விவேக்பாரதி - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  விவேக்பாரதி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  22-Oct-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-May-2013
பார்த்தவர்கள்:  1119
புள்ளி:  1893

என்னைப் பற்றி...

தாய் :

சேயெனக் கன்னையாய்ச் சேர்ந்தநற் றோழியாய்த்
சாயெனத் தோள்தரும் சாமியாய் - ஆயினாள் !
சானகி என்பாள் சகிக்கும் குணம்மிக்காள்
தேனுறும் சொல்மொழிவாள் தேர்ந்து !


தந்தை :

முன்னாள் கடற்படையில் முந்திப் பணிபுரிந்த
என்னருந் தந்தை எனக்கேற்றம் ! - மன்னவனாம்
சீனிவாசன் பேரையே சீராய்த் தரித்தவன்தான்
வானின்நீர் போல்பொழிவான் வாக்கு !

இளவல் :

இளவ லுடையேன் இழிவெதற்கு மஞ்சேன் !
உளமே நிறைந்த உயிராய் - விளங்கிடுவான் !
ஸ்ரீவத்ஸ் என்கின்ற சீர்பெயரான் ! புன்னகைத்தால்
பூவர்க்கம் நாணும் புரிந்து !

நான் :

மீசை முளைத்து மிளிர்வதற்குள் செந்தமிழ்மேல்
ஆசை வளர்த்திட்ட ஆண்பிள்ளை - பேச
நினைப்பதெலாம் நேராக நின்றுரைப்பேன் ! வீட்டில்
எனையழைப் பார்விவேக் என்று !

கவிதை :

பொன்னையும் பெண்ணையும் போகும் பணத்தையும்
தன்னையும் காதலிக்கும் தாரணியில் - என்றனையே
காதலிக்கு மோருறவு ! கன்னி உருவென்பேன் !
பூதலத்தில் என்றும் புதிர் !

பெயர்க்காரணம்

கவித்தகப்பன் பேரைக் கடுகியென்பேர் பின்னால்
கவினழகாய்ச் சேர்த்ததே காண்க ! - கவியெழுத
அன்றன்னான் பாக்கள்தாம் ஆகியதே தீப்பொறியாய் !
நன்றிக்கே யிப்பேர் நவில் !

சரண் :

நாற்கவி கற்று நயமாய்க் கவியுறைக்கப்
போற்றினேன் சக்தியவள் பொற்பாதம் - ஆற்றுகிறாள்
என்னு ளிருந்தே எழுதுகிறாள் ! என்வாழ்வே
அன்னை யளித்த அருள் !

என் முகநூல் கணக்கு

www.facebook.com/vivekbharathi007

என் படைப்புகள்
விவேக்பாரதி செய்திகள்
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2017 10:15 am

நில்லா தோடும் காலம் மட்டும்
. நினைத்து நினைத்து நகைக்குது
பொல்லா நெஞ்சம் அந்தப் போக்கை
. பொறுக்கா தேனோ பகைக்குது !
புல்லாங் குழலும் புதுப்போர்ப் புயலும்
. புத்திக் குள்ளே அடிக்குது !
எல்லாம் எதற்கோ என்றே பார்த்தால்
. இதயம் கவிதை வடிக்குது !

ஆழிப் பேரலை அகத்தில் தோன்றி
. ஆறாய் மழையாய்த் திரும்புது !
ஊழிக் கூத்தும் உள்ளத் துள்ளே
. உயர்வாய்த் தாழ்வாய் நடக்குது !
நாழி அனைத்தும் இல்லாப் புதிய
. நடுக்கம் வந்து நெறிக்குது !
வாழி என்றே இதனை ஏற்றால்
. வாக்குள் கவிதை அரும்புது !

இதுவோ வேகம் இதுவோ நாதம்
. இதுவோ கீதம் என்றெலாம்
புதிராய் எழுத்த நெஞ்சத் தலைகள்
. புர

மேலும்

சொற்சுவை வரிகளெங்கும் பொருட்சுவை மனதை ஈர்த்தது. கவிதை என்னவெலாம் செய்யுதோ தங்கள் கவியில் கண்டேன். வாழ்த்துகள் நண்பரே... 13-Jul-2017 7:20 am
அழகிய கவிதைக்கு கவிதை வாழ்த்துக்கள் 13-Jul-2017 5:53 am
விவேக்பாரதி - டாக்டர் ஆர் ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2014 2:46 pm

பேசா திருப்பது ‘பேச்சுக்காய் ’ அல்ல சாக்லெட்டை
தாரா திருப்பது என்றறி.

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பரே. 02-Jul-2017 11:27 am
பேசா திருப்பதுபேச் சுக்கல்ல மிட்டாயைத் தாரா திருப்பதற்கென் றோர் ! பேசா(து) இருப்பதுபேச் சுக்(கு)அல்ல மிட்டாயைய் தாரா(து) இருப்பதற்(கு)என்(று) ஓர் ! இப்படி மாற்றினால் இலக்கணம் பிறழாத குறள் வெண்பா ஆகிவிடும் ! வாழ்த்துகள் ! 01-Jul-2017 1:38 pm
விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2017 11:11 pm

"எதற்குக் கவிதை எழுதுகிறாய் ?"
. என்றே என்னைக் கேட்கின்றார்
இதற்கென் றெதனைச் சொல்லுவது ?
. இமயம் போல இங்குளது !
கதவைப் பூட்டும் தாழ்ப்பாள்போல்
. கவிஞன் நெஞ்சில் ஒன்றிருந்தால்
இதனை எழுதிக் கிடப்பேனோ ?
. இயற்றும் கவியில் திளைப்பேனோ ?

அழகைப் பார்த்தால் என்கைகள்
. அடடா என்றே வரைகிறது !
குழந்தைச் சிரிப்பில் கடவுளவன்
. குணத்தைக் கண்டு விரைகிறது !
இழப்பை எல்லாம் நினைப்பதில்லை !
. இருப்ப தன்மேல் விருப்பமில்லை !
விழைந்து சேர்க்கப் பொருளுமில்லை !
. விசித்திரம் தான் கவிஞன்நிலை !

அற்பப் பொருளைக் கண்டாலும்
. அழகோ அழகென் றுரைத்திடுவேன் !
சொற்க ளுக்கும் உயிரூட்டிச்
. ஜோடி சேர்த்து வைத்

மேலும்

விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2017 11:09 pm

பூக்கள் பூக்கின்ற பொழுதுகளை - அதில்
. பூமி விரிகின்ற அழகுகளைப்
பாக்கள் வடிக்கின்ற வரம்வேண்டும் - அதில்
. பாவம் தொலைகின்ற கதிவேண்டும் !
தீக்குள் கிடக்கின்ற வாழ்வகலப் - பல
. திக்கில் நம்தேகம் சென்றுலவக்
காக்கை குருவிகளின் நிலைவேண்டும் - மனம்,
. காயம் கழற்றுகிற வரம்வேண்டும் !

நம்மை நாம்நீங்கும் விசைவேண்டும் - புவி
. நாடி நாமென்னும் நசைவேண்டும் !
செம்மை எதுவென்னும் தெளிவுடனே - ஒரு
. செய்கை செய்கின்ற குணம்வேண்டும் !
தம்மைத் தாம்வாழ விடவேண்டும் ! - இத்
. தரணி வாழ்தற்கும் வழிவேண்டும் !
சும்மா இருக்கும்சுகம் வரவேண்டும் ! - அதன்
. சுருதி யாதென்ற றியவேண்டும் !

கால மாற்றங்கள் தாங்கிடவ

மேலும்

விவேக்பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2017 11:07 pm

பக்தி என்ப தெல்லாம் - இங்கே
. பாழ்ப டிந்து போச்சு !
முக்தி என்ப தெல்லாம் - சாகும்
. மூட மென்று மாச்சு !
பக்தி என்ப தென்ன ? - அன்பைப்
. பாடு கின்ற சமயம்
அக்னி யாயின் அதனை - ஏற்றும்
. அறிவுத் திரியே பக்தி !

பக்தி ஒன்றி னாலே - கிட்டும்
. பலன்கள் நூறு கோடி
மக்கள் என்ற எண்ணம் - தங்கி
. மண்ணில் ஒழுக்கம் நேரும் !
பக்க முள்ள மனத்தை - மனத்தால்
. பார்த்தும் உதவி செய்தும்
அக்க றைகள் காட்டும் - நிலைமை
. அந்த பக்தி நல்கும் !

கடவுள் பேரைச் சொல்லி - பெரிதாய்க்
. கட்சி சேர்த்துக் கொண்டு
நடை முறை வழங்கி - அதிலே
. நடக்கத் தவறு கின்ற
மடமை அல்ல பக்தி ! - உயரும்
. மார்க்கம் பக்தி யாகும் !

மேலும்

விவேக்பாரதி - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2017 4:04 pm

விண்ணி லுலவும் மேகங் கண்டு
வண்ணப் பாவால் வனைந்திட நினைத்துப்
பண்ணிய முயற்சியில் பலமுறை தோற்க
எண்ணம் பலித்திட இறைவனை இறைஞ்சித்
திண்ணிய நெஞ்சுடன் திரும்பவும் முயலப்
பெண்ணென் எழுத்தில் பிழைக ளகன்று
வெண்முகில் மனத்தில் விரியக்
கண்குளிர் காட்சியாய்க் கவிதை பிறந்ததே!

(நேரிசை ஆசிரியப்பா)

சியாமளா ராஜசேகர்

மேலும்

பிறந்த கவியைப் பிரியத் துடனே திறந்த எழுத்தில் திறமாய்ச் சுவைக்கச் சிறந்த கவிதைச் சிந்தலைக் கண்டு பறந்து நெஞ்சம் பரவசங் கொள்ள மறந்து போன வழக்க மெல்லாம் அறுந்து போன சொந்த மெல்லாம் திரும்ப வந்து சேர விரும்பும் நெஞ்சம் விசையுறப் பாடுமே ! 21-Jun-2017 12:03 am
விவேக்பாரதி - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2017 5:43 pm

சிரம்மேலே கரங்கூப்பிச் சேவித்து நின்றேன்
***செவ்வேளே! வேலென்று சிரித்தபடி வந்தாய்
அரவணைப்பில் விழிகசிய அகங்குளிர்ந்து நின்றேன்
*** அலையுமுளம் அடங்கிடவே அருளாசி தந்தாய்
இரவுபகல் மறவாமல் இசைந்துருகிப் பாட
***இனியேனும் திருப்புகழை எந்நாவில் தாராய்
பரமசிவ மைந்தனுன்றன் பதமலரைப் பற்ற
***பரமபத வாழ்வுதனைப் பரிவுடனே அருளே !

மேலும்

நல்லதொரு வேண்டுதலை நாம்பாடத் தந்தீர் . நற்றமிழின் திருப்புகழைப் போல்பாடல் தந்தீர் சொல்வதெலாம் செந்திலவன் காதாறக் கேட்டு . சோதித்து வழங்கிடுவான் நல்லதமிழ்ப் பாட்டு கல்லால மரநிழலில் வசித்திருப்பான் தம்பி . காளிதமைப் பெற்றெடுத்த பார்வதியின் செல்வன் எல்லாமும் நமக்கீவான் ஏதுகுறை நெஞ்சே . எழுதுங்கள் பாடுங்கள் மொழியுண்டு கொஞ்ச ! 21-Jun-2017 12:01 am
விவேக்பாரதி - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2017 5:46 pm

பாராமல் போனாயேல் பளிங்குமுகம் வாடாதோ?
தீராத சோகத்தில் தேம்பிடுவேன் அறியாயோ?
வீராதி வீரனே விரும்புமெனை ஏற்பாயோ ?
ஊரார்கண் பட்டதுவோ உள்ளத்தில் வலிக்கிறதே!

