Vellurraja Profile - வெள்ளூர் ராஜா சுயவிவரம்பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  வெள்ளூர் ராஜா
இடம்:  விருதுநகர் (மா) வெள்ளூர்
பிறந்த தேதி :  02-Jun-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jan-2013
பார்த்தவர்கள்:  3854
புள்ளி:  1978

என்னைப் பற்றி...

விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் என்னும் சிறு கிராமம் சொந்த ஊர்...தற்போது பணியாற்றுவது சென்னையில்...நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை...நீர்ச்சுழியில் சிக்கிய சருகாக மனதில் உழலும் எண்ணங்களை எழுத்தாக்கும் முயற்சி...முயற்சி மட்டுமே... எழுதுவது வாசிக்கும் படி இருந்தால் மகிழ்வேன் இல்லையெனின் உங்களின் நேரத்தை வீணடித்ததற்கு மன்னிக்கவும்..!

என் படைப்புகள்
vellurraja செய்திகள்
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Mar-2017 2:15 pm

எங்கேநீ சென்றாயோ என்றுளம் வாடுதே
தங்கயிட மின்றித் தவித்தாயோ ?- சிங்காரச்
சிட்டேவுன் கீச்சென்ற செல்லச் சிணுங்கலில்
மெட்டியொலி யும்தோற்கு மே !

சிறகடிக்கும் சின்னஞ் சிறுசிட்டே நீயும்
பறந்துசென்ற தெங்கே பகர்வாய் ! - மறவாமல்
வந்து மனமகிழ வைப்பாய்! குருவியே !
சிந்தை குளிர்ந்திடச் செய் .

மரக்கிளையில் கூடுகட்டி மக்களுடன் வாழ்ந்தாய்
இரக்கமிலா நெஞ்சமுடன் யாரோ - விரட்டியது
சொல்குருவி! என்றுமெங்கள் சொந்தம்நீ யல்லவா
செல்லாதே வாழுவோம் சேர்ந்து .

கதிர்வீச்சால் நீயுமே காணாமற் போனாய்
கதியின்றிச் சென்றாய் கடந்து!- அதிரூப
சிட்டே! சிறகசைத்துச் சீக்கிர மாய்வந்து
பட்டே பரிவாய்ப் பழகு

மேலும்

மனம் நிறைந்த நன்றி குமரி ! அனைவருக்கும் அன்பான வாழ்த்துகள் ! 21-Mar-2017 11:51 pm
மிக்க நன்றிப்பா ! 21-Mar-2017 11:50 pm
பட்டே என்று குழந்தையை அழைப்பதைப்போல் எழுதினேன் . தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றி ! 21-Mar-2017 11:49 pm
உண்மைதான் ராஜா ! வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றி ! 21-Mar-2017 11:47 pm
vellurraja - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2017 2:03 pm

வேர்ப்பலா அருகிருக்க வேப்பமரத் தின்கனியை
யார்விரும்பிச் சுவைத்திடுவர் ? எவருமிலர் என்பதுண்மை!
இன்சொற்கள் அகத்திருக்க இன்னாச்சொல் பேசுவதால்
என்னபயன் சிந்திப்பீர் ஏற்று .
( வெண்கலிப்பா )

மேலும்

நன்றிப்பா ! 10-Mar-2017 2:10 pm
'களி' ப்பா..! 01-Mar-2017 3:06 pm
Geeths அளித்த கேள்வியில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Feb-2017 5:36 pm

கணவன் ஒருவன் குடும்ப பிரெச்சனைகள் காரணமாக தன் மனைவி மற்றும் தனது ஒரு வயது குழந்தையை விட்டு பிரிந்து சென்றுவிட்டான்.

பஞ்சாயத்துகள் பல. பணம் தான் காரணம். நன்றாக நடந்த திருமணம் தான். கணவன் குடும்பத்தில் 4 பெண்பிள்ளைகள். பெற்றோர் பொறுப்பற்றவர். ஆயினும் 4 சகோதரிகளுக்கும் நல்ல வரன் பார்த்து கல்யாணம் முடித்தனர். அனைவரும் நன்கு செட்டில் தான். கடன் பாக்கிகள் பல.

மனைவி செல்வந்தினி சம்பளம் கணவனை விட உயர்வு. கல்யாணம் முடிந்தது. குடும்பத்திற்குள் சகோதரிகளின் ஊடுருவல், மாமனார் மாமியார் மகன் சம்பாத்தியம் முழுவதும் செலவு செய்யவே பார்க்கின்றனர். சேமிப்பு கிடையாது. சந்தோசமாக தான் சென்றது வாழ்க்கை. பெண் தன

மேலும்

அவரை துரத்த துரத்த தூர தான் போவார்.. அவர் மூலம் அந்த பெண்ணுக்கு தொல்லை இருந்தாலோ அல்லது அந்த பெண்ணுக்கு வேறு மணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தாலோ விகாரத்து பற்றி யோசிக்கலாம். மற்றபடி பிடி எப்போதும் பெண் கையில் இருப்பதே நல்லது. பெண்ணை மீறி அவர் வேறு திருமணத்துக்கு முயற்சிக்க முடியாது.சட்டம் எப்போதும் பெண்ணுக்கு சாதகமாகத்தான் உள்ளது. பெண் மிகுந்த தன்னம்பிக்கையோடும் மன வலிமையோடும் சிறிது காலம் காத்திருப்பது நல்லது. அவர் திருந்தும் பட்சத்தில் ஏற்கவும் அப்படி இல்லாதா பட்சத்தில் அவரை சட்டத்தின் பிடியில் கொண்டு வரவும் முடியும். எல்லாரிடமும் ஆலோசனை கேட்பதை விட ஒரு நல்ல தொண்டுள்ளம் கொண்ட மன நல ஆலோசகரிடம் யோசனை பெறுவது சிறந்தது. 01-Mar-2017 1:53 pm
உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் தற்போது பெருகி வருகின்றன . வாசிக்கும்போது அந்தப் பெண்ணின் நிலையை நினைத்து மிகவும் வருந்தினேன் . ( அது யாராக இருந்தாலும் ....) இந்த காலத்தில் காதல் திருமணங்களில் தான் இது போன்ற பின்விளைவுகள் அதிகம் காணப்படுகின்றன. மறுக்க முடியாது. அடிப்படைக் காரணம் ஒன்று பணம் ...மற்றொன்று புரிதலின்மை . அதனாலதான் சில குடும்பங்களில் மணம் முடிந்த தனியாக வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். தவறில்லை . இதற்கு தீர்வு காண .....முதலில் கணவன் மனைவி தனியாக சந்திக்க ஓர் வாய்ப்பு உருவாக வேண்டும் அல்லது யாராவது ஒருவர் மூலம் உருவாக்கப்பட வேண்டும் . மனம்விட்டு பேசி இருவரும் இணைந்திட வழி வகுக்க வேண்டும் . அதற்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் . ஏனெனில் அந்த குழந்தைக்காக வருங்காலத்தை நினைத்து இதனை செய்திடல் அவசியம். முயற்சி செய்தல் தவறில்லை . முனைந்திட வேண்டும் முதியோரும் பெரியோரும் . அடுத்து சரியாக அமையவில்லை எனில் தனிக்குடித்தனம் போக நினைக்கவேண்டும் . இரு புறங்களிலும் ஏனைய குடும்ப உறவுகள் தலையீட்டு இல்லாமல் நடக்க வேண்டும் ...சில காலமாவது . அப்படி எதற்குமே ஒத்துவாராதவர் என்ற நிலை வந்தால் மட்டுமே விவாகரத்து என்று முடிவை எடுங்கள். வேறுவழியில்லை என்று தீர்மானிக்கும்போது , அவ்வாறான சூழ்நிலை உருவாகும்போது விவாகரத்து என்ற முடிவு எடுப்பதில் தவறில்லை . அந்தப் பெண் எடுத்த ஒரு தவறான முடிவும் , பாதை மாறிய காரணமும் இந்த நிலை இன்று., எதையுமே சட்ட ரீதியாக அணுகுவதும் செய்வதுமே அந்தப் பெண்ணுக்கு நல்லது . ஒரு சமுதாய பாதுகாப்பு . ஏதாவது பெண்கள் னால அமைப்பின் மூலம் செய்தால் நல்லது என்பது என் கருத்து. விரைவில் ஒரு நல்ல முடிவு கிடைக்க விழைகிறேன் . நிம்மதியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை பெறுவதே சாலை சிறந்தது . பழனி குமார் 28-Feb-2017 2:48 pm
அந்த பெண்ணின் கணவரிடம் பொதுவான ஒருவரை பேச விடுங்கள். கணவன் மனைவி இருவரும் தனிமையில் சந்திக்க நேர்ந்தால் இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். ஒருவரை ஒருவர் குறை கூறுவது வீண் விவாதத்தில் தான் முடியும். முதலில் குழந்தையின் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு ஒரு தந்தையாக அந்த ஆண் மகனுக்கு பொறுப்பு வேண்டும். இருவருக்கும் தனித் தனியாக ஒரு ஆலோசகர் மூலம் அவர்களின் கடமையை புரிய வைக்க வேண்டியது அவசியம். நாட்டில் எவ்வளவோ குழந்தைகள் குடும்பம் இல்லாமல் அனாதையாக ஆதரவிற்கு ஆள் இன்றி இருக்கிறார்கள். இவ்வளவு அழகான குடும்பம் இருக்கிறது, வாழ தெரிந்தால் இவர்கள் மிக அழகாக வாழ்வை வாழலாம்.. நன்றி, தமிழ் ப்ரியா.. 27-Feb-2017 9:08 pm
தோழி கீதா அவர்களே இந்த பிரச்னை எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று சிந்தியுங்க அங்கேயே முடிய வாய்ப்புள்ளது 1- பிரச்சனைக்கு முக்கிய காரணம் அவர்களின் குடும்பம் ஆதலால் பெண் வீட்டாரும் ஆண் வீட்டாரும் ஒன்றாக கலந்து பேசி அவர்களில் எதிர்ப்பார்ப்பை தெறித்துக் கொள்ளலாம் 2- அவர் சுயமாக சிந்திக்க வில்லை ஆடிகையால் அவர்களில் கட்டுக்கோப்பில் இருந்து அவரை வெளியேற்ற தொடர்ந்து முயற்சிக்கவும் முக்கியமாக அவருடன் அந்த குழந்தையை பேசவிடுங்கள் நிச்சம் அவர்கள் ஒன்றுசேர்வார்கள் மனதார சொல்ற அவங்க கண்டிப்பா சேருவங்க 27-Feb-2017 7:36 pm
vellurraja - Geeths அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jan-2017 5:40 pm

தாய்முகம் பார்த்து அழுதிடுமே சிற்சமயம்
வாய்விட்டு கொட்டிச் சிரிக்குமே - போயொருத்தர்
வாவென்று கூப்பிட்டால் வாராது ஆதலினால்
மாமழைக்கு நேராம் சிசு .


பொருள் : மழையானது பூமித்தாய் முகம் பார்த்து பெய்யும் ; குழந்தையோ பசிவந்த போதில் தாயின் முகம் பார்த்து அழும் . சில சமயங்களில் மேகத்தில் மின்னல்வெட்டி இடி இடிக்கும் ; அது மேகங்கள் சிரிப்பதுபோல் தோன்றும் . குழந்தையும் பசி அடங்கிவிட்டால் கைகொட்டி , வாய்விட்டு சிரிக்கும். மழையானது " வா " என்று கூப்பிட்டால் வாராது .; அதுபோல வேற்று மனிதர்கள் கூப்பிட்டால் குழந்தை அவர்களிடம் போகாது . ஆகவே மழையும் குழந்தையும் ஒன்றென்று கூறு .

மேலும்

நன்றாக உள்ளது.. எழுதியவர் யாரோ? 27-Feb-2017 1:51 pm
vellurraja - Geeths அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2017 5:40 pm

தாய்முகம் பார்த்து அழுதிடுமே சிற்சமயம்
வாய்விட்டு கொட்டிச் சிரிக்குமே - போயொருத்தர்
வாவென்று கூப்பிட்டால் வாராது ஆதலினால்
மாமழைக்கு நேராம் சிசு .


பொருள் : மழையானது பூமித்தாய் முகம் பார்த்து பெய்யும் ; குழந்தையோ பசிவந்த போதில் தாயின் முகம் பார்த்து அழும் . சில சமயங்களில் மேகத்தில் மின்னல்வெட்டி இடி இடிக்கும் ; அது மேகங்கள் சிரிப்பதுபோல் தோன்றும் . குழந்தையும் பசி அடங்கிவிட்டால் கைகொட்டி , வாய்விட்டு சிரிக்கும். மழையானது " வா " என்று கூப்பிட்டால் வாராது .; அதுபோல வேற்று மனிதர்கள் கூப்பிட்டால் குழந்தை அவர்களிடம் போகாது . ஆகவே மழையும் குழந்தையும் ஒன்றென்று கூறு .

மேலும்

நன்றாக உள்ளது.. எழுதியவர் யாரோ? 27-Feb-2017 1:51 pm
vellurraja - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 8:50 am

தாகம் கொண்ட நிலம் நான் ..!
மேகம் கொண்ட மழை நம் காதல்..!
தோகை கொண்ட மயில் நீ...!

மேலும்

இன்று உலக கவிதைதினம் எழுத்துதள கவிதோழமையே.. உங்களுடைய கவிதைக்கு என் வாழ்த்துக்கள்! நட்புடன் குமரி 21-Mar-2017 2:03 pm
ஹா ஹா.. அதான் அய்யா இருக்கீங்களே .. காதல் சாம்ராஜ்யத்தின் மாமன்னர்...! 22-Feb-2017 9:44 am
அம்புட்டுதானா .....இன்னும் நீட்டி எழுதலாமே தாகம் கொண்ட நிலம் நான் தாவிப் பாயும் நதி நீ ராகம் பாடும் தென்றல் நீ ரசித்து மகிழும் நெஞ்சம் நான் மோகம் கொண்ட காதலன் நான் முத்தம் தரும் சித்திரம் நீ அத்தை மகள் உனக்கு விருது நகரு மாமன் மகன் எனக்கு தூய காதல் வெள்ளூரு எத்தனை காலம் காத்திருப்பதடி ? வாழ்த்துக்கள் அன்புடன், கவின் சாரலன் 22-Feb-2017 9:36 am
vellurraja - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2016 12:31 pm

சிறுவாடு பணமெல்லாம்
தெருவோடு வந்தாச்சு
அரும்பாடு பட்டு சேர்த்தவன் பாடு
பெரும் பாடு ஆயாச்சு

தின்னு கொழுத்தவன்
தேசம் தாண்டி போக விட்டாச்சு
இன்னும் வேணும் வேணும்னு சேர்த்தவன்
பணமெல்லாம் டாலடிக்குது டாலரா

மாட மாளிகையும்
வெள்ளையும் சொள்ளையும்
ஒண்ணையும் காணல
ஏ டி எம்வரிசையில

வரிசையில் நிக்கும்
உன் காதுலயும்
என் காதிலும்
தாமரைப்பூ இருக்குது பாரு
இலையோட...!

கருவரைக்கும் காசு இல்ல
கல்லறைக்கும் காசு இல்ல
திருவோட்டுக்கும் சில்லறை இல்லை

கழனி வித்து காசு வச்சவன்
பிள்ளை படிப்புக்குச் சேர்த்து வச்சவன்
செத்தா தூக்கி போட
செலவுக்கு சேர்த்து வச்சவனெல்லாம்

மேலும்

இன்றைய உண்மை நிலைமை 28-Nov-2016 11:00 am
சொல்லாடல் சிறப்பு நண்பரே 27-Nov-2016 1:39 pm
நன்றி நண்பா...! 21-Nov-2016 6:00 pm
vellurraja என்று பதித்தேன், முகநூலில் கிடைக்கவில்லை.நீங்கள் கவித்தா சபாபதி என்ற என் முகவரிக்கு நண்பர் விண்ணப்பம் அனுப்புங்கள் 21-Nov-2016 3:55 pm
vellurraja - Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2016 1:50 pm

விருத்தங்கள் விளையாடும் தமிழின் சோலை
வித்தகர்கள் எழில்யாப்பில் கட்டும் மாலை !
விஞ்சையரும் வண்ணமுடன் சொல்லும் பாட்டு
விருந்தாகச், சொக்கிவிடும் உள்ளம் கேட்டு !
விதைத்திட்டார் மாவரதன் மரபை நன்றாய்
விருட்சமென வளர்ந்ததுவும் பூக்கும் செண்டாய் !
வியக்கவைக்கும் திறமைகளும் இங்கே கூடும்
விருந்தளிக்கக் கருத்தாகச் சேர்ந்தே பாடும் !
விவரித்துக் கற்பிக்கும் ஆசான் பாட்டை
வியனுலகும் சுவைத்திடவே ஆர்வம் காட்டும் !
விமர்சனமும் சிலநேரம் இங்கே முட்டும்
விடைகிடைக்கும் அதன்பின்னே தெளிவும் கிட்டும் ..!!

அருவியென வெண்பாக்கள் அமுதாய்ச் சிந்தும்
அதிமதுர கலிப்பாவும் புலவோர் சொந்தம் !
அந்தமில்லா ஒண்த

மேலும்

அருமை.. 04-Nov-2016 6:51 am
பெருங்களிப்பில் தமிழமுதால் திளைக்கும் உள்ளம் ! 03-Nov-2016 2:13 pm
vellurraja - rameshalam அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Oct-2016 9:59 am

மழைச் சேறாகி
வழிகிறது மனம்.

இரவின் இடைவெளிகளில்
சூழும் சொல்...
வழி தவறிய குழந்தையாகி
கரையும் நிலவோடு
பேசிக் கொண்டிருக்கிறது.

இடையில்...
விழிப் பந்துகளில்
விளையும் அதிர்ந்த மௌனம்
தான் அறியாத
உனது முகவரியின் தூரங்களில்
அலைந்து கொண்டிருக்கிறது.

விரியாத என் சிறகுகளோ
நடைபாதை நழுவி
மௌனத்தின்
தனிமைக் குகைக்குள்
நிழல் தேடிப் பதுங்குகிறது.

இடையறா
இச் சூழலில்
அமைதி விலகும் உணர்வுகளால்
மழைச் சேறாகி வழிகிறது மனம்.

மேலும்

ரொம்பவும் நன்றிகள்! சர்பான். 31-Oct-2016 8:20 am
சில யதார்த்தங்கள் வாழ்க்கையில் என்றுமே கசக்கத்தான் செய்கிறது..,இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Oct-2016 7:27 am
ரொம்பவும் நன்றிகள்! வெள்ளூர் ராஜா. 30-Oct-2016 6:27 pm
அருமை அய்யா 30-Oct-2016 4:31 pm
vellurraja - C. SHANTHI அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2016 8:26 pm

#யாதுமாகி நின்றாய்..!

ஈரைந்து மாதங்கள் இடைதாங்கி என்னை
உயிருக்குள் உயிரென்றே காத்தாள் என் அன்னை
உதிரமும் பாலாக்கி ஊட்டினாள் - தாயும்
தெய்வம்தான் நான் பணிவேன் அவள்தாள்..! (18)

கண் துஞ்சாமலே தான் என்னை காப்பாள்
செவிலியாகவே மாறி பிணி தீர்ப்பாள்
இரவென்றும் பகலென்றும் இல்லை - தாயின்
சேவை எக்காலமும் காண்பான் இப்பிள்ளை (35)

பள்ளி செல்கையில் குருவானாள் - நித்தம்
பாடம் பகன்றுமே ஞானம் வளர்த்தாள்
வாழ்வினில் ஏற்றிடும் ஏணி - நானும்
கரை சேர்ந்திட ஆகினாள் நல் தோணி (52)

புத்திமதி சொல்லும் போதிலே
அவள் போதி மரமென்றே ஆகினாள்
துயர் வந்து சோர்ந்திடும் நேரம் - வேதனை
தீர்த்திடும் தோழனு

மேலும்

நான் நலம் அம்மா தங்கள் நலமா? 02-Nov-2016 10:36 am
மிக்க நன்றி ப்ரியா..! நலமா..? 01-Nov-2016 5:22 pm
மிகவும் அருமை.....ஆழமான வரிகள் அம்மா......!! 01-Nov-2016 3:46 pm
நலமாக இருக்கிறீர்களா சார். நான் நலம். இங்கு எப்போதாவதுதான் வருகிறேன் சார். கருத்திற்கு மிக்க நன்றி..! 18-Oct-2016 8:28 pm
vellurraja - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2016 7:50 pm

இனி ஒரு பொழுதும் நாம் சந்திக்கப் போவதில்லை
உலகம் உருண்டை என்பது
நம் அளவில் பொய்
உலகம் தட்டையானது
விளிம்பில் கூட நம் சந்திப்பு சாத்தியமில்லாதது
நீ ஒரு மூலையும்
நானொரு மூலையும்
மூளையில் தேக்கி கொள்ளலாம்
இனி இதயத்தில் இடமில்லை

இந்த நிலவை
இந்த இரவை
நாளைய பகல் அடித்து சென்று விடுவது போல
முடித்துக் கொள்ளலாம்
நிறுத்தி கொண்டால் வீழ்ந்து போக
இது ஒன்றும் மூச்சுக் காற்று அல்ல
தீர்ந்து போகாத வெளி காற்று வெளி
காற்றைப் போலத்தான் காதலும்
சிறு குழந்தையொன்று
தன் எச்சிலால்
தன் தவறுகளை அழித்துக் கொள்வதைப்போல
அன்பினால் அன்பை அறுத்துக் கொள்வோம் வா.. இல்லையில்லை போ..!

மேலும்

நான் நலம் ராஜா தாங்கள்?? 06-Dec-2016 10:14 pm
நன்றி ராஜி .. நலமா ? 04-Dec-2016 3:41 pm
எப்படி இருக்கீங்க ? 04-Dec-2016 3:41 pm
சிறு குழந்தையொன்று தன் எச்சிலால் தன் தவறுகளை அழித்துக் கொள்வதைப்போல அன்பினால் அன்பை அறுத்துக் கொள்வோம் வா.. இல்லையில்லை போ..! எப்படி ராஜா இப்படி? அருமையான பதிவு..... 22-Oct-2016 10:32 pm
vellurraja - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2016 3:20 pm

அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது
அவளை எழுதிய அவனிடமோ
ஒரு வட்ட நிலவும்
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.

மேலும்

அருமை ராஜா அவள் அவளாக இருப்பதாலேயே பெருமை.... 23-Jul-2016 10:40 pm
போங்க அண்ணா .. உண்மை சொல்வதானால் இது தங்கள் பாணியில் முயற்சித்த கவிதை 30-Jun-2016 9:59 am
ராஜா உன்னை படிக்கவே வந்தேன் ..முகநூலில் பகிர்கிறேன் 29-Jun-2016 1:28 pm
இன்னும் பல உண்டு அவளிடம்..// ஆம் தோழி. அருமையான கருத்துக்கு நன்றி 20-Jun-2016 6:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (337)

gangaimani

gangaimani

மதுரை
Arali

Arali

செங்கோட்டை, தமிழ்நாடு.
iniyakavi

iniyakavi

chennai
muraiyer69

muraiyer69

விக்கிரவாண்டி

இவர் பின்தொடர்பவர்கள் (341)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
Geeths

Geeths

கோவை
poovathi

poovathi

புங்குடுதீவு

இவரை பின்தொடர்பவர்கள் (342)

Ramani

Ramani

Trichy
sathish peter

sathish peter

coimbatore

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே