எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  வள்ளுவம் பொய்த்ததா ?


"காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 
அன்ன நீரார்க்கே உள "என்கிறது வள்ளுவம் இதன் பொருள் காகமானது தனக்கு கிடைத்த இரையை மறைக்காமல் தன இனத்தாரை அழைத்து இந்ததோடு உண்ணும் அதுபோல தனக்கு கிடைத்த செல்வதை மறைக்காமல் மற்றவர்களுக்கும் அளித்து வாழ்பவர்களுக்கே ஆக்கம் செல்வம் நிறைந்திருக்கும் 
ஆனால் இன்றைய நிகழ்வென்ன என்று பார்த்தால் நிறைந்த செல்வம் உள்ளவர்களில் பெரும்பாலோர் இந்த கொடுத்து உதவும் பண்பு இல்லாதவரே தன்னிடம் உள்ள செல்வத்தை மறைத்து அடுத்தவர்களின் செல்வத்தை சுரண்டி பிழைப்பவர்களே. அடுத்தவர்களை கெடுத்து வாழ்பவர்களும் மற்றவர்களை சுரண்டி வாழ்பவர்களும் செல்வர்களாக வாழ்வதும் , கொடுத்து உதவி வாழ்பவர்கள் அடுத்தவர்கள் நலன் பேணி தன் செல்வதை செலவிடுபவர்களும் வறியவர்களாக இருப்பதும் என்ன விந்தை என்று தெரியவில்லை 
கள்வர்கள், கயவர்கள் , பொய்யர்கள் , கை யூட்டு பெறுபவர்கள் மற்ற மனிதர்களை சமூகத்தை சுரண்டி வாழ்பவர்கள் எத்தர்கள் என மிக மோசமான நடத்தை உள்ளவர்கள் செல்வர்களாக வாழ்வதும் நல்லவர்கள் அறச்சிந்தனை உடையவர்கள் , தன் செல்வதை செலவிட்டு பிறர் நலன் பேணுபவர்கள் பிறர் நலனுக்காகவே வாழ்பவர்கள் இவர்கள் எல்லாம் நெளிந்தும் வறுமையின் பிடியில் அகப்பட்டும் அடுத்த வேளை உணவுக்கும் மாற்று துணிக்கும் அல்லல் படுவதை பார்க்கும் போது வள்ளுவ பெருந்தகை கூறிய குறள் மொழி பொய்த்ததோ ? என ஐயுற தோன்றுகிறதுயாரேனும் இதற்க்கு சரியான காரணமும் தீர்வும் கூறிட இயலுமெனில் தெளிவுறுத்தவும்  

மேலும்

நம் இளைஞர்களின் தை புரட்சி  என்று யார் சொன்னது   அதை தோற்கடிக்க  சூழ்ச்சி செய்தவர்கள்  தான் தோற்றார்கள்  அவர்களின் சூது தான்  தோற்றது இன்று நம் இளைஞர்களோ  உலக அரங்கில்  பேசப்படுகிறார்கள் 

தோற்று போனது  என்னவோ நேரத்துக்கு  நேரம் நிறம் மாறும் நம் அரசியல் வாதிகளே 

மேலும்

  தமிழக வாக்காளர் விழிப்புணர்வுப் பேரவைஇது ஒரு தன்னார்வ அமைப்பு இதில் எல்லா வாக்காளர்களும் பங்கு பெறலாம் . இதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் யாவும் வாக்காளர்கள் யாவரும் நலம் பெறவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் இந்த அமைப்பு 
செயல்படும் இதில் யாருடைய கருத்துக்கள் வேண்டுமானாலும் விவாதிக்கப்படலாம் இதன் நோக்கம் வாக்காளர்களின் நலன் ஒன்றேஇதில் விவாதிக்கப்படும் கருத்துக்கள் 
1] வேட்பாளர்கள் என்பவர் யார் ? 2]வேட்பாளர்களின் கடமைகள் [3] வேட்பாளர்களின் பொறுப்புகள் 
[4] வேட்பாளர்களின் இயல்புகள் M L A , M P ஆகும் முன் ,ஆன பின் இவர்கள் வாக்காளர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் [5] இவர்கள் சார்ந்த அரசியல் கட்சிக்கு எந்த அளவுக்கு கடமை பட்டவர்கள் ? [6] தொகுதி வாக்காளர்களுக்கு எந்த அளவுக்கு கடமை பட்டவர்கள் போன்ற விபரங்கள் இந்த பகுதியில் விவாதிக்கப்படும்இந்த பகுதியின் முக்கிய நோக்கமே வாக்களர்களின் விழிப்புணர்வு மட்டுமே  

மேலும்

              வங்கிகளின்  வேலை நிறுத்தம்  நியாயமா ? 


நமது இந்தியதேசத்தில்  வங்கிகள் பொதுவுடைமைஆக்கப்பட்டதின் நோக்கமே  கடைசி குடிமகன்வரை  வங்கிகளின் சேவை எட்டவேண் டும்என்பதற்க்காகவே.  அனால் நோக்கம்  சீர் குலைந்து விட்டது  வங்கிகள் பெருகிவிட்டது . 
சாமான்ய  மனிதன் ஒரு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில்  கணக்கு துவங்கவோ  அல்லது துவங்கிய கணக்கில்  பணம்செலுத்தவோ  அல்லது  தன் கணக்கில் இருந்து  பணம்எடுக்கவோ  அல்லது  கேட்பு வரைவோலை Demand  Draft  எடுக்கவோ சென்றால்  அந்த வங்கி அவனை படாதபாடு படுத்திவிடுகிறது  வங்கியில் கணினிமயமாக்கப்பட்டும்  இன்னமும்காசாளர்கள்  denomination  எழுதவில்லை  என்று  துரத்தி அடிக்கும் பாங்குதான்  காணப்படுகிறது .  
கடன் கேட்டு சென்று விட்டாலோ  அந்த வங்கிகள் அரசின் உத்தரவையோ  அல்லது  வங்கிகளின் சட்டதிட்டங்களை சற்றும்   கண்டுகொள்ளாமல்   கடன் கேட்டு வந்தவரை  விரட்டி அடிக்கும்  போக்கு இன்னம் காணப்படுகிறது  .நடுத்தர வருவாய் ஈட்டும்  வாடிக்கையாளர்களை  சற்றும் மதிப்பதே இல்லை  ஏதோஅவர்களிடம்  யாசகம் கேட்க வந்தது போல்  நடத்தும் அவலமும் இந்த பொது துறை வங்கிகளிடம்தான் காணப்படுகிறது  
இத்தகைய வாடிக்கையாளர்களுக்கென்றே ஏராளமான வங்கி விதி முறைகளை கூறி அந்த சாமான்ய மனிதன்  ஏன் இந்த வங்கிக்கு கடன் கேட்க  வந்தோம் என்று விழி பிதுங்கி  ஓடவைக்கிறது  
இவை எல்லாம்  பொதுவான சேவைகுறைபாடுகள்  இதை விட  சொல்லமுடியாத அநியாயம்  எது வென்றால் இவர்கள் திடீர் திடீர்  என வேலை நிறுத்தம் அறிவித்து  நாட்டு மக்களையும்  வாடிக்கையாளர்களை யும்  திக்கு முக்காட வைப்பது தான் .  இவர்கள் வேலை நிறுத்தம்  எந்த விதத்தில் நியாயம் ?

இத்தகைய பொது துறை  வங்கிகளின்  போக்கு தனியார்  வங்கிகளின் சுரண்டலுக்கல்லவா  துணைபோகிறது  இந்த வங்கிகளின் அலட்சியம்  தனியார் வங்கிகளின்  விஸ்தரிப்புக்கு அல்லவா துணை போகிறது 

 வாடிக்கையாளர்களின்  பணத்தை அவர்களின் தேவைக்கு  அவர்களின்உத்தரவுக்கு  அவர்களுக்கோ  அல்லது அவர்களின் உத்தரவு  பெற்றவர்க்கோ தருவதாக கூறி  பெற்று முதலீடு  செய்து லாபம் பெற்று  அந்த லாபத்தில்ஊதியம்  வசதியான வாழ்க்கை  இவற்றை அனுபவிக்கும்  பொதுத்துறை  வங்கி ஊழியர்கள்  திடீர் திடீர் என வேலை நிறுத்தம்  செய்வது  எந்த விதத்தில் நியாயம் ?இவர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கு முன் தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் தன்  வங்கியில் வைப்பு வைத்திருப்பவர்களிடமும்  தான் முன் அனுமதி பெறவேண்டும்   
அவ்வாறு எந்த வங்கியும் செய்வதில்லையே இந்தவேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று சொல்லி அவர்கள் மீது தக்கஒழுங்குநடவடிக்கைஎடுத்தும்பாதிக்கப்பட்டவாடிக்கையாளர்களுக்கு  எந்த நிவாரணமும்  இது வரை அரசும் தந்ததில்லை ?எனவேவாடிக்கையாளர்களே  நீங்கள் இன்றி  வங்கிகள் இல்லை  உங்கள் சேமிப்பும்  வைப்பு தொகைகளும்  இன்றி வங்கிகள் முதலீடுகளும் இல்லை 
அவர்களின் வசதியான  வாழ்க்கைஇல்லை  எனவே  நீங்கள் உரிமைகளை   எக்காரணம் கொண்டும்  வங்கிகளிடம் அடகு வைக்கவேண்டாம்  வாடிக்கையாளர்களே   பொது மக்களே  விழிப்புடன் இருங்கள்  உங்கள் உரிமையை எக்காரணம் கொண்டும் இழக்க வேண்டாம் .

மேலும்

இந்திய கிரிகெட் அணியை  தோற்கடித்த  மாபெரும் வீரர்கள் 
இந்திய கிரிகெட் அணியை  ஆஸ்திரேலியா  தோற்கடிக்க வில்லை  இந்திய அணியின்  பின்வரிசை வீரர்களே  all rounder என்ற பெரிய பெயருடன் விளையாடும்  வீரர்களும்  மோசமான பந்து வீச்சை வெளிபடுத்திய  பந்து வீச்சாளர்களுமே  தோற்கடித்தனர் . ரவீந்திர ஜடேஜா  எப்படிப்பட்ட ஆல் ரௌண்டெர்  வெற்றி வாய்ப்பை  மட்டை போட்டு  மட்டை போட்டு  வெற்றியாய் ஆஸ்திரேலிய  வீரர்களுக்கு  தாரை வார்த்த  மிக சிறந்த  ஆல் ரௌண்டெர்  வெற்றி தோல்வி சகஜம் தான்  ஆனால் தொடர் முழுவதும் தோல்வி என்பது தான்  ஏற்க்கமுடியாததாக  உள்ளது    மகேந்திர சிங் டோனி அணியின் தலைவர் என்ற முறையில்  மிக சிறப்பான  ஆட்டத்தை  வெளிபடுத்த வேண்டிய நேரத்தில்  பொறுப்பற்ற முறையில்  ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து ஆட்டத்தின் போக்கை  எதிரணி வீரர்களுக்கு  சாதகமாக்கினார்  என்றால்  மிகை இல்லை .  புதிய வீரர்களுக்கு வாய்ப்பு  தரவேண்டியது தான்  ஆனால் எங்கே என்ற விவஸ்தை இல்லாமல் முக்கியமான ஆட்டங்களிலா   உள்ளே நுழைப்பது  இதனால் இந்திய அணி  ஈட்டி வைத்திருந்த  நற்பெயர் தானே  பலியானது இளம் வீரர்கள்  மிக மோசமாக விளையாடி  இந்திய அணியின் படு தோல்விக்கு காரணமாகினர் 
    நான்கு  வீரர்கள் தலையில் தான் இந்திய அணியின்  சுமை முழுவதும் இறக்கப்பட்டுள்ளது  அவர்கள்  ரோஹித் சர்மா  , சிகார்  தவான் . விராத் கோலி மற்றும் அஜின்க்யா  ரஹானே  இவர்கள் தவிர யாருமே இந்த தொடரில் சரியான ஆட்டத்தை  வெளிபடுத்தவில்லை  எஞ்சிய மோசமாக விளையாடும்  வீரர்களை  ஒரு தின சர்வதேச போட்டிகளில் இருந்து  சிறிது காலம் நீக்கி  இவர்களுக்கு   இந்தியாவிற்குள்  ஆடும் ஆட்டங்களான  ரஞ்சி கோப்பை  புச்சி பாபு  போன்ற ஆட்டங்களில் இடம் பெற செய்து  பயிற்சி அளித்து  இவர்கள் திறனை  பரிசோதனை செய்த பின்  இவர்களுக்கு  ஒரு தின சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு அளிக்கலாம்   தேர்வு  குழு  அணி வீரர்களை தேர்வு செய்யும்  போது   மாவட்டங்களில்   மாநிலங்களில்  ர இருந்து இளம்  வீரர்களை  ஓபன் செலக்ஷன்  மூலம்  மாவட்ட   மாநில  அசொசியேஷன்  மூலம்  தேர்வு செய்து கொள்ளலாம்    இந்திய அணி குறைந்த பட்சம் மூன்று அணிகளையாவது  கை வசம் வைத்து கொண்டு களத்தில்  இறங்க வேண்டும்   தேசிய அணி  குறைந்த பட்சம்  மூன்று அணிகலாவது இருக்க வேண்டும்  ஒரு அணி  மிக மோசமாக விளையாடும் போது   அடுத்த அணியை இறக்க தயங்கவே கூடாது    இவர்கள் இந்திய அணி என்ற பெயரில் ஆடுவதால்  தான் இந்த  வேகமும் கோபமும்  இந்த கோபமும்  வேகமும் ஒவ்வொரு இந்தியனுக்கும்  இன்றைய  மோசமான ஆட்டத்தை பார்க்கும் போது  ஏற்பட்ட ஒன்று   இந்திய  அணியின்  வீரகளை தேர்வு செய்வதை  இந்திய அரசு பொறுப்பேற்று  கொள்ளவேண்டும் BCCI  யின் செயல் பாடுகளை  இந்திய  அரசு  கட்டு படுத்தவேண்டும் இந்திய விளையாட்டுத்துறையின்  மேற்பார்வையில்  செயல் படுத்த வேண்டும்   பொறுப்பற்ற முறையில் விளையாடும் வீரர்களை  பாரபட்சம் பார்க்காமல்  அணியை  நீக்க வேண்டும்   அப்போதுதான்  இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க முடியும்  இல்லையேல்  இப்படியே ஒவ்வொரு தோல்விக்கும் அணி தலைவர் கூறும்   சமாதானங்களை  கேட்டு   உச்  தான்  கொட்டமுடியும் 

மேலும்

அரசு பேருந்துகளின் அலட்சியம் , இன்று 08/01/2016 மாலை 4.30 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் நான் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அரசு போக்குவரத்து பேருந்து தடம் எண் 157 பதிவு எண் TN 23N 2301 என்ற பேருந்து C V R தெரு வில் சிவாஸ் ஹோட்டல் எதிரில் நட்ட நடு சாலையில் நிறுத்தி பயணியை ஏற்றிக்கொண்டு பின்னால் வரும் வாகனங்களுக்கு இடையூறு செய்ததுமின்றி பின்னல் வந்த எனது இருசக்கர வாகனத்தை நிலைகுலைய செய்தது இதே தவறை இதே நேரத்தில் இதே இடத்தில் T 7 காஞ்சிபுரம் TO நெற்குன்றம் செல்லும் நகர பேருந்தும் செய்து பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருந்தது ஏராளமான சின்னஞ்சிறு மாணவர்களின் உயிரோடும் அலட்சியமாக வ்ளையாடுகிறது அரசு பேருந்துகள் என்றால் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம் எப்படி வேண்டு வேண்டுமானாலும் பயணிகளை ஏற்றிகொள்ளலாம் என்று ஏதேனும் சிறப்பு உரிமை வழங்கப்படிருக்கிறதா என தெரிய வில்லை தயவு செய்து தெளிவு படுத்தவும் இது பயணிகள் மற்றும் சாலையில் பயணிப்பவர்கள் உயிரோடு தொடர்புடைய விஷயம் என்பதால் தங்கள் மேலான கவனத்திற்கும் தக்க நடவடிக்கைக்கும் இதனை கொண்டு வருகிறேன் தயவு செய்து நடவடிக்கை எடுத்ததன் விபரம் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்க தாழ்மையுடன் கோருகிறேன் நன்றி தங்கள் உண்மையுள்ள ச ரவிச்சந்திரன் சமுக ஆர்வலர் 22-Jan-2016 5:35 am
அரசும் அரசியல் வாதிகளும் காவல் துறையினரை ஒதுக்குவது ஏன் ஊரில் பிரச்சினையா கூப்பிடு போலிசை , தெருவில் பிரச்சினையா கூப்பிடு போலிசை, திருடன் வீட்டில் வந்துவிட்டானா கூப்பிடு போலிசை அரசியல் மீட்டிங்கா கூப்பிடு போலிசை , மந்திரி வர்ராரா கூப்பிடு போலிசை ரோடு முழுதும் நிறுத்துவோம் ஆனால் வெள்ள நிவாரணமா போலீஸ் குடும்பங்களுக்கு கிடையாது இப்படி ஒவ்வொரு தேவைக்கும் போலிசை கூப்பிடும் நாம் அரசின் சலுகைகள் வெல்ல நிவாரணம் என்று வரும்போது இவர்களை ஏன் ஒதுக்கினோம் ? யாரவது சிந்தித்தீர்களா ? குரல் தான் கொடுத்தீர்களா ? அரசு வழங்கும் இலவச பொருட்களா காவலர் அட்டைக்கு கிடையாது இது எந்த ஊர் நியாயம் தாலுகா ஆபீசில் வேலை செய்பவர்களுக்கு, அரசு பள்ளியில் வேலை செய்யும் டீச்சர் களுக்கு எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் சரி எந்த துறையில் வேலை செய்தாலும் சரி அவர்கள் எல்லாருக்கும் அரசின் எல்லா சலுகைகளும் கிடைக்கும் போது காவலர்களுக்கு மட்டும் கிடையாது அவர்கள் சம்பளம் என்ன லட்சகணக்கில் வாங்குகிறார்களா ? ஊரே உறங்கும்போது தன் குடும்பத்தை விட்டு பணி செய்கிறார்கள் வெள்ளத்தில் தன் குடும்பம் எக்கேடு கெட்டாலும் ஊர் பணி செய்யும் இவர்களை மட்டும் அரசும் அரசியல் வாதிகளும் ஒதுக்குவது ஏன் ? ஒரு வினாடி யோசித்தால் போதும் இவர்கள் குடும்பங்களும் வாழும் மனநிறைவோடு காவலர்களும் பணி செய்வார்கள் யோசிக்குமா ? யோசிப்பார்களா ? 22-Jan-2016 5:33 am

மேலே