மடியினிலே தாங்கிட்டாய் மயக்கத்திலே மிதந்திருந்தேன்
துடியிடையில் விரல்படவே துவண்டுவிட்டேன் கண்ணாளா!
வடிவழகில் கவர்ந்தேனோ வாய்மொழியில் வீழ்ந்தாயோ?
விடிவெள்ளி நீதானே வியப்பிலெனை ஆழ்த்தியவா!

சுற்றிவரு மிடமெல்லாம் சொர்க்கமென நான்நினைப்பேன்!
பொற்கரத்தைப் பிடித்தபடி புன்னகைத்து வலம்வருவேன்
வற்றாத பேரன்பை வழங்கிடவே அகம்மலர்வேன்!
நற்றமிழில் சொல்லெடுத்து நாயகனே கவிவனைவேன்!

கனவுலகில் சஞ்சரித்துக் காதலிலே திளைத்திடுவோம்
மனமிரண்டும் ஒன்ற

மேலும்

ஆஹா ஆஹா ! பாராமல் போனாலோ பாழ்படுவேன் அறியாயோ சேராத பொழுதெல்லாம் செத்திடுவேன் தெளியாயோ நீராடும் புனைமுழுதும் நின்னுருவங் கண்டேனே ஓ!ராதா! கேளாயோ ! ஓர்ந்தருகே வாராயோ ? விண்ணிடையே உன்பிம்பம் விசித்திரமாய் வளருதடீ கண்ணிரண்டில் கவியமுதம் காட்டாறா யோடுதடீ எண்ணத்தில் உனைச்சேரும் ஏகாந்தம் தெரியுதடீ வண்ணப்பூக் காடெலாம் வாலைமுகம் காட்டுதடீ ! மையலெனும் நோய்வந்து மானத்தைத் தாக்குதடீ தையலுனைத் தழுவிடவே தளிர்மனமும் ஏங்குதடீ கையிலுன்றன் கைபிடிக்கக் காதலுளம் எண்ணுதடீ வெய்யில்மழை போன்றவளே வேண்டுபொருள் நீயெனக்கு ! காலையிலே உன்முகத்தைக் காணவேண்டும் கண்மணியே மாலையெலாம் நின்மடியில் மாளவேண்டும் மல்லிகையே சோலையிலே நாமிருவர் சொல்லறுத்த உயர்நிலையில் காலமெலாம் வாழுகின்ற கதைவேண்டும் பூங்குயிலே உனைமறந்தால் வாழ்வில்லை உனையன்றி காப்பில்லை நினைவெல்லாம் நீயாவாய் நிஜமெல்லாம் நீயாவாய் கனவெல்லாம் வென்றாயே காதலியே என்றாயே மனதெங்கும் நின்றாயே மகிழ்ச்சியென வந்தாயே ! 20-Jun-2017 11:44 pm
agan அளித்த படைப்பை (public) உதயகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Aug-2015 7:07 am

இது வரை பங்களிப்பு அளித்துள்ளோர்:
தோழர்கள்.
முரளி
ராஐன்
வேளாங்கண்ணி இரட்டையர்
உமை
சிவானந்தன்
பழனிகுமார்
சுந்தரேசன் புருசஷோத்தமன்
கருணாநிதி
சுசிந்தரன்
ஆதிநாடா
ஜின்னா
குமரேசன்
கிருபா கணேஷ்


அதிக தொகை அளிப்பதை தவிர்க்கவும்.

அக்டோபரில் சென்னையில் விழா நிகழும் சரியான நாள் இடம் விரைவில் அறிவிக்கப்படும்.

பலருக்கும் பகிரவும்.

மேலும்

கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) குமரேசன் கிருஷ்ணன் மற்றும் 8 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
20-May-2015 7:44 pm

எந்நாளும் உன்பேர் சொன்னாலே போதும் என்வாழ்வு மிங்கே எழிலாகும்
---பொன்னாரம் பூண்ட மின்னாடும் மேனி என்வாழ்வைச் சேர்ந்த எழிலாகும்
செந்தாழம் பூவைக் கண்டாடும் கொங்கை கொண்டாளே தாயே உமையாளே
---உன்னாசி அன்றி வேறேது இங்கே என்பாவைக் காக்கும் ஒளியோசொல் !
சிந்தோடு சந்தம் வந்தாடும் வண்ணம் என்னோடு தாராய்த் தமிழாறை
---முன்னோர்கள் போற்ற முன்னேகி நானும் பொன்னான பாக்கள் பலபாடக்
கந்தோனின் கையில் அன்றோர்நாள் தாயே தந்தாயே வேலை அதுபோலே
---உன்சேயா மென்றன் கையோடு நீயும் தந்தாலே போதும் கவிவேலை !


எந்நாளும் செந்தாழம் சிந்தோடு கந்தோனின், பொன்னாரம் உன்னாசி முன்னோர்கள் உன்சேயா , எழிலாகும் எழிலாகும் உமை

மேலும்

மரபு கவி பாடும் நண்பர் விவேக் பாரதி வணக்கத்திற்கு உரியவர், அவரைப் பற்றிய இப்பதிவும் சாலச்சிறந்ததே வாழ்த்துக்கள் தோழர் கவித்தா சபாபதி . 13-Jun-2015 11:57 pm
மரபு மாறாமல் மற்றதை சேராமல் கூறி இருப்பது சிறப்பு... மரபு எப்போதும் மரபு மாறாமல் பேசப் படுவதுதான் சால சிறந்தது... அப்படி என்றால் இதுவும் அந்த வகையில் சேரும்... மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-May-2015 12:44 am
நிச்சயம் செய்கிறேன் ...நேற்று ஏறக்குறைய 7 ,8 பதிவுகள் படித்தேன் ...அருமையாக இருந்தது ...நீங்கள் சொல்லித்தான் இப்படி ஒரு தொடர் இருப்பதே தெரிந்தது நன்றி..நன்றி 24-May-2015 8:55 am
மிக்க நன்றி என் பக்கம் 9 கட்டுரைகள் இருக்கும் yugangal இன் வானில். தோழமைகள் எழுதிய 23 படைப்புகள். நேரம் கிடைக்கும்போது பார்த்து மனதில் படுவதை உரைத்தால் தொடரை செப்பனிட உதவும். 23-May-2015 5:17 pm
பொள்ளாச்சி அபி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
30-Apr-2015 3:22 pm

பொள்ளாச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் -மாதாந்திர இலக்கிய சந்திப்பு. வாய்ப்பு உள்ளவர்கள் வருக..!

மேலும்

"பொள்ளாச்சி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்,கலைஞர்கள் சங்கம் என்ற எண்ணத்தை manimegalaimani, vivekbharathi, சர்நா, இராஜ்குமார் Ycantu, thaagu, sarabass, Punitha Velanganni ஆகிய 7 உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டதற்கு எனது நன்றிகள்.! 02-May-2015 1:10 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) ராம் மூர்த்தி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
13-Apr-2015 5:22 pm

அங்கக் குறைபாடால் அல்லலுற வேண்டாமே
தங்கமகன் காத்திடுவான் தாயுனை - மங்கையே!
பாலகனின் பாசமும் பக்கத் துணையிருக்க
சீலமாய் வாழ்வாய் சிறந்து .

மேலும்

மிக்க நன்றி ! 18-Apr-2015 3:11 pm
மிக்க நன்றி சாந்தி ! 18-Apr-2015 3:10 pm
மிக்க நன்றிம்மா ! 18-Apr-2015 3:09 pm
மிக்க நன்றி ! 18-Apr-2015 3:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (132)

பாலா

பாலா

தமிழ்நாடு
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்
பெருவை பார்த்தசாரதி

பெருவை பார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78

இவர் பின்தொடர்பவர்கள் (133)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (133)

ஆவாரம் பூ

ஆவாரம் பூ

தமிழ்நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே