Vidhya Profile - வித்யாசந்தோஷ்குமார் சுயவிவரம்பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  வித்யாசந்தோஷ்குமார்
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  16-Oct-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Feb-2014
பார்த்தவர்கள்:  4991
புள்ளி:  3375

என்னைப் பற்றி...

சொல்வதற்கு எதுவுமே இல்லை...........!
என் படைப்புகள்
vidhya செய்திகள்
இராஜ்குமார் Ycantu அளித்த படைப்பில் (public) கோ.கணபதி மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2015 5:29 am

மானுடம் மடியலாம் - காதலாரா
~~~~~~~~~~~~~~~~~~~~

கொல்லும் வார்த்தைக்குள்
சில்லென சிதறும் நரம்பினை
செதுக்கி வளர்த்ததும் நீ ...

கோபத்தின் வேலிக்குள்
முள்ளென நழுவும் நாவினை
கடித்து துப்புவதும் நீ ...

விரக்தியின் ஆழத்தில்
எச்சமென பரவும் சோகத்தை
ஊற்றி நிறைப்பதும் நீ ..

பிழையின் மீதத்தில்
வாதமென அவிழும் சாபத்தை
உதறி எறிவதும் நீ ..

விலையற்ற நேரத்தில்
உச்சமென தொடரும் துரோகத்தை
நிரப்பி உடைப்பதும் நீ ...

நீயெனும்
நிறமற்ற உறவுகளே ....உம்
புரிதலில்லாப் புருவங்களுக்கு
புரிய வைக்கும் புலமையை விட ...

எம் யாக்கையின்
கரு நிழலும் எரிந்து ...
நிறை பழிக்குள் வழிந்

மேலும்

அருமைடா என் தம்பி.. அசந்தேன். வியந்தேன்.. பாராட்டுகிறேன் 12-Jan-2016 9:48 pm
மகிழ்ச்சி நண்பரே வரவில் 29-Dec-2015 11:49 pm
நல்ல படைப்பு, பாராட்டுக்கள் 24-Dec-2015 8:46 am
மகிழ்ச்சி தங்கச்சி 23-Dec-2015 11:24 pm
Magizhini அளித்த எண்ணத்தில் (public) கோ.கணபதி மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2015 7:00 pm

வணக்கம் தோழமைகளே .... எங்களுக்கானவை என்ற தலைப்பில் ஒரு 12 கவிதைகள் அடங்கிய தொகுப்பினை எழுதி அதன் முதல் கவிதையை இங்கே பதிவிட்டேன் ... புத்தகம் போன்ற அமைப்பில் இருப்பதால் அதன் லிங்கை இங்கே தருவிக்கிறேன்... எங்களுக்கானவை ...


நன்றிகளுடன் 

மகிழினி 

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே .... 24-Dec-2015 7:12 pm
அருமை, வாழ்த்துக்கள் 24-Dec-2015 8:54 am
மிக்க நன்றிகள் தோழமையே .... தங்கள் வரவில் மகிழ்ந்தேன் ! 07-Dec-2015 3:13 pm
வாசிக்க வாசிக்க அத்தனை கவியும் அமிர்தம்.... வாழ்த்துக்கள் நித்யா...! 07-Dec-2015 1:30 pm
karguvelatha அளித்த படைப்பில் (public) கோ.கணபதி மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Nov-2015 11:42 am

பெண் என்று
தெரியுமின் ,
கருவிலே அழி !

மீறி பிறப்பின் ,
கள்ளிப்பால் கொடு !

மீறி வளர்மின் ,
கல்வியை தடு !

பூப்படைமின் ,
பாலியல்
துன்பம் கொடு !

படி தாண்டின் ,
ஏளனம் செய் !

பணிக்கு செல்லின் ,
பேருந்தில்
நெரிசலில் உரசு !

காதல் பெயரில் ,
காமம் தணி !

மணம் முடிக்க
வேண்டின் ,
தட்சணை கேள் !

மறுப்பின் ,
விவாகரத்து செய் !
விபசாரத்திற்கு இழு !

மீறி நிற்பின் ,
தாலி அறு !
தாசி பட்டம் கொடு !

மீறி வளர்மின் ,
ஆடை அவிழ் !
அயிட்டம் பாட்டிற்கு
ஆட வை !
அருகே அமர்ந்து
அண்ணார்ந்து பார் !

அவள்
உயிர் என்பதை மறந்து ,
உடலாக மட்டும் பார் !

அனைத்தும் செய் -

மேலும்

அருமை, பாராட்டுக்கள் 24-Dec-2015 8:57 am
எண்ணம் எழில் !! எல்லாமும் எழில் !! அயிட்டம் பாட்டு மட்டும் ... உருப்படி பாட்டுன்னோ சரக்கு பாட்டுன்னோ இருந்திருக்கலாமோ ?? 26-Nov-2015 2:49 pm
என் பலத்த கைதட்டல்கள் அன்பரே...! தொடர்ந்து குரல் கொடுங்கள் நம்வீட்டிலும் பெண்கள் இருக்கின்றனர். வாழ்த்துக்கள்.! 26-Nov-2015 1:27 pm
நன்றி தோழமையே ! 26-Nov-2015 1:19 pm
vidhya - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 2:11 pm

கண்மணி-வித்யா

வெண்மேகம் கலைத்து
மின்மினிகள் குழைத்து
உன் நீல வானில்
நானெழுதிய கவி....

சந்திப்பிழைகளோ
மரபுப்பிழைகளோ
இக்கவியின் கெளரவம்
குறைக்கவியலாது

மூன்று புள்ளியோடு
முடியும் ஆச்சர்யக்குறியோ
முடிவோடு தொடரும்
முடிவிலியோ
இக்கவியின் அழகினைக்
கூட்டிட முடியாது

வெண்படலம் பிளந்து
உயிரொளி அடைத்து
இமைக்கதவு தாழிட்டு
பிறவியுருக்கி நானெழுதிய
இக்கவி.....
"என் கண்மணி கவி"

மேலும்

கவி அழகு, பாராட்டுக்கள் 24-Dec-2015 9:03 am
நல்ல சிந்தனை.. புதுமை கரு.. 08-Dec-2015 1:45 pm
கொஞ்சம் பலமாக மிளிர்கிறது கவிதை வாழ்த்துகள் .. 01-Dec-2015 5:18 pm
காலங்கள் கடந்து வார்த்த தங்க கவிதை கண்மணி கவிதை 01-Dec-2015 5:04 pm
vidhya - vidhya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2015 4:51 am

மரணம் தொடுகிறது எனதிரவு-வித்யா

உன்
இறுக்கமில்லா எனதிரவு
இரக்கமில்லாமல் எனை வதைக்கிறது

கடந்து போன
இரவுகளின்
நினைவுகளில்
மூச்சடைக்கிறது

நம் படுக்கையறை
நிர்வாணமாய் நிற்கிறது

மின்விசிறிகளின் கூர்நாக்குகள்
எனை பார்த்து சிரிக்கின்றன

படுக்கையில் உனைப் பரப்பி
அயர்ந்து தூங்குகையில்
மிரண்டு எழுகிறேன்

உன் அணைப்பிற்குள்
சிக்கித்தொலையாத
இன்னாளிலெல்லாம்
செத்துப் பிழைக்கிறேன்

விரைந்து வா...
என் ஆற்றாமைக்கு
உன் அருகாமயினும்
சிறந்த மருந்தில்லை...!!!

மேலும்

இரவின் இறுக்கம் - அவனின் இறுக்கம் அதனால் மாறும்... நினைவுகளின் கிறக்கம் தராது உறக்கம்... 06-Dec-2015 2:51 am
வரிகள் அழகு :) 05-Dec-2015 12:13 pm
காதல் ஆழம் ...அர்த்தமுடன்.... 28-Nov-2015 2:39 pm
அப்பா ..... முடியவில்லை பெண்ணே ..... திருமணம் ஆனா இப்படிலாம் எழுத தோணும் போல ..... 24-Nov-2015 6:03 pm
vidhya - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Oct-2015 4:51 am

மரணம் தொடுகிறது எனதிரவு-வித்யா

உன்
இறுக்கமில்லா எனதிரவு
இரக்கமில்லாமல் எனை வதைக்கிறது

கடந்து போன
இரவுகளின்
நினைவுகளில்
மூச்சடைக்கிறது

நம் படுக்கையறை
நிர்வாணமாய் நிற்கிறது

மின்விசிறிகளின் கூர்நாக்குகள்
எனை பார்த்து சிரிக்கின்றன

படுக்கையில் உனைப் பரப்பி
அயர்ந்து தூங்குகையில்
மிரண்டு எழுகிறேன்

உன் அணைப்பிற்குள்
சிக்கித்தொலையாத
இன்னாளிலெல்லாம்
செத்துப் பிழைக்கிறேன்

விரைந்து வா...
என் ஆற்றாமைக்கு
உன் அருகாமயினும்
சிறந்த மருந்தில்லை...!!!

மேலும்

இரவின் இறுக்கம் - அவனின் இறுக்கம் அதனால் மாறும்... நினைவுகளின் கிறக்கம் தராது உறக்கம்... 06-Dec-2015 2:51 am
வரிகள் அழகு :) 05-Dec-2015 12:13 pm
காதல் ஆழம் ...அர்த்தமுடன்.... 28-Nov-2015 2:39 pm
அப்பா ..... முடியவில்லை பெண்ணே ..... திருமணம் ஆனா இப்படிலாம் எழுத தோணும் போல ..... 24-Nov-2015 6:03 pm
vidhya - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 10:26 pm

புதுவரவு-வித்யா

நிலவின் விருட்சங்கள்
தெளித்துவிட்ட ஒளிப்பூக்களில்
பட்டுத்தெரித்த பனித்துளித்தீண்டி
மோட்சம் கொண்டதொரு
உதயரேகை...!

மௌனம் கலைத்து
மழை சமைத்தது
மேகம்

எண்ணங்களுக்கு வண்ணம்
தீட்டிப் பிழை மறைத்தது
வானவில்

தேகம் தொட்டு
மோகம் கொண்டு
குடைவீசிப் போயிருந்தது
காற்று

புதுவரவுகளில்
கலைந்துப்போயிருந்தது
பழைய அரிதாரங்கள்

மேலும்

புதுவரவை அழகுபடுத்தட்டும் பழைய அரிதாரங்கள்.. 09-Aug-2015 9:07 pm
அழகான கவி தோழி 02-Aug-2015 6:49 am
மழை சமைத்தது மேகம்... அவ்வாறே கவிதாயினியின் கவிதையும் சுவையாக இருந்தது......வாழ்த்துக்கள் 05-Jul-2015 10:06 pm
இனிமையான கவி அக்கா 09-May-2015 7:27 pm
சரவணா அளித்த எண்ணத்தை (public) Enoch Nechum மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Apr-2015 8:20 am

இவன் தலித்தா..................? இல்லை........... இவன் மனிதன்..

இவன் பிராமணனா...........? இல்லை ............ இவன் மனிதன்....
எழுத்துக்களை அடக்கிப் பின் தானும் அடக்கமாகவே இருந்து கொண்டவர்..... எழுத்துலகின் பிதாமகன் ஜெயகாந்தனின் மறைவு துயரத்தினுள் அமிழ்த்துகிறது.....

மேலும்

அவர் தம் எழுத்துக்கள் மூலம் நம்முடன் என்றும் வாழ்வார் .... 09-Apr-2015 12:43 pm
சில நேரங்களில் சில மனிதர்கள் என்று என் பார்வையை இன்னும் கூராக்கியவர்....... அக்கினி பிரவேஷம் கண்டு நான் நிஜத்தோடு எழுந்து வந்து நிற்க இவரின் பக்கங்கள் ஆசிரியரானது.... துக்கம் எதுவும் இல்லை... வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுத்தவர்.... மரணம் கூட மரியாதையோடு தான் அழைத்து சென்று கொண்டிருக்கும்... வெறும் மனிதனா.... இல்லவே இல்லை.... ஜெயகா......................................ந்தன்... 09-Apr-2015 10:33 am
உண்மை ! எழுத்துலகின் பிதாமகனின் இழப்பு தமிழ் இலக்கிய உலகத்தில் ஒரு வெற்றிடமாகவே எப்போதும்...அந்த மனிதனுக்கு கண்ணீர் அஞ்சலி ! 09-Apr-2015 9:38 am
காலையில் செய்தியை படித்ததும் நம்முடைய நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் இறந்துவிட்டதை போல ஒரு கணம் திகைத்து நின்றேன்..இதுதான் எண்ணற்ற பல தமிழர் உள்ளங்களில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகள்..சிந்தனைகளின் தாக்கமோ?..எழுபதுகளின் போது , என் இளம் வயதில் நூலகங்களில் இவரது புத்தகங்களுக்காக காத்துக் கிடந்ததும் அந்த நாட்களில் இவரது எழுத்து ஏற்படுத்திய தாக்கம் குனாதிசயத்தையே சமைக்க வல்லதாய் இருந்தது என்பதே உண்மை..! ஆழ்ந்த வருத்தங்கள்! 09-Apr-2015 9:18 am
GopalakrishnanR அளித்த எண்ணத்தை (public) கோ.கணபதி மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Apr-2015 11:56 pm

தமிழின் எழுத்தாளுமைகளில் ஒருவரான ஜெயகாந்தன் இயற்கை எய்தினார்.

சில நேரங்களில் சில ஆளுமைகள்.

தமிழுக்காக எழுதிய தலைவனைப்பார்த்து
தானும் எழுத ஆசைப்பட்ட காலன்
மரணப்புத்தகத்திலா எழுதவேண்டும் இவர் பெயரை?

மேலும்

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Apr-2015 10:51 am
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் 09-Apr-2015 9:42 am
தவிர்க்க முடியாதது என்றாலும்.... கால விதிகளுக்கு உட்பட்டதால் வருத்தங்களை செரிக்கப் பழகிக் கொள்கிறேன்..!! 09-Apr-2015 7:45 am
தமிழின் மிகப் பெரிய இலக்கிய ஆளுமை ஜெயகாந்தன் ! நிச்சயம் இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான் 09-Apr-2015 6:40 am
kiruthiga dass அளித்த எண்ணத்தை (public) சர்நா மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
08-Apr-2015 9:27 pm


நண்பர்களே என்னுடைய கவிதை ஒன்று இந்த வார குங்குமம் புத்தகத்தில் வெளியாகியுள்ளது.. 'அடையாளம் தேடும் முகங்கள்' என்னும் கவி கட்டுரை நண்பர்களே...

- கிருத்திகா தாஸ்...

மேலும்

நன்றி 09-Apr-2015 1:13 pm
தோழியே என் 'கட்டுரை' பகுதியில் இருக்கும் 'அடையாளம் தேடும் முகங்கள்' என்ற கவி கட்டுரையே இது மா.. .. 09-Apr-2015 12:50 pm
அதை நாங்கள் படிக்க முடியுமா ....பகிரவும் 09-Apr-2015 12:47 pm
நன்றி கார்த்திகா...... 09-Apr-2015 12:46 pm
vidhya அளித்த படைப்பில் (public) அமுதன் பரிமளசெல்வன் மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2015 11:36 pm

உனை நோக்கியே நீண்டிடும் என் பாதங்கள்-வித்யா


அந்த நீளுகின்ற பாதையிலே நீண்ட நேரம் நீ காத்திருந்தும், நகர்ந்துவரும் நாழிகையில் நகாராமல் நானிருந்தும் அந்த சாலையின் வளைவுகளில் நான் தொலைந்திருக்கவாய்ப்பில்லைதான். புது வண்ணங்கள் பூண்ட வானவில்லாய் அந்த விண்மீன் காட்டில் உலாவியது புது அனுபவம்தான்.

ஏதோ ஒரு மின்மினி தேசத்தில் நுண்ணிய ஒளிச்சிதறலாய் நானிருந்தேன். ஏதோ தூர தேசத்தில் அகதியாய் நீயிருந்தாய். அதோ அந்த போதி மரத்தின் சுவாசக்காற்று எனைத் தீண்ட...உனைத் தீண்ட...நமைத் தீண்ட.........பேரொளி

மேலும்

அருமை 08-Dec-2015 1:39 pm
காத்திருத்தலும் காதலில் ஒரு சுகமான சுமை .....அருமை viravil உன்னவர் வர வாழ்த்துக்கள் தோழி.... 02-May-2015 1:48 pm
அருமை.. வாழ்த்துக்கள்..!!! 02-May-2015 12:37 pm
மிகச் சிறப்பான படைப்பு தோழியே... 22-Apr-2015 3:26 am
vidhya - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Apr-2015 11:36 pm

உனை நோக்கியே நீண்டிடும் என் பாதங்கள்-வித்யா


அந்த நீளுகின்ற பாதையிலே நீண்ட நேரம் நீ காத்திருந்தும், நகர்ந்துவரும் நாழிகையில் நகாராமல் நானிருந்தும் அந்த சாலையின் வளைவுகளில் நான் தொலைந்திருக்கவாய்ப்பில்லைதான். புது வண்ணங்கள் பூண்ட வானவில்லாய் அந்த விண்மீன் காட்டில் உலாவியது புது அனுபவம்தான்.

ஏதோ ஒரு மின்மினி தேசத்தில் நுண்ணிய ஒளிச்சிதறலாய் நானிருந்தேன். ஏதோ தூர தேசத்தில் அகதியாய் நீயிருந்தாய். அதோ அந்த போதி மரத்தின் சுவாசக்காற்று எனைத் தீண்ட...உனைத் தீண்ட...நமைத் தீண்ட.........பேரொளி

மேலும்

அருமை 08-Dec-2015 1:39 pm
காத்திருத்தலும் காதலில் ஒரு சுகமான சுமை .....அருமை viravil உன்னவர் வர வாழ்த்துக்கள் தோழி.... 02-May-2015 1:48 pm
அருமை.. வாழ்த்துக்கள்..!!! 02-May-2015 12:37 pm
மிகச் சிறப்பான படைப்பு தோழியே... 22-Apr-2015 3:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (474)

Kavi Tamil

Kavi Tamil

இலங்கை
Raja Arunachalam

Raja Arunachalam

திருநெல்வேலி
srinandhini

srinandhini

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (474)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
poovathi

poovathi

புங்குடுதீவு
Siva

Siva

Malaysia

இவரை பின்தொடர்பவர்கள் (476)

நாகூர் கவி

நாகூர் கவி

தமிழ் நாடு
asmani

asmani

திருநெல்வேலி
சித்ரா

சித்ரா

விருத்தாச்சலம்

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே