எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

போட்டோகிராஃபரை வரவழைத்து

நம் "இந்திய ஜனநாயக"த்தை
படம் எடுத்து தாருங்கள் என்றேன்.
அவர்  "க்ளிக்கியது"  இது.

---------------------------------------------ருத்ரா



மேலும்

தலையும் புரியலை.

வாலும் புரியலை.
இந்த ஜனநாயகம்.
கணிப்பொறியில்
இந்த "ஸ்விட்சை"
தட்டிக்கிணே தான் 
இருக்கோம்.
ஏன் இன்னும் இந்த
கும்மிருட்டு!

-------------------------------------ருத்ரா


மேலும்

மின்னற்பீலிகள்

---------------------------------------------------------ருத்ரா

உன் இமைகள் 
அந்த மின்னலைக்கொண்டு
படபடத்த மயிற்பீலிகள்.
அதைப்பிடித்து
என் இதயப்புத்தகத்துள்
செருகி வைத்தால்
உன் காதல் அரும்புகளை
அருகில் 
குட்டி போடுவாய் அல்லவா!
காத்திருக்கிறேன்.

-------------------------------------------------------


மேலும்



சொற்கள்
------------------------------------------------ருத்ரா இ பரமசிவன்

அடடா!
உன் சொற்களை எங்கெல்லாம்
தேடுவது?
நீ சொல்ல நினைத்தவை எல்லாம்
இதோ
சிற்றிலைகளாய்
சிரித்துகாட்டுகின்றனவே!

=============================================









மேலும்

"எண்ணம்" என்றொரு புதிய சாளரம் திறந்திருப்பது கண்டு மிக்க
மகிழ்ச்சி.கருத்துப்பகிர்வுகளுக்கு இது இன்னொரு வாசல்.
நண்பர்கள் யாவருக்கும் என் அன்பு வணக்கம்..

அன்புடன் ருத்ரா



மேலும்


மேலே