உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ! - கவிப்பேரரசு வைரமுத்து

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு , இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு.

பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை கொடுப்போம்.
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்.

யுத்த சத்தம் கேட்டால் போதும் முத்தச்சத்தம் முடிப்போம்.
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்.

எங்கள் மண்ணை தொட்டவன் கால்கள் எங்கள் நிலத்தில் உரமாகும்.
எங்கள் பெண்ணை தொட்டவன் கைகள் எங்கள் அடுப்பில் விறகாகும்.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, இதை உரக்கசொல்வோம் உலகிற்கு.
இனம் ஒன்றாக மொழி வென்றாக, புது வேலை எடுப்போம் விடிவிற்கு.
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு !!

- கவிப்பேரரசு வைரமுத்து

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு ! - கவிப்பேரரசு வைரமுத்து

  • அன்னைக்கு முதல் வணக்கம்,
    தமிழுக்குத் தலைவணக்கம்,
    தமிழருக்கு வீர வணக்கம் !!!
    வாழ்க தமிழ், வளர்க
    தமிழினம் !!!
  • உலக தமிழ் செம்மொழி
    மாநாடு
    இதுவரை காணாத நம்மொழி மாநாடு
    தமிழருக்கெல்லாம் தேன்மொழி
    மாநாடு...!!!
  • உடல் இருந்தால்தான் உயிர் சிறக்கும்...!
    தமிழ் இருந்தால்தான் தமிழன்
    சிறப்பான்...!
    கலைஞர் முயற்சியால் ஈரேழு
    உலகத்திலும் தமிழ்
    சிறக்க போகிறது...!
    கலை தமிழுக்கும்!
    கலை தமிழனுக்கும்!
    எனது வணக்கங்கள்...!
  • தாயை நேசி...!
    தமிழை சுவாசி...!
    செம்மொழி மாநாட்டைப் பற்றி
    கொஞ்சமாவது கவிதை யோசி...!
    தமிழ் வளர அல்ல...!
    தமிழ் உனக்குள் வளர...!
    _போக்கிரி கவிஞன் *ராஜா*
    (தமிழன்)
    (pokkiripayan007@gmail.com)
  • தமிழை மட்டும் நேசிக்காதே
    தமிழையும் நேசி
  • தமிழன்றி வேறில்லை..!
    எந்த சாதியும் தாழ்வில்லை...!
    தமிழா நீயும் நானும் ஒருதாய் பிள்ளை...!
    அழிவென்னும் வார்த்தை தமிழுக்கு இல்லை...!
    வலியுண்ணும் வாழ்க்கை
    தோற்பதும் இல்லை...!
    தமிழே நமக்கு வாழ்க்கையின்
    எல்லை...!
  • உலக மொழிகளில் தாய் மொழியாம்
    எங்கள் தமிழ் மொழி.
    பெரும் புகழை தாங்கியும்
    கர்வமில்லாதொரு செம்மொழி.
  • யாதும் ஊரே யாவரும் கேளிர் -எம்
    தமிழுக்கு எதுவும் நிகரில்லை பாரீர்.
  • என் உயரினும் மேலான தமிழ் மொழியே! உன்னை என் தாய் மொழியாய் அடைந்ததற்கு என்ன தவம் செய்தேனோ!
  • என் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
  • தமிழ் காக்க என்ன விலையும்
    கொடுப்போம் எங்கள் உயிரும் கொடுப்போம்


  • நான் தூய தமிழ் மொழியில் எழுதுவதற்கும், பேசுவதற்கும் பெரும் முயற்சி செய்கிறேன், ஏனெனில் எனக்கு தெரிந்த வார்த்தைகளில் பெரும்பாலும் ஆங்கிலமும் ஏனைய பிற மொழிகளும் சொற்களும் பின்னி பிணைந்துள்ளன அவை தமிழ் மொழியா பிறமொழியா என்பதெல்லாம் அகராதியினலோ அல்லது வேறு விளக்கங்கள் மூலமாகவோ தெரிந்து கொள்ள வேண்டிருகிறது, உதாரணமாக பண்பலைகளில் ஒலிபரப்படும் சேவைகளில் தமிழ் மொழி கலப்பில்லாமல் உரையாடுகின்ற நிகழ்ச்சி அதாவது போட்டி என்னை பெரிதும் காயபடுத்துகிறது எனவே அந்நிய மொழியினை இனம் காண தடித்த எழுத்துகளாலும் அடைப்புகுறிகுள்ளும் கட்டாயமாக அன்னை தமிழ் சொல்லினை பயன்படுத்த வேண்டும் எ .கா. கலர் (ஆங்கில சொல் )
  • எனக்கு எத்தனை செல்ல பெயர்கள் இருந்தாலும் , என் பெயரை என்னால் மறக்க முடியுமா ? அதுபோலத்தான் என் தமிழே எத்தனை வேற்று மொழிகளை கற்றாலும் உன்னை மறக்கமாட்டேன்...!!!
    (உன்னிடம் காதல் கொண்ட ஜெய்சி.....!!!)
  • தமிழை மறப்பது மறுப்பது தாயை மறப்தற்கு சமம்...
    ஆகவே
    நம் தாயை போல தமிழையும் காப்போம்...
    வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...
  • தாய்மொழி தமிழை மறந்தவன்
    தாயின் கருவறையில் மரித்திருக்க வேண்டும்..
    என் தமிழ்மொழியை மறுப்பவன் தாயின் கருவறையை சேராதிருந்திருக்க வேண்டும்.! அற்பப்பதரை அணுவிலே அறுத்து எறிந்திருக்கவேண்டும்..( மகா)
  • தமிழ் மறந்தால் சாப்பிட கூட மறந்த பைத்தியக்காரன் போல
    வி எஸ் ரோமா - கோயம்புத்தூர்
  • தேனும் பலா சுவையும் போல
    தமிழ் இனிக்கும்
    வி எஸ் ரோமா - கோயம்புத்தூர்
  • தமிழ் தரம் முதல்
    தமிழ் வீரம் முதல்
    தமிழ் மனம் முதல்
    - வி எஸ் ரோமா - கோவை
  • கருவறைக்குள் தாய் அவள் சொன்னாள்,,,,,
    உன் குருதி தமிழ் குருதி என்று ,



  • தமிழ் என் முகவரி..
    --சுந்தர்
  • என்னை பெற்றெடுத்த என் தாயைப்போல் என்னை தாங்கிக்கொண்டு
    இருக்கும் என் தமிழுக்கும் .தாய் மண்ணிற்கும் நான் சிரம் தாழ்த்தி
    கரம் கூப்புகிறேன் .
    என் குருதியில் கொள்கைய ய் வாழ்வது தமிழ்
    என் உயிருக்கு ஊட்டத்தை ஊட்டுது தமிழ்
    என் உணர்ச்சியில் உயிராய் உலவுவது தமிழ்
    என் உண்மைக்கு உறுதுணை புரிவது தமிழ்
    என் உழைப்பிற்கு ஊதியம் கொடுப்பது தமிழ் - தமிழை
    வாழ்த்த நமக்கு வயதில்லை தமிழை வணங்குவோம் வளர்ப்போம்...!!!
    நிலாசூரியன். தச்சூர்
  • தமிழ் மொழிக்கு
    தனி அழகு
    தமிழ் மக்களுக்கு
    தரத்தில் அழகு
    வி எஸ் ரோமா - கோயம்புத்தூர் -14
  • தலையாய மொழிகளிலே
    தமிழ் மொழிதான்
    முதல் மொழியாம்

    தரணியிலே தமிழ்
    தமிழ் மொழிதான்
    தனித்துவமும் வாய்ந்ததுவாம்

    ஆதியிலே தோன்றிய நம்
    அன்னைத் தமிழ்த்
    தமிழ் மொழிக்கு
    அகிலத்தை ஆளுகின்ற
    ஆற்றலும் உள்ளதுவாம்

    முச்சங்கம் கண்ட நம்
    முத்தமிழ் தமிழ் மொழியாம்
    முப்பாலும் நமக்குத்தந்த
    வள்ளுவனின் தமிழ்மொழியாம்

    உலகமெல்லாம் அதிசயிக்கும்
    அழகுமொழி தமிழ்மொழியாம் பல்சுவை நிறைந்திருக்கும் நம்
    பண்டைகால தமிழ் மொழியாம்

    தமிழின் பெருமையினை
    பாரெல்லாம் பறைசாற்ற
    படையுடன் புறப்படுவோம்
    வாருங்கள் தோழர்களே...!!!
    ---- நிலாசூரியன். தச்சூர் ---
  • தமிழே !
    உன்னைக் காக்க நல்ல தமிழன்
    இந்தப் புவிதனில் இனியில்லை . . .

    அதனால் நீ துவண்டு விடாதே !

    நீயே . . . மீண்டும் ஔவையையும்,
    பாரதியையும், திருவள்ளுவனையும்,
    கம்பனையும், பெற்றுக்கொள் . . .

    இது ஒரு தமிழ்க்குழந்தையின் கதறல் . . .
    தயை கூர்ந்து அருள் செய் . . .

    ராதேக்ருஷ்ணா . . .
  • தமிழ் . . .
    எந்த மொழியின் தயவும் இல்லாமல்
    வாழும் ஓர் அற்புத மொழி . . .

    தமிழே நீ தான் எங்களை வாழவைக்கிறாய் . . .


    ராதேக்ருஷ்ணா . . தமிழ்நாடு
  • தமிழ்
    தமிழ் மனம்
    தமிழர்களுக்கு மட்டும் அல்ல
    தமிழ் மனம் உலகெங்கும் உண்டு
    வி எஸ் ரோமா - கோயம்புத்தூர் -14
  • ஒவ்வொரு தமிழனின்
    உயிர் மூச்சிலும்
    தமிழ் மணம் வீசட்டும்
  • தமிழ் என் உயிரோடும் உடலோடும் கலந்த ஒன்று என் உடல் மாய்ந்தாலும் என் ஆத்மாவோடு என்றும் எனக்குள் வாழும் !
  • தமிழுக்கு முதல் வணக்கம்
    தமிழருக்கு தனி வணக்கம்
    தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மினலே பாயுமே ...
  • தமிழ் என்று சொல்லும் போது
    இதயம் தாமரையாய் விரிந்து நிற்கும்
    தமிழன் என்று சொல்லும்போது
    தரணியில் தலை நிமிர்ந்து நிற்கும்
    ஏய் தமிழா !
    நீ எழுது
    அழகா !!
    இதயத்தை திருடும்
    கவிதை வரிகளாய்!!

  • வாழ்க தமிழ் வளர்க தமிழ்குடி
  • பொதிகை தென்றலொடும்
    குற்றால சாரலோடும் கைகோர்த்து
    கற்ற மொழி தமிழ் மொழி
    தமிழ் என் தாய் மொழி
    தமிழ் கவிதை என் முகவரி
    -----கவின் சாரலன்
  • வெட்கத்துடன் சொல்கிறேன்,
    சில பல நூறுக்காக உனை மறந்து
    கடல் கடந்து உடல் வலித்து
    மனம் குன்றி வாழும் தமிழர்களுள்
    நானும் ஒருவன் :( ........................
  • தமிழ் மிக அருமை
  • உன்றன் சிறப்பை ஜி.யு.போப் அவர்களின் கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் 'ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்' என்ற வரிகள் சொல்லும்...

    வாழ்க தமிழ்.
  • தமிழ் மொழியை சுவாசிப்போம்
    தமிழன் என்று தலை நிமிர்வோம் !
  • வாழ்க தமிழ், வளர்க தமிழ்
  • எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று எப்படி சொன்னாய்? தமிழை படித்த பிறகு தானே! பாரதி.
  • இமைகளை மூடி
    இதழ் திறந்து
    மௌனம் பேசும்
    மலரின் மொழி
    தமிழ் -pnkrishnanz