Velayutham Avudaiappan Profile - வேலாயுதம் ஆவுடையப்பன் சுயவிவரம்தமிழ் பித்தன்
இயற்பெயர்:  வேலாயுதம் ஆவுடையப்பன்
இடம்:  KADAYANALLUR
பிறந்த தேதி :  06-May-1950
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Jul-2015
பார்த்தவர்கள்:  1426
புள்ளி:  1216

என்னைப் பற்றி...

இந்திய ரயில்வே மருத்துவ துறை மருந்தாக்கியல் பிரிவில் 37 ஆண்டுகள் பணிrnசெய்து 2011 ஒய்வு பெற்றுள்ளேன்.rnமருந்தாக்கியல் துறை பட்டப்படிப்பு மதுரை மருத்துவக் கல்லூரியில் 1972 முடித்தேன். தனியார் துறையிலும், 1ஆண்டூ பணி புரிந்தேன் 1974 முதல் 2011 வரை இந்தியன் ரயில்வே மருத்துவத்துறையில் 37 ஆண்டுகள் பணி புரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் .தமிழ் இலக்கியம், சுற்றுலா ,வீர விளையாட்டு, .இதழியல், போன்ற பல துறைகளில் ஆர்வம் உண்டு . நன்றி வணக்கம்

என் படைப்புகள்
velayutham avudaiappan செய்திகள்

கோவைக்கு வரும்மேலும்

 கோவை ஈஷா கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை அமைத்ததில் விதிமீறல்களா?- விழாவில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ளது ஈஷா யோகா மையம். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்துக்கு உட்பட்ட இந்தப் பகுதி, மலைதள பாதுகாப்புக் குழுமத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதியாகும். இதனால், இப்பகுதியில் கட்டிட கட்டுமானம் மேற்கொள்ள அதிக விதிமுறைகள் உள்ளன.

இந்நிலையில், தற்போது உலகிலேயே மிகப்பெரிய திருமுகமாக 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி இந்த சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்க உள்ளார். இந்த சிலை அமைத்ததில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகவும், திறப்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளக் கூடாது என்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் சி.ஹெச்.பெரோஷ் பாபு கூறியதாவது: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை அனுமதிக்கக் கூடாது. பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துள்ளனர். யானைகளின் வழித் தடத்தை மறித்து, கட்டிடங்களைக் கட்டியுள்ளனர். இதுதவிர, தடையில்லா மின்சார இணைப்பு பெற்றுள்ளனர். தற்போது 112 அடி உயர சிலையை அமைப்பதற்காக ஏராளமான மரங்களை வெட்டியுள்ளனர்.

எனவே ஆதியோகி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதை பிரதமர் தவிர்க்க வேண்டும்.

நீதிமன்றத்தில் வழக்கு

இது தொடர்பாக, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இக்கரை போழுவம்பட்டி கிராமத்தில் 3 ஏக்கரில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிலை அமைக்க, விதிகளை மீறி கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. சிலைக்காக 300 சதுர மீட்டர் பரப்புக்கு விளைநிலங்களை மாற்ற ஆட்சியர் அனுமதித்துள்ளார். ஆனால் விதிகளை மீறியும், வனம், சுற்றுச்சூழல், நகர ஊரமைப்புத் துறைகளின் அனுமதி பெறாமலும் கட்டிடங்களை கட்டுகின்றனர். எனவே, கட்டுமானங்களுக்கு தடை விதித்து, சட்டவிரோத கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று, வழக்கு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இந்த விழாவில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

எனினும், எதிர்ப்புகளை மீறி இந்த விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

ஈஷா விளக்கம்

இதுகுறித்து ‘ஈஷா’ தரப்பில் கேட்டபோது, ‘‘ஈஷா யோகா மையம் எந்தவித சட்ட விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. சிலை மற்றும் கட்டிடங்களுக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. குற்றம் சுமத்துவோர் நீதிமன்றத்தை நாடலாம். மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், இதுகுறித்து பதில் அளிப்பது சரியாக இருக்காது. ஈஷா மீதான புகார்கள் முற்றிலும் தவறு’’ என்றனர்.
மேலும்

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்பேராசிரியர் ந. கிருஷ்ணன் வான்கலந்த மாணிக்கவாசகம் சிவபெருமானைத் ‘தலைவா’ என்றழைத்தார் மணிவாசகர். வருங்காலத்தில் யாரும் யாரையும் ‘தலைவா’ என்றழைக்கும் அவலங்கள் நடக்கும் என்பதை மணிவாசகர் உணர்ந்திருந்தாரோ என்னவோ? இறைவனை வெறுமனே தலைவா என்று அழைக்காமல், “தன்மை பிறரால் அறியாத தலைவா!” என்னும் அடைமொழியுடன் ஒரு அற்புதமான திருவாசகம் அருளினார். இத்திருவாசகத்தில் உலகத் தலைவர்களுக்கும், இறைவனாகிய தலைவனுக்குமான வேறுபாடுகளை வெகுஅழகாக விளக்கியுள்ளார்.

உலகத் தலைவரின் தன்மை

உலகத் தலைவரின் தன்மை முழுவதும் அவர் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வெளிப்படையாகத் தெரியும். விரும்பி உண்ணும் உணவு, விருப்பமான உடை, நிறங்கள், எந்த நேரம் எங்கே இருப்பார், யார் பரிந்துரை செய்தால் அவரிடம் காரியம் சாதிக்க முடியும் போன்ற அத்தலைவரின் குணம், செயல்கள் அனைத்தும் அவரின் கடைநிலைத் தொண்டனுக்கும் தெரியும். ஆனால் அத்தலைவருக்கோ, தன்னுடைய மக்கள், தொண்டர்களைப் பற்றியும், அவர்தம் குணம், செயல்கள் பற்றியும் எதுவும் தெரியாது.

இறைவனாம் தலைவனின் தன்மை

இறைவனின் தொண்டர்களுக்கோ, தம் தலைவன் எப்படி இருப்பான்; எப்போது தோன்றுவான்; எங்ஙனம் அருள்வான்; எங்கு இருக்கிறான் போன்ற தன்மைகள், சிறப்பு விவரங்கள் எதுவும் தெரியாது. ஆனால், இறைவனாகிய தலைவனோ, தன் தொண்டர்கள், மக்கள் அனைவரின் குணங்கள், செயல்கள் உள்ளிட்ட அனைத்துத் தன்மைகளையும், விவரங்களையும் நன்றாக முழுவதும் அறிவான்; ‘அவனன்றி ஓர் அணுவும் அசையாது’ என்பதற்கேற்ப ஒவ்வொரு உயிரின் உள்நின்று உணர்பவன் இறைவன். இந்த நுட்பத்தையே ‘தன்மை பிறரால் அறியாத தலைவா’ என்று இறைவனுக்குச் சிறப்பு இலக்கணமாகக் குறிப்பிட்டார் மணிவாசகர்.

ஆட்கொண்டபின் புறமே போகவிடுவாயோ?

தம்மை ஆட்கொண்ட தலைவனாம் இறைவனுக்கு ஏற்ற அடியவருக்கு வேண்டிய பண்புகள் தம்மிடம் சிறிதும் இல்லை என்று வருந்தினார் மணிவாசகர்; பிறப்பினால் இழிந்த நாய், நன்றி என்னும் குணத்தால் உயர்ந்தது. தம்மை ஆட்கொண்ட இறைவனுக்கு நன்றியுடையவனாக இருக்கும் பண்புகூட இல்லாத (புன்மை) சிறுமையுடையவன் என்று உணர்த்தவே “பொல்லா நாயான புன்மையேனை” என்ற சொற்களால் குறிப்பிட்டார்.

“எனக்குத் தகுதி இல்லை என்பதால் ஆட்கொள்ளாமல் விட்டிருந்தால் ஒரு கேள்வியும் இல்லை! தகுதி இல்லாவிட்டாலும், உன்னுடைய பேரருள் காரணமாக என்னை ஆட்கொண்ட பெருமை உடையவன் நீ! அந்தப் பெருமைக்கு இழுக்கு வராமல் என்னைப் புறம் போக விட மாட்டாய்” என்பதைக் குறிப்பால் சொல்லவே “ஐயா! ஆண்டு, புறமே போக விடுவாயோ?” என்றார். “அவ்வாறு நீ என்னைக் கைவிடுவாயானால்,எனக்கு வேறு கதி இல்லை! பொன்மயமான திருமேனியை உடைய என் தந்தையே! எங்கே நான் அடைக்கலம் புகுவேன்?”, என்று இறைவனிடம் உருகி முறையிடுகின்றார் பெருமான். இறைவனை உருக்கிய இத்திருவாசகத் தேன் நம் கண்களைக் குளமாக்குகின்றது.

தன்மை பிறரால் அறியாத தலைவா! பொல்லா நாயான

புன்மையேனை ஆண்டு, ஐயா! புறமே போக விடுவாயோ?

என்னை நோக்குவார் யாரே? என் நான் செய்கேன்! எம்பெருமான்!

பொன்னே திகழும் திருமேனி எந்தாய்! எங்குப் புகுவேனே!

– திருவாசகம்:திருச்சதகம்:59.

தலைவனாகும் தகுதி

பிற உயிர்களுக்கு ஏற்படும் துன்பங்களைத் தனக்கு நேர்ந்த துன்பங்களாக எண்ணி, அவ்வுயிர்களைக் காப்பாற்றா விட்டால் ஒருவன் தான் பெற்றுள்ள அறிவினால் ஆகக்கூடிய பயன் ஒன்றுமில்லை என்பது வள்ளுவம். நான், எனது என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து, பாதிக்கப்பட்டோர் யாருக்காகவும், அந்தப் பாதிப்பு தனக்கே ஏற்பட்டதென்று வருந்தி அழுகின்றவனே மனிதன்; அவனே தலைவனாவதற்கும் தகுதியானவன் என்று கவியரசு கண்ணதாசனின் ஒரு கவிதை அழகாக வரையறுக்கின்றது:

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ...

யாருக்கென்று அழுதபோதும் தலைவனாகலாம்!

வையத்துள் சகமனிதர்களுக்காகத் தொண்டுசெய்து வாழ்வாங்கு வாழ்ந்தவனே வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறான் என்பது வள்ளுவர் கருத்து.

பொய்த் தெய்வங்கள்

தகுதியற்றவர்களைத் தெய்வமாகவும், தலைவராகவும் ஏற்றுக்கொள்ளும் அறியாமைப் போக்கைக் கண்டு மனம் பதைத்து நொந்த மணிவாசகர், வண்டினத்தின் அரசனான அரச வண்டைத் தன் தலைவனிடம் தூது விடுகின்றார்: “அரச வண்டே! ‘அந்தத் தேவர்களுக்கெல்லாம் தேவரான அவரே கடவுள்’ என்று கடவுள் அல்லாத பொய்யர்களை எல்லாம் கடவுள் என்று புலம்புகின்ற மக்கள் நிறைந்தது இவ்வுலகம்; உலகப் பற்று சிறிதுமின்றி, என்னுடைய பற்றுகள் அனைத்தும் நீங்கும்படிக்கு, நான் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிற உண்மையே வடிவான தேவர்பிரானிடம் போய் என் நிலையைச் சொல்வாய்” என்றார்.

அத்தேவர் தேவர் அவர்தேவர் - என்று இங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற

மெய்த்தேவர் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ.

( திருவாசகம்: திருக்கோத்தும்பீ)

(கோத்தும்பீ - அரச வண்டே! பத்தேதும் இல்லாது - உலகப்பற்று சிறிதுமின்றி)

இறைவன் அல்லாத ஒருவரைக் கடவுள் என்பதும், நிரந்தரத் தலைவர் என்பதும், காரியம் சாதித்துக் கொள்வதற்காகக் கூறப்படும் பொய் உபசாரமே என்று சொல்லவே, ‘பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே’ என்றார்.

உலகப் பற்றை விடுவதற்கு இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை, ‘பத்தேதும் இல்லாது என் பற்றுஅற நான் பற்றி நின்ற மெய்த்தேவர்’ என்றார். ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு’ என்பது வள்ளுவர் வாக்கு.

