எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அனைவருக்கும் உகாதித் திருநாள் வாழ்த்துக்கள்

சுந்தரத் தெலுங்கில் சுகமாக பாடி 
வந்தனை செய்தே யுகாதிச் சிறப்பை 
சந்தனமாய் மணக்கும் சந்தத் தமிழில் 
தந்திடும் நெஞ்சம் தகவாய் வாழ்த்தும்   

இச்சையுடன் தெலுங்கில் இனிதே வாழ்த்த 
 உச்சரிக்கும் சொல்லால் உகாதி மேன்மையுறும் 
பச்சடியும் உகாதியன்று பணிந்தே அளிக்கக் 
 கச்சிதமாய் அன்பைக் கொடுக்கும் புதுயுகம்      

மேலும்


சித்திரையும் மலர்கின்றாள்
            செந்தமிழில் சிரிக்கின்றாள்
நித்திரையும் கலைந்திடவே
            நினைவெல்லாம் அவள்மீதே
நித்தமுமே ஓர்விழாவாய்
          நிறைந்திடுமே நாளெல்லாம்
முத்தமிழில் வாழ்த்துரைக்க
         முந்துங்கள் பாவலரே

==============
கலிவிருத்தம்
=============

மேலும்

நன்றி அய்ய நற்றமிழ்ப் பாவலரே 17-Apr-2020 1:07 pm
தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் யாப்பெழில் கவிதை அருமை பாராட்டுக்கள் 15-Apr-2020 9:29 am

வாசகர் அனைவருக்கும் 
*தமிழ் வருடப் பிறப்பு* வாழ்த்துக்கள்

ஈர்த்த பொருளை வாங்கக் கூட

             இன்று செல்ல முடியாது

ஆர்த்த நாளாய் அனுதி னமுமே

            அமைதி யுடனே செல்கிறது

சார்வ ரியிலே சங்க டங்கள்

           சடுதி ஓடிச் செல்வதற்கே

ஆர்வ முடனே புதிய ஆண்டை

          அனுச ரிப்பீர் இறையருளால்

================
எழுசீர் விருத்தம்
================

மேலும்

அனேகமாக நவம்பர் 18  க்குப் பிறகு, நான் பிரதிலிபி தளத்தில் என்னுடைய பதிவுகளைச் செய்ய ஆரம்பித்தேன்..இதற்கு எவ்வித முக்கியக் காரணமும் இல்லை. இரண்டு தளத்தையும் என்னிரண்டு கண்கள் போலத்தான் பாவிக்கிறேன்.  எழுத்து தள வாசகர்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.  ஆனால், இன்றுவரை எழுதுவதை நிறுத்தவில்லை, ஏராளமாக எழுதிவிட்டேன். இந்த ஒருவருடத்தில் நிறையப் பட்டங்களும், பரிசுகளும், சான்றிதழும் பெற்று விட்டேன்.   


எழுத்து தளத்தில் மதிப்பிற்குரிய சர்பான், ஆவுடையப்பன், கவின் சாரலன், பழனிக்குமார் மற்றும் ஏனைய கவிஞர்கள், எழுத்தாளர்கள் என்னுடைய படைப்பிற்கு விமரிசம் எழுதியோர் அனைவருக்கும் நன்றி. இவர்கள் யாவரையும் ஒருபோதும் மறக்க இயலாது..   இதையெல்லாம் உங்களோடு பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தோடு,  சட்டென்று மீண்டும் எழுத்து தளத்தில் பதிவிட்டால் என்னவென்று தோன்றியது, இப்பொழுதெல்லாம், நான் புதுக்கவிதையிலிருந்து முற்றிலும் மாறி, முழுவதும் இலக்கண மரபுப்படி எழுதிவரும் கவிதைகளே அதிகம் எனலாம்.  தற்போது புலனங்களில் அதிகளவு பங்கெடுத்து வருகிறேன். உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நேற்று எழுதிய வெண்பாவோடு மீண்டும் எழுத்து தளத்தில் பதிவை ஆரம்பிக்கிறேன்.

  18-06-19, செவ்வாய்க் கிழமை

கவிஞர்கள் சங்கமம் என்கிற புலனத்தில்  கொடுத்த தலைப்பு:: *கவிஞன்*

=================

எழுத்தாணி கொள்வான்.! எதையுமே ஆள்வான்.!

எழுத்தே உயிரென ஏற்பான்.! - எழுத்தால்

புவியை அடிமைப் படுத்தும் செயலெ

*கவிஞனெனும் சொல்லுக் கழகு*

=================
இரு விகற்ப
நேரிசை வெண்பா
=================

இதை வெவ்வேறு  புலனத்தில் வெளியிட்டபோது, அதிக அளவில் பாராட்டுப் பெற்ற வெண்பா.

உலகத்தில் சாதனை புரிவோர், ஏதோவதொரு வகையில் தன்னுடைய திறமையை வெளிக்காட்டித்தான் அச்சாதனையைப் புரிகின்றனர். அது எவ்விதமான கலையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம். மலையேற்றம், விளையாட்டு, அறிவியில், கண்டுபிடிப்பு இப்படிப் பலவற்றுள் தன்னுடைய எழுத்தால் உலைகையே தன்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த எழுத்தாளன், கவிஞன் உலகத்தில் ஏராளம். எழுத்தால் புரட்சி செய்த, எழுத்தால் பிரபலமான, எழுத்தால் உலகை ஆண்ட பலரை நம் நினைவுக்குக் கொண்டு வருவோம். நினைவில் வருபவரை பிறருக்கு அடையாளம் காண்பிப்போம். இப்படிச் சாதனை புரிந்தோரை, உங்கள் நினைவுகளில் கொண்டு வாருங்கள்.. நன்றி..

கவிஞர் பெருவை பார்த்தசாரதி  

மேலும்

வாரணமுகத்தோனே போற்றி,,!



விந்தை முகமும் விரிந்த காதுமுள்ள வேழமுகத்தோன் 

தந்தை சொல்லைத் தட்டாது நடந்த தரணீதரன்  

தொந்தியும் பருத்த தொடையும் கொண்ட துதிக்கையோன்  

எந்தையாம் யாவர்க்கும் எளிய கடவுளாம் ஏகதந்தன்       

============
கலித்து றை
============

பெருவை பார்த்தசாரதி

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்வானதிற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 18-Sep-2018 5:46 pm
ஏகதந்தன் வணக்கம் அருமை 13-Sep-2018 6:27 pm

ஆசிரியர் தினம் = 05 - 09 - 2018 


ஆசானை அடிபணிவோம்..!
===========================    

 வரும்நல் வாழ்வும் வளமாய் அமைய வழியை விளம்பும் வல்லாசான்.!  
............ வருவாய் பெருகும் வகையில் படிக்க வழியும் சொல்லும் வகுப்பாசான்.! 


கருவாய் உயிராய் கண்ணூம் கருத்தாய்க் கடிதே உணர்ந்து கடமையாற்ற..
............கடினச் செயலாம் கல்வி பயிலக் கற்கும் ஆவல் கரையவில்லை.!  


எருவாய் உரமாய் எதுவும் புரிய எளிதில் அறிய எடுத்துரைத்து..
............ எங்கோ படித்தும் எதையோ படித்தும் என்றும் நினைவில் எம்மாசான்.!

குருவாய் நின்று குலமும் தழைக்கக் குணவான் ஆக்கும் குருவருளே.!
............குன்றாப் புகழும் குவித்த விருதும் குடும்ப உறவும் குறைவிலையே.!

======================
கழிநெடிலடி விருத்தம்  
======================

மா = மா = மா = மா = மா = மா = காய்  

மேலும்

ஆடிவெள்ளி   =   20 - 07 - 2018 
==========================


வெள்ளி முளைத்ததும்
.............வியாழன் உறங்க
............. .....வந்ததே..

அள்ளிக் கொடுக்கும்
............. ஆடிவெள்ளி.! விஷேசம்
............. .....அம்மனுக்கு.!

உள்ளநாளை இன்புற
..............உறங்கிக் கழிக்க 
...................உள்ளதுகூழ்..!

பள்ளி யெழுமுன்
............. பகலுணவாம் கஞ்சிபெற
............. ....பக்தர்கள்.!

=============
*கலித்துறை*
=============

மேலும்

எழுத்து தள நிர்வாகிக்கு நன்றியும் பாராட்டுக்களும் உரித்தாகுக..


எண்ணற்ற தலைப்பில் எழுத்து தளம் படைப்புகளை வழங்கி வருகிறது, ஆனால் மிகமுக்கியமான தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் "வெண்பா" என்ற தலைப்பை உங்கள் தளத்தில் சேர்க்கவும். வெண்பாவை விரும்பிப் படிப்பவர்கள், எழுத முயற்சி செய்பவர்களுக்கும் உதவியாக இருக்கும்..

நன்றி அன்புடன் பெருவை பார்த்தசாரதி

மேலும்

முர சறைந்து நான் கூவுகிறேன்..
நர சிம்மா மீண்டும் வருவாயா..?      



இரண்டு மனமென்ப தில்லாது ஓர்

 ..........இரவும் பகலும் அல்லாத போதினில்


இரண்டு நிமிடத்திற்குள் எடுத்த ஒரு

..........இறை யவதாரமாம் நரசிம்மம் அதுவே.!


இரண்டு கரங்கள் போதுமென்றே நீ

..........இராக்கதரை அழித் தாயன்று! இன்று


இரண்டு கைகள் போதாது!..ஈராயிரம்

..........இரும்புக் கரமொடு நீஅவ தாரமெடு..!




இரணியனை மட்டு மழித்தால் போதுமா?

..........இன்றிருக்கும் நிலை என்று மாறுமப்பா?


இரக்க மற்றுச் செய்கின்ற செயல்களால்

..........இன்றிருக்கும் அவலங்கள் இனி மாறுமா?


புரண்டு படுத்தாலும் புத்தியில் எழாது

..........புதிய துன்பம் போக்க நீவரவேண்டும்.!


அரண்போல நீமீண்டு மொரு முறை
..........அவதரித்தாலே அது நமக்குப் போதும்.!
========================================

 ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி..சனிக்கிழமை..28-04-2018   

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யகம்


ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம 
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம

சட்டென்று ந்ருசிம்மத்தைக் காணும் பட்ச்சத்தில், பெரிய அளவில் மந்திரங்கள் சொல்லி, நீண்ட நேரம் செலவழிக்காமல், சுருக்கமாக மேற்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லலாம்.  அல்லது, குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி சிங்கவேளுக்கு அர்ச்சனை செய்யலாம்.

மேலும்

இன்றிருக்கும் நிலையை பட்டவர்த்தனமாக எழுதமுடியாத நிலையில், சூசகமாக அவதாரம் தேவை என்பதை புரிந்து கொள்ள முடியும்.. நன்றி அய்யா கவின் சாரலன் அவர்களே 28-Apr-2018 3:38 pm
படிப்போருக்கு புண்ணியம் , நாராயண பட்டத்திரி 18000 ஸ்லோகம் கொண்ட பாகவதத்தை ஒரு தசகத்திற்கு 10 பாக்களாக நூறு தசகத்தால் ஆன நாராயணீயமாக குருவாயூர் ஆலயத்தில் கண்ணன் திருமுன்பு இயற்றினார் . இயற்றும் போதே அப்படியா என்று நம்பூதிரி கேட்கும் போது சிலா பிம்பம் தலை அசைத்து ஆமோதிக்குமாம் . இரண்டு கரங்கள் போதுமென்றே நீ ..........இராக்கதரை அழித் தாயன்று! இன்று இரண்டு கைகள் போதாது!..ஈராயிரம் ..........இரும்புக் கரமொடு நீஅவ தாரமெடு..! ----தேவை இப்படியொரு அவதாரம் . வாழ்த்துக்கள். 28-Apr-2018 3:11 pm

எழுத்து தள  வாசக அன்பர்களுக்கும், படைப்பாளர்களுக்கும்,  

உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.    


சித்திரையே வருக!


சித்திரை முதல் நன்னாளில்..சிந்தனையில்

......சிறப்பாகத் தோன்றி யதைச் சொல்கிறேன்.!

பத்தரை மாற்றுத் தங்கமாமது! மாதங்கள்

......பன்னிரண்டில் முதன் மையாய்த் திகழுமே.!

அத்துணை நன்மைகளும் நம்மிடம் வந்து

......அடையுமாறு அச் சித்திரையும் வழிசெயும்.!

முத்திரை பதிக்கும் வாழ்விலொரு நாளாக

......சித்திரை நாட்களனைத்தும் நல் நாட்களே.!




சித்திரைத் திருநாள் பிறந்தநன் நாளில்நம்

......சிந்தனையும் நன்றே சிறப்புற வேண்டும்.!

தித்திக்கும் பல திருவிழாவைத் தருகின்ற

......தெவிட்டாத இன் பத்தையுமது அளிக்கும்.!

கத்திரி வெயிலின் வெப்பமிக விருந்தாலும்

......குளிருமது!கொண்டாடும் திரு விழாவால்.!

புத்தாண்டின் முதல் நாளாமின்று அதைப்

......புன்னகையோடு புகழுற வர வேற்போம்.!               

========================================

வெளியீடுகள்:: வல்லமை, பிரதிலிபி

நன்றி :: கூகிள் இமேஜ்

மேலும்

அன்பின் ஆவுடையப்பன் அய்யாவின் கருத்துப் பதிவுக்கு அகமகிழ்ந்த நன்றிகள்..பல 17-Apr-2018 1:09 pm
போற்றுதற்குரிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அனுப்பிய தமிழ் கவிக்கு தமிழ் அன்னை ஆசிகள் 17-Apr-2018 5:16 am
மேலும்...

மேலே