எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிம்மதி
இதைத் தேடாதவர்கள் யாரும் இருக்க முடியாது...

வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஏதாவது ஒரு பாடம் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.. 
ஆனால் மனிதர்களை புரிவதில் தவறிழைத்து விடுகிறோம்..
ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்,
உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி ஆனவர்கள் அல்ல..
புரிதலிலும் நிம்மதி பரிபோகும்...

இல்லாதவனுக்கு பொருள் ஈட்ட ஓட்டம், இருப்பவனுக்கோ இருப்பதை மேலும் சேர்க்க ஓட்டம்.. 
இதற்கிடையில் நிம்மதி எங்கே கிடைக்கும்..

பணம்
வெறும் காகிதம் தான், ஆனால் அதற்கு இருக்கும் மதிப்பு மனிதற்கு இல்லை..

தனிமை சிரிப்பில், 
உணவு உண்ணும் நேரத்தில், 
மாலை நேரத்து மழையில், 
உறவுகள் கூடும் பண்டிகை நாட்களில், நில்லாது ஓடும் வேலை அவசரத்தில், 
உடன் பிறந்தோர் குழந்தைகளுடன் விளையாடுகையில் நம்மை அறியாமலேயே மனதில் ஒரு வெறுமை தோன்றும்...
நமக்கென்று யாராவது இருக்கிறார்களா என்று... 
எப்போது வேண்டுமானாலும் நிம்மதி பரிபோகலாம்... 

ஏழை என்றால் ஒரு வேளை உணவில் நிம்மதி
பணம் படைத்தவன் என்றால் ஆடம்பரத்தில் நிம்மதி
வள்ளல் என்றால் ஈவதில் நிம்மதி
வீரன் என்றால் வெல்வதில் நிம்மதி
போர் என்றால் வெற்றியில் நிம்மதி
உறவுகள் என்றால் கூடி இருந்தால் நிம்மதி
விரோதி என்றால் விலகி இருத்தலில் நிம்மதி
நண்பன் வறுமையிலும் உடன் இருத்தல் நிம்மதி
ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெளியே தேடுவோம் நிம்மதியை,
உன்னுள்ளே ஒளிந்திருக்கும் நிம்மதி
பல சமயங்களில் உள்ளம் தேடுபவரிடத்தில் ஒளிந்திருக்கும் நிம்மதி 
வாழ்வில் எல்லா இன்னல்களுக்கும் அருமருந்தே இந்த நிம்மதி... 

நிம்மதி இதைத் தேடாதவர்கள் யாரும் இருக்க முடியாது.... 

மேலும்

எழுத்து தளத்தில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் என் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்.....

பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்...... 

மேலும்

தினமும் விழிக்கிறோம் அன்றாட கடமைகளை செவ்வனே செய்கிறோம். காய்கறி கடையில் இரண்டு நாள் முந்தைய பழையதை புதிய காய்கறி என்று வாங்கி வந்து குளிர்சாதன பெட்டியில் வைத்து இரண்டு நாள் கழித்து சமைத்து உண்கிறோம். இதுவே உண்மையில் சுவையான உணவென்று ருசித்து உண்கிறோம். 
உண்மையில் உணவின் ருசி எதுவென்று தெரியுமா, நம் கைகளால் மண்ணை கிளறி விதையிட்டு, நீர் விட்டு, வளர்த்து துளிர்த்து வளர்ந்த செடி எந்த ரசாயனமும் இன்றி நம் பராமரிப்பில் விளைந்த காய்கறி அப்போதே பறித்து சமைத்து சூடான சோற்றோடு இட்டு சுடச்சுட உண்ணும் போது தெரியும் உண்மையில் சுவையான உணவு எதுவென்று தெரியும். 
பழையதை வாங்கி தின்றுவிட்டு, நீ தின்றதை விளைவிக்கும் விவசாயிகள் வயிற்றில் அடிக்க உனக்கு தைரியம் இருக்கிறதென்றால், உன் வயிற்றுக்கு உணவிட இனி விவசாயம் செய்ய போவதில்லை என விவசாயி உன் வயிற்றில் அடித்தால் தாங்க மாட்டாய்...

மேலும்

இன்றளவில் ஒரு மனித உயிராய் நான் என்ன சாதித்து இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னையும் சேர்த்து மாற்ற பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்று (24/2/2017) என் வாழ்நாளில் மறக்க முடியாத பக்கம். 

தினமும் பணிக்கு இரண்டு பேருந்துகள் மாறி தான் பயணிக்கிறேன், இந்த இரண்டாவது பேருந்து மாற பேருந்து நிலையம் வந்து நான் பயணிக்க வேண்டிய பேருந்தில் ஏறிவிட்டேன். அதில் ஒரு ஏழை பெண்மணி வலிப்பு நோயால் கை கால்கள் இழுத்துக் கொண்டு பரிதாபமாக இருந்தார். ஒரு பெண் அவருக்கு கையில் இரும்பு கொடுத்து உதவிக்கொண்டிருந்தார். ஓட்டுநர் தண்ணீர் கொடுத்தார். 
108 ற்கு அழைத்துவிட்டு காத்திருந்தனர். அப்பெண்ணிற்கு எழுந்து அமரக்கூட முடியவில்லை , அந்த அம்மாவை மெல்ல கைத்தாங்களாக தூக்கி இருக்கையில் அமர வைத்தேன். ஆனால் கீழே இறக்கிவிட சொன்னார்கள். ஆண்களுக்கோ மற்ற பெண்களுக்கோ உதவ மனம் இல்லை போலும் வேடிக்கைத் தான் பார்த்தார்கள். நானும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து அப்பெண்மணியை தூக்கி கீழ் இறங்கி நிழலில் அமர வைத்தோம். எனக்கோ அலுவலகம் செல்ல நேரம் குறைவாக இருந்தது. விட்டுவர மனமின்றி கனத்த மனதோடு மீண்டும் அப்பேருந்தில் ஏறி அமர்ந்தேன். 
மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது அன்பர்களே, 
அந்த இன்னொரு பெண்தான் அந்த பெண்ணோடு 108 ற்காக காத்திருந்தார்கள். அந்த அம்மா குழந்தை போல துவண்டு துவண்டு விழும் போது மனது நொருங்கிவிட்டது எனக்கு. 
என்னால் முடிந்த உதவியை செய்தேன். ஆனால் நமக்கு மனித நேயம் இன்னும் நிறைய வளர வேண்டும். உதவும் எண்ணம் இன்னும் இன்னும் நிறைய வேண்டும். 

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே