வெண்ணிலா அர்ஜுனன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  வெண்ணிலா அர்ஜுனன்
இடம்:  kangeyam
பிறந்த தேதி :  18-Jul-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Dec-2014
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  18

என் படைப்புகள்
வெண்ணிலா அர்ஜுனன் செய்திகள்
வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2017 11:15 am

உயிராய் நீ
என்னுள் வந்த பின்புதான்
வாழவே தொடங்கினேன்...

நீ இன்றி
எனது நாட்களில் நிஜமும்
நிழலாகி ஏங்கினேன்...

உன் அணைப்பின்
சுகம் களைந்து -உந்தன்
பார்வையில் குளிர் காய்கிறேன்!
நித்தமும் விலகாமல்
உன்னுள் மௌன உயிராகி அலைகிறேன்!

உன் காதலின்
மனம் கலந்து-உந்தன்
உயிருக்குள் துடிக்கிறேன்!
நிலை புரியாத
நேரங்களில் உன் நினைவாகி உறைகிறேன்!

ஆயிரம் வரிகள் எழுதிடினும்
உன்னை வார்த்தையில்
வடித்திட முடியாமல் தவிக்கிறேன்!

மீண்டும் அதிலே முடிக்கிறேன் -
"என் உயிர் நீயே"

மேலும்

அக்கா நல்ல இருக்கு நான் ஹரி அக்கா நான் உங்கள பின்தொடறேன் அக்கா 18-Jul-2017 10:32 pm
அருமை நட்பே......வாழ்த்துக்கள் 16-Jul-2017 9:35 pm
வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Sep-2016 1:52 pm

நேசத்தின் நிழலாய்
பத்து மாதம் சுமந்தாள் தாய்!
நேசத்தின் நிஜமாய்
காலமெல்லாம் நெஞ்சத்தில் சுமந்தார் தந்தை!

முதல் அடி பிள்ளை நடக்கையிலே
முழு நிலவை தொட்டவர்
தோள் மேலும் மார் மேலும்
மிதிக்க வைத்து ரசித்தவர்
நித்தம் நித்தம் ரசித்து வாழ
வியர்வை ரத்தம் சிந்தியவர்
இன்னும் ஆயிரம் ஆயிரம்
அவரைப் பற்றி....

ஆனால்
தலை குனிந்து கண்ணீர் விடுகிறார்
உருவாக்கிய உயிர் உதாசீனப் படுத்தியதால் !
உயிர் உருகி
நெஞ்சம் சிதைந்து நின்றாலும்
கடைசிக் கண்ணீர்
வற்றிவிட
கடைசி வார்த்தை தன் உயிருக்கு
'' எங்க இருந்தாலும் நல்லாருக்கட்டும்''

மேலும்

நன்று...இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள். 27-Sep-2016 2:49 pm
அருமை.... தந்தையின் வலியை,வரிகளில் உணர்த்தியதற்கு நன்றி.... 27-Sep-2016 2:08 pm
வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Aug-2016 1:51 pm

செவிகளில் என் குரல் விழுந்ததோ -
செயல் இழந்து வீழ்ந்ததோ
என்னைப்போல்!
என்னை சுற்றி எங்கும் சுதந்திரமோ-
சுதந்திரம் சுவாசம் இழந்ததோ
என்னைப்போல்!

மூச்சு முட்டி நிற்கிறேன்
பேசும் உரிமை இழந்து ,
தவறு இன்றியும் மௌனிக்கிறேன்
விளக்கும் உரிமை இழந்து!
அடங்கி அடக்கி போகிறேன்
முடக்கப்பட்டு முடிவின்றி போகிறேன்
முன்னாள் பிறந்தவன் ஆண் என்பதால்
என் பிறப்புரிமை மறந்து!

திறமைகள் இருந்தும் மறைக்கிறேன்
வாய்ப்புகள் மறுக்கப்படும் என தெரிந்து
உணர்த்தும் உரிமை இழந்து!

இன்னும் இப்படித்தான்
இனியும் இப்படித்தான்
எங்கே சுதந்திரம்!!!

மேலும்

சுதந்திரம் என்ற சொல்லில் அடிமைத்தனம் பொருளாகிறது 25-Aug-2016 10:35 am
வெண்ணிலா அர்ஜுனன் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2016 2:42 pm

நீ எந்தன் பாதி ,என்னவளே !
வார்த்தைகள் ஓடை போல் சலசலக்கும்
உன்னைப்பற்றி எழுதையில்!
முத்தான வார்த்தைகளும் மோட்சம் பெரும்
உன் வாய்வழியே சிதறயில்!
எரெழில் சீர்துக்கும் உன்னிமேலழகு ஜனிக்கும்
இதயம் உன்னை நினைக்கையில்!
வார்த்தைகள் போதாமல்
வருத்தத்துடன் முடிக்கிறேன் என்னழகே !!!

மேலும்

காதல் தேசத்தில் வார்த்தைக்கு பஞ்சமில்லை ஆனால் மொழி எழுப்பத்தான் தடை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Jul-2016 6:02 am
சிறந்த படைப்பு! வாழ்த்துக்கள் தோழமையே! 20-Jul-2016 9:19 pm
இலக்கணமில்லை இலக்கியமுமில்லை உன்னழகை நான் எழுத எழுத்துக்களுமில்லை. அழகு! வாழ்த்துக்கள் .... 20-Jul-2016 7:15 pm
வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2016 2:20 pm

நீயும் நானும்
கை கோர்த்து சென்றோம் வழி முழுதும்,
நீயும் நானும்
மெய் மறந்து பேசினோம் நாள் முழுதும்,
நீயும் நானும்
உயிரும் உடலுமாய் இணைந்தோம் காலம் முழுதும்,
நீயும் நானும்
தனி இரவில் முழு நிலவை ரசித்தோம்
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்????
நமக்குள் கருவானது நம்
''நட்பு'' என்று!!!!
மற்றவர்களுக்கு
நீயும் நானும் 'நாம்'
நமக்கு
நீயும் நானும்'நட்பு'......

மேலும்

அருமை நட்பே.......வாழ்த்துக்கள் 16-Jul-2017 9:28 pm
நட்பின் ஆழம் நெஞ்சம் அறியும்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jul-2016 5:23 am
வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Sep-2015 1:42 pm

i love u
is anything wrong in it?
when i say it to you
every one looks me like mad!
yes,i am mad upon u
"my dear friend!"
our relation never see words
but its meaning
thats why "i am loving u!"

மேலும்

வெண்ணிலா அர்ஜுனன் - வெண்ணிலா அர்ஜுனன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Oct-2015 12:57 pm

No one can separate us
Because
I lost my soul in u...
Even distance can't
Separate us,
Because
My heart beats for u...
Let u know
It maynot possible
Though my heart stop its beats....

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே