அழ. வள்ளியப்பா குறிப்பு

(Azha Valliappa)

 ()
பெயர் : அழ. வள்ளியப்பா
ஆங்கிலம் : Azha Valliappa
பாலினம் : ஆண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன்.

தொடர்ந்து படிக்க முடியாததால் 1940 ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் தேடி வை. கோவிந்தன்னின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார்.

குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார்.

வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி "மலரும் உள்ளம்" 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1954 இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961 இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். "சிரிக்கும் பூக்கள்" என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், "குழந்தைக் கவிஞர்" என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினர்.

* குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டி போற்றியுள்ளனர்.

* 1982 -ல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தினால் "தமிழ்ப் பேரவைச் செம்மல்" என்று விருதளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்.
அழ. வள்ளியப்பா கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

மேலே