எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு ஜிஎஸ்டி கலாட்டா 

*படிச்சிட்டு  கோபம் வேணா வரலாம் ஆன சிரிக்க கூடாது* 
_______________________________

ஒருவர்  தள்ளுவண்டியில்  இட்லி தோசை விற்றுக்கொண்டிருக்கிறார்  அவரிடம்...ஒரு Public வருகிறார் 

Public :  இட்லி  என்னபா விலை..?

உங்க கிட்ட ஆதார் கார்டு இருக்கா?? GST number இருக்கா?? 

Public :(அதிர்ச்சியோடு தயக்கமாக சொல்கிறார்)    இ...ரு....க்......கு.... ஏன் ?? 

இட்லி வியாபாரி : அது காட்டுனா தான் இட்லி கிடைக்கும் 

Public : அது சரி இட்லி விலையை சொல்லு 

இட்லி வியாபாரி* ::

சார் , இத எதுக்கு நீங்க வாங்குறீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை சொல்ல  முடியும்...?

Public :  என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

இட்லி வியாபாரி: 

இல்ல சார் , நீங்க இந்த இட்லியை  மட்டும்  வாங்குனா விலை 10 ரூபா ஒரு இட்லி *

*குழந்தைகளுக்குனு சட்னி, சாம்பார், கார சட்னியோட வாங்கினா ஒரு  இட்லி  20 ரூபா.*

*தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.*

*நீங்க இங்கேயே  சாப்பிட வாங்கினா  ஒரு இட்லி 30 ரூபா சார்.....*

Public : ....அதிர்ந்து போனவராக  யோவ், யார ஏமாத்தப் பாக்குற ?? 
ஒரே இட்லி எப்படியா different different ஆன விலைக்கு வரும்...??

*வியாபாரி* :: This is my GST plan 

ஏன்டா கொய்யாலே.... ஏன்டா டேய் 
நீங்க மட்டும்
ஒரே  வரி ன்னு  வச்சிகிட்டு.....

மாவுக்கு தனி வரி 

மிளகாய்க்கு தனி வரி 

வெங்காயத்துக்கு தனிவரி 

உப்புக்கு தனி வரி 

அத வீட்டுக்கு செஞ்சா ஒரு வரி 

வெளியே வெச்சா தனி வரி 

கடைக்கு உள்ளே ஒரு  வரி 

கடைக்கு வெளியே தனிவரி 

பேக்டரிக்கு தனி வரி ன்னு போடுவீங்க....
கேட்ட GST சொல்லுவீங்க... 

இது எங்க GST plan டா 

இப்ப சொல்லு .....

Public மயக்கம் போட்டு விழுகிறார் !!!! 

*இட்லி கடைக்காரர் rocked and* 
*Public  shocked.*

மேலும்

மனிதநேயம் இறந்து பணநேயம் வளர்ந்தால் எதுவும் நடக்கும் இந்த வியாபார உலகில். அருமை சகோ. 03-Jul-2017 12:20 am

என்ன ஒரு சங்கட்டமான வாழ்க்கை😂

மேலும்

நன்று 21-Apr-2017 7:23 pm

.

மேலும்

சிறப்பான செய்திப் பகிர்வு . SHARE SPREAD . பகிர் பரப்பு ---அன்புடன், கவின் சாரலன் 05-Dec-2015 9:58 am

சென்னை : 
கனமழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், 
சென்னை விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. 
இதனிடையே, தற்போது சென்னையில் இயல்புநிலை திரும்ப துவங்கியுள்ளதால், விமான நிலையம் 
நாளை ( 05ம் தேதி) முதல் செயல்பட துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
நன்றி: தினமலர் 

மேலும்


புதுடில்லி: கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், வங்கிகளின் நேரத்தை நீட்டித்தும், ஞாயிறு அன்றும் வங்கிகள் செயல்படவும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 
நன்றி: தினமலர் 

மேலும்

குடிநீர் - உபரிநீர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இருந்து, கூடுதலாக உபரிநீர் வெளியேற்றும் நடவடிக்கையை, பொதுப்பணி துறை துவங்கியுள்ளது.

வடகிழக்கு பருவமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளும், வேகமாக நிரம்பி வருகின்றன; ஏரிகளின் மொத்த கொள்ளளவு, 11 டி.எம்.சி., தற்போது, இவற்றில், 8.7 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. புழல் தவிர மற்ற ஏரிகளில் இருந்து, உபரிநீர் வெளியேற்றும் நடவடிக்கையை, பொதுப்பணித் துறையினர் நேற்று முன்தினம் துவங்கினர்.இன்று முதல், மூன்று ஏரிகளில் இருந்தும் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான, 3.3 டி.எம்.சி.,யில் , 2 டி.எம்.சி., நிரம்பியது.

*ஏரிகளின் உபரிநீர் திறப்பு நிலவரம்:

*சோழவரம் ஏரி
மொத்த கொள்ளளவு- - 0.88 டி.எம்.சி.,
தற்போதைய நீர் இருப்பு- - 0.69 டி.எம்.சி.,
நீர் வரத்து - வினாடிக்கு,- 1,414 கன அடி
நீர் திறப்பு - நேற்று - வினாடிக்கு, 100 கனஅடி
நீர் திறப்பு - இன்று - வினாடிக்கு, 500 கன அடி

*பூண்டி ஏரி
மொத்த கொள்ளளவு- - 3.23 டி.எம்.சி.,
தற்போதைய நீர் இருப்பு- - 2.82 டி.எம்.சி.,
நீர் வரத்து - வினாடிக்கு, 28,012 கன அடி
நீர் திறப்பு - நேற்று - வினாடிக்கு, 1,960 கன அடி
நீர் திறப்பு - இன்று - வினாடிக்கு, 18,996 கன அடி

*செம்பரம்பாக்கம் ஏரி
மொத்த கொள்ளளவு- - 3.64 டி.எம்.சி.,
தற்போதைய நீர் இருப்பு -- 3.19 டி.எம்.சி.,
நீர் வரத்து - வினாடிக்கு,- 12,031 கன அடி
நீர் திறப்பு - நேற்று - வினாடிக்கு, 1,000 கன அடி
நீர் திறப்பு -இன்று - வினாடிக்கு, 18,000 கன அடி

நன்றி: தினமலர்
----------------------------------------------------

1) உபரிநீர் சேமிப்பு திட்டம் செயல் படுத்தாமல் விட்டது மற்றும்
2) மழை நீர் வடிகால் சரியாக பராமரிக்க இயலாமை
இவைகளுக்கு யார் பொருப்பு?

மேலும்

T.R (பாணி‌யில்) மழை Dialogue :

இது ..
அட்டாக் மழை
அதிரடி மழை
அற்புத மழை
அட்டகாசமான மழை
ஆர்ப்பாட்டமான மழை
ஆக்ரோஷமான மழை
ஆவேச மழை
இலவச மழை
இடைவிடா மழை
இடிமின்னல் மழை
ஈட்டிபோல் குத்தும் மழை
உபரி மழை
உற்சாக மழை
உல்லாச மழை
ஊர் முழுக்க மழை
ஊர் முழுக்கடிக்கும்மழை
எங்கும் மழை
எதிலும் மழை
எப்பொழுதும் மழை
என்றென்றும் மழை
ஏனிந்த மழை
ஒய்யார மழை
ஒங்கியடிக்கும் மழை
கன மழை
காட்டு மழை
சாட்டையடி மழை
சம்மட்டியடி மழை
சவட்டியெடுக்கும் மழை
சாலைவெள்ளம் தரும் மழை
சாலை மூழ்கும் மழை
பள்ளி விடுமுறை மழை
ஸ்டூடண்ட்ஸ் மழை
ரமணன் மழை
விடாது கொட்டும் மழை
சூரியனைத் தொலைக்கும் மழை
பஜ்ஜி, வடை தேட வைக்கும் மழை
கரண்ட் கட் ஆகும் மழை
போன கரண்ட் திரும்பி வரா மழை
ரோட்டில் போட் ஓட்டும் மழை
வீதியில் ஏரி காட்டும்மழை....

மூச்சு வாங்குது... மிச்சத்தை நீங்களே போட்டுக்கோங்க..!!!

மேலும்

படித்ததில் பிடித்தது

மழை வெள்ளத்தை சபிக்காதீர்கள்.. 
திருடப்பட்ட தன் ஏரிகளையும், குளங்களையும் 
பரிதாபமாக அது தேடி அலைகிறது.. 
இருப்பிடத்தை ஆக்கிரமித்து 
கட்டிடங்கள் கட்டியதால்,
சாலை இறங்கி மறியல் செய்கிறது
மழைநீர்...!

மேலும்


எங்கே அந்த தீபாவளி   ?

பத்து நாட்கள் முன்னதாகவே பட்டாசுகளை காயவைக்கும் சாக்கில் தொட்டுப்பார்த்து சந்தோஷப்பட்டு

விரல்விட்டு நாட்களை எண்ணிப்பார்த்து

நண்பர்கள் யார்யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள் என ஆராய்ச்சி செய்து

புதுத்துணி தைக்க கொடுத்து,  தையல்காரர் தைத்து கொடுத்து விடுவாரா என நினைத்தபடியே ஏங்கி

நமக்குத்தெரியாமல் அப்பாம்மாக்கள் அதை வாங்கி பாழாப்போன surprise என்றபேரில் ஒளித்துவைத்திருக்க

பக்ஷணங்கள் தயாரகும்போதே அவசர அவசரமாக உம்மாச்சிக்கு காட்டிட்டு வாயில் போட்டுக்கொள்ள

தாத்தாபாட்டியோடதான் தீபாவளி என்று ஆசையோடு அப்பாகூட ஜன்னல் வழியாக இடம் போட்டு  பஸ்ஸில் பயணம் செய்து

அங்கே உள்ள பழய,  புதிய friends கூட ஜாலியாகப்பழகி

பந்துக்களுடைய பாச மழையில் நனைந்து

முதல்நாள் மாலையே அப்பா கையைபிடித்து மத்தாப்பு புஸ்வாணங்கள்,  தரைச்சக்கரங்கள் விட்டு,  கிட்டேவரும்போது பயந்து  தாண்டி குதித்து
பிறர் கேலி செய்ய

ம் ம் ஆச்சு போறும் சீக்கிரம் படு, விடிஞ்சா தீபாவளி,  சீக்ரம் எழுந்துக்கணும் என விரட்டும் தாத்தாவுக்கு பயந்து கள்ளத்தூக்கம் தூங்க ஆரம்பித்து உண்மையாகவே தூங்கி வழிந்த

காலையில் 3 மணிக்கெல்லாம் பலவந்தமாக எழுப்பி பாதி தூக்கத்திலேயே தன் பழுத்த கைகளால் இளஞ்சூடோடு கூடிய பாசத்தில் பாட்டி எண்ணை தேய்த்த

அந்த இருட்டிலே கொட்டாங்குச்சி சிரட்டையால் வெந்நீர் அடுப்பை நம் தாத்தா ஊதிக்கொண்டிருந்த...

நாம் முரண்டுபிடிக்க எண்ணைபோக சீயக்காய் பொடியை அம்மா தேய்க்க நம் கண் எரிந்த அந்த...

ஸ்வாமி முன்னாடி மஞ்சள் தடவிய புத்தாடையை பெரியவா்கள் எடுத்து தர அதை மாட்டிக்கொண்டு பட்டாசை தூக்கிக்கொண்டு தெருவில் ஓடிய.....

கூப்பிட்டு நமஸ்காரம் பண்ணச்சொல்லி, இந்தா தீபாவளி இனாம் என்று 1 ரூ. நோட்டை அப்பா தர, வாயில் சுழிக்க சுழிக்க தீபாவளி மருந்தை அம்மா ஊட்டிய....

கங்காஸ்நானம் ஆச்சா என்று கையயில் உக்காரை, மிக்சருடன் பக்கத்தில் உள்ள பெரியவர்களிடம் நம்மையும்  கையில் இழுத்துக்கொண்டோடிய....

அவர்கள் தீபாவளி துட்டு என்று ஆசையாக நாலணா தந்த...

காலை  6 மணிக்கெல்லாம் தீபாவளிக் இட்லியும் பஜ்ஜியும் சாப்பிட்ட..

சட சட என சரம் வெடிப்பதை பார்த்து துள்ளும்போது,  சனியனே காசைக்கரியாக்காம ஒண்ணொண்ணா பிரித்து வெடிடா என்று தாத்தா திட்டிய...

ரெண்டு சீனி வெடியை சேர்த்து,  கொட்டாங்குச்சி ஓட்டைக்குள், மண்ணைக்கவித்து அதில் சொருகி என வித விதமாக ரசித்துக்கொண்டாடிய...

நம் சரக்கு காலியானபின் அக்கம்பக்கத்தில் ஏதாவது தலைதீபாவளிக்கு அதிகமாக பட்டாசு வெடிப்பதை அப்பாம்மாவுக்கு தெரியாமல் நம் கௌரவம் குறையாமல் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்த...

பிறகு யார் வீட்டு வாசலில் அதிக பட்டாசு வெடித்த குப்பை என்று அலசும் பேச்சுக்கள்.....

ராத்திரியில் சீக்கிரமே ஊர் களைப்பால் ஓய்ந்திட. நம்மை ஏக்கத்திலும் தூக்கத்திலும் ஆழ்த்தி  நாம் அறியாமல் விடைபெற்ற அந்த தீபாவளியை எங்கேயாவது பார்த்தால் அனுப்பிவைங்கோளேன்....!!!🙏

மேலும்

அருமை ஐயா..... 11-Nov-2015 8:10 pm
மேலும்...

மேலே