எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் அர்ஜுனனை விட?

அர்ஜுனன் ஒருநாள்.. கிருஷ்ணரிடம் கேட்டான்.....?

தருமரை விட கர்ணனையே பெரிய கொடையாளி என்று மக்கள் ஏன் கருதுகிறார்கள்?

இரண்டு பேருமே எதையும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர்கள்தானே...?

கர்ணனுக்கு மட்டும் ஏன் அதிக புகழ் ?"

சரி, என்னுடன் வா, காட்டுகிறேன் என்று கூறி அர்ஜுனனை அழைத்துச் சென்றார் கிருஷ்ணன்.

இருவரும் பிராமணர்களைப் போல வேடமிட்டுக்கொண்டு தருமரின் அவைக்குச் சென்றார்கள்.

யாகம் நடத்த சந்தனக் கட்டைகள் வேண்டும் என்றார்கள்.

மன்னர் தருமர் உடனே சந்தன மரங்களை வெட்டிக் கொண்டு வருமாறு தன் ஆட்களை நாடு முழுவதும் அனுப்பினார்.

ஆனால் அப்போது மழைக்காலம்.

கொண்டு வந்த மரங்கள் எல்லாம் ஈரமாகி இருந்தன.

அவற்றைக்கொண்டு யாகம் நடத்த முடியாது.

இருவரும் கர்ணனிடம் சென்று அதே கோரிக்கையை வைத்தார்கள்.

கர்ணன் யோசித்தான்.

"அடாடா... இது மழைக்காலம்.

இந்த மழைக்காலத்தில் காய்ந்த கட்டைகள் கிடைக்காது. அதனால் என்ன... கொஞ்சம் பொறுங்கள்" என்றான்.

கோடரியை எடுத்து வந்தான்.

மாளிகையின் கதவுகளும் சன்னல்களும் சந்தன மரத்தால் செய்யப்பட்டவை.

கர்ணன் அவற்றை வெட்டி எடுத்துக் கொடுத்தான்.

இருவரும் திரும்பி வரும்போது கிருஷ்ணர் கேட்டார்.

"இப்போது புரிகிறதா அர்ஜுனா... தருமரிடம் கதவையும் ஜன்னல்களையும் உடைத்துத் தாருங்கள் என்று கேட்டிருந்தால் அவரும் உடனே தந்திருப்பார்தான்.

ஆனா அவர் தானாகவே அவ்வாறு சிந்திக்கவில்லை.

ஆனால் கர்ணன்...

நாம் கேட்கவே இல்லை. அவனாகவே யோசித்துச் செய்தான்.

யுதிஷ்டிரர் கொடுப்பது தர்மம் .......

கர்ணன் கொடுப்பது விருப்பம் ......

எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்தால் அது போற்றப்படும் செயலாகும்"...

இதிலிருந்து தெரிவது என்ன?

கடமைக்காகவோ, நிர்ப்பந்தமோ, தேவையோ, எதுவாக இருந்தாலும் செய்வதை விருப்பத்துடன் செய்யுங்கள். வெற்றி பெறுவீர்கள்

மேலும்

⏩ காத்திருக்கப் பழகு ... !!!

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில் 
தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்: 

"தியானம் செய்.!
நான் அழைக்கும் வரை காத்திரு.!!!"

நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும். 

பசிக்கும் வரை காத்திரு.

உடல் நீர் கேட்கும் வரை காத்திரு.

காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு.

சளி வெளியேறும் வரை காத்திரு.

உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு.

பயிர் விளையும் வரை காத்திரு.

உலையில் அரிசி வேகும் வரை காத்திரு.

கனி கனியும் வரை காத்திரு.

எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.

செடி மரமாகும் வரை காத்திரு.

செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு.

தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு

தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு.

துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு.

போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு.

நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு.

பிறர் கோபம் தணியும் வரை காத்திரு.

தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு.

இது உன்னுடைய வாழ்க்கை...
ஒட்டப்பந்தயம் அல்ல.!

ஒடாதே

நில்

விழி

பார்

ரசி

சுவை

உணர்

பேசு

பழகு

விரும்பு

உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்...

உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத, தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.

உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.

எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே. 

உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா.!

நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரிய நீ விரும்பும்வரை காத்திருக்கும்.

காத்திருக்கப் பழகினால்........

வாழப் பழகுவாய்.!

இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்.

எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை  உணர்வாய்.!🙏

மேலும்

*பஞ்ச பாண்டவர்களில் முதல்வரான தர்மர் தான் உலகிலேயே மிக அதிக தர்மம் செய்தவர் என்பார்கள்.*

*தன்னைத் தவிர இவ்வுலகில் அதிக தானம் செய்பவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்பது தர்மரின் எண்ணம். இதுவே, அவருக்கு அகந்தையாக மாறி விடக் கூடாது என்ற எண்ணம் கண்ணபிரானுக்கு ஏற்பட்டது.*

*எனவே அவர் தர்மருடன் மலை நாட்டுக்கு சென்றார். அந்த நாட்டை மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார்.*

*அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்று குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர்.*

*அவ்வீட்டு பெண்மணி தங்கச் செம்பில் அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தாள். அவர்கள் குடித்து முடித்ததும் செம்பை வீசி எறிந்து விட்டாள்.*

*தர்மர் அவளிடம், "தங்கச் செம்பை பத்திரமாக வைத்திருக்க வேண்டாமா? தெருவில் வீசி எறிந்து விட்டீர்களே,'' என" ஆச்சரியமாகக் கேட்டார்.*

*அதற்கு அந்த பெண்மணி, "எங்கள் நாட்டில் ஒரு முறை பயன் படுத்திய பொருளை மறு முறை பயன் படுத்துவதில்லை, என அலட்சியமாக சொல்லி விட்டு போய் விட்டாள்.*

*அந் நாட்டின் செல்வச் செழிப்பை எண்ணி வியந்தார் தர்மராஜன். அவர்கள் மகாபலியின் அரசவைக்கு சென்றனர்.*

*கண்ணபிரான் தர்மரை மகாபலியிடம் அறிமுகப்படுத்தி, "இவர் தான் இவ்வுலகிலேயே அதிக தர்மம் செய்தவர், பெயரே தர்மர்,'' என்றார்.*

*மகாபலி தர்மரின் முகத்தில் கூட விழிக்கவில்லை.*

*"கண்ணபிரானே! தாங்கள் சொல்வதெல்லாம் சரி தான். என் நாட்டு மக்களிடம் உழைப்புக்கு பஞ்சமில்லை. எல்லோரிடமும் செல்வம் குவிந்து கிடக்கிறது. எனவே "பிச்சை' என்ற சொல்லுக்கே இடமில்லை. அதனால் "தர்மம்' என்ற வார்த்தைக்கும் இங்கு அவசியமில்லை. எனவே அவர்கள் தானம் பெறவேண்டிய அவசியமும் இல்லை. இவரது நாட்டில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள் போலும். எனவேதான் எல்லோரும் தானம் கேட்டு வருகின்றனர்.* *இவ்வளவு ஏழைகளை தனது அரசாட்சியின் கீழ் வைத்திருக்கும் இந்த தர்மரின் முகத்தைப் பார்க்க வெட்கப் படுகிறேன்,'' என்றார்.*

*தனது ஆட்சியின் நிலைமையை நினைத்து தலை குனிந்தார் தர்மராஜா.* 

*தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலை குனியத் தான் வேண்டும்.*

*"தர்மம் பெறுவதும் பிச்சை எடுப்பது தான்*

*மிக அருமையான செய்தி தமிழக மக்களுக்கு"*

மேலும்

ஆளும் மனத்தின் ஆழம் பதியவேண்டிய நற்கருத்து... 16-Jan-2018 7:11 pm
வாழ்த்துக்களுக்கு நன்றி....!!!!! 16-Jan-2018 1:49 pm
கதையின் நீதி நன்று . தர்மம் என்ற பெயரில் இலவசங்களை வழங்கி சோம்பேறிகளை பெருக்கும் நாடு தலை குனியத் தான் வேண்டும்.* ------ஓரளவு இதன் நியாயத்தை ஏற்கிறேன் . தர்மம் என்றால் வெறும் ஈதல் என்ற பொருள் மட்டுமல்ல. அச்சொல்லின் பொருள் மிக மிக விரிந்தது. வாழ்த்துக்கள். 16-Jan-2018 11:27 am

🌸எங்கும் சிவம் எதிலும் சிவம்🌸

சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும்ப் பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டிலும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். நரக வாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,

ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் தின்று முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.

நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசிகளிடம் எவ்வாறு கையை மடக்காமல் சாப்பிட்டீர்கள்? என்று கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள்.

“நான் எடுத்து அவருக்கு ஊட்டினேன். அவர் எடுத்து எனக்கு ஊட்டினார். இவ்வாறு எல்லோரும் மற்றவர்களுக்கு ஊட்டினோம். அனைவரும் உண்டோம். அண்டாவும் காலி, எங்கள் பசியும் போச்சு” என்றனர். நரகவாசிகள் தங்களுக்கு இந்த தந்திரம் தெரியாமல் போயிற்றே என்று நினைத்து வெட்கப்பட்டனர்.

எது சொர்க்கம்?

எல்லோரும் மற்றவர்களுக்கு உதவும் நிலை வந்தால் ஒருவரும் துன்ப்ப்படமாட்டார். சொர்க்கம் என்பதே எல்லாரும் எல்லார்க்கும் உதவிசெய்து வாழும் இடந்தான். இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை ரொம்ப சுலபமுங்க. தன்னைப் பற்றியே கவலைப்படுகிறவர்கள் நிறைந்த இடமே நரகம்.
🌿ஓம் நமசிவாய🌿

மேலும்

"ஓம் சிவாயநம"

*சிவ பக்தன் என்றால் யார்?*

*சிவனடியார் என்றால் யார்?*

இவ்விரண்டுமே ஒன்றுபோல தான் தெரியும்.
ஆனால் சிவபக்தனுக்கும் சிவனடியாருக்கும்
சில வேறுபாடுகள் உள்ளன.
என்பதை உணர்ந்ததுண்டா? வாருங்கள்
உணரலாம்...........

1)சிவனை கண்டதும் பனிபவன் பக்தன். சிவனுக்காக
எதையும் செய்ய துனிந்தவன் அடியார்.

2)சிவனை வணங்குபவர் பக்தன்.
சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.

3)உடல் தூய்மையாக இருந்தால்
மட்டுமே கோயிலுக்கு செல்பவர் பக்தன்.
உடலை ஒரு பொருட்டாக கருதாமல்,
மனத்தூய்மை வேண்டி கோயிலுக்கு செல்பவர் அடியார்.

4)அர்சனை செய்வதற்காக கோயில் செல்பவர் பக்தன்.
ஈசனை போற்றி பாடி ஆனந்தமடைய கோயில்
செல்பவர் அடியார்.

5)அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.
அன்பே சிவமென உணர்ந்தவர் அடியார்.

6)மறைக்குள்ளும் முறைக்குள்ளும் இருப்பவர்
ஈசன் என்று நினைப்பவர் பக்தன். ஈசனை அடைய
மனமும் மொழியும் தடையில்லை, ஆக
மறையும் முறையும்
எமக்கில்லை என்று நினைப்பவர் அடியார்.

7)கூட்டத்தோடு கூட்டமாக
இறைவனை காண்பவர் பக்தன். .  கூட்டம் போனபின்
ஈசன் அழகை தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.

8)ஈசனை அடைய சுத்தமாக இருக்கவேண்டும் 
என நினைப்பவர் பக்தன். சுத்தத்தை பெரிதாக எண்ணாமல்  சித்தத்தை 
சிவன்பால் வைப்பவர் அடியார்.

9)வாழ்வில்
ஒரு பகுதியை வழிபாடுக்கு செலவு செய்பவர்
பக்தன்..                                  வாழ்வையே வழிபாடாக கொண்டவர்
அடியார்.

*சிவபக்தனாக இருப்பதைவிட சிவனடியாராக இருப்பதுதான் மிக மிக சுலபம்.*

*சிவபக்தனுக்கு மறுபிறவி நிச்சயம்.  சிவனடியார்க்கு முக்தி நிச்சயம்.*

மேலும்

குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவது ஏன்

பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளில் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.
உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. 

இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் இல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், தண்ணீரும் சுத்தமாகும் அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம். பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம். செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது

மேலும்

பட்டினத்தாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 

மிகப் பெரிய கோடீஸ்வரரான அவர், ஒருநாள் அத்தனை செல்வத்தையும் துறந்துவிட்டு துறவறம் பூண்டார். 

கோவணத்துடன் கிளம்பினார். 

கையில் திருவோடு வைத்திருப்பது கூட உண்மையான துறவுக்கு எதிரானது என்பது அவர் கருத்து.

ஒருமுறை ஒரு வயல் வழியாக நடந்து சென்றவர் மிகவும் களைப்படைந்தார். 

அப்படியே வரப்பில் படுத்து உறங்கினார்.

வளர்ந்திருந்த நெற்செடிகள் காற்றில் அசைந்து அவரின் சட்டை அணிந்திராத உடம்பில் குத்தி ரணப்படுத்தின. 

ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாதவராக அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

அப்போது பெண்கள் சிலர் அந்த வரப்பு வழியாக நடந்து வந்தனர். 

பட்டினத்தார் வரப்பின் மீது படுத்திருந்த காரணத்தால் அவர்களால் அவரைத் தாண்டி செல்வது கடினமாக இருந்தது. 

அவர்களுக்கு அவர் பட்டினத்தார் என்பது தெரியாது. 

யாரோ ஒரு சாமியார் என்று நினைத்தனர்.

அப்போது அதில் ஒரு பெண், “”யாரோ ஒரு மகான் உறங்கிக் கொண்டிருக்கிறார். 

அவரைத் தொந்தரவு செய்யக்கூடாது,” என்று கூறி வரப்பை விட்டுக் கீழே இறங்கி நடந்தாள்.

இதைக் கேட்ட இன்னொரு பெண் மணியோ, “”இவரா பெரிய மகான்..??? 

ஆசையை அடக்க முடியாமல் தூங்குவதற்குக் கூட வரப்பை தலையணையாகப் பயன்படுத்திக் கொண்டு தூங்குகிறார் பாரு,” என்று இளக்காரமாகவும், கோபமாகவும் பேசினாள்.

இதனைக் கேட்ட பட்டினத்தார் அதிர்ச்சி அடைந்தார்.

“அந்தப் பெண்ணுக்கு இருக்கும் புத்தி கூட தனக்கில்லாமல் போய் விட்டதே…’ என்று வேதனைப்பட்ட அவர், 

அந்த பெண்கள் அங்கிருந்து கடந்து போனதும், வரப்பிலிருந்த தலையைக் கீழே வைத்துப் படுத்தார்சற்று நேரத்தில் அந்தப் பெண்கள் திரும்பி வந்தனர். 

அப்போது அந்த சாமியார் வரப்பிலிருந்து கீழே படுத்திருப்பதைப் பார்த்த அந்தப் பெண்மணி,

 “”பார்த்தாயா, நீ சொன்னதை கேட்டு வரப்பிலிருந்து தனது தலையைக் கீழே வைத்துப் படுத்துவிட்டார். 

இப்போது சொல் அவர் மிகப் பெரிய மகான்தானே?” என்று அகமகிழ்ந்து கூறினாள் ஒரு பெண்.

“”இவரா பெரிய மகான்...??? 

இந்த வழியாகப் போகிறவர்கள் எல்லாம் தன்னைப் பற்றி என்ன பேசிச் செல்கின்றனர் என்று ஒட்டுக் கேட்டு, அதைப் பற்றிக் கவலைப்படுகிறார். 

இவரைப் போய் பெரிய மகான் என்று சொல்கிறாயே..!!!” என்றாள் அந்த இரண்டாவது பெண்மணி.

இதைக் கேட்டு பட்டினத்தார் உண்மையிலேயே அதிர்ந்து போனார். 

இனிமேல் யாருடையே விமர்சனத்திற்காகவும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வது கூடாது என்று அப்போது முதல் அவர் திடமாக முடிவெடுத்தார்.

விமர்சனத்தில் இரண்டு வகை உண்டு. 

ஒன்று நேர்மறை விமர்சனம்;

இன்னொன்று எதிர்மறை விமர்சனம்.

நேர்மறையான எண்ணம் கொண்டவர்களின் விமர்சனம் எப்போதும் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கும். 

அந்த முதல் பெண்மணி கூறியதைப் போலவே அது இருக்கும்.

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் செய்யும் விமர்சனம் எப்போதும் குற்றம், குறைகளைக் காண்பதாகவே இருக்கும். 

அதாவது அந்த இரண்டாவது பெண்மணியைப்போல

நியாயமான விமர்சனம்தான் உண்மையானதாக இருக்கும். 

ஆனால், அந்த வகை விமர்சனம் கிடைப்பது என்பது மிகவும் அரிது. 

அதில் குற்றம் குறைகள் சுட்டிக் காட்டப்படவும் செய்யும். 

நல்ல தன்மைகள் பாராட்டப்படவும் கூடும்

எனவே, இதுபோன்ற நேர்மையான விமர்சனங்களுக்காக காத்துக் கிடக்காமல் உங்கள் உள்ளத்திற்கு எது நேர்மையானதாகத் தெரிகிறதோ, 

அந்த பாதையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்துகொண்டே இருங்கள். 

விமர்சனங்களைப் புறக்கணித்து விடுங்கள்

 வாழ்க்கை என்பது இறைவன் நமக்குத் தந்திருக்கும் உரிமை. 

இந்த மண்ணுலகில் பிறந்து விட்டோம். 

நல்லதை செய்து நலமாக வாழ்வோம்

மேலும்

1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது...
வாருங்கள் கொஞ்சம் ரிவைன்ட் செய்து பார்ப்போம்...
.
.
.
.
காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.
.
வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.
.
ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்...
.
ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை...
.
பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்...
.
விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது...
.
மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்...
.
உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்...
.
மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்...
.
வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்...
.
சனிக்கிழமைகளில் சக்திமான் பார்க்க காய்ச்சலென பொய் சொல்லி பள்ளிகளுக்கு விடுமுறை எடுத்தோம்...
.
அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்...
.
ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்...
.
அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது...
.
ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்...
.
ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது...
.
ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது...
.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்...
.
தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்... அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்...
.
ஊருக்கு  ஓரிருவர்  காதலிப்பதே அபூர்வமாக இருந்தது... அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்...
.
பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்...
.
10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்...
.
.
நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்...
.
பணக்கார வீட்டு கன்னிப் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்...
.
10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது...
.
போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்...
.
வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன்  சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது...
.
வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்...
.
ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்...
.
10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது...
.
10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது...
.
பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்...
.
கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது...
.
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது...
.
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது...
.
பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்...
.
தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்... பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை...
.
12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது...
.
இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்...
.
.
.
.
.
.
.
உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட  சாத்தியமில்லை... பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை... அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்...

மேலும்

#அதலைக்காய்

#உலகில்_எந்த_நாடுகளிலும் வளர முடியாது #தமிழ்_நாட்டில் மட்டும் விளைகின்ற அதாவது வெளிநாட்டு மக்கள் #அதிக_பணம் குடுத்தும் கிடைக்காத பல செடி கொடி மூலிகை வகைகள் நம் தமிழ் நாட்டில் #இலவசமாக தெரு ஓரங்களில் கிடைக்கின்றன.  (அக்கரைக்காரம், ஆவாரம் செடி, கவிழ் தும்பை, தும்பை, கிணற்று பாசான், அவுரி இது போன்றவை). 
அந்த வகையில் தமிழ் நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 

அதிலும் குறிப்பாக நம் #மதுரை_திருமங்கலம்,விருதுநகர்,சாத்தூர் கிராம பகுதியில் கிடைக்கும் இந்த #அதலைக்காய். 

அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் ஒரு காய் அதலைக் காய். 
இது #சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
இந்த அதலைக்காய் சர்க்கரை நோய், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு நல்ல நிவாரணி.
இதை தனியாக விவசாயம் செய்ய முடியாது. தானாகவே காட்டில் வளரும் தன்மை கொண்டது.
அதலைக்காய், பாகற்காய்க்கு இணையான மருத்துவ குணம் கொண்டது. கசப்பு தன்மை இருந்தாலும் ருசி மிகுந்தது..

இதனை பொறியல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். அதன் மனமே அதன் சுவையை சொல்லும். இந்த காயை பறித்த சில மணி நேரத்திற்குள் சமைக்க வேண்டும்.தவறினால் காய் வெடித்து விடும்.
இதனாலே இது பிற மாவட்டங்களுக்கு கூட சமையலுக்கு போக முடியாத நிலை. 
அந்த வகையில் நம் பகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

#அதலைக்காய் சீசன் ஆரம்பிச்சிருச்சி....

மேலும்

ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம்,

சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி "! என்றார் . அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .

பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .

வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ " யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் .

பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தாவாறு " இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் .

அடுத்து அவர்கள் சென்றது ஓர் தனிக்குடிசை வீடு . அங்கு வறுமைகுடி கொண்டிருந்தது. அங்கு குழந்தைகள்,கணவர் ,தாய், தந்தையர் இல்லாமல் அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார் .ஒரே வயதான மாடு வளர்த்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.

அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல " சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் .

அந்த வயதான பெண்மணி "நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து இருக்கிறாரா ? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார் . தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் .

கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் " இந்த பசுமாடு இறந்து போகட்டும் " எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் . ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் " பகவானே நான் குழப்பமாக உள்ளேன் .

முதலில் ஓர் செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம் . அவர் தண்ணீர் இல்லை என்றார் . அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள் , இரண்டாவதாக ஒர் வயதான பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் . கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் இறைவன் தீர்ப்பா? என கேட்க

பகவான் கிருஷ்ணர் சொன்னார்

(இனி உள்ள வரிகள் முக்கிய மானவை கவனமாக படியுங்கள் )

" பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு " எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் !

இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை . அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான் . அதுவும் இறந்து விட்டாள் . இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவள் மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் .

பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார்

மேலும்

மேலும்...

மேலே