எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  நண்பர்களுக்கு வணக்கம்..! 


கடந்த வருடத்திலிருந்து இனி ஒவ்வொரு ஆண்டும் அய்யா பெரியாரின் பிறந்த தினத்தினை ஒட்டி முழுநாள் நிகழ்வு நடத்தப்படும் என்று #வாசகசாலை முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி முதலாவது முழுநாள் நிகழ்வு கடந்த 17.09.2017 அன்று ஐந்து அமர்வுகளாக நண்பர்கள் ஆதரவுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. 


அந்த வரிசையில் இரண்டாவது முழுநாள் நிகழ்வு வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. அதற்கு முதல்கட்டமாக ஐந்து அமர்வுகளின் தலைப்புகளை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இடம் மற்றும் இதர விபரங்கள் விரைவாக வரும் நாட்களில் வெளியாகும். 

நாம் தற்சமயம் எதிர்கொண்டு வரும் பல்வேறு சூழல்களையும் சமாளிக்க நமக்கு என்றுமே துணை நிற்கப் போவது அய்யாவின் சிந்தனைகளும் எழுத்துக்களும்தான். எனவே அது பற்றிய விரிவான உரையாடல்களுக்கு 
நண்பர்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். இந்த முழுநாள் நிகழ்வுக்கு நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது. வரும் ஞாயிறன்று சந்திக்கலாம். நன்றி. மகிழ்ச்சி..!  

மேலும்

மிக்க மகிழ்ச்சி , கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் , பெரியார் பிறந்த நாள் விழாவை , அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் , சிறுவர்களுக்கான பேச்சு போட்டி , ஓவியப்போட்டி நடத்துகிறோம் , வாழ்க பெரியார் , வளர்க சமூக நீதி !!! 10-Sep-2018 9:09 pm

  ஈரோடு மாவட்ட மைய நூலகத்துடன் #வாசகசாலை இணைந்து வழங்கும் "இலக்கிய சந்திப்பு " மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள் - நான்காம் நிகழ்வுக்கான அழைப்பிதழ் இதோ உங்கள் முன்னால்..! .

இம்முறை நாம் பெண்கள்.. பெண் சார்ந்த அரசியல்..உடை.. குடும்பம்.. காதல்.. கலை என பலவாறு பெண் நிலைகளை அதன் நோக்கினை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தி எழுதிய தமிழ் இலக்கியத்தின் சிறந்த பெண் படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் அம்பையின் மூன்று சிறுகதைகளை இந்த மாத நிகழ்வுக்கென தேர்வு செய்யப்பட்டன.

மூன்று சிறுகதைகளை குறித்து மூன்று வாசகர்கள் தங்கள் வாசிப்பு அனுபவத்தை நம்மோடு உரையாற்ற இருக்கிறார்கள். மேலும் அவர்களோடு நாமும் கதைகள் குறித்து விவாதிக்கலாம். 

கதைகளை வாசிக்க... கதைகளுக்கான சுட்டிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

”வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” 
https://bit.ly/2L8VbRs

“காட்டில் ஒரு மான்”
https://bit.ly/2L0Ji3b

”வயது”
https://bit.ly/2ztpVLH

வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அனைவரும் கதைகளை வாசித்து விட்டு, வரும் ஞாயிறு மாலை 5:30 க்கு ஈரோடு மாவட்ட மைய நூலகத்தில் நடைப்பெறும் வாசகசாலை நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

வாசிப்போம்.. உரையாடுவோம்..! நன்றி..!  


தொடர்புக்கு : 9600321289

மேலும்

  வணக்கம் நண்பர்களே..!திருப்பூரில் #வாசகசாலை வழங்கும் ‘ இலக்கிய சந்திப்பு’ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகள். நிகழ்வு 6-க்கான அழைப்பிதழ். 

இம்முறை நாம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நாவல், தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக வலம் வந்த எழுத்தாளர் ராஜ் கெளதமனின் “சிலுவைராஜ் சரித்திரம் “ஒரு மனிதனின் முதல் இருபத்தைந்து ஆண்டு கால வாழ்க்கை எத்தகைய முக்கியத்துவமானது என்ற பார்வையில் நாவலில் சிலுவை எனும் கதாபாத்திரம் மூலம் எழுத்தாளர் தன் வாழ்க்கையின் கால் நூற்றாண்டு அனுபவ பகிர்வை சுய வரலாற்றுக் குறிப்புகளாக எழுதினாலும் புறச்சமூக குறிப்புகளையும்... அவர் வாழ்ந்த காலக்கட்டத்தில் மக்களிடையே நிலவிய சாதிகளைப்பற்றிய பார்வையையும் திராவிட இயக்கத்தின் மீது ஒளிர்ந்த நம்பிக்கைகளையும் அது மங்கத்தொடங்கிய விசாரணைகளோடும்... பொதுவுடைமை இயக்கத்திற்கு தென்மாவட்டங்களில் கிடைத்த ஆதரவையும் ஆவணப்படுத்துமளவுக்கு எழுதப்பட்ட நாவல் என்பதோடு.. ஆழ்மன இயல்புகளைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் சமுகவியலைப்பற்றிய புரிதலின் பின்னணியிலும் அவ்விடைகளை முன்வைத்துப் பரிசீலனை செய்யவும் முடியும். இத்தகு பரிசீலனைகள் வழியாகவே சாதி என்னும் புனைவை உடைத்துப் பார்க்கமுடியும் என்ற கண்ணோட்டத்தோடு . ஜாதிகள் பற்றிய மேலோட்டமான புரிதலை தெளியவைத்து வாசகனுக்கு புரியவைத்த அளவிலும் இந்நாவல் மிக சிறப்பு பெற்ற நாவலாக எழுதியுள்ளார் என்றளவில் தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவமான இடத்தை இந்நாவல் பெற்றிருக்கிறது. 

இந்நாவல் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வில் நாவல் குறித்தான வாசக பார்வையாக தோழர் ர.பாலசுப்பிரமணியனும்.. மற்றொரு வாசக பார்வையாக கிருத்திகா கார்த்திகேயனும் நம்மிடையே தங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர இருக்கிறார்கள் தோழர் கவிஞர் மு.ஆனந்தன் அவர்களும் இந்த நாவல் குறித்தான தனது சிறப்புரையை வழங்க இருக்கிறார்கள்.மேலும், ’சிலுவைராஜ் சரித்திரம்’ நாவலை குறித்து பங்கேற்பாளர்களோடு நாம் கலந்துரையாடவும் இருக்கிறோம் தோழர்களே...!

சிலுவைராஜ் சரித்திரம் நாவலை வாசிக்காத நண்பர்கள் உடனே வாசிக்கத் தொடங்குங்கள். வாசித்தவர்கள் நாவல் குறித்தான உங்கள் சிந்தனையோட்டத்தோடு கலந்துரையாடலுக்கு காத்திருங்கள்.சந்திப்போம்.. ஜூலை 22ம் தேதி. திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் ஹாலில்.. மாலை 5:30 மணிக்கு:)  

தொடர்புக்கு :9600321289

மேலும்

தங்கள் அழைப்பிற்கு நன்றி சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் தங்கள் படைப்பு தேர்ந்தமைக்கு பாராட்டுக்கள் 17-Jul-2018 8:19 pm
நன்றி தோழர் 11-Jul-2018 10:37 pm
நல்ல முயற்சி . நானும் திருப்பூர்தான் , இப்போது அமெரிக்காவில் இருக்கின்றேன் . திருப்பூர் நண்பர்கள் வட்டத்தில் இதனை பகிர்கிறேன் . 09-Jul-2018 9:29 pm

வாசகசாலை இலக்கிய சந்திப்பு - திருப்பூர் மாநகரில்- 


  எப்போதும் ஒரு விதமான எச்சரிக்கை உணர்வுடன் இருக்க நிர்பந்திக்கப்படுவது என்பது தாங்க முடியாத சுமை !. அப்படிப்பட்ட மக்கள் இவரின் கதை முழுக்க விரவிக் கிடக்கிறார்கள். அதிலும் கூட, ஆண்களுக்கு தங்களை நிரூபித்துக் கொள்வது மட்டுமே சோதனை. ஆனால், பெண்களுக்கோ தங்களை தற்காத்துக் கொள்ளவே பெரும் பாடு என்பதையும் விட்டு வைக்கவில்லை இவர்.இந்த மக்களை அடிமையாக்கிய புராணங்களை நம்பிக்கொண்டு வசதியாக நீங்கள் உட்கார விரும்புவீர்களானால் ...உட்காரும் இடத்தில் ஊசி வைக்கும் இவரிடம் உங்கள் மனசாட்சி தப்பவே முடியாது .
எளிமையான, ஆனால் ஆழமான எழுத்துக்கள் கொண்டு தன் அரசியலைப் பேசும் கலைஞர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா. 
இவ்வாறான வீரியமிக்க இலக்கிய உலகில் மிக முக்கிய எழுத்தாளரின் சிறுகதைத் தொகுப்பை குறித்து கலந்துரையாடல் நிகழ்வாக திருப்பூரில் முன்னெடுக்கிறது வாசகசாலை.
வரும் ஞாயிறு மாலை 5:30 மணிக்கு swaad Restaraunt ல் வாசகசாலை “ இலக்கிய சந்திப்பு “ கலந்துரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அவர்களின் சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல். அனைவரும் வருக..!  

மேலும்

திருப்பூர்.., ஈரோடு.. கோவை மாநகரங்களில் #வாசகசாலை வழங்கும் “ இலக்கிய சந்திப்பு” நிகழ்வுகளின் விபரங்கள்.

அனைவரும் வருக...!

மேலும்

வாசகசாலை -திருப்பூர் “ இலக்கிய சந்திப்பு”


  நாளை (29-04 -18) ஞாயிற்றுகிழமை திருப்பூரில் #வாசகசாலை வழங்கும் இலக்கிய சந்திப்பு நிகழ்வில் ....
திருப்பூர் பின்னலாடை தொழில் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வுச்சூழலோடு பயணிக்கும் நாவலான எழுத்தாளர் எம்.கோபால கிருஷ்ணன் எழுதிய “ மணல் கடிகை” குறித்த கலந்துரையாடல் நிகழ்வு. 

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சார்ந்த நண்பர்கள்.. வாசகர்கள்.. இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் வாய்ப்பு இருந்தால் தவறாமல் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள அன்புடன் அழைக்கிறது வாசகசாலை. 🧡🧡🧡

இடம் : நலம் ஹால் (நளன் உணவகம்- 2ம் தளம்)
கரூர் வைஸ்யா பேங்க் எதிரில் ; ஷார்ப் எலக்ட்ரானிக்ஸ் அருகில். குமரன் சாலை. திருப்பூர் -1  

மேலும்



வாசகசாலை - நிகழ்வுகள்.- அழைப்பிதழ்.
எழுத்தாளர்கள்- வாசகர்கள் கலந்துரையாடல். 

சென்னை- மார்ச் 17 ம் தேதி -  எழுத்தாளர் அருளரின் “ லங்கா ராணி ”-  நாவல் குறித்தான கலந்துரையாடல் 
திருப்பூர்- மார்ச்  18 ம் தேதி  -  எழுத்தாளர்  க. சீ. சிவக்குமாரின் “ உப்புக்கடலைக் குடிக்கும் பூனை ” - சிறுகதை தொகுப்பு  குறித்தான கலந்துரையாடல் 
கோவை- மார்ச் 18 ம் தேதி -    எழுத்தாளர். சி.ஆர். ரவீந்திரனின்  “ஈரம் கசிந்த நிலம்” - நாவல் குறித்தான கலந்துரையாடல்

  எழுத்து . காம்  இணையதளத்திலிருக்கும் கவிஞர்கள் எழுத்தாளர்கள்.. வாசகர்கள் அனைவரையும் வரவேற்கிறது வாசகசாலை.   
-

- இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

  வாசிப்பு..!
“ நான் ஏன் இலக்கியத்தை.. இலக்கிய புத்தகங்களை வாசிக்க வேண்டும். அதனால் என்ன பயன்?.” வாசிப்பு பழக்கம் இல்லாத ..அல்லது வாசிக்க நேரம் பெறாதவர்கள் மனதில் எழும் கேள்வி இது.நீங்கள்..நான் உட்பட யாவரும் பள்ளி..கல்லூரி படிப்புகளுக்கு பிறகு இயந்திரத்தனமான ஓட்டத்தில் .. பணம்.. சொத்து.. குடும்பம்.. குழந்தைகள் என ஒரு தொடர் இயக்கத்தில் நமக்கான தேடல்களில்.. நமக்கான செளகரியங்களுக்கான ஆர்வத்தில் புத்தகங்களை வாசிப்பத்தை விட்டுவிடுகிறோம். பிறகு புத்தகங்களையே வெறுத்துவிடுகிறோம். ஆனால் நமது வாழ்வு இயக்க கூறுகள் எதுவும் நம்மை சுற்றியுள்ள சமூகத்தின் தொடர்பு இல்லாமல் இயங்க முடியாது. இந்த தொடர்பை நாம் வலுக்கட்டாயமாக துண்டிப்பதாலே பல நடைமுறைச் சிக்கல்கள் அந்த சிக்கல்களிலிருந்து மீள தெரியாமல் பிரச்சினைகளை கையாள தெரியாமல்.. சமூக குற்றங்கள் நிகழ்கின்றன. சமீபத்தில் சென்னை கல்லூரி மாணவி அஷ்வினி வெட்டுப்பட்டதும்.. திருச்சி கர்ப்பிணி பெண் உஷா கொல்லப்பட்டதுமாக்கான ஒரு தீவிர மனம் சார்ந்த உளவியலை ஆராய்ந்தால்.. சமூகத்தை.. சமூக காரணிகளை.. மனிதர்களை புரியாத இந்த இடைவெளிதான். இந்த இடைவெளியை நிரப்பி.. குறுகிய நமது உலகத்தை தாண்டி பார்க்க ஊக்குவிப்பதும்.. சிந்திக்க வைக்க உதவுவதுதான் வாசிப்புப் பழக்கம். வாசிப்புப் பழக்கமும் ஒன்று என புரிக


.#வாசகசாலை 
வாசிப்பை ஊக்குவிக்க.. வாசிப்பை தூண்டிவிட.. வாசிப்பிற்கு தேவையான ஒரு உந்துதல் நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. இந்த உலகம்.. பிரபஞ்சம்.. நம் உடல்.. நம் இயக்கம்.. நம் சமூகம்.. நம் சக மனிதர்கள்.. மனிதர்களுக்குள் நிலவும் வேற்றுமை..கொடுமை...பிரச்சினை தீர்வு என நாம் யோசிக்காத களத்தில் பிரமிப்பூட்டும் சம்பவங்கள் நம்மை சுற்றி இயங்குவதை படைப்புகளாக படைப்பாளிகள் படைத்திருப்பார்கள். அந்த படைப்புகளில் நாம் ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்பு கொண்டிருப்போம். அவ்வித படைப்புகளை வாசிக்க தூண்டுவதும்.அவ்விதமாக வாசித்து.. வாசிப்பின் மூலமாகவே மானுடத்தை புரிந்து. நலம் பெற வைப்பதுமாக என.. . வாசிப்பை ஓர் இயக்கமாக முன்னெடுக்கும் #வாசகசாலை எடுக்கும் ஒரு முயற்சி.. உழைப்பு.வாசகசாலை... நண்பர்களால் ஒன்றிணைந்து செயல்படும் ஓர் இலக்கிய அமைப்பு. 
சென்னையில் பெரும்பாலான வாசகர்களும்.. பிரபலமான எழுத்தாளர்களும். சந்திக்கும் பாலாமாக பல நிகழ்வுகளை நடத்தி அசத்தி இருக்கிறது. 300 க்கும் மேற்பட்ட..வாசகசாலை நிகழ்வுகளுக்கு பிறகு.. சென்னையை தாண்டி பல மாநகராட்சிகளிலும் நண்பர்களால் சென்ற மாதம் முதல் நிகழ்வுகள் “ இலக்கிய சந்திப்பு “ மாதாந்திர தொடர் கலந்துரையாடல் நிகழ்வாக ஆரம்பித்து இருக்கிறோம். 
அதன் தொடர் செயல்பாடாக #திருப்பூர் மாநகராட்சியில்.. இரண்டாவது நிகழ்வாக.. கொங்கு மண்டலத்தில் சிறுகதைகளின் அடையாளமாக திகழ்ந்த மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் அவர்களின் படைப்புகளையும் அவரையும் நினைத்து போற்றும் வகையில்.. ஒரு கலந்துரையாடலை முன்னெடுக்கிறோம். 
திருப்பூரில் #வாசகசாலை வழங்கும்
“ உப்புக்கடலைக் குடிக்கும் பூனை “ சிறுகதைத் தொகுப்பு. குறித்த கலந்துரையாடல் வருகிற மார்ச் 18 ம் தேதி ஞாயிற்றுகிழமை திருப்பூர் குமரன் சாலையிலுள்ள நலம் ஹாலில் மாலை 5:30 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்புரையாக.. எழுத்தாளர் இளஞ்சேரல் ராமமூர்த்தி அவர்கள்.. இந்த சிறுகதை தொகுப்பை பற்றி விரிவாக உரையாற்ற உள்ளார், மேலும் வாசகர்களாக அருண் சுந்தர். மற்றும் சரண்யா ஆகியோர் வாசக பார்வையாக தங்களின் வாசிப்பு அனுபவத்தை முன் வைக்கிறார்கள். வாருங்கள் ஒரு ஞாயிறு அந்தி மாலை ஒரு இலக்கிய சந்திப்பில் வாசிப்பு அனுபவம் எவ்வாறு இருக்குமென அறியலாம்....!-#வாசகசாலை- திருப்பூர்.  

மேலும்

படைப்புக்கு நன்றி 20-Mar-2018 9:13 pm

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


-இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

மேலும்...

மேலே