜாடையில் என் காலம் கடத்திவிட்டேன்..!
உன் கைத்தாங்கலில் நான் இமயம்
அடைந்துவிட்டேன்..!

மண் பொருளாய் இருந்த என்னை
மென்பொருள் போல் ஆக்கிவிட்டாய்
பொன் பொருளாய் மாற்றிவிட்டாய்.!

மந்திரமொழி மங்கையே...!மயக்கும்
எந்திரனின் தங்கையே..! மன்னவனின் மடிமீது உடல் கிடத்தி
ஒட்டியிருந்தாலும்.... தூரம் எங்கு
சென்றாயோ....உயிர்பிரிந்தே....!
சொல்வாயோ....சொல்லாமல் எனைக் கொல்வாயோ...!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (256)

பிரியா

பிரியா

பெங்களூரு
user photo

வீரா

சேலம்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
user photo

பசுபதி

புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (257)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Abinaya

Abinaya

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (256)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே