எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கலோரிகள்
எரிக்கப்படுகின்றன...

திசுக்கள்
புதுப்பித்துக் கொள்கின்றன.....

எப்போதும்
இளமையாய் இருக்கலாம்...

இரத்த ஒட்டம்
சீரடைவதாய் சமீபத்திய
ஆய்வறிக்கை.....

சாயம் தவிர்த்தும்
இயல்பாகவே அழகாய்
இருக்கின்றன...

ஒரு முத்தத்திற்காய்
எத்தனை
மன்றாட வேண்டியிருக்கிறது...!!!

மேலும்

துர்காதேவியினை
நான்கு சிறுவர்கள்
வலம் வந்துகொண்டிருந்தனர்...

சரியாக
இடப்புறம் அமர்ந்திருந்த
காலபைரவன் ரத்தத்தின்
சுவை 
இனிப்பென்றிருந்தார்.....

ஆகமவிதிகளின் படி 
எல்லாமே 
சரியாக
அமைக்கப்பட்டிருந்தது....!!

மேலும்

தமிழ் கூறும்  நல்லுலகிற்கு  வணக்கம். நம் தளத்தில் சென்ற வாரம் முதல் நண்பர் ஜின்னா அவர்களால் துவங்கப்பட்டு  நண்பர்கள் பலரின் பங்களிப்பில் வெற்றிகரமாக உலா வந்து கொண்டிருக்கும் கஜல் கவிதைத் தொடரான காட்சிப் பிழைகளை நாம் அனைவரும் வாசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தொடரின் ஆளுமை, வீச்சு, படைப்பாளிகளின் ஆக்கப் பூர்வமான பங்களிப்பு, அழகியல் இன்னபிற விடயங்களையும் கடந்து வாசிப்புப் பழக்கம் குறைந்து போயிருந்ததைப் போல ஒரு தோற்றப்பிழையோடு  இருந்த இத்தளத்தில் மீண்டும் புது ரத்தம் பாய்ச்சியதைப் போல காட்சிப்பிழையில் பதியப்படும் ஒவ்வொரு கவிதைகளும் சராசரியாக 200 பார்வைகளுக்கு மேல் கடந்து உலாவந்து கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றி நண்பர்களின் பங்களிப்பாலும் வாசிப்பினாலும் மட்டுமே சாத்தியப்பட்டது. அனைவருக்கும் நன்றி. 
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தளத்தில் பதியப்படும் காட்சிப் பிழைகள் நம் தமிழ் கூறும் நல்லுலகின் பெருமகனார்  மகாகவி திரு. ஈரோடு. தமிழன்பன் அவர்களாலும் வாசிக்கப் பெற்று அவர்கள் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. கஜல் கவிதைகளின் ஒவ்வொரு மூலக்கூறுகளையும் விளக்கி நம் படைப்பாளி நண்பர்களையும் வாழ்த்தியனுப்பிய வாழ்த்துச் செய்தி... இதோ.. அனைவரின் பார்வைக்காக..... 


https://www.youtube.com/watch?v=1SDtsl-Zg2w&feature=youtu.be

மேலும்

" அப்படி முணுமுணுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் கடந்த வருடங்களில் அது நடக்கவில்லை என்றுதானே அர்த்தம். " _ ஆமாப்பு...நெசந்தேன்...அப்படி நடந்துப்போனது திட்டமிடாததன் விளைவே. " மேலும். எங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. " _கேட்கவில்லை . எழுதியேவிட்டார்கள் . அவர்கள் சரியே. எனது நோக்கம் ஆளுமைகள் முன்னிலையில் ஓர் அறிமுகம் மட்டுமே என்றிருந்தது _ இரண்டு முறையும். " அவர்கள் எழுதிய கவிதையைப் பற்றி உங்களைப் போன்ற ஆளுமைகள் இரண்டொரு வரிகள் பேசும்பொழுது எங்களைப் போன்றோருக்கு அது ஒரு ஊக்கமாகவோ அல்லது புதிய உத்வேகத்தையோ அளிக்கக் கூடும். " இதைச் செய்யவே இப்போது திட்டம். இதன் தொடக்கமே நீ பதிந்த யூ டியூப் . அறையில் தொடங்கியதை அம்பலத்தில் அரங்கேற்றுவோம் அப்பு. முரண் படுதல் தவறல்ல _ ரோசாவின் அழகு அதன் முட்கள் பலாவின் ருசி ..தேனடை.....தாழம்பூ.. 22-Dec-2015 1:39 pm
ஆமாம் சார்.... எல்லோரும் கொண்டாடுவோம்.... மூத்தோர் வழிநின்று..... நன்றி சார் 21-Dec-2015 2:48 pm
சரவணா..ஒரு போட்ட ஒரு பதில் கருத்து எனக்கு மிகவும் பிடித்தது. "எல்லோரும் கொண்டாடுவோம்... பாட்டுதான் நியாபகத்துக்கு வருது அப்பா..... நன்றி... வாழ்த்துக்கும் வாய்ப்பளித்தமைக்கும்" . நண்பர் ஜின்னா அவர்களின் சீரிய முயற்சியில் தளத்துக்கு ஒரு புது ரத்தத்தை பாய்ச்சியது என்னும் கூற்றுக்கு கஜல் தொடரில் எழுதும் நண்பர்கள் புது உத்வேகத்தோடு எழுதுவதும் அதை அகன் ஐயா போன்ற மூத்தவர்கள் முன்னின்று ஒவ்வொரு கவிதைக்கும் வழிநடத்துதல் கருத்தும் இடுவது சான்று. நண்பர் ஜின்னாவின் இந்த அரிய முயற்சியை அனைவரும் வாழ்த்துகிறோம், வணங்குகிறேன் எல்லோரும் கொண்டாடுவோம்..இந்த கஜல் தொடரின் வெற்றிப் பயணத்தை.. 21-Dec-2015 12:47 pm
முதல் முறையாக உங்களிடம் இருந்து ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன். பயிலரங்கம்.. விழா .. புத்தக வெளியீடு எல்லாம் சிறந்ததே. முதல் தலைமுறையின் ஆக்கப் பூர்வமான சிந்தனை வளங்களை பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அது எங்களுக்குக் கிடைத்த வரமாகவே கருதுகிறோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நீங்கள் இரண்டாவதாகச் சொன்ன விஷயம்தான் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது . "விளுது ....விளுது...காதுலே விளுது....நாள் முச்சூடும் எங்களைப்பத்தி மட்டுமே பேசணும் ...சரியா. ?? " அப்படி முணுமுணுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படியென்றால் கடந்த வருடங்களில் அது நடக்கவில்லை என்றுதானே அர்த்தம். மேலும். எங்களைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. அவர்கள் எழுதிய கவிதையைப் பற்றி உங்களைப் போன்ற ஆளுமைகள் இரண்டொரு வரிகள் பேசும்பொழுது எங்களைப் போன்றோருக்கு அது ஒரு ஊக்கமாகவோ அல்லது புதிய உத்வேகத்தையோ அளிக்கக் கூடும். விருது பெறுபவர்களும் ஒரு மாதிரியான வகையில் விழா நாயகர்களே என்பது உங்களுக்குத் தெரியாததில்லை. அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும்போது அந்த அங்கீகாரத்திற்கான மூல காரணத்தையும் அறிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகிறது. இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. 21-Dec-2015 11:32 am

யாரையும் குற்றப்
படுத்துவதற்கில்லை.. எங்களின்
நாற்பதங்குல
தொலைக்காட்சிகள் ஒளிரவில்லை..

யார்மீதும் பழிபோட
விரும்பவில்லை... எங்கள் வீட்டு
ஜெய்ப்பூர் மார்பிள் தரைகள்
சகதிகளில்
பிசுத்துக்கிடக்கிறது...

யாரையும்
வசைபாடுவதற்கில்லை... வியர்க்காமலும்
புழுங்கிநாறும்
உடைகளோடுதான் இருக்கிறோம்...

எப்படியும் எங்களுக்கு
அடுத்த காலங்களில் இலவசங்கள்
வந்து சேர்ந்து விடும்...

மால்களின் ஷாப்பிங்
முடித்து மல்டிப்ளக்ஸ்களின்
முன்பதிவுக்குச் சென்றும் விடுவோம்...

சிக்னல் பூத்தட்டுகளைக்
கடந்து
மெக்டொனால்டுகளுக்குள்
எங்களைப்பூட்டிக் கொள்வோம்......

சூப்பர் சிங்கருக்கும்
குட்டிச் சுட்டீஸ்களுக்கும் எங்கள்
பிள்ளைகளுக்கு
பாடிலாங்க்வேஜ் பயிற்சியளித்திருப்போம்...

சென்னைக்கு அடுத்த
அறுபது கிலோமீட்டர் புறநகரில்
வீடுமனைக்கு
வங்கிக்கடன் பெறமுயல்வோம்....

பசித்த பிள்ளை
மழையினூடாக சோற்றுக்கு
கையேந்தியது உள்பட
எல்லாம் மறந்தும்.. கடந்தும்.....
போய்விடும்......

அவன் ஒன்றும்
என்பிள்ளை இல்லையே...........!!

மேலும்

பசித்த பிள்ளை மழையினூடாக சோற்றுக்கு கையேந்தியது உள்பட எல்லாம் மறந்தும்.. கடந்தும்..... போய்விடும்...... பற்றி எரிகிறது வயிறு...உணவுப் பொட்டலங்களின் மீது அரசியல் வாசகங்கள்....என்ன சொல்ல இதை..? 05-Dec-2015 9:06 am
உண்மை.. அத்தனையும் உண்மை..!! 05-Dec-2015 8:24 am
ம்ம்ம் நிதர்சனம் .நோ words டு say 04-Dec-2015 10:02 pm
அத்தனையும் நிதர்சனம் சரவணா. 04-Dec-2015 9:18 pm

ஏரியை மூடினார்கள் குளங்களை ஆக்கிரமிப்பு செய்தார்கள் அதனால் இன்று அவதிக்குள்ளாகிறார்கள் என்றெல்லாம் காரண மூலங்களை பகிர்ந்துவைக்காமல் இப்போதைய அவர்களுக்கான தேவை என்பதைக் குறித்து செயலில் இறங்க வேண்டும்.

அவர்கள் ஏரிகளை மூடவில்லை.

அவர்கள் குளங்களை ஆக்கிரமிப்பு செய்யவில்லை.

வெகுசன மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தனது சொகுசுத் தேவைகளுக்காக வழக்கம்போலவே மேல்தட்டு வர்க்கம் அவர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இப்போதைய நிலை நம்மைப் போன்ற வெகுசன மக்களுக்கு ஆதரவாக .. ஆறுதலாகஇருப்பது மட்டுமே. அவர்களைக்கேலி செய்வது போன்ற மீம்ஸ்களோ... உங்களுக்கு இன்னமும் வேணும்.. என்ற தொனியில் நிலைத்தகவல்களோ இடுவதும் பேசிக்கொண்டிருப்பதும் மனிதாபிமானமற்ற செயலாகவே தோன்றுகிறது.

நாம் மிகுந்த பிரயத்தனங்களோடு செய்யும் மீம்ஸ் மற்றும் நிலைத்தகவல்களை பார்க்கக்கூடிய அளவிற்குக்கூட அவர்களுக்கு அடிப்படை வசதிகளோ மனநிலையோ இருக்காது என்பதுதான் நிதர்சனம்.

நானும் கிராமங்களில் வீடு பணியும் போது மரங்களை வெட்டிச் சாய்த்தவன் புழக்கடை கிணறை மூடியவன்தான்என்று ஒவ்வொருவரும் யோசிக்க வேண்டும். கிராமங்களில்இன்னும் இடம் இருக்கிறது. மழைநீர் வடிந்து விடுகிறது. பெரு நகரங்களின்நிலை அவ்வாறு இல்லை. நிலைமை சீரான பிறகு உங்களுக்குள் ஒளிந்து கிடக்கும் ஏரிப் பாசங்களையோ... குளப் பற்றுதல்களையோ... மீண்டும் ஆக்கிரமிப்பைக் கையாள்பவர்களின் மீதுகோபமாக வெளிப்படுத்துங்கள்.

மேலும்

போருன்னு வந்தாலும் . எதிரிக்கு அடிப்பட்டா உதவி செய்யணும் . இதுவே தமிழ் கூறும் மனு நீதி . சரிங்களா ? 02-Dec-2015 5:09 pm

மதிப்பெண் வேண்டாம்......



நண்பர்களுக்கு
வணக்கம். எழுத்தில் மீண்டும் பரவலாக படைப்புகள் இடத் துவங்கியிருக்கிறேன்.
நண்பர்கள் படைப்புகளை பார்வையிடுவதும் கருத்துக்கள் சொல்வதும் என்னை சீர்படுத்திக்
கொள்ள பெரிதும் உறுதுணையாய் இருக்கிறது. தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும்
நண்பர்களுக்கு நன்றி.



அதே நேரத்தில்.
என்னுடைய படைப்புக்கு கருத்தோ விமர்சனமோ சொல்லும் முழு உரிமையும் உங்களுக்கு
இருக்கிறது. ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதி முடித்த பிறகு அது எழுதியவனுக்குச்
சொந்தமில்லை. அது வாசிப்பவர்களுக்கே சொந்தம்...... என்றாலும் எனது படைப்புகளுக்கு
மதிப்பெண் யாரும் வழங்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணம்...
நாம பேசிப்பேசி அலுத்துப் போன ஒன்றுதான். கருத்துக்களில் ஆஹா.. ஓஹோ... அருமை..
அற்புதம்.. என்று புகழ்ந்து தள்ளி 1ம்... 2மாக நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்களைப்
பார்த்தால் உங்கள் மனநிலையை எப்படிப் புகழ்வது எனத் தெரியவில்லை. நீங்கள் எதற்காக
வாசிக்கிறீர்கள்.. அந்தப் படைப்பில் என்ன புரிந்து கொண்டீர்கள்... உணர்ந்து
கொண்டீர்கள் என்பதை விடுத்து... பிரதிகளின் மூலம் அனைவருக்கும் கருத்துச் சொல்வது
எதற்காக? உங்கள படைப்புகளை விற்கத்தானே? அது இங்கு அழகாகவே நடக்கும்.



ழ ள ல க்களுக்கு
வித்தியாசம் தெரியாதவர்களும் சந்திப்பிழைகளை எழுத்து நடையாக  வைத்திருப்போரும் உங்கள் சொந்த
விளம்பரங்களுக்காக வெறுமனே ஒரு கருத்தை நகலெடுத்து எல்லாப் படைப்புகளுக்கும்
இட்டு... எதை சாதிக்கப் போகிறீர்கள்..? நீங்கள் உங்கள் சாதனையாகப் பார்க்கும்...உங்களுக்கு
மிக மிக முக்கியமான மதிப்பெண்... எனக்கு ஒரு பொருட்டே அல்ல.



யாரையும் புண்படுத்தும்
எண்ணம் இல்லை...அர்த்தப் படுத்தலோடே சொல்கிறேன். நீங்கள் படிக்காவிட்டாலும்
பரவாயில்லை. தயவு செய்து எனது படைப்புகளுக்கு மதிப்பெண் கொடுக்காதீர்கள். எனக்குப்
பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.



புரிதலுக்கு நன்றி.

மேலும்

அடிபட்ட குரங்கு.. தானா தாவித் தாவி... ஒருநாள் ரோட்ல விழுந்து செத்துப் போகும்.. விட்டுட்டு வேலையைப் பாருங்க... ஏற்கனவே சரவ் சொல்லிட்டார் மனோ விடு , வேற வேலைய பார்ப்போம். 04-Dec-2015 2:34 pm
சரவ் நான் சொன்னேம்லா, குரங்கு குட்டிக்கரணம் அடிக்கும்னு, ஆடுடா ராசா ஆடுரா ...,ம்ம்ம் அப்படித்தான்...அப்படித்தான்.. 04-Dec-2015 2:31 pm
பேரு மட்டும்தான் குரங்கா? இல்லை எல்லாமேவா? வயதிற்கு மரியாதை கொடுத்து பேசு...தளத்தின் மூத்தவர்களிடம் வம்பு இழுக்க உனக்கு பேக் ஐடி வேணுமா..? குட்டிக் கரணம் அடிச்சாலும் மூஞ்ச காட்டுடா ... 04-Dec-2015 12:26 pm
Mr குரங்கு குட்டி...பேக்கு உனக்கு பேக் ஐடி ஒரு கேடா..? நீ யாருன்னு முகத்தை காட்டியே சண்டை போடலாம்... கருத்து சொல்ல 1000 பேர் வருவாங்க...தளமும் உனக்கே சப்போர்ட் செய்யும்.. யாருனே தெரியாம ஏண்டா உசுர வாங்குற...நீ யாருன்னு எங்களுக்கும் தெரியும்... 04-Dec-2015 12:24 pm

எல்லாருக்கும் வணக்கம்...



நம்மளால எல்லாம் எழுத முடியுமா நாம எழுதுறது
எல்லாம் எழுத்தா அப்படிங்கற ஒரு கலவையான மனநெலைல இருக்கப்பதா எழுத்து எனக்கு
அறிமுகமாச்சி.. இங்க வந்து.. எழுத ஆரம்பிச்ச காலம்தொட்டு  எழுத்து மட்டும் இல்லாம இன்னும் நெறைய விஷயங்கள
இந்தத் தளம் நமக்கு கத்துக் குடுக்க ஆரம்பிச்சது. இன்னும் கத்துக்கிட்டுக்கூட
இருக்கேன்னு சொல்லலாம்... அந்த மாதிரி கத்துக்கிட்டதன் விளைவாத்தான் கொஞ்சம்
எல்லாராலும் படிக்கிற மாதிரியும் பேசப்படற மாதிரியும் கொஞ்சம் எழுதிட்டு
இருக்கேங்கற ஒரு பெரிய நம்பிக்கை இருக்கு எனக்குள்ள... அந்த வகையில.. தளத்தின்
மூலமா வந்த புத்தகங்கள்.. போட்டிகள்.. கொஞ்சம் பிரபலமான தொடர்கள் எல்லாத்திலையும்
என்னோட பங்களிப்பும் கொஞ்சமாச்சும் இருந்திருக்கு அப்படின்னு யோசிக்கும் போது
கொஞ்சம் திருப்தியாவும் இருக்கு..



அந்த வகையில்..முதுகெலும்பி அப்படிங்கற ஒரு
வாழ்வியல் தொடர் என்னை பலபேருக்கு அடையாளம் காமிச்சிக் கொடுத்தது. அதை எழுதக்
காரணமா இருந்த காரண மூலவர்களுக்கு என்னோட நன்றி... அடுத்து என்ன அப்படின்னு
யோசிச்சிட்டு இருக்கப்ப ஒண்ணுமே பிடிபடாம இருந்த நிலையில்தான் நேத்து நான் முகநூல்ல
போட்ட ஒரு பதிவு என்னை இப்படி எழுதத் தூண்டிச்சி... நாம இன்னைக்குப்
படிச்சதாலையோ... அல்லது அனுபவத்துனாலையோ வாழ்க்கையில ஒரு நிலையில இருக்கோம்...
அதுக்குக் காரணமா இருந்த ஆசிரியர்களை நம்மள்ல பலபேர்  ஆசிரியர் தினத்தோட மறந்து போய்டுவோம். அவர்களுக்கும்
நமக்குமான பந்தத்த மீட்டெடுக்குற ஒரு முயற்சியா “நட வண்டி”ன்னு ஒரு தொடர் ஆரம்பிச்சிருக்கேன்.
இது நமக்கும் நம்ம ஆசிரியர்களுக்குமான வாழ்வியலை... நெகிழ்ந்த தருணங்களை...
பெருமைக்குரிய காலங்களை மையமா வச்சிப் பேசப்போகுது... அதை... வழக்கம்போல என் மொழில
சொல்றது எனக்கு மகிழ்ச்சி... படிச்சிப்பாருங்க... நிறை குறைகள நேரடியாவே
சொல்லுங்க.. நன்றி...



இந்த எண்ணைத்தை நான் இங்க பதிவு செய்யறதையும்
இங்க நான் கத்துக்கிட்ட ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் ஒரு வாய்ப்பாகவே
எடுத்துக்கறேன். நன்றி.........

http://eluthu.com/kavithai/272805.html

மேலும்

படிச்சிப் பாருங்க நட்பே.... 25-Nov-2015 2:49 pm
நன்றி சகோ... 25-Nov-2015 2:49 pm
நன்றி சார்...!! 25-Nov-2015 2:48 pm
நன்றி தோழமையே.... தொடர் படித்துப்பாருங்கள்... 25-Nov-2015 2:48 pm

எழுத்தின் கேள்வி பதில் பகுதியில் ...


"சமூக விடியலில் எழுத்தாளர்களின் பனங்கு என்ன ? " என்ற  கேள்வி  கேட்கப்பட்டிருக்கிறது ..

எழுத்திடம் என் கேள்வி என்னவென்றால்  "பனங்கு" என்றால் என்ன ?  தயவு செய்து விளக்கம் தாருங்களேன்.. நன்றி 


மேலும்

ஒருவேளை பங்காக இருக்குமோ ...not sure na 19-Nov-2015 12:01 pm

இங்கு நண்பர்கள் அனைவரும் தங்களுக்குப் பிடித்தவைகளை பதிவிட்டும் பகிர்ந்தும் பாராட்டியும் விமர்சித்தும் இப்படியாக கவிதைகளும் கவிதைகள் எனச் சொல்லப்படுபவைகளும் இயல்பாகவே கடந்தும்  கவனிக்கப் பெற்றும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. தனிவிடுகை அமைப்பு என்பது ஒருவர் கவிதைகள் படைப்புகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் அவரிடம் நல்ல நட்பு வளர்க்கப் பெறுவதற்காகவே. அது வேறு பல மாதிரியான நிகழ்வுகளுக்குப் பயன் படுத்தப்படுவது வேறு கதை. அதைப் பற்றியல்ல இந்த எண்ணம். இந்த மாதிரியாக நல்ல புரிதலில் செய்திகள் பரிமாறிக் கொள்வதற்காக தளத்தார் அமைப்பில் இருப்பது  தனி விடுகை. அதனை தங்கள் படைப்புகளுக்காக ஒரு விளம்பர யுக்திகளுக்காக ஒரு துண்டுச் சீட்டு விநியோகிப்பது போல கவிதைக்குக் கருத்துக் கேட்கவும் மதிப்பெண் போடச் சொல்லியும் தயவு செய்து பயன்படுத்தாதீர்கள். மற்றவர்கள் நிலைப்பாடு எப்படி எனத் தெரியவில்லை. என் நட்பு வட்டத்தில் உள்ளவர்கள் குறிப்பாக எனக்கு புதியதாக இணைபவர்கள் இந்த மாதிரியாக செய்யும் பொழுது என்னுடைய நட்பு வட்டத்தில் இருந்து நீக்கப் படுவீர்கள் என வருத்தத்துடன் பதிவு செய்கிறேன். இந்த மாதிரியான எடுப்பதும் கொடுப்பதும்   நிலைப்பாடுகளில்தான் (எனக்கு நீ.... உனக்கு நான் ) பல நல்ல படைப்புகள் காணாமலும் கவனிக்கப் பெறாமலும் போகின்றன.  இதை ஒரு பொது எண்ணமாகவே இங்கு பதிவு செய்கிறேன் . யாரையும் குறிப்பிட்டு அல்ல. தங்கள் படைப்பு நன்றாக இருப்பின் அது கண்டிப்பாக பலரால் கவனிக்கப் பெறும். அதனைப்  போல கவனம் பெற்று இந்தத் தளத்திலிருந்து நல்ல கவிஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்.  அதெப்படி....? ஒரு படைப்பாளியாக உங்களுக்குப் பொறுப்பே இல்லையா..? ஊக்கப் படுத்த வேண்டாமா என்று இந்தப் பதிவில் பின்னூட்டம் பொங்க நினைப்பவர்களுக்கு ..... நான் என்னுடைய நேரப் போக்கிற்கு மட்டுமே எழுதுகிறேன் ... நான் ஒரு படைப்பாளியே அல்ல.... என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..!! தயவு செய்து தங்கள் படைப்புகளை வாசிக்கச் சொல்லி எனக்கு யாரும் மின்னஞ்சல் அனுப்பாதீர்கள். நன்றி...!!

மேலும்

வலி(வழி)க் ...கீது ....வலி(வழி)க் ...கீது .... அடி விழுமா அண்ணே ..... 22-Nov-2015 10:06 pm
ஹஹாஹ்ஹ.... புரிகிறது நண்பா.. கவிதைகள் என்பது நாம் எழுதிக் கொண்டிருக்கும் வரையில் மட்டுமே நம்முடையது. எழுதி முடித்துவிட்டால் அது எல்லோருடையதும். உங்களுடைய கவிதையை நீங்களாகப் பார்க்கச் சொல்லி நான் வரவில்லை. என்னுடைய படைப்புகளுக்கும் அம்மாதிரியாக நீங்களும் வரவில்லை. நல்ல படைப்புகள் தாமாகவே எல்லோராலும் கவனிக்கப் படும். இதனிடையில் என் படைப்பை வந்து பாருங்கள்... பாருங்கள் எனக் கூவிக் கூவி அழைக்கும் பட்சத்தில் நாமும் கவிதை ஆர்வத்தில் சென்று படிக்கிறோம். நீங்கள் சொன்ன மாதிரி "ஆனால் இங்கு யாருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் நான் போய் பார்த்தாக வேண்டும் என்பதற்கு நான் என்ன மருத்துவரா ..." மருத்துவன் என்ற நிலைப்பாடுடன் சென்று பார்த்தாலும் அங்கு நோயாளி எனச் சொல்லப்படும் கவிதைகள்.. ஒன்று நம்மைப் பார்த்து கேலியாகச் சிரிக்கும் அல்லது காறித் துப்பி விடும் ரகங்களாகவே விருந்து விடுவதில் எனக்கு நோய் வந்துவிடுகிறது. அம்மாதிரியான கவிதைகள் தங்கள் விளம்பரப்படுத்தப்பட்ட உத்தியினால் சிறந்த கவிதைகள் பட்டியலிலும் இடம்பெற்று விடுவது என்னைப் போல சிலரை மீளாநோயிலும் ஆழ்த்தி விடுகிறது. இந்த எண்ணம் தற்காப்புக்காகவே இடப்பட்டது. எல்லோரும் இப்படி இருப்பார்கள் என்று எல்லோராலும் இப்படி நினைக்க முடியாதல்லவா...? அதற்கான தன்னிலை விளக்கமாகவே இந்த எண்ணம் இடப்பட்டது. புரிதல் கருத்துக்களிலும் பகிர்விற்கும் நன்றி 19-Nov-2015 8:23 am
ஹா ஹா... இந்த விசயத்தில் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்... ஏனென்றால் நானே இதை பற்றி சொல்லலாம் என்று நினைத்திருந்தேன்... என்னை பொறுத்த வரையில் ஒரு படைப்பு என்பது எல்லோராலும் படிக்க வேண்டும் என்பது ஒரு எழுத்தாளனின் விருப்பமாக இருக்கலாம்.. ஆனால் மற்ற நண்பர்கள் எந்த நிலைமையில் இருப்பார்கள் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் அதை விடுத்து வந்து பாருங்கள் என்று போடுவது எவ்வளவு நிர்பந்தம் என்று எனக்கு தெரியும்.. எடுத்துக் காட்டாக என் அம்மாவிற்கோ அல்லது எனது நண்பரின் (நன்கு பழகிய) அம்மாவிற்கோ உடல் நிலை சரி இல்லை என்றால் நான் நேராக போயாக வேண்டும்... ஆனால் இங்கு யாருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் நான் போய் பார்த்தாக வேண்டும் என்பதற்கு நான் என்ன மருத்துவரா இல்லை அந்த வேலைதான் செய்து கொண்டு இருக்கிறேனா? ஆனாலும் இதை பொது சேவை என்று செய்து கொண்டு இருக்கிறேன்... இருப்பினும் எல்லாரும் இப்படி நினைப்பார் என்று எப்படி அவர்கள் நினைக்க முடியும்.. இங்குதான் பிரச்னை தொடர்கிறது... என் கருத்தும் முடிகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. நல்ல கருத்து சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லி விட்டீர்கள்... 18-Nov-2015 11:17 pm
நன்றி நண்பரே... 17-Nov-2015 3:06 pm

2013... இந்தத் தளம் எனக்கோ... அல்லது இப்பெருந் தளத்திற்கோ நானோ அறிமுகம்.. இங்கு கற்றதும் பெற்றதும் நிறைய..... எழுதக் கற்றுக்கொண்டோமோ இல்லையோ இந்தத் தளம் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் நல்ல நண்பர்களை பெற்றுத் தந்துள்ளது. நான் இணைந்த சிறிது காலத்திற்குள்ளேயே என்னிடம் நல்ல நட்பாகி இன்று வரை அதே நட்பு துளிகூட மாறாமல் எழுத்தில் எங்கு சென்றாலும் எதனை நிறுவினாலும் என்னையும் கூடவே இணைத்துக் கொண்டு (அவர் அறிவை ஒப்பிடும் பொழுது இழுத்துக் கொண்டு ) பயணிக்கும் ஒரு ஆக்கப் பூர்வமான படைப்பாளி. திரு. கவிஜி அவர்கள்.. அவர் பிறந்த நாளில் இதனைச் சொல்லி வாழ்த்துக் கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும் என்பதை என்னைப் போல பலரும் இங்கு அறிவர்.. நிறைய படைப்பாளிகளை எழுதத் தூண்டி அவர்களை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைத்த நிறைய தொடர்களின் நதிமூலம் அவர். அவர் பிறந்தநாளில் இத்தகைய நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து இன்று போல எந்நாளும் மகிழ்ச்சியும் உடல் நலமோடும் வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன் ஜி.... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....!!

மேலும்

தோழர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... சரோ..... மை டியர்...எப்போதுமே எனக்கு ஆச்சரியம் நீங்கள்.... தங்களின் அன்புக்கு எப்போதும் நான் சிரம் சாய்க்கிறேன்...... மனம் நிறைந்து..... 21-Oct-2015 1:45 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே 20-Oct-2015 10:22 pm
வாழ்த்துக்கள்! கவிஜி. 20-Oct-2015 8:48 pm
பிரச்சினை என்னவென்றால்.....எப்போதும் இப்படித்தான்.... சரவண்.... 20-Oct-2015 7:36 pm
மேலும்...

மேலே