எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

கரும்புகள் அடுக்கி வைத்து - மண் கலத்திலே மஞ்சள் கட்டி
விரும்பிய புதுநல் அரிசி - உடன் வெல்லமும் அளவில் இட்டு
மங்கல அடுப்பில் வைக்க - அது மணத்தொடு பொங்கும் நேரம்
பொங்கலோ பொங்கல் என்று - நாம் போற்றியே வாழ்த்து வோமே!

அந்தப் பொங்கல் போல்-

வீடெல்லாம் மகிழ்வு பொங்க வீதியெலாம் கோலம் பொங்க
நாடியநல் வளங்கள் பொங்க நட்பொடுவுள் அன்பும் பொங்க
தேடியசெல் வங்கள் பொங்க தெய்வத்தின் அருளும் பொங்க
கூடியவித் திருநாள் அதனில் கூறினோம்யாம் கோடி வாழ்த்தே!

மேலும்

அட, என் சிறுகதை ஒன்று கூட இறுதித் தேர்வு பட்டியலில் இருக்கிறதே...
”புறகு” (அறிவியல் புனைவுச் சிறுகதை)

நண்பர்களே, பிடித்திருந்தால் வாக்களித்து உதவுங்களேன்: http://eluthu.com/user/prize/sirukathai.ப்ப்

அச்சார நன்றி! :-)

மேலும்

முதல் வாக்கு யாருடையதாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள்! 18-Jul-2015 6:33 pm

’ஷேர் ஆட்டோவில்’ போவதில் கடினமான பகுதி எது?
அ. மூட்டை போல ஆட்களை ஏற்றும் நெரிசல்
ஆ. அவர்கள் போடும் ‘பிரத்யேக’ பாடல்கள்

காலைல கல்லூரிப் பேருந்தைத் தவரவிட்டதுக்கு நல்லா வேணும்டா நரசிம்மா உனக்கு...

(’மன்னவனே அழலாமா...’ மெட்டுல ‘அர்ச்சனா மேல ஆசப்பட்டேனு’ ஒரு பாட்டு போட்டாரு பாருங்க... “அண்ணா, ப்ளீஸ்ண்ணா... மாத்திருங்கனா!”
“ஏம்பா, சவுண்டு சரியில்லயா?”)

மேலும்

கேள்வி: இன்றைய நிலையில், பதிப்பகங்கள் அனைத்துமே கவிதை நூல்களை மட்டுமே பதிப்பிக்கத் தயங்குவதன் காரணமென்ன?

மனுஷ்யபுத்திரன் பதில் (பகுதி): ஒரு பதிப்பகம் என்பது வியாபாரத்துடன் கூடியது என்பதை நாம் மறுக்க முடியாது...

இன்றைக்குக் கவிதைப் புத்தகங்களை வெளியிட பதிப்பகங்கள் தயங்குவதன் காரணம், அதனை வாங்கக் கூடியவர்கள் இல்லை. ஏனென்றால், கவிதை எழுதுவதில் எவ்வளவு பேருக்கு விருப்பமும், உற்சாகமும் உள்ளதோ, அந்தளவில் கவிதை வாசிப்பதில் இல்லை.

நீங்கள் ஒரு புத்தகம் படிக்கிறீர்கள். அந்தப் புத்தகத்தை நோக்கி நீங்கள் நகர்வதற்கான முக்கிய காரணம், அந்தப் புத்தகம் எதையாவது ஒன்றை உங்களுக்குக் கொடுக்கிறது என்பதுதான் (...)

மேலும்

பாராட்டுகிறேன் என்ற பெயரில் பொய்யான புகழ்ச்சி கசப்பான விமர்சனத்தைவிட அபாயமானது /// இதில் ஒவ்வொரு படைப்பாளியும் தெளிவுக்கொண்டாலே போதும் .. படைப்பு மிளிரும்... இதை நான் அதிக கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறேன் நண்பரே..! 23-Feb-2015 9:46 am
மிக ஆழமான அவசியமான கருத்து முன் வைத்துள்ளீர்கள் நண்பரே. மகிழ்ச்சி...! 23-Feb-2015 9:39 am
நல்லதொரு விவாதத்தை முன்னெடுத்துச் செல்கின்றீர்... நன்றி... என் கருத்துகள் இவை: >விமர்சனம் நேர்மையாய் இருக்க வேண்டும், ஆனால் காயப்படுத்தக்கூடாது >பாராட்டுகிறேன் என்ற பெயரில் பொய்யான புகழ்ச்சி கசப்பான விமர்சனத்தைவிட அபாயமானது >யாரும் பிறக்கும்பொழுதே வள்ளுவனாய், கம்பனாய், பாரதியாய்ப் பிறப்பதில்லை (இம்மூவர் உட்பட!) முயற்சி-பயிற்சி ஆகிய சுழற்சியே நல்ல கவியை வடிவமைக்கிறது >குழந்தை எடுத்தவுடன் ஓடாது, ஆனால் அது தவழும்பொழுதே ’ஆகா! ஓகோ!’ என்றுவிட்டால் அது அத்தோடு நின்றுவிடும், எழுந்து நடக்க முயலாது, அன்றியும் அது தவழ்கையிலேயே ‘நீ இவ்வளவுதான், உனக்கு ஓடலாம் வராது’ என்பதும் அதே அளவு தீங்கே! >செடிக்கு நீர் ஊற்ற வேண்டும், அமிலத்தை அல்ல. ஊற்றும் நீரையும் அளவாய் ஊற்ற வேண்டும். காயப்படுத்தும் சொற்களும், ஒரு தலையான விமர்சனமும் அமிலம்! பொய்யான புகழ்ச்சி மேலுக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, அடியில் வேரைக் கிள்ளி கிண்ணத்தில் ‘போன்சாய்’ வளர்க்கும் தந்திரம் - இரண்டாலும் செடி வளர்ச்சியடையாது! >இதற்கெல்லாம் மேலாய், வெள்ளத்தில் நின்று வளரும் செடியும் உண்டு, வெட்ட வெளியில் மொட்டப்பாறையில் ஒட்டி வளரும் செடியும் உண்டு - படைப்பாளியும் அப்படி இருக்க வேண்டும்... >தன் திறமையின் வீச்சு அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும், தன் படைப்பின் நிறைகுறைகளை ஓரளவேனும் உணர்ந்திருக்க வேண்டும்... அப்பொழுது காழ்ப்புணர்ச்சி எது, உண்மைவிமர்சனம் எது, போலிப் புகழ்ச்சி எது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிடும் - கொள்வன கொண்டு கழிப்பன கழித்து, வீசிய கற்களை பாதையாய் சமைத்து, தூற்றிய குப்பையைத் துடைத்துவிட்டு, தூக்கிவிடும் கரங்கள் பற்றி உயர செல்லலாம்... >நம் முதல் நண்பனும், கடைசி எதிரியுமாக - நல்ல விமர்சகனும் கண்டிப்பான ஆசிரியனுமாக நமக்கு நாமே இருக்க வேண்டும் - முக்கால்வாசி சிக்கலை இந்தப் படிநிலையே தடுத்துவிடும்! நன்றி! 23-Feb-2015 9:15 am
வணக்கம் அய்யா! மேற்கூறியது எனது நிலையை/ கருத்து வெளிப்படுத்த வேண்டிய அவசியத்திற்காக உங்களிடம் உதாரணத்திற்கு எடுத்துகாட்டவே தெரிவித்தேன். அதை விடுத்து , இந்த தளத்தை பற்றிய தவறான கண்ணோட்டத்தை நிச்சயம் எப்போதும் நான் சொல்ல முயலுவது இல்லை . இந்த தளத்தினால் , தளத்தின் நண்பர்களால் வளர்ந்து கொண்டிருக்கும் ஒருவன் என்பதையும் எப்போதும் மறக்கமாட்டேன். தகுந்த ஆதாரங்களோடு சொல் என்று கேட்கிறீர்கள்... ஒரு சில கருத்து பரிமாற்றங்களில் தகுந்த ஆதாரமும்.., மின் அஞ்சலிலும் இருக்கிறது . தகுந்த காரணங்களின்றி கற்பனைப்படுத்தி இதுபோல கருத்துகளை பரப்புவதில் எப்போதும் நான் முயன்றதில்லை. ஒரு சிலரே என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறேன் அய்யா. யார் அவர்கள் என்று தெரிவித்து மேலும் மேலும் சங்கடத்தை வளர்க்க விரும்பவில்லை. தங்களது கருத்திலுள்ள அறிவுறுத்தலின்படி சில சுய திருத்தங்களை நிச்சயம் கடைப்பிடிக்கிறேன். நன்றிகள் அய்யா..! 23-Feb-2015 8:53 am

ஒரு சில வசதிக்காகத்தான் ‘குறியீடு’கள் தோற்றுவிக்கப்படுகின்றன. பெயர்கள் - மனிதர்க்கு, இடத்திற்கு, பொருள்களுக்கு ஆகிய பெயர்கள், எண்கள், தேதி ஆகிய அனைத்துமே இவ்வகை குறியீடுகள்தான். அறிவியல் நோக்கில் இந்த பிரபஞ்சம் முழுவதுமே எலக்ட்ரா - புரோட்டான் - நியூட்ரான் ஆகியவற்றின் பற்பல கலவைகளான அணுக்களினால் அமைந்ததே. இவ்வணுக்கள் நூற்றுக்குச் சற்று அதிகமாக நம்மால் கண்டறியப்பட்டுள்ளன (காண்க: Periodic Table) இவற்றின் கலவையே இந்தப் பிரபஞ்சம். இவ்வணுக்களின் பண்பு அவற்றில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினால் நிர்னயிக்கப்படுகிறது. இவ்வணுக்களை அடையாளப்படுத்த அவற்றின் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையே போதும், இவ்வகையில் (...)

மேலும்

ஆண்டு முழுவதும் நமக்கு ஒன்றே... நல்லதைச் செய்வதற்கு எல்லா நாளும், எல்லா பொழுதும், ஏன் ஒவ்வொரு நொடியும் சிறந்த நேரமே... 01-Jan-2015 7:12 pm
அருமையான பதிவு நண்பரே........பூர்ஷ்வா மனப்பான்மையில் அடிமைப்பட்டு...இன்னும் அதிலிருந்து விடுபடவும் முடியாமல் சிக்கித்தவிக்கும் நமக்கு நாமே கேட்கவேண்டிய கேள்விதான்...அருமை......ஆனால் நிர்வாண தேசத்தில் ஆடை உடுத்தியவன் பைத்தியக்காரன்........நம்மளையும் அப்படித்தான் பார்ப்பார்கள் நண்பரே........ 01-Jan-2015 3:00 pm

மேலே