மனிதன் தெய்வமாதல்

உயிர்களின் அறியாமையைப் போக்கவே, அவற்றுக்கு உடல், உலகம் போன்றவைகளைப் படைத்து, அவைகளுடன் வாழ்கிறான் இறைவன்; உயிர்கள் தம்மை உணர்ந்து, தம் தலைவனாகிய இறைவனை அழைக்கும்போது வெளிவந்து ஆட்கொண்டு அருள்கிறான். வேண்டுதல், வேண்டாமை இன்றி, அனைவருக்கும் அருளும் இறைவனே உண்மையில் உயிர்களின் தலைவனாவான். “தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா” என்ற கவியரசு கண்ணதாசனின் வாக்குப்படி, இறையனுபவத்தைத் தாமும் அறிந்து, உலகுக்கும் சொன்ன மணிவாசகர் நம் தலைவராவார்.

:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)மேலும்

shrilordsivasakthi அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று மகா சிவராத்திரி லட்ச தீபம்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி லட்சதீப பெருவிழா நடைபெறுகிறது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி , அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
லட்சார்ச்சனை, லட்ச தீபம்: அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பகல் 12.05 மணிக்கு அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை அபிஷேகம் நடைபெறுகின்றன.மேலும், மாலை 5 மணி முதல் கோயிலில் லட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் நான்காம் பிரகாரத்தில் பைரவர் சந்நிதி அருகே உள்ள பிரம்ம தீர்த்தக் குளத்தில் மாலையில் திரளும் பெண்கள், சிறுவர்கள் லட்ச தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
நான்கு கால அபிஷேகம்: மகா சிவராத்திரியன்று நான்கு கால அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரருக்கு முதல் கால அபிஷேகம், இரவு 11 மணிக்கு 2-ஆம் கால அபிஷேகம், சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. கோயில் மூலவர் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள லிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாழம்பூவை அணிவித்து நடத்தப்படும் சிறப்புப் பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறுகின்றன.
கலை நிகழ்ச்சிகள்: வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் சனிக்கிழமை காலை வரை கோயில் கலையரங்கில் பரதநாட்டியம், தேவாரப் பாடல்களின் இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
சங்கல்பத்துக்கு 150 பேர் அனுமதி: லட்சார்ச்சனையின் முதல் பகுதியாக சங்கல்பத்துக்காக 150 பேர் சண்டிகேஸ்வரர் சந்நிதி அருகே அனுமதிக்கப்படுவர். லட்சார்ச்சனைக்கான அனுமதிச் சீட்டு வைத்திருக்கும் பக்தர்கள், துர்க்கையம்மன் சந்நிதி அருகே சங்கல்பம் செய்து, வில்வ குவளையை அர்த்த மண்டபத்தில் குருக்களிடம் ஒப்படைத்து சுவாமி தரிசனம் செய்ய அனுப்பப்படுவர்   பக்தர்கள் அனைவரும் 2-ஆம் பிரகாரத்தில் வலம் வருவதை தவிர்த்து, 3-ஆம் பிரகாரத்தில் தல விருட்சமான மகிழ மரத்தை சுற்றி வலம் வரலாம்.
அனைவரும் தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக, அர்த்த மண்டபத்தில் அபிஷேக கட்டளைதாரர்கள் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். லட்ச தீபம் ஏற்ற கிளிகோபுரத்துக்கு வெளியே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது     

மேலும்

velayutham avudaiappan - velayutham avudaiappan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2017 8:00 pm

There is a clever tactic adopted by powerful people in Coorg, and elsewhere - when environmentalists oppose them, they try to destroy the credibility of those environmentalists by calling them 'False environmentalists' (Dongi Parisaravadhi in Kannada).

These Green Warriors are accused of getting foreign funds and working only to make money money for themselves and not really because they have concern for the environment.

Yes there may be such organisations, so they should be investigated and those found guilty should have action taken against them. But all environmentalists cannot be cal

மேலும்

தங்கள் கருத்துக்களுக்கு மனமார்ந்த நன்றி (Thanks for your reply.) நம் நட்புப் பயணம் தொடர ஆவல் 24-Feb-2017 4:40 am
Thank you Velayudham sir, for focussing on a very important topic of concern, namely, on environment and environmentalists and pseudo-environmentalist,who pose as specialists interfering in managing major issues on environment of the state and the country. special reference to Coorg in Karnataka. 23-Feb-2017 8:54 pm
Geeths அளித்த கேள்வியில் (public) nithyasree மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2017 5:36 pm

கணவன் ஒருவன் குடும்ப பிரெச்சனைகள் காரணமாக தன் மனைவி மற்றும் தனது ஒரு வயது குழந்தையை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

பஞ்சாயத்துகள் பல. பணம் தான் காரணம். நன்றாக நடந்த திருமணம் தான். கணவன் குடும்பத்தில் 4 பெண்பிள்ளைகள். பெற்றோர் பொறுப்பற்றவர். ஆயினும் 4 சகோதரிகளுக்கும் நல்ல வரன் பார்த்து கல்யாணம் முடித்தனர். அனைவரும் நன்கு செட்டில் தான். கடன் பாக்கிகள் பல.

மனைவி செல்வந்தினி சம்பளம் கணவனை விட உயர்வு. கல்யாணம் முடிந்தது. குடும்பத்திற்குள் சகோதரிகளின் ஊடுருவல், மாமனார் மாமியார் மகன் சம்பாத்தியம் முழுவதும் செலவு செய்யவே பார்க்கின்றனர். சேமிப்பு கிடையாது. சந்தோசமாக தான் சென்றது வாழ்க்கை. பெண் தன

மேலும்

தனியே சந்திக்க பல தடவை முயற்சிகள் செய்தும் தோல்வியே. பேசவேண்டும் என்று சொன்னாலே சண்டை தான் வருகிறது. எதையும் புரிந்து கொள்ளும் சக்தி இல்லை. முகத்தில் வெறுப்பு, பகை தான் தெரிகிறது. கேட்ட வார்த்தைகள் பல என்ன செய்ய.. 23-Feb-2017 6:31 pm
மகளிர் நல சங்கங்கள் மூலம் போராடி நல்ல தீர்வு பெற முயலவும் புதுமைப் பெண் போராட்டம் வெல்ல பாரதியின் ஆசிகள் 23-Feb-2017 6:24 pm
உண்மையான காதலும் அன்பும் என்றும் தோற்காது தோழி. அழுவதை முதலில் நிறுத்துங்கள் மனம் தெளிவடையும். அழுவதால் எதும் மாறப்போவதில்லை. நடந்தவைகள் எல்லாம் ஏற்படுத்திய காயங்கள், வருத்தம், ஏமாற்றம், கோபம் என உங்களுள் இருக்கும் ஆதங்கத்தை சற்று தள்ளி வையுங்கள். சற்று மனதை அமைதிபடுத்தி நிதானமாக சிந்தியுங்கள். இது உங்கள் வாழ்க்கை யார் வந்து பஞ்சாயத்து பண்ணுவதால் என்ன இருக்கிறது தோழி சேர்த்து வாழப்போவது நீங்கள் இருவர் தானே. தங்கள் கணவரிடம் சென்று அழுவதாலோ அவர் நண்பர்களிடம் கெஞ்சுவதாலோ அவர் மனதை எப்படி மாற்ற முடியும். அவரும் சகோதரிகளுடன் வாழ்பவர் தான் இது போன்ற நிலை தனது சகோதரிக்கு நேர்ந்தால் என்று யோசித்திருந்தால் இந்த தவற்றை செய்திருக்க மாட்டார். நீங்கள் உங்கள் கணவரை தனியாக சந்தித்து பேச முயற்சி செய்யுங்கள் திடீரென்று முன்னால் போய் நில்லுங்கள் சிறிது நேரம் பேச வேண்டும் என சொல்லுங்கள் எக்காரணம் கொண்டும் கண்ணீர் வடிக்காதீர்கள் உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லுங்கள் அவர் மனதில் என்ன இருக்கின்றது என தெரிந்து கொள்ளுங்கள் தாய் சொல்லை கேட்கும் பிள்ளையாக இருந்தாலும் நியாயம் என்று இருக்கிறதே அதை புரிய வையுங்கள் மனைவியை குழந்தையோடு விட்டுச் செல்வது நியாயம் அல்லவே வாழ் நாள் முழுவதும் சேர்ந்தே வாழ்வோம் என்று திருமணப் பந்தத்தில் இணைந்தவர்கள் வாழ்வை தொடக்கத்திலே முடித்துக் கொள்ளலாமா. விவாகரத்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை கை விடுங்கள் அல்ல அது தான் உங்கள் முடிவு என்றால் சற்று தள்ளி போடுங்கள். உங்கள் கணவரிடம் மனம் விட்டு பேச முயற்சித்து பாருங்கள் உங்கள் குழந்தையின் எதிர் காலம் பற்றி யோசிங்கள். பின் நிதானமாக முடிவெடுங்கள். குழந்தை அப்பா என்று எப்பொழுது அழைக்கும் என்று ஏங்கும் மனம் ஆண்களுக்கு உண்டு தான் ஆனால் குழந்தையை வந்து பார்க்க கூட வரவில்லை என்கிறீர்கள் அப்படி என்ன கோபமோ அதை நீங்கள் பேசிப்பார்த்தால் தான் தெரியும். முயற்சித்துப் பாருங்கள். மனம் தளராதீர்கள் பேசிப் பாருங்கள். 23-Feb-2017 5:32 pm
முயற்சி செய்து பாருங்கள்... courier யாரிடம் இருந்து வந்தது தெரியாமல் அனுப்பி பாருங்கள்.... குழந்தையின் முகத்தை பார்த்தால் மனம் மாற வாய்ப்பு உள்ளது. 23-Feb-2017 2:57 pm
velayutham avudaiappan - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2017 1:48 pm

அழிந்து வரும் பாரம்பரியம்


அழிந்துவரும் பாரம்பரியம்
அழியாமல் காத்திடுவோம் .
பழையசோறும் பச்சைமிளகாயும்
பங்கிடுவோம் பலருக்கும் .
கழிந்தனவே வாழ்க்கையுமே
காலம்தான் மாற்றியதோ !
பழகியதோர் நல்வாழ்க்கை
பரிதவித்துப் போனதுவே !
அழகியநாள் அற்றைநாள்
அனுபவிக்க இனிவருமா !!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் ------------------ போற்றுதற்குரிய அரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தமிழ் மொழியோடு கலாச்சாரம், பண்பாடு விருந்தோம்பல் என நம்முன்னோர்கள் கட்டிக்காத்த நம்முடைய அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து வருகிறான் தமிழன். அப்போது, அதாவது நம் முன்னோர்கள் தமிழர் காலாச்சாரத்தில் பல பாரம்பரியங்களை கட்டிக்காத்தனர் ஆனால் இன்று இருக்கின்றதா? அவை காக்கப்படுகின்றதா?? விருந்தோம்பல் கூட வேவையில்லை தமிழர் பாரம்பரிய உணவு முறை இப்போது தமிழர்களிடன் இருக்கின்றதா? இல்லை என்பது கொஞ்சம் வேதனைத்தான் அன்றாடம் வேண்டாம் வருடத்திற்கு ஒரு முறையாவது. அடையாளங்களையும் சேர்த்தே. இன்று தமிழன் என்ற போர்வையில் போலி வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது அவரவர் மனசாட்சிக்கு நன்றாக தெரியும். வெளியே சொல்ல வேண்டாம் எமது இனத்தை நாமே கேவலப்படுத்துவது போலாகி விடும். தொன்மையான நமது நாகரிகத்தையும்மொழியையும், பழக்க வழக்கத்தையும் நாமே அழித்து விடும் நிலைக்கு தள்ளப்படுவோம். அல்ல அல்ல இப்போது அழித்துக் கொண்டே வருகின்றோம். நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்கள் பாரம்பரியங்களையும், வருங்கால சந்ததிகளுக்கும் கற்றுக் கொடுப்போம். தமிழருக்கே உரிய அடையாளங்களை தொலைத்துக் கொள்ள வேண்டாமே. இல்லாவிடின் பிறக்கும் உண்மையான தமிழ் குழந்தை நீயும் தமிழனா ? என்ற கேள்வியை கேட்டு விடும். 23-Feb-2017 6:15 pm
நிச்சயம் இல்லை.கடந்தவை வெறும் நினைவாகவே வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கிறது 23-Feb-2017 11:15 am
velayutham avudaiappan - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Feb-2017 4:01 pm

சிறைக்குள்ளே அடைத்துவிட்டால் சிங்காரமாய் பேசுதலும்
மறைபொருளாய் எனைவைத்து எதிர்காதல் கணிக்கின்றார் .
பறையடித்துச் சொல்லிடவும் முடியாமல் நான்பரிதவிக்க
முறைதானோ இதுவும்தான் முகவரியும் எனக்கெங்கே !!!


பறந்தோடித் திரிந்தேனே பலர்காண அகம்மகிழ்ந்தேன்
திறந்துவிடவும் ஆளின்றி கூண்டினுள்ளே கிடக்கின்றேன்.
மறந்தனரே மனிதநேயம் மானிடரும் ஈங்கின்றே !
உறவுகளும் எனைத்தேட உணர்ச்சியினால் அழுகின்றேன் !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

போற்றுதற்குரிய கவிதை பாராட்டுக்கள் ----------------------------------------------------- திறந்துதான் விடுங்களேன் சுதந்திரமாய் வாழட்டும் தவறு செய்யாமலேயே சிறை வாசத்தில் ஆயுட் கைதியாய் அடைபட்டுக் கிடக்கிறது பறவைகள்!! 23-Feb-2017 5:58 pm
நன்று 23-Feb-2017 4:02 pm
velayutham avudaiappan - muraiyer69 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Feb-2017 4:56 am

இனிய காலை வணக்கம்,  சீமை கருவேல மரங்கள் அதிக நீரை உறிஞ்சும் என்பதால், நீர் வளத்தை காக்க அந்த மரங்களை வேரோடு வெட்டிவிடலாமே - மு.ரா.

மேலும்

ஆம் நிச்சயம், பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி - மு.ரா. 24-Feb-2017 9:20 pm
ஆம் நிச்சயம் நன்றியை காணிக்கை ஆக்குகிறோம் தங்களுக்கும் .... மு.ரா. 24-Feb-2017 9:19 pm
கருவேலம் வேறு, சீமை கருவேலம் வேறு என்று நினைக்கிறேன். சீமை கருவேல மரங்களை வெட்டுவதால் பலன் இல்லை, முழுவதும் தீயிட்டு எரித்தால் தான் அழியும் என்கிறார்கள். மண் வளத்தையும் நீர் வளத்தையும் மொத்தமாக நாசம் செய்தது இதுதான். தமிழகத்தில் நிறைய இடங்களில் மாணவர்கள் இளைஞர்கள் கருவேல மரங்களை அகற்றி வருகிறார்கள். நம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். நன்றி, தமிழ் ப்ரியா 24-Feb-2017 6:22 pm
அய்யா இது நச்சுமரம். கெடு தரும் அனைத்தையும் நசுக்கி எறியவேண்டும். பட்டாசு போன்ற வெடிப் பொருட்களை வெடித்தும் கொளுத்தியோம் ஆனந்தப்படுவோர் அனைவரும் இயற்கை அன்னையின் பகைவர். 24-Feb-2017 4:41 pm
karthika su அளித்த போட்டியை (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
பெண்மையின் அழகு நடைஉடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்

பெண்மையின் அழகு நடை உடை பாவனை பற்றி காதல் கவிதைகள் எழுதவும்

திமிர் பிடித்த பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மௌனமாக இருக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

அழகான பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

முறைக்கும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

புடவை கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

தாவணி கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

சுடிதார் கட்டும் பெண்ணுக்கு காதல் கவிதை எழுதவும்

மேலும்

போட்டியின் முடிவு எப்பொழுது வெளியாகும்? 21-Feb-2017 11:22 pm
போட்டியின் முடிவிற்காக காத்திருக்கிறோம் 20-Feb-2017 12:06 pm
போட்டியின் முடிவுகள் இன்னும் அறிவிக்கவில்லை. முதல் பரிசு பெற்றவர்கள் மற்றும் அவர்கள் கவிதை??? 15-Feb-2017 8:27 am
சிறந்த தலைப்பை தந்து எங்கள் திறமைக்கு தூண்டுகோல் அளித்தமைக்கு நன்றி ... 03-Feb-2017 10:57 pm
velayutham avudaiappan - Uthayasakee அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jan-2017 11:15 pm
உன் கடந்த கால உறவு

.................உன் கடந்த கால உறவு................

உன் கடந்த காலப் பக்கங்களை கவிதையாய் அலங்கரித்தவள்...
எழுத்துப் பிழைகளின் கலப்படத்தில் கனவுலகச்சிறையினுள்ளே மாட்டிக் கொண்டேன் சிறைக்கைதியாய்....!

இறந்த காலத்தின் நினைவுகளில் உன் உறவென்னும் முகவரியைச் சுமந்தவள்
நிகழ்கால நிதர்சனத்தில் மாயச்சுவரின் மேலே ஒட்டிக் கொண்டேன் வண்ணமில்லாத ஓவியங்களாய்....!

மழைத்துளிகளாய் சங்கமித்த காதல் புல்லில் விழுந்த பனித்துளிகளாய் மறைந்தது...
உறக்கம் தொலைத்த இரவுகளெல்லாம் கண் முன்னே தோன்றிடும் விமர்சனங்களாய் ஆனது...!

கண்ணீரில் கரைந்த சுவடுகள் காற்றாய் தொடர்கிறது உன் காலடித்தடங்களை...
விழிகள் மட்டுமே

மேலும்

கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:39 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:38 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:38 pm
கருத்தாலும் வருகையாலும் மனம் மலர்ந்தேன்.....என் இனிய நன்றிகள்.. 08-Feb-2017 8:38 pm
velayutham avudaiappan - RAJENDRAN SIVARAMAPILLAI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Nov-2016 1:39 pm

                     “சந்தோசமான வாழ்வு” - வாழ்க்கையில் நாம் தினம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கிறோம். சில பிரச்சினைகள் நம்மை நிலைகுலைய வைத்துவிடுகின்றன. இதை மனதில்கொண்டு "மனஅழுத்தம் உள்ளத்தின் எரிமலை" என்னும் தொடர் பேச்சின் மூலம் வாரம் 2  நாள்கள் திங்கள் மற்றும் வியாழன் உங்களை சந்திக்கவிருக்கிறேன். 1  அறிமுகம் - https://youtu.be/1H4J2e5RClg   20.10.2016 2 மனஅழுத்தம் என்றால் என்ன?   https:/ /youtu.be/_ZcVAT6wu (...)

மேலும்

விரைவில் அவன செய்கிறேன். நன்றி 10-Feb-2017 4:39 am
ஆங்கிலத்திலும் தமிழிலும் 58 பகுதிகள் :-- மின்னஞ்சலில் அனுப்பவும் நேரில் சந்திக்க விரும்புகிறேன் தற்காலிமாக whatsapp பயன்பாடு நீக்கி உள்ளேன் 9444286812 நன்றி 08-Feb-2017 6:27 pm
Inspiration 23-Jan-2017 8:42 am
தங்களை போன்ற பிரபல மருத்துவர்களின் பாராட்டு என்பது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். பலமுறை நான் நினைத்ததுண்டு என்னுடைய கருத்துக்களை மனோதத்துவ வல்லுநர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று. இன்று தங்களின் பதில் மூலம் அதற்கு விடை கிடைத்தது. என்னுடைய youtube link I shall send email ஆங்கிலத்திலும் தமிழிலும் இதுவரை 58 பகுதிகள் வெளியாகியிருக்கிறது. இனி தங்களின் கவனத்திற்கு கொண்டுவர தங்களின் கைபேசி எண் எனக்கு அனுப்பினால் whatsapp மூலம் நண்பர்களுக்கு அனுப்புகிறேன் . Please subscribe to my youtube channel, no charges, but will be informed automatically. Thank you so much Dr You have made my day great. Your appreciation is a great source of inspration. May God Bless you. PI have send a separate email also. 23-Jan-2017 8:39 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

Shreegoutham

Shreegoutham

பெரம்பலூர்
AnbudanMiththiran

AnbudanMiththiran

திருநெல்வேலி, தமிழ்நாடு
paaka

paaka

madurai
manidhayal

manidhayal

மயிலம்

இவர் பின்தொடர்பவர்கள் (111)

Geeths

Geeths

கோவை
kitchabharathy

kitchabharathy

சென்னை
Gayani Thirustika Jayaraman

Gayani Thirustika Jayaraman

Sri Lanka- Colombo

இவரை பின்தொடர்பவர்கள் (114)

kayal vilzhi

kayal vilzhi

இலங்கை
jonesponseelan

jonesponseelan

தென்காசி